Wednesday, July 18, 2018

சென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்!!

எனக்குப் புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது   அறுபதுனு சொல்றாங்க.  இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. 

அந்தப் பொண்ணு  ஏழாவது படிக்கும் பச்சைக் குழந்தை. அதுவும் ஹியரிங் எய்ட் வைத்துள்ள ஒரு குழந்தை. அதை ஒருத்தன் இல்ல, 17 மிருகங்கள் பல நாட்களாக மிரட்டி, போதை மருந்து ஏற்றி..

இதுபோல் ஒரு குழந்தையை, அதைப் பெற்ற அவங்க அம்மா அப்பா இவ்வளவு நாள் எப்படி கவனிக்காமல் விட்டாங்க??!! காசு சம்பாரிக்கிறதுல பிஸியா இருந்து இருப்பாங்க போல? அதான் நம்ம ரொம்ப முன்னேறிட்டோம் இல்லையா?

கொஞ்ச நாள் முன்னால மேதை ஜோதிஜி தமிழ்நாடு முன்னேறுகிறதுனு பீத்தும்போது (செல் ஃபோன், இன்டெர்னெட், எல்லாமே ஈசியாக் கிடைக்கிதாம். என்ன இல்லை?)...கடுப்பாகி..

எது முன்னேற்றம் ? நம்ம நாசமாப் போயிக்கிட்டு இருக்கோம்  என்பதே உண்மை னு ஒரு பின்னூட்டம்  எழுதினேன். பதில் வரவில்லை.   இல்லைனா ஏதாவது கேள்வி கேட்டால் அவரிடமிருந்து  'நீங்க ஒரு ரஜினி ரசிகன்" னு ஏதாவது கேனத்தனமா "பதில்" வரும்.  இவர் பதிவில் போயி, "அருமையாக எழுதி இருக்கீங்க" ணு சும்மா பொத்தாம் பொதுவா பின்னூட்டமிடத் தெரியாதது நம்ம இயலாமை. இவரைச் சொல்லி என்ன செய்ய?

கொஞ்ச நாள் முன்னால கமலா ஹரிஹரன் அவர்கள் கூட்டுக் குடும்பம் பத்தி எழுதும்போது, "தனிக் குடித்தனம் போயி இதுபோல்தான், குழந்தைகள இவனுகளூம் கவனிக்காமல் பெரியவர்களிமிருந்தும் பிரித்து, அவர்கள சுத்தி ஆட்கள் இல்லாமல் தனிமைப் படுத்தப் பட்டு, கண்ட  மிருகங்ககளோடும் இன்ட்டராக்ட் செய்ய விட்டு நாசமாப் போவாங்கனு சொன்ன ஞாபகம்.

மிருகங்கள் புகைப் படத்தைப் பார்த்துக்கோங்க!!


https://files.nakkheeran.in/cdn/farfuture/Tf6bkHKtRzm2Hh-nvEHjfCV3l3GVsJ5gFVNOsOBSaT4/1531835675/sites/default/files/inline-images/rape_0.jpg
குற்றம் சாட்டப்பட்டவர்கள். நக்கீரனில் இருந்து வெட்டி எடுத்தது

எனக்கு அடிக்கடி தோனுவது இதுதான். ஏன் இவர்கள் மனநிலை இப்படி ஆகிறது?? குழந்தையை குழந்தையாக ஏன் பார்க்கத் தெரியவில்லை. இன்னொன்னு என்னனா இவனுக, கடவுள் நம்பிக்கை உள்ளவனுகளாக இருப்பானுக!  ஏன்? நல்ல தாய் தந்தையர் இல்லையா இவர்களூக்கு? இவர்கள் குடும்பத்தினரும் தரமில்லாதவர்களா??

என்ன? போதை மருந்தா??? பச்சைக் குழந்தைக்கா? என்னடா சொல்றீங்க? அப்போ போதை மருந்து மலிந்து கிடக்கா சென்னையில்?

17 மிருகங்கள் சரி, ஒரு நல்ல மனுஷன்கூட இதை பார்க்கவில்லையா? தவறு நடப்பதை உணரவில்லையா?? அச்சிறுமியை காப்பாத்த முயலவில்லையா? சென்னையில் இதுபோல் நல்ல மனிதர்களே இல்லையா?!!

 டாஸ்மாக் மட்டுமல்ல எல்லாவகையிலும் தமிழ்நாடு மேலை நாடுகள விட படு கேவலமாக ஆகிக் கொண்டு போகிறது என்பது தெளிவாத் தெரியுது.

சில வருடங்கள் முன்னால ஒரு கதை எழுதுற போட்டி நடந்தது. அதில் ஒரு ஸ்டெப் ஃபாதர் ஒரு சிறூ குழந்தையை (தமிழ் கதைதான்) வன்புணர்வு செய்ய முயல்வது போன்ற கதையை நடுவர்கள் பரிசு கொடுக்கத் தகுதி பெற்றதாக தேர்ந்தெடுத்தபோது, எனக்கு கதை எழுதியவனைவிட நடுவர்கள் மேலேதான் கொலை வெறி வந்தது. இவனுகளால எப்படி இப்படி ஒரு கதையை ஜீரணீக்க முடியுது??!! இதுபோல் கதைகள குப்பையில் போடாமல் எதுக்கு மேலும் விளம்பரம்? இவனுகளத்தான் மொதல்ல வெட்டனும்னு தோனுச்சு.

இதுபோல் வியாதி எப்படி வருகிறது? அதுவும் ஒரு குற உள்ள 11 வயது குழந்தையை. ஓருத்தனுக்கு வியாதி வந்தால் பாஸீபிள். 17 பேருக்கும் அதே வியாதியா?  இங்கேதான் பிரச்சினை வருகிறது. இது வியாதியல்ல. இவர்கள் வாழும் வாழ்க்கையே அவலமானது.

எனிவே, இவனுக மேல் சாட்டப்பட்ட குற்றம்  ஊர்ஜிதமானால்  இவர்கள தூக்கில் போடுவது எல்லாருக்கும் நல்லது- இவனுகளுக்கும் சேர்த்துத்தான்.

இதுபோல் எத்தனை குழந்தைகள் எத்தனை மிருகங்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கின்றனவோ. இதுபோல் மிருகங்கள் பல இடங்களில் சென்னையில் அலையத்தான் செய்யும். இன்னும் அலைந்துகொண்டு இருக்கின்றன என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்வார்களா?

எந்த ஆம்பளயையும் "இது ஒரு மிருகம்" என்பதை நினைவில் வைங்க. குழந்தைகள அம்மிருகங்களீடம் இருந்து தள்ளி வைப்பது நல்லது.

*******************************

 Image result for mysskin


மனநிலை பாதிக்கப்பட்ட மிஷ்க்கின் என்னும் பெயர் சொல்லிக்கொண்டு அலையும் இன்னொரு "சீக்காளி" பத்திப் பார்ப்போம்.

 இவன் பெண்ணாக பிறந்து இருந்தால் மம்மூட்டி அழகைப் பார்த்து அவரை 'வன்புணர்வு" செய்து இருப்பானாம்??!! இதை ஜோக்கு நினைத்து இவன் பேசுறானாம்.

Are you kidding me??!!

He says "RAPE"??!!

He is really really SICK!!!

மொதல்ல இவனுக்கு பெண் உணர்வுகளே தெரியாது, ஏனென்றால் இவனிடம் ஆண்ட்ரோஜன்தான் இருக்கு, எஸ்ரோஜன்கள் இல்லை.

அதனால் பெண்ணாக இருந்தால் என்கிற பேச்சை குப்பையில் போடனூம். 

இவனையாவது  விட்டுவிடலாம். இவனுக்கு வக்காலத்து வாங்க வந்து இருக்கான் ஒரு நாதாரி.  

ரைட்டர் சி எஸ் கேனு ஒரு கூமுட்டை!

இவன் என்ன தியரி விடுறான்னா மனநிலை சரியில்லாத மிச்சுக்கின் மேலே எல்லாருக்கும் பொறாமையாம்!!

பொறாமை?!!!!

ஹி இஸ் சீரியஸ்!!

அதனால்தான் innocent  மிச்சுக்கினை அடாவடியா விமர்சிக்கிறோமாம்.

அதைவிட காமடி என்னனா, பெண்கள் உணர்வுகள் எதுவுமே தெரியாமல் தெரிந்ததுபோல்,  பரத்தை கூற்று எழுதிய இவனுக்கு வன்புணர்வுனா என்னனே தெரியலை.

அதாவது ஒரு பெண் ஒரு ஆணை வன்புணர்வு செய்ய முடியாதாம்! அதையும் விளாவரியா விளக்குறேன்னு எதையோ ஒளறிக் கொட்டி இருக்கான்.

 இவனை மாதிரி முட்டாப் பயலுகள வச்சு என்ன பண்றது?

His defenses are "People are jealous of MISSKIN" and that "a woman can not sexually assault or molest a man". So, misskin hardly made any mistake!

Not only misskin this guy is also sick for sure!

Seems like we have got lots of sick people!  They dont realize what is right or wrong. Neither do they know they are sick.

Thursday, July 12, 2018

தேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி!

"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார்.  இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் தூக்கி எறியணும் அது இது னு சொல்லிக்கொண்டு  அலைகிறார்" என்கிறார்கள் மக்கள்.

ரிசர்வேஷன் என்பது பார்ப்பனர்கள் வெறுக்கும் ஒரு விசயம். பார்ப்பனர்கள் சாதியைச் சொல்லாமல் இருந்தால் அவர்கள் ஃபார்வேர்ட் ஆக எடுத்துக் கொள்வார்கள். அதனால் எவ்வித மாற்றமும் இல்லை. பார்ப்பனர்கள் சாதிச் சான்றிதழில் சாதியைச் சொல்லாமல் இருப்பது எந்தவிதமான தியாகமும் இல்லை என்கிற அடிப்படையை 'தேவர் மகன்" உணரவில்லை.

சுருதி ஒரு அடல்ட். அவர் தன் சாதியைச் சொல்லிக்கொண்டு அலைந்தால் நம்ம தேவர் மகன் எப்படி பொறுப்பு? அதுக்கு இவர் என்ன செய்வார் பாவம்?

ஆனால் சான்றிதழ் சாதி, தலித்துக்கு மட்டுமல்லாமல், தேவர், கள்ளர், வன்னியர் அனைவருக்கும் இன்று அவசியம் தேவைப்படுகிறது. அதனால் சாதியை சாதிச் சான்றிதழில் ஒழிக்கணும் என்னும் அரசியல் நிலைப்பாடு தேவர் மகனை புதைகுழிக்கு அனுப்பிவிடும் என்பது புரிந்து கொள்வது அவசியம். இது ஜல்லிக்கட்டுபோல் தூண்டிவிட்டுப் பேசி ஆதாயம் அடையும் விசயம் அல்ல! இந்த விசயத்தில் தமிழன் கோயில் மாடு மாதிரி  இவர் சொல்றதுக்கு தலையை ஆட்ட மாட்டான்!

ஆமா இனிமேல் புரிந்துதான் என்ன ஆகப்போது? டாமேஜ் இஸ் டன் அல்ரெடி னு எல்லாம் எண்ண வேண்டாம். தமிழ்நாட்டு மக்களுக்கு ஞாபக மறதி அதிகம். சாதிச்சான்றிதழ் அவசியம். நான் பார்ப்பனராக பிறந்ததால் எனக்குப் புரியவில்லை என்று சொல்லிக்கூட சமாளிக்கலாம்.

Thursday, July 5, 2018

காலா தோல்விப்படமாமே, குமாரு?

"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு" அது உண்மையா? 

அப்படியா? நல்லதாப் போச்சு,  இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து தமிழர்களை கொள்ளை அடிச்சுட்டானுகனு ஆளாளுக்கு மூக்கால அழுவார்கள். நல்லவேளை, இப்போ இவனுகளே படம் நல்லாப் போகலைனு சொல்வதால் இந்த மாதிரி எழவைக்கூட்டாமலாவது இருப்பானுக.

"சரி எத்தனை கோடி நஷ்டமாம் குமாரு?"

நஷ்டமா?? குறைந்த மதிப்பீட்டில் படம் 160 கோடிகள் (உலகளவில்) கலக்‌ஷன் என்கிறார்கள். சாட்டலைட் ரைட்ஸ் 70  கோடியாம். ஆக, 230 கோடி வசூல் பெற்றாலும் தலைவர்  படம் என்பதால் தோல்வினு சொல்லுவார்கள்.

"படத்துக்கு செலவு, குமாரு?"

தலைவர் சம்பளம் இல்லாமல், ஒரு 60 கோடி ஆயிருக்குமா?  வந்த 230 கோடியில், 100 கோடி (44 விழுக்காடுகள்) டாக்ஸ், கமிஷன் அது இதுனு போனாலும், 130 கோடி வருமானம். இதில் செலவு  60 கோடி போச்சுனா 70 கோடி. தலைவர் தனுஷுக்கு ஃப்ரியா நடிச்சுக் கொடுத்தால் 70 கோடி இலாபம். இல்லை தலைவர்  சம்பளம் 40 கோடி போச்சுனா தனுஷுக்கு 30 கோடி இலாபம். எப்படிப் பார்த்தாலும் தனுஷுக்கு இலாபம்தான்.

"ஆமா, படம் சரியாப் போகலைனா ஏன் எவனும் ஒப்பாரி வைக்கவில்லை, குமாரு? அதான் நான் லிங்காப் படத்தை இவ்ளோ பணம் போட்டு எடுத்தேன். தெருவில் நிக்கிறேன்னு வந்தானே,  சிங்காரவேலன்? அவன் மாதிரி?

இந்தப் படத்தை கமிஷன்-பேஸ்ட் ஆக ரிலீஸ் பண்ணி இருக்காங்க. படம் ஓடினாலும் ஓடாட்டாலும் தியேட்டர்காரன், டிஸ்ட்ரிப்யூட்டர் யாருக்கும் நஷ்டம் வராது.  ப்ரட்யூஷருக்குத்தான் நஷ்டம் வரும். அதனால் பாதிக்கப் படப்போவது தனுஷும்,தலைவரும் மட்டுமே.

ஏதோ தமிழர்கள்தான் இப்படத்தை புறக்கணித்துவிட்டார்கள். உங்க தலைவரின் ஆன்மீக அரசியல் பேச்சும், சினிமாவில் தாராவியில் வாழும் கேரக்டரும் ஒத்துப் போகலைனு சொல்றாங்க, குமாரு? தமிழர்கள்தான் காலாவை புறக்கணித்தார்களா, குமாரு??

அப்போ சினிமாவை சினிமாவாப் பார்க்க மாட்டானுக?!!

தலைவர் சொன்னது ஆன்மீக அரசியல். அதில் அடிதடிக்கு இடமில்லை. கல் எறிதலுக்கு இடமில்லை. போராட்டமே செய்தாலும் அதை அமைதியாக செய்யணும். அதனால் தூத்துக்குடி போய் வந்து தலைவர்  சொன்ன ஸ்டேட்மெண்ட்ல எந்தத் தவறும் இல்லை. அதுதான் தலைவரின்  அரசியல் நிலைப்பாடு. அது மக்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அதை தலைவர் தளர்த்தாமல் தொடரனும். அதுதான் தலைவருக்கு என்றுமே  நல்லது.

எவனாவது லூசுத்தனமா ஒளறுவான். அதையெல்லாம் சும்மா விடு, தல! உண்மை என்னனா இந்தப்படம் தமிழ்நாடு, கர்நாடகாவைவிட, கேரளா, ஆந்திராவில்தான் சரியாப் போகலை . ஆந்திராக்காரனுக்கும், கேரளாக்காரனுக்கும், போராட்டங்கள் தேவையில்லைனு சொன்னதால கோவமா என்ன? . அங்கேயும் கமிஷன் பேஸ்டாகத்தான் ரிலீஸ் பண்ணினார்கள். அதனால் அங்கேயிருந்தும் எதுவும் ஒப்பாரி வராது.

"ரஞ்சித் எதிர்காலம், குமாரு?"

ரஞ்சித் ஒரு நல்ல சம்பளம் வாங்கி இருப்பார். அவர் திருப்திக்கு தலைவரை வைத்து ஒரு நல்ல படம் கொடுத்துள்ளார். இந்தப் படம் அமோகமாக ஓடி இருந்தாலும் தலைவர் தொடர்ந்து ரஞ்சித் படத்தில் நடிக்கப் போவதில்லை. அதனால் ரஞ்சித்க்கு எந்த நஷ்டமும் இல்லை.

"உஙக் தலைவர்  மார்க்கட், குமாரு?"

ஹா ஹா ஹா ஹா!

67 வயதில், 50 கோடி சம்பளம்னு சொல்றாங்க. எம் ஜி ஆர் இந்த வயதில் நடிக்கவில்லை. சிவாஜிக்கெல்லாம் இந்த வயதில் இதுபோல் ஸ்டார் வால்யு இல்லை. படையப்பாவில் இதே வயதில் தலவைர்  அப்பாவாக சிவாஜி நடிச்சார். மேலும் கவுரவ வேடம் என்பதால் குறைந்த சம்பளத்தில்தான் நடித்தார். இன்னைக்கும் தலைவரை வைத்து படம் எடுக்க ஆயிரம்பேர் தயாரா இருக்கான். தலைவர் என்ன "உலக "இந்திய" குப்பையா" என்ன?

"2.0, குமாரு?"

350 கோடி செலவுனு சொல்றாங்க. இது தலைவர் படம் என்பதைவிட ஷங்கர் படம். படம் ப்ளாக் பஸ்டர் ஆனாலும், போட்ட காசை எப்படி எடுப்பார்கள்னு எனக்குத் தெரியலை. படம் ஹிட் ஆனாலும் ஒப்பாரிகளைப் பார்க்கலாம்னு நினைக்கிறேன்.

"ஏன் உங்க தலைவர் இந்த சூழலில் (ஒரே எழவா இருந்தது தமிழ்நாட்டில்)  இந்தப் படத்தை (காலாவை) வெளியிட்டார், குமாரு? கொஞ்சம் நிதானிச்சு இருக்கலாமோ?"

நீங்க வேற? செலவழிச்ச பணத்துக்கு ஒரு நாளைக்கு வட்டி எவ்ளோ? படத்தை வெளியிட்டதே நல்லது.  இல்லைனா விஸ்வரூபம், சபாஷ் நாயுடு மாதிரி படுத்தால் வட்டியே தயாரிப்பாளரை சாப்பிட்டுவிடும். படத்தை அப்பப்போ வெளியிடுவதே தயாரிப்பாளருக்கு நல்லது. 5 வருடம் கழிச்சு வெளியிடுவ தெல்லாம் விலை போகாத நடிகர்கள் படம்!