Thursday, January 26, 2017

சு சுவாமி உலகநயாகரா ரெண்டு பார்ப்பனர்களுக்குள் தகராறு

சுப்பிரமணியம் சாமி பொறந்த ஊர் சோழவந்தான். தமிழ் பார்ப்பனர். பின்னால் டெல்லியில் போயி குடியேறி டெல்லிவாலா ஆகிவிட்டவர். ஹார்வேட் பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றது மட்டுமன்றி, அங்கே பேராசிரியராக பணிபுரிந்தவர், இவர்.

நம்ம உலக நாயகர், இராமநாதபுரத்தில் பிறந்து பரமக்குடியில் சிறு பிராயத்தில் வளர்ந்த பார்ப்பனர்.

இந்த ரெண்டு பார்ப்பனர்களில் ஒருவர், சு சுவாமி தன்னை இந்தியன் என்கிறார். ஜல்லிக்கட்டுக்கு முழு எதிர்ப்பு.

இரெண்டாமவர், தன்னைத் தமிழன் என்கிறார். ஜல்லிக்கட்டுக்கு முழு ஆதரவு தருபவர் இவர்.  என்ன ஒண்ணு சல்லிக்கட்டில் இவர் இன்னும் கலந்துக்கவில்லை. மற்றபடி, சல்லிக்கட்டில் எவனாவது செத்தால், அது வீரமரணம். அதுக்காக சல்லிக்கட்டை எல்லா நிறுத்த வேண்டியதில்லை. வாகனங்கள் ஓடும்போது நடக்கும் ஆக்ஸிடென்ட் போலதான் இதுவும். அதுக்காக வாகனங்களை தடை செய்ய முடியுமா? என்றெல்லாம் விதண்டாவாதம் செய்பவர்.

இவங்க ரெண்டு பேரும் ட்விட்டரில் கன்னாபின்னானு அடிச்சுக்கிட்டு நாறுகிறார்கள். இந்த சண்டையை யார் ஆரம்பித்ததென்று தெரியவில்லை.

சுப்பிரமணியன் சாமி புதிதாக "porki" என்னும்  ஒரு உயர்தர அடைமொழியில் தமிழர்களைத் திட்டி சரமாறியாக ட்விட் செய்து கொண்டு இருக்கிறார். எப்படி இது ஆரம்பித்ததுனு தெரியவில்லை. மேலும் சட்டம் தெரிந்தவர் இவர்!

இவருடைய "பொர்க்கி" ட்வீட்கள் சில!


12h12 hours ago
Porkis obviously don't like nationalists and patriots. Yet the crave for their attention by tweeting to them. Pathetic

13h13 hours ago
Why are Porkis so glum on India's Republic Day? Does the day not suit their traitorous outlook? Their White Masters have abandoned them?

How foolish for cinemawallah Kamalhasan to suggest that CM should have met the demonstrators. CM tried in Madurai and what happened?


 கமலஹாசன் ட்வீட்கள் சில:

Salute twitterattis of peace. 2 rabble rousers:Happy republic day. Respect my nation and its people. Sare jahanse accha Hindustan hamara.

Decided not 2 answer samis insinuations.Take over T.porikkis u R in g8 company.Kamraj Anna Rajaji my father & more மோதி மதித்து விடு பாப்பா

Hi Samy.AmTamilwallah. CM should have met his people. Politicians includ. MKG. Ceasars humble b4 people .why not CM.Tag it2him frnds.

 இணையதள உலகில் பேச்சுச் சுதந்திரம் கிடைத்ததால் ஏற்பட்ட விளைவு இது!

ரெண்டு பார்ப்பனர்கள் அடிச்சுக்கிட்டு நாறுறாங்க நமக்கென்ன? னு போயிடுவானா என்ன தமிழன்? அதான் இல்லை! வழக்கம்போல ஒரு பார்ப்பனரை திராவிடத் தலைவனாக்கி விடுவான். அவன் தான் தமிழன்!



Saturday, January 21, 2017

பீட்டா வுக்கு நன்றி!

ஜல்லிக்கட்டால் யாருக்கு அதிக இழப்பு?மாடு பாவமா? இல்லை மனுஷன் பாவமா? என்கிற ஒரு விஷயம் சரியாக கவனிக்கப் படவில்லை.

ஜல்லிக்கட்டால் மாடுகள் சித்ரவதை செய்யப்படுகின்றன என்பதால் ஜல்லிக்கட்டுக்கு தடை செய்யணும் என்பது PETA வின் பக்க வாதம்.

இவனுக என்ன சொல்றது நாம் என்ன கேக்கிறது? மாட்டை அப்படியெல்லாம் நாங்க சித்ரவதை செய்யவில்லை. மாட்டை மதிக்கிறோம். என்பதெல்லாம் நம் மக்களின் வாதம். இதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளலாம்தான். ஏனென்றால் ஸ்பெய்ன் நாட்டில் போல் நாம் மிருகத்தனமாக நடந்துக்கவில்லை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

Let us look at the facts from Tamil wikipedia!

ஜல்லிகட்டால் மனிதனக்கு நடக்கும் தீங்குகள்.

ஏறுதழுவல் விளையாட்டில் ஏற்படுகின்ற காயங்கள்

ஏறுதழுவல் விளையாட்டில் காளைகளும் வீரர்களும் இறக்கக் கூடும் அல்லது காயமடையக் கூடும். கடந்த காலத்தில் இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன[26].

சிறு அளவிலோ பெரும் அளவிலோ காயங்கள் ஏற்படுவது வழமை.

ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் போதும் அதைத் தொடர்ந்தும் காயமுற்ற 80 முதல் 100 பேர் மதுரை இராசாசி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்கள். சிறு காயமுற்றோர் சல்லிக்கட்டு நடைபெறுகின்ற அவனியாபுரம், பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் போகிறார்கள்.

 சல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது மாடுபிடி வீரர்களுக்குப் பல விதங்களில் காயம் ஏற்படக்கூடும்.
  • தலை: காளையைப் பிடிக்கும் முயற்சியில் கீழே விழுவதால், அல்லது தூக்கி எறியப்படுவதால் தலையில் அடிபடுதல்; முகத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்படுதல்.
  • கழுத்து: காளையின் கொம்பு குத்துவதன் விளைவாக மூச்சுக்குழாயில் துளை ஏற்படுதல்.
  • தண்டுவடம்: கீழே விழுவதாலோ, காளையால் குத்தப்படுவதாலோ தண்டுவடம் சேதமடைதல்; முதுகின் கீழ்ப்புறத் தசை இறுக்கமுறுதல்.
  • நெஞ்சு: நெஞ்சில் அடிபடுவதால் நுரையீரல் சேதமடைதல்; விலாவெலும்பு முறிதல்; நுரையீரல் திரைப்பகுதியில் இரத்தம் கட்டுதல்.
  • அடிவயிறு: காளை முட்டுவதால் மாடுபிடிவீரரின் அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்படுவது கூடுதலாக நிகழ்கிறது (75 விழுக்காடு); குடல் துளைபட்டுச் சரிதல், கல்லீரல், மண்ணீரல், வயிற்றுப்பகுதி சேதமுறுதல்.
  • பிறப்புறுப்புப் பகுதி: ஆண் பிறப்புறுப்புப் பகுதியில் மாடுபிடி வீரர்களுக்கு சேதம் ஏற்படுவது வழக்கமாக நிகழ்கிறது. இதனால் சிலர் ஆண்மை இழப்பதும் உண்டு. மேலும் இடுப்பெலும்பு முறிவும் ஏற்படலாம்.
  • கால்கள்: தொடையெலும்பு மற்றும் காலெலும்பு முறிவோ கீறலோ ஏற்படக்கூடும்.

கமலாஹாசனோ இல்லை ரஜினிகாந்தோ அல்லது விஜய் யோ அல்லது  சூரியாவோ  இதில் கலந்து கொண்டு ஆண்மை இழப்பதில்லை. அல்லது படு காயமடைவது கெடையாது . முரட்டுக்காளை, விருமாண்டி போன்ற படங்களிலும் டூப் போட்டுத்தான் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

நம் சமூகத்தில் ஒருவன் இதுபோல் ஆண்மையிழந்து வாழ்ந்தால் அவன் வாழ்க்கை  நரக வாழக்கைதான்னு நான் உங்களுக்கு சொல்லணுமா?

ஏதோ ஒரு வேகத்தில் மாட்டை அடக்கப் போய்விட்ட்டு இதுபோல் ஒரு
"பரிசை" பெற்று வந்தால் அவர்கள் பெற்றோர்கள் கண்ணீரை யாரு துடைப்பது?

மேதாவி கமலஹாசானா? இல்லைனா எவன் செத்தால் எனக்கென்ன? நானும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தர்ரேன்னு வந்து நிற்கும் ரசினிகாந்தா?

அடுத்தவனை நீ இதுபோல் ஊக்குவிப்பது எப்போது சரியென்றால், நீயும் எதைச் செய்ய தூண்டி விடுகிறாயோ, அதைச் செய்ய தயாராக இருக்கும்போது மட்டும்தான்.

தமிழ் கலாச்சாரம்,  உன் பொண்டாட்டி தாலினு  எதையாவது உளறி எவன் பெத்த பிள்ளையோ இது போல் ஆண்மை இழந்து தவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்??

My question is,

Is this worth losing your "potency" and become "impotent" at this age,  just because idiots like actors Kamal Haasan, Rajinikanth, Surya and Vijay  encourage you to do some worthless "fight" with poor bulls?? 

I DONT THINK SO!  Remember! They wont dare to do what they preach you to do-in the name of protecting your culture!

Mr Kamal Haasan!

You like jallikkattu? Go, participate in Alanganalloor every year! But Dont misdirect uneducated people in the name of your " tamil culture".

We know how selfish you are and how careful you would be protecting yourself when it comes to you and your life! Let others live too!

Wednesday, January 11, 2017

கல்யாணம் அவசியம் இல்லை ஆனால் ஜல்லிக்கட்டு ரொம்ப அவசியம்

ஆமா நம்ம உலகநாயகர் எத்தனை மாட்டை  இதுவரை அடக்கி இருக்காராம்??. சும்மா சபாஷ் நாயுடு வேலையைப் பார்க்காமல்.. ஜல்லிக்கட்டு ரொம்ப அவசியம்னு இவரும் இவரோடைய தொண்டர்களும் அட அட அட.

ஏன்னா இது தமிழர் காலாச்சாரமாம். தமிழர் அடையாளமாம்! ஆமா, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது தமிழர் கலாச்சாரமா என்ன? அதெல்லாம் தமிழர் கலாச்சாரப்படி சரியா செய்ய மாட்டீங்க?  உடனே வைப்பாட்டி வச்சிக்கிறதுகூட தமிழர் கலாச்சாரம்னு சொல்லிடாதீங்கப்பா.

எனக்கு என்ன புரியலைனா அந்த மாட்டுக்கு என்னப்பா தெரியும்? அது என்ன உங்கிட்ட வந்து என்னை நீ அடக்க முடியாதுனு சொல்லுச்சா? இவனுகளா, சும்மா இருக்க மாட்டைக் கூட்டி வந்து நான் வீரத்தைக் காட்டுறேன் பாருனு வீரத்தைக் காட்டுறாங்களாம். 

 வீரம் பொங்கி வந்தா ஆர்மில போயிச் சேரு.

உடனே இவரு பிரியாணிக்கு தடை விதிக்கணும்னு ஒரு விதண்டாவாதம்.

நீர் ஒரு பெரிய ராசனலிஸ்ட்னு சொல்லிக்கிட்டு அலைகிறீர். பாவம் அந்த மாட்டுட்டப் போயி வீரத்தைக் காட்டுறதை எந்த மூளையுள்ள பகுத்தறிவு வாதியும் சரினு சொல்லமாட்டான். நீர் என்னத்தை பகுத்தறிஞ்சு..

தமிழர் கலாச்சாரம்னா என்ன? மாட்டிடம் வீரம் காட்டுவது அர்த்தமற்ற கூமுட்டைத்தனம்!

உயிரினத்தைக் கொல்வது தப்பா? ஆமா தப்புத்தான்.  ஆனால் நீர்தான் தப்பில்லை என்பதுபோல் அசைவம் சாப்பிட ஆரம்பிச்சுட்டீர்? ஜல்லிக்கட்டுக்கு வக்காலத்து வாங்கும்போதுதான் உம் அறிவுக்கு அதெல்லாம்கூட தப்புதான்னு எட்டுதாக்கும்.

It is not a bad idea preaching people to become vegetarian either. But your intention is just for the sake of argument!

Yeah, I am against jallikkattu! It is idiotic to go show your "braveness" to an animal who hardly knows what the hell you are doing to it!


Sunday, January 8, 2017

நாடார் சமூகம் பற்றி மாலா வாசுதேவன் பதிவு மற்றும் விவாதம்

 நாடார் சமூகம் தங்களை அவமானப் படுத்தியதை, தங்கள் மகள், தங்கை, தாயை ஆடை அணியவிடாமல் அவமானப் படுத்திய வரலாறைப் பற்றி நாங்கள் கேட்கத் தயாராக இல்லை. அதை பாடப் புத்தகங்களில் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என போராடுகிறார்கள்.

பதிவர் மாலா வாசுதேவன் சொல்கிறார், வரலாறை சொல்வதில் தவறில்லை என்று. நாடார் பெண்களை மேலாடை அணியாமல் திரிய வேண்டும் என்று சொன்னது வரலாறு, அதை எல்லாப் பாடப் புத்தகங்களிலும் எழுதலாம் என்கிறார். 

 அதாவது "வரலாறு முக்கியம் அமைச்சரே" என்கிறார் ஒரு அரைவேக்காட்டு சி னி மா வசனத்தை மேற்கோள்காட்டி

இவருக்கு கூஜா தூக்கும் வி பாலா என்கிற பதிவர் பார்ப்பனர்களை "பார்ப்பான்" என்றும் பாடப் புத்தகங்களில் சொல்லி இருக்கிறது என்பது போல் உளறி வைக்கிறார்.

இது சம்மந்தமான என்னுடைய பின்னூட்டங்கள் "நாகரிகம், தரம்" கருதி அப்பதிவில் அகற்றப்பட்டன. அவைகள் இங்கே பதிவுடன் பதிவிடப்படுகிறது.

I spent lot of my time writing my comments, I dont like them being destroyed by some half-baked blogger who hardly understands the seriousness in this sensitive topic.


So, here you go, folks..

 

 

என்ன தான் இருக்கிறது 9ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி

சிபிஎஸ்இ சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்புப்பாடப்புத்தகத்திலிருந்து சில பகுதிகளை நீக்க வேண்டுமென்று கோரிக்கைகள் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டு தற்சமயம் அப்பகுதிகளை நீக்கி கல்வித்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, அப்பகுதிகளை வகுப்பறையில் நடத்தக்கூடாதென்றும் மேலும் அப்பகுதியிலிருந்து பரிட்சையில் கேள்விகள் கேட்கக் கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
ஒரு விஷயத்தைக்குறித்து யாராவது போராடும்போதுதான் (அது எவ்வளவு சாதாரணமாக விஷயமாக இருந்தபோதிலும்) பலரின் கவனத்தை அது திருப்புகிறது. என்ன தான் இருக்கிறது அதில் என்ற ஆர்வக்கோளாறில் அதைப் படித்தோம். 
இது தான் பாடப்புத்தகத்தில் இருக்கிறது - 1800களில் சாணார் என்றழைக்கப்பட்ட நாடார் குலப்பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கும் வகையில் ஆடை அணிவது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. உயர்குலத்தவரான நாயர் பெண்கள் மட்டுமே மேல்முண்டு அணிய அனுமதி. இச்சட்டத்தை எதிர்த்து 1822 முதல் 1859 வரையான காலங்களில் கடுமையாகப் போராடி, மேலாடை அணிவது எங்கள் உரிமை என்று நிறுவினர் நாடார் சமூகத்தினர். இப்போராட்டத்தில் ஆங்கிலேயர்களின் பங்கு மகத்தானது. பிரிட்டிஷ் மகாராணி இச்சட்டத்தைக் காட்டுமிராண்டித்தனமானது என்று கூறி கடுமையாகக் கண்டித்தார். வேறு வழியின்றி திருவிதாங்கூர் மன்னர் அனைத்து நாடார் பெண்களும் குப்பாயம் என்ற மேலாடை அணியலாம் என்ற உரிமை அளித்தார்.
பாடப்புத்தகத்தில் இப்பகுதியைத் தடை செய்வதற்கு சில காரணங்களை முன்வைக்கின்றனர் அரசியல்கட்சிகளைச் சார்ந்தோர் மற்றும் சில நாடார் அமைப்புகள். அந்தத் திருத்தங்களை வேண்டுமானால் செய்யலாமே தவிர, நீக்க வேண்டியதன் அவசியமென்ன?

நாடார் சமூகம், மேலாடை அணியக்கூட உரிமையில்லை என்று அசிங்கப்படுத்தப்பட்டும், அடக்கப்பட்டும், தடை பல தாண்டி முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்று வீறு கொண்டெழுந்தது. தான் கால் வைத்த அத்தனை துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது.  கடின உழைப்பே முன்னேற்றத்துக்கு அடிப்படை என்று நிரூபிக்கிறது. இன்றும் நம் தெருவில் சிறிய கடை வைத்திருந்த அண்ணாச்சி, அதே இடத்தில் நாளடைவில் சூப்பர் மார்க்கெட் கட்டி விரிவடைகின்றார் என்றால் அது கடின உழைப்பில்லாமல் வேறென்ன?    ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு நம்பிக்கைக் கீற்றைத் தருவதல்லவா இது போன்ற உழைப்பு?

சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்ததுதான் ஃபீனிக்ஸிற்கான பெருமை. தான் சாம்பலிலிருந்துதான் உயர்ந்தோம் என்று உலகிற்குத் தெரிவிப்பதில் என்ன அசிங்கம்? முன்னேறிச் செல்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அவசியம் நாம் எங்கிருந்து வந்தோம் என்பதைத் தெரிந்து கொள்வதும், தெரிவித்துக்கொள்வதும். என் வேர்களை வெளிப்படுத்திக்கொள்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. மாறாக என் முன்னோர்களைக் குறித்து நான் அளவில்லாப் பெருமையும், கர்வமும் கொள்கிறேன்.

முடிவாக - வரலாறு மிக முக்கியம் அமைச்சரே :)
Annex:

“… As it is not reasonable on the part of the Shanar women to wear cloths over their breasts, such custom being prohibited, they are required to abstain in future from covering the upper part of their body. An order (circular) had been issued on the 7th Edavam 989, to all places prohibiting the Shanar women of the families of such Sanars as may have embraced Christianity from wearing cloths, over their breasts, and requiring them to substitute for these the Kuppayam (a kind of short bodice used by their Christians and by Mohamadan native females) but with regard to their (the Shanars) allegation as an authority for wearing clothes over their breasts, that a decree has been passed subsequently by a law court, permitting the Shanar women on the contrary the use of clothes on the upper part of their body. Such a decision since if it be admitted as establishing a rule, it would be a direct contravention of the order alluded to, cannot but be considered as invalid. Therefore the order referred to is hereby republished to be held as a document (or authority) in their respect”
-C.M. Augur – Church, History of Travancore – 1902 – Appendix XVIII – Page vii

8 comments:

வருண் said...
History is important only for Victors and rulers. Most of the time they only wrote their victories and not their defeats. History is "carefully" written by manipulating the "facts" too. There are lots and lots of lies and manipulation is there in History. If someone said "வரலாறு முக்கியம் அமைச்சரே" அது ஒண்ணும் பொன்மொழியல்ல!அதை ஒரு குப்பை வசனமாகவும் பார்க்கலாம். அது பார்ப்பவரைப் பொறுத்து.
வருண் said...
ஒரு பக்கம் நாடார் சமூகம் எப்படி ஒடுக்கப்பட்டு இருந்தது என்பது இருக்கட்டும். இன்னொரு பக்கம், தன் மனைவி, அம்மா, தங்கை எல்லாம் மேலாடை போட்டு இருக்கும்போது இன்னொரு இனத்தை நீ மேலாடை போடக்கூடாதுனு சட்டம் கொண்டு வந்த உயர்சாதி னு சொல்லிக்கொண்டு அலைந்த ஈனத்தமிழர்களின் "இப் பெருமை", தமிழர்களுக்கு இழுக்கில்லையா?

தமிழ், தமிழர் பண்பாடு தமிழர் நாக்ரிகம்னு சும்மா ஏமாத்திக்கொண்டு திரிந்து இருக்கிறார்கள். உண்மையான ஈன உயர்சாதி தமிழன்களையும் அவனுகளுடைய ஈனப் புத்தியையும் பறைசாற்றுவது உங்களுக்கு கேவலமாக இல்லையா?

தோண்டி தோண்டிப் பார்த்தால் தமிழர் கலாச்சாரம் கேவலமானதாகத்தான் இருந்ந்து இருக்கு. இதில் பாதிக்கப்பட்டவர்களை விட "பாதிக்கப் பட வைத்தவர்கள்"தான் அவமானப் படவேண்டிய விசயம் இது! என்பது என்னுடைய பார்வை.
Bala V said...
History is important to victors only when the victors are alive now. When the history become a distant and hoary past, it is for all except the victors as they were all dead now. The right course is to prove that the history as written was a calculated imagination, by putting forth the genuine history as your research has told you.
Bala V said...
ஆசிரியர் ஏன் நாடார்கள் எதிர்க்கக்கூடாது என்று மட்டுமே சொல்கிறார். ஏன் எதிர்க்கிறார்கள் என்று சொல்லவில்லை அவர் சொல்வது போல, சாணார்கள் என்றழைக்கப்பட்டவர்கள் (ஓ பி சி சர்டிபிகேட் வாங்குவதற்காக பலர் சாணார் என்றுதான் போட்டுக்கொள்கிறார்கள். நாடார்களைப்பிடிக்காதவர்கள் அப்பெயரைத்தான் பயனபடுத்திப்பேசுவர். எப்படி பார்ப்பனரைப் பாப்பான் என்கிறார்களோ அது போல), இன்று தமிழ்ச்சமூகத்தில் ஓபிசிக்களில் மேலான நிலையை அடைந்திருக்கின்றனர். இதுவே அவர்கள் தங்கள் வரலாற்றை மூடி மறைப்பதற்குக் காரணம். ஒரு பெரிய ஜவுளிக்கடை முதலாளியோ, ஒரு வங்கி அல்லது எண்ணை தயாரிக்கும் நாடார் குடும்பமோ - டி எம் பி வங்கி, வி வி டி, இதயம் எண்ணை, போன்று) தங்கள் தலைமுறை, வரும் தலைமுறைகள் - தங்கள் முன்னோர் தலித்துக்களைப் போல நடத்தப்பட்டதைத் தெரிந்தால், தலித்துகளுக்கு இணையாக நாம் என்று கருதக்கூடும். மார்பை மறைக்க தடைசெய்யபப்ட்டது தலித்துகளுக்கும் கேரளா முழவதும்செய்யப்பட்டது எனவே. தலித்துகள்தான் இடைஞ்சல் அவர்களின் மரியாதையான இடத்துக்கு, இதுவே காரணம். நாடார்களை மட்டுமே இங்கு குறை சொல்ல முடியாது. இன்றைய தமிழ்ச்சமூகத்தில் எல்லாருமே தலித்துக்களைத் தீண்டத்தகாதவர்களாகப் பார்த்து, அவர்களுக்கு இணையாக நாம் நினைப்பில் கூட வராமல் பார்த்துக்கொள்கிறார்கள் என்பதுதானே உண்மை?

அதே சமயம், வரலாறு நன்கு பதியப்பட்டு விட்டது. பள்ளி பாடநூல்கள் வரலாறு எழுதாது. எழுதிய வரலாற்றிலிருந்து எடுத்துப்போடும். வரலாறு ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும். அவர்கள் பாடநூலைப்படித்து தெரியவதில்லை. ஆய்வு நூல்களையே தேர்தெடுப்பர். அவை பல்கிப்பெருகிக்கிடக்கின்றன. இந்தியா ஹவுஸ் லண்டனிலும், மற்றும் ஐரோப்பிய நூலகங்களிலும். இந்தியாவிலே பல நூல்கள் இருக்கின்றன. அவை தெளிவாக நாடார்கள் தீண்டத்தகாதவர்களாகவே திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடாத்தப்பட்டனர் என்றே தெரிவிக்கின்றனர்.

மேட்டுக்குடி நாடார்கள் அந்நூல்களைத் தடை செய்ய அரசிடம் கோரிக்கை வைக்கலாம். இந்துத்வாவினர் வெண்டி டோனிகர் நூல்களைத்தடை செய்தத்து போல. இது நாடார்கள் தங்கள் வரலாற்றை மூடி மறைக்கத் துடிக்கிறார்கள் எனற உண்மையைத்தான் பறை சாற்றும். உங்களைத்தூண்டியது போல எல்லாரையும் நடந்தது என்ன என்று அறியத் தூண்டும். மறைக்க மறைக்க மேலே வருமே தவிர கீழே போகாது என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.

வரலாறு வெற்றியாளர்களால் எழுதப்படுகிறது என்பது உண்மை. அதே சமயம் ரிவிசைனிஸ்ட் வர்லாறு என்பதும் உண்டு. அது கசப்பான உண்மைகளை மறைக்கவே எழுதப்படுகிறது.
வருண் said...
***History is important to victors only when the victors are alive now. When the history become a distant and hoary past, it is for all except the victors as they were all dead now. The right course is to prove that the history as written was a calculated imagination, by putting forth the genuine history as your research has told you.**

Is this your research paper on History?? Sounds like utter nonsense! Ha Ha


வருண் said...
***எப்படி பார்ப்பனரைப் பாப்பான் என்கிறார்களோ அது போல)**

Which history book has "paappaan"??!! Can you cite me here, genius??! Otherwise keep your mouth SHUT! You sound STUPID every time you open your mouth!
மாலா வாசுதேவன் said...
You should be careful with the choice of your words Sir. Only dignified comments are encouraged in my blog
வருண் said...
***மாலா வாசுதேவன் said...

You should be careful with the choice of your words Sir. Only dignified comments are encouraged in my blog***

Why dont you help him showing the high school text book which says the word "பார்ப்பான்" instead of advising me how I should comment on your "ugly topic"?

Let us see this situation with an example

A girl is a Professor in a College today. She is from Nadar community who were abused not so long ago. This girl's mom grew up in southern Tamilnadu. Her mom was forced to walk "topless/half naked" by some HIGH CLASS ANIMALS because her mom was born in such and such caste which was considered a "low class" by THESE ANIMALS

Today, this girl, DO NOT EVEN want to think about HOW her mom was abused 30-40 years ago and was forced to walk half-naked.


Whatever happened to her mom was HISTORY. Someone like you (Mala) or this Balu who are obsessed with history wants to discuss about her mom's force half-naked walk story in a textbook. You strongly believe that it had happened, why can not I discuss about it? But the girl who got affected by this abuse DO NOT EVEN want to think about how her mom was abused. She says, "not to discuss" about this topic. But you and Bala are arguing that "வரலாறு முக்கியம் அமைச்சரே"?

You are talking about dignity???Are you serious, Mala?