கபாலிக்கு அப்புறம் காலா படம் ரஞ்சித் கைவண்ணத்தில் வந்தது. படம் தயாரிச்சது தனுஷ். படம் வெளீ வந்தபோது ஸ்டர்லைட் பிரச்சினை. தமிழர்கள் உயிரிழப்பு. இந்த நேரத்தில் போராட்டங்கள் பத்தி ரஜனி விமர்சிச்சது மீடியாக்களால் ஊதப்பட்டு காலா படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. ஆனால் இடதுசாரி விமர்சகர்களூக்கு பிடித்தது. வலதுசாரி விமர்சகர்களூக்கு ராமரை வில்லனாக்கியது பிடிக்கவில்லை.
அடுத்து வந்த 2.0. இந்தப் படம் ஆந்திரா, கேரளா, கர்னாடகா, ஹிந்தி, வெளீ நாடுகளீல் மற்றூம் சென்னையில் ரெக்கார்ட் கலக்சன். இருந்தாலும் நான் பலமுற சொன்னதுபோல் போட்ட காசை எடுத்து இருப்பார்கள். சைனாவில் ரிலீஸ் பண்ணீ ஏதாவது இலாபம் தேறீனால் வெற்றீ எனலாம். இந்தப் படம் வெற்றீயோ, தோல்வியோ அது ஷங்கருக்குத்தான். ஏன்னா அவர் ரஜனியைவிட க்ராஃபிக்ஸத்தான் நம்பினார். 2.0 ஓரளவுக்கு தப்பிச்சது. நிச்சயம் எந்திரன் 1 ரஜனிக்குக் கொடுத்த புகழ் 2.0 கொடுக்கவில்லை.
உடனே 40 நாட்களீல் அடுத்த படம். பேட்ட. இப்போ அஜீத் படம் வந்து ஒரு வருடம் மேலாகுது. விஜய் படம் தீவாளீ தீவாளீக்குத்தான் போட்டியே இல்லாமல் வருது. மெர்ஷலும் சரி. சர்காரும் சரி. போட்டியே இல்லாமல் வந்தது. இந்த ஒரு சூழலில் கமல் படங்கள் (கடந்த 4 படங்கள்) தொடர்ந்து மக்கள கவர முடியாமல் தவிக்கும் வேளயிலே,2.0 ஓடி முடியாத 40 நாட்களீல் இன்னொரு படம். அதுவும் ஒரு வருடத்துக்கு மேல் காய்ந்து போயிருந்த விசுவாசம் படத்துடன் போட்டியாக. வந்து பேட்ட பெரிய வெற்றீயும் பெற்றூள்ளது.
பேட்ட? பெரிய வெற்றீயா?
அமெரிக்காவில் பேட்ட கலக்சன் 2.5 மில்லியன். விசுவாசம் 278 ஆயிரம். அமெரிக்காவில் மட்டும் ஏன் இப்படி ரஜனியை மட்டும் வச்சு கொண்டாடுறாங்கனு தெரியலை.
தமிழ்நாட்டில் பி அன்ட் சி ஏரியால விசுவாசம் பிச்சுக்கிட்டு ஓடுதுனு சொல்றாங்க.
அது ஏன் எ சென்டர்ல பின் தங்கியதுனு யாருக்கும் விளங்கவில்லை. ட்ராக்கர்ஸ் ஶ்ரீதர் பிள்ள, அவரு வீட்டுக்கார அம்மா ஶ்ரீதேவி, ரமேஷ் பாலா, கவுஷிக் னு எல்லாருமே அஜீத்தை தூக்கி விட முயன்றூம் அவர்கள் முகத்தில் கரியை பூசிவிட்டது பேட்ட. சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரப்படி பேட்டதான் முதலிடம்.
தமிழ்நாடு கலக்சன்னு இவங்க வெளீயிடுவது எந்த ஒரு ட்ராக்கிங்கும் இல்லாமல் சும்மா அவன் சொன்னது இவன் சொன்னது. படத்தை ப்ரமோட் பண்ண படத் தயாரிப்பாளர், விநியோகம் செய்பவர்கள் எல்லாம் சொல்லும் ஜோடிக்கப் பட்ட பொய்கள் என்பது இந்த முற அழகாத் தெரிந்தது.
ஆந்திராவில் பல பெரிய படங்களோட மோதியும் பேட்ட 'டீசன்ட்' கலக்சன்னு எப்போவும் ரஜனி படத்தை கவுத்தும் ஆந்திரா ட்ராக்கர்சே சொல்லுறான்.
விசுவாசத்தை வாங்கி ரிலீஸ் பண்ண ஆள் இல்லை. இவ்வளவுக்கும் ஆந்திரா ஆடியன்ஸ கவர வாய்ப்பு அதிகம்னு தோனுது.
கேரளாவிலும் பேட்டயை விட விசுவாசம் பாதி கூட கலக்ட் பண்ணல.
யு எஸ், யு கே, மலேசியா, சிங்கப்பூர், கர்நாடகா, ஆஸ்திரேலியா, மிடில் ஈஸ்ட், பிரான்ஸ் .
இப்படி எந்த ஒரு நாட்டை எடுத்துக் கொண்டாலும் ரமேஷ் பாலாவுக்கும் கவுசிக்கும் முகத்தில் கரி பூசப் பட்டது. பேட்டதான் முன்னிலையில் நின்றது. சென்னை கலக்சந்தான் ரமேஷ் பாலாவுக்கு செகிட்டில் அறஞ்ச மாதிரி வந்து நின்னது.
அப்படி இருந்தும், தமிழ் நாட்டில் 150 கோடி 200 கோடினு சொல்லிக்கொண்டும், ரெண்டாவது வாரத்தில் மலெசியா, சிங்கப்பூர், ஶ்ரீலங்காவில் பேட்டய மிஞ்சிடுச்சுனு என்ன என்னவோ கதை விட்டாலும். பேட்ட தான் இவர்கள் பொய் கணக்கு காட்டும் தமிழ்நாட்டை தவிர எல்லா இடங்களீலும் (சென்னை, கோயமுத்தூர் உள்ளீட) பேட்ட தான் முதலிடம்.
அப்படி என்ன பேட்ட நல்ல படமா?
என்னைக் கேட்டால் காலா பேட்ட யவிட நல்லா இருந்ததுனு சொல்லுவேன். ஆனால் பொது மக்கள் ரசனை வேற மாதிரி இருக்கு, சிம்ரன் - ரஜனி கெமிஸ்ட்ரி மிகவும் நல்லா வந்து இருந்தது. பாடல்கள் படம் பிடித்த விதம். மற்றபடி, காலா நிச்சயம் பெட்டர் மூவினுதான் நான் சொல்லுவேன். ரஜனி விசிறீ மற்றூம் பொது மக்களூக்கு பேட்ட தான் பிடிச்சு இருக்கு.
பேட்ட எங்கே எங்கே விசுவாசம் வசூலை விட அதிகம்?
அமெரிக்கா ( பத்து மடங்கு அதிகம் 2.5 மில்லியன் பேட்ட, 278 ஆயிரம் விசுவாசம்)
சென்னை (தமிழ்நாடு), பேட்ட 14 கோடி விசுவாசம் 11.5 கோடி
மலேசியா, சிங்கப்பூர், யு கே, கர்நாடகா, கேரளா, ஆந்திரா வடநாடு, மிடில் ஈஸ்ட் ஆஸ்திரேலியா, பிரான்சு, கன்னடா எல்லா இடங்களீலும் பேட்ட தான் முன்னிலையில் இருக்கு.
அப்படி இருந்தும் தமிழ்நாட்டில் விசுவாசம் பேட்டய விட கலக்ட் பண்ணீயதாக ஒரு பொய்ப் பிரச்சாரம் நடக்குது. பி அன்ட் சி சென்டரில் நிச்சயம் ஒரு 1 -5 லட்சங்கள் அதிகம் கலக்ட் செய்து இருக்கலாம். அதக்குக் காரணம் விசுவாசம் ஒரு கிராமியப் படம்.
இதேபோல் மன்னன்,சின்னக் கவுண்டர் போட்டியில் கிராமத்தில் சின்னக் கவுண்டர் நல்லாப் போச்சு. அப்போ எல்லாம் இந்த ட்ராக்கர்ஸ் தொல்லை கிடயாது. இப்போ இவனுக தொல்லை தாங்க முடியலை.
எதுக்கெடுத்தாலும் இந்த அபிராமி ராமநாதன் வேற வந்து ஒளறீத் தள்ளூறார். வயசாயிடுச்சு போல. :(