Wednesday, October 3, 2012

மத உணர்வு தப்பு! இன உணர்வு சரியா? ஏன்?

ஒருவர் அவருடைய  ஊர், நாடு, கண்டம் எதாயிருந்தாலும் பரவாயில்லைனு விட்டுவிட்டு அவர் தன் மதத்தை சேர்ந்தவர் என்பதால், தன் ஊருக்கு எதிராக, தன் நாட்டுக்கு எதிராக அவர் செய்த "தவறு"களை  நியாயப் படுத்த முயற்சித்தல், அவருக்கிழைத்த "அநீதி"யை எடுத்து விமர்சித்தல், அவருக்காக வரிந்துகொண்டு வருதல், என்கிற மத அடிப்படையான செயலை தவறு என்பதுபோல்தான் நாம் வாதிடுகிறோம். ஆமாம், யாரு இந்த நாம்? பொதுநோக்குப் புத்தியுள்ள, நம்மைப்போல நல்லவர்கள்! :-)

* மத உணர்வு என்பது நல்லதல்ல என்கிறோம்!

* மதத்தால் ஒன்றுபடுவது தவறென்கிறோம்!

* ஒருவனே தேவன் என்றால் எல்லாமதத்தவரும் இறைவன் குழந்தைகள்தானே? என்கிறோம்

* "ஐயா வருண்! நான் அப்படியெல்லாம் சொல்வதில்லை" என்றால் நீங்கள் இங்கே விமர்சிக்கப்படவில்லை! தயவு செய்து இதை கண்டுக்காதீங்க!

இறைவன் ஒருவனே என்றால், எல்லோரும் அந்த இறைவனை வணங்கவே, திருப்திப்படுத்தவே பல மதங்களும் உருவாக்கப்பட்டது என்கிற போதும் தன் மதம்தான் உயர்ந்தது என்று சொல்வதுகூட இறைவனுக்குக்கூட  நகைப்பை உண்டாக்கலாம்.

நாம் இப்படி சொல்வதை

* "மத உணர்வு கொண்டர்வர்கள்",

* "தன் மதம்தான், வழிதான் சரியானது என்று மதத்தால் ஒன்று சேர்பவர்கள்",

"இந்த மதவுணர்வு தவறானது என்கிற  நம்முடைய  நிலைப்பாட்டை" ஏற்றுக்கொள்ளத் தயங்குறாங்க.  மத உணர்வில் தவறென்ன? என்கிறார்கள். இருந்தாலும் இவர்கள், தம்முடைய இந்த நிலைப்பாடை "சரி" என்று வெளிப்படையாக வாதிடுவதில்லை!

ஏன் மத உணர்வு நல்லதல்ல என்பதற்கு சில காரணங்கள் நாம் சொல்லலாம்.

* சூழ்நிலை 1) நீங்க வக்காலத்து வாங்கும் அவர் அயல் நாட்டவராக இருக்கும்போது, அந்த நாடு நம் நாட்டுக்கு எதிரியாக இருக்கும்போது, உங்க மத உணர்வு,  உங்களை "தேச துரோகி" யாக்குதுபோல் ஒரு சூழ்நிலை உருவாகும் ஒரு அபாயம் இருக்கு!

* சூழ்நிலை 2) மதச்சார்பற்ற நாட்டில் வாழும் நீங்க நாட்டுப்பற்று உள்ளவராக இருக்கனும்னு எதிர்பார்க்கப்படுது. மத அடிப்படையில் நீங்கள் போகும்போது உங்கள் நாட்டுப்பற்று கேள்விக்குறியாகிற ஒரு அபாயமும் இருக்கு.

இப்படியெல்லாம் பிரச்சினைகள் இருக்குனு சொல்லி நாம் விவாதிக்கலாம். ஆனால்.. என்ன ஆனால்.. இதை எப்படி "நியாயப் படுத்தலாம்" னு பிறகு பார்ப்போம்.

அதாவது மதப்பற்று உள்ளவங்க,

* சூழ்நிலை 3) சூழ்நிலை 4) என்று பலவகைகளை காட்டி இதுபோல் சூழ்நிலைகளில் என்னுடைய மதவுணர்வு தப்பில்லை என்று வாதிடுவார்கள்

************************************

இன உணர்வு பத்தி பேசுவோம்..  

இங்கே நாம் அனைவரும் தமிழர்கள்! ஒரே இனம்!

சரி, நாம், " தமிழா! இன உணர்வு கொள்!" னு சொல்றோம். நாம் திராவிடர்கள் எல்லாம் ஒண்ணு சேரனும் என்கிறோம்!

 சில நேரங்களில் பார்ப்பனர்களை ஆரியர்கள் என்று சொல்லிப் நம்மைவிட்டுப் பிரிக்கிறோம்!

காரணம்?

* வீடு வாடகைக்கு விடப்படும்! பார்ப்பனர்களுக்கு மட்டும்! (இதுபோல் விளம்பரம்)

* மாமிசம் சாப்பிடுறவா ஆத்துக்கெல்லாம் எப்படி போகுறது? அவா ஆத்துல கவிச்சு வாடை இல்ல அடிக்கும்ண்ணா! (இதுபோல் எண்ணங்களுடன் திரியிறவங்க)

இவர்கள்தான் இதற்கு காரணம்!

சரி இனவுணர்வு பத்தி தொடருவோம்..

இனவுணர்வு  மட்டும் சரியா? ஏன் சரி??

* அ) ஒரு பிரச்சினை....அதில்  நம் மொழிபேசுபவர் தவறாக நடக்கிறார். மாற்று மொழி பேசுபவர் ஒரு அப்பாவி. நியாயம் நம் இனத்தவர்,  தமிழரிடம் இல்லை. பிறமொழி பேசுறவர் சொல்வதில், செய்வதில்தான் நியாயம் இருக்கு.  இந்த சூழலில் இன உணர்வு கொள்ளனுமா? இல்லைனா நியாயமாக நல்லவரான பிறமொழி பேசுறவர்  பக்கம் சேரனுமா?

* ஆ) ஒரு பார்ப்பனர் வீட்டு அப்பாவி பெண்ணிடம் ஒரு திராவிடர் தவறா நடந்துகொள்கிறார். அந்தப்பொண்ணு பாவம், எந்தத் தப்பும் செய்யவில்லை!
இந்த சூழலில் தமிழா நீ "இன உணர்வு" கொள்வியா? பாவம் தவறு செய்யாத ஒருவருக்கு கை கொடுப்பியா?

நம்ம  பொதுக்கட்டுரை எழுதுறோம். பலரையும் பலவாறு விமர்சிக்கிறோம். தமிழர் என்கிறோம். திராவிடர் என்கிறோம். இந்தியர் என்கிறோம். இன உணர்வு கொள் என்கிறோம். நாட்டுப்பற்று வேண்டும் என்கிறோம். ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதனாக ஒரு சூழ்நிலையில் எப்படி நடக்கிறோம்? என்பது வேறு விசயம்.

அதாவது தனிப்பட்ட ஒரு மனுஷனாக

* மேலே உள்ள சூழ்நிலை அ) ல நான் அந்த மாற்று மொழி பேசுபவனுக்குத்த்தான் ஆதரவு கொடுப்பேன்! நீங்க எப்படி வேணா இருந்துட்டுப் போங்க!

* மேலே உள்ள சூழ்நிலை ஆ) ல நான் அந்த அப்பாவிப் பெண்ணுக்குத்தான் ஆதரவு கொடுப்பேன்.

அப்படி நான் செய்வதால் இப்போ நான் தமிழ் இன உணர்வு மொழியுணர்வு இல்லாதவனாகவும். திராவிட உணர்வு இல்லாதவனாகவும் ஆகிறேன். ஆமாம் நான் இனி துரோகிதான்.

முடிவுரை:

இங்கேதான் நீங்க இன உணர்வுனு நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை  புரிந்து கொள்ளனும். 

* நாம் நியாயமான பிரச்சினைக்குத்தான் நம் இன உணர்வை, மொழி உணர்வை காட்டனும். 

* தமிழனுக்கு அநியாயம் நடக்கும்போதுதான் நாம் தமிழா இன உணர்வு கொள் என்கிறோம்! 

* தீண்டாமை, உயர்சாதி என்று வரும்போதுதான் திராவிடன் என்று நம்மை ஒன்று சேர்க்கிறோம். 

* தமிழ் மொழியை இகழும்போதுதான் நாம் இனவுணர்வு கொள்ளனும்!


அதேபோல், மதவுணர்வு கொள்பவர்களும் இதேபோல் நாங்க எம்மதத்தில் அப்பாவிகள் பாதிக்கப் படும்போதுதான் எம்மதத்தவருக்கு குரல் கொடுக்கிறோம். இதில் தவெறன்ன? என்று கேட்டால், அவர்களுக்கு நம் பதிலென்ன?

நீங்களே சொல்லுங்கள்! :)

நன்றி,  வணக்கம்!

Tuesday, October 2, 2012

ஜெயமோகன்! இலக்கியம் உமக்கு ஒரு கேடா?!

ஜெயமோகனுடைய அன்பு வாசகர் ஒருவர், அவரிடம், "ஆமா எதுக்கு இதெல்லாம், ஜெயமோகன்? இலக்கியமாவது மண்ணாங்கட்டியாவது! இந்தியா ஒரு ஏழை மக்கள் அதிகமாக வாழும் மூனாவது உலக நாடாயிருக்கு! மக்கள் தொகைவேற  பெருகிக்கிட்டே போகுது! சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாத ஏழைமக்களும் பெருகிக்கிட்டே போறாங்க! நீர் என்னத்த கதை எழுதி இலக்கியத்தை வளர்த்து கிழிக்கிறீர்னு எனக்குத் தெரியலை? ஆமா, உங்களுக்கெல்லாம் எழுத்தாளன்னா என்ன பெரிய கொம்பன்னு நெனைப்பா? கடவுளுனு நெனப்பு உமக்கு! இல்லையா?" னு கன்னா பின்னானு ஆங்கிலத்தில் திட்டி ஒரு கடிதம் எழுதியிருக்காரு!

*  இது எழுத்தாளன்னு சொல்லி பொழைப்பை ஓட்டுகிற எல்லாருக்குமே கேட்கப்பட்ட கேள்விதான் என்பதால், இதை ஜெயமோகன் பிரசுரிச்சு இருக்காரு அவர் தளத்தில்!

*  இந்த தாக்குதலுக்கு பதிலும் சொல்லி இருக்காரு!

* இத நம்ம எல்லாருமே படிக்கனும்! ஜெயமோகன் இதை எப்படி நியாயப் படுத்திகிறார் (ரா?)னு பாருங்க!

* பதிவுலகத்தில் கவிதை, கதை, கட்டுரை எழுதும் நீங்க எப்படி இதை நியாயப் படுத்தப் போறீங்க?

இதை நம்ம எல்லாரும் படிக்கனும், நம்ம நிலைப்பாட்டை முடிந்தால் விளக்கனும், என்கிற அக்கறையில், இங்கே கொடுக்கிறேன்! 

இலக்கியம் ஒரு கேடா?

Dear writer,
You are living in India. Please try to realize even today millions of village people’s are suffering even a proper daily wage life. Do you know, you are writing novel, it’s your passion? No one force you to write novels or short stories. Country like India, common people, we are not still in a position to enjoy our free time. Because we are from developing country. We must do hard work. We are not in a position to enjoy the novels or imaginary stories. Please don’t compare India with other EU nations. You are an Indian. Try to understand our society. I am sure; your novels are not going to feed any one of poor Indian village people. Are you dare to discuss with me out this issue as open debate.
I am one of your web pages READER. But feel nothing , no way to help my life or any other aspects? My question is why you, writers are cheating……………………..
Note: Country like India without any physical work, if you can survive, you are the luckiest person. Try to realize the ground reality. Are the writers are god? What you writers are thinking about yourself?
Bye
True Indian
gurupradap raajan gpraajan@yahoo.co.in


அன்புள்ள குருப்பிரதாப் ராஜன்
அருமையான கருத்து. அதை அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இந்தக்கருத்தைப் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை, உணர்ந்திருக்கவும் இல்லை. இதை நீங்கள் இங்குள்ள இலக்கிய வாசகர் எழுத்தாளர் அனைவருக்கும் கொண்டு சென்று சேர்த்தாகவேண்டும். அப்போதுதான் இக்கருத்தின் விளைவுகள் சாதகமாக இருக்கும். அதற்கு நீங்கள் இப்படி கடிதங்கள் மட்டும் எழுதினால் போதாது. இலக்கியத்தின் அபாயம் மற்றும் தேவையின்மையைப்பற்றி விரிவாக வாதிட்டு ஆதாரங்களுடன் நிறையக் கட்டுரைகள் எழுதவேண்டும். அவை அச்சு இதழ்களிலும் இணைய இதழ்களிலும் நிறைய பிரசுரமாகவேண்டும். இலக்கியத்தின் தீமையை வலியுறுத்தும் நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் ஆகியவற்றையும் எழுதலாம். தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் எடுக்கலாம். விடாமல் சில பத்தாண்டுகள் முயன்றால் இக்கருத்தை ஆணித்தரமாக நிறுவலாம். இக்கருத்தை மேலே கொண்டுசெல்லக்கூடிய சிந்தனையாளர்களின் ஒரு வரிசையையே நீங்கள் உருவாக்கவேண்டும்.
ஜெ
பதிவுலக கண்மணிகளே! 

நீங்க என்ன நினைக்கிறீங்க? இந்தக் கேள்வியையும், அதற்கு ஜெயமோகன் கொடுத்து இருக்கும் பதிலையும் பற்றி?

Monday, October 1, 2012

பதிவுலக மதச்சண்டையால் நன்மைகள்!!

சமீபத்தியப் பதிவுலக நிலவரம் பத்தி எல்லாருக்கும் தெரியும். ஒரு மதத்தவர் செய்யும் தவறுகளை இன்னொரு மதத்தவர், அல்லது தன்னை நாத்திகர் என்று சொல்லிக்கொள்பவர்கள் தோண்டி எடுத்து வந்து, விமர்சிக்கிறாங்க. உடனே பாதிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட அந்த மதத்தவர், தன்னை விமர்சித்த மதத்தவர்கள் செய்யும் அயோக்கித்தனங்களை எல்லாம் தோண்டி எடுத்து வந்து அவர்களை பழிக்குப் பழி வாங்குவதுபோல் விமர்சிக்கிறாங்க.

ஏன் இப்படி பதிவுலகம் மதநெடியடிக்கிறது? உலகில் பல நல்ல விடயங்களைப் பத்தி பேசலாமே? தம்மதத்தவர் எல்லாரும் யோக்கியர்கள் என்பதுபோல் எதற்கு வாதம் செய்யனும்? என்றெல்லாம்  பலர் வருந்தினாலும், இதில் பல நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது.

* யாருக்கோ அநீதி இழைக்கப்படுகிறது. அந்த அநீதி இழைக்கப்பட்டவர் ஒரு மதத்தை சார்ந்தவர். அநீதி இழைத்தவர்கள் வேறொரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால், உடனே  பாதிக்கப்பட்டப் பட்டவருக்காக, பாதிக்கப் மதத்தினர், அந்த விடயத்தை பெரிது படுத்தி உலகறிய செய்து, நியாயம் கேக்கிறாங்க. ஆக பாதிக்கப் பட்டவனுக்கு நியாயம் வேண்டுமென்று அதே மதத்தினரால் கேட்கக்படுகிறது. பாதிக்கப்பட்ட ஒருவனுக்கு நியாயம் கேட்பது  ஒரு நல்ல விடயம்தானே? யார் கேட்டால் என்னங்க?

* இன்னொரு சூழ்நிலையில்,  யாரோ ஒரு மதத்தவருக்கு  அநீதி இழைக்கப்படுகிறது. இப்போ அநீதி இழைத்தவர்களும் அம்மதத்தையே சார்ந்தவர்களாகிவிடுகிறார்கள். இந்த சூழலில் அம்மதத்தை சேர்ந்த சிறுபுத்தியுள்ள இவர்கள், அதை மூடி மறைக்கவோ, இல்லைனா கண்டுக்காமலோ போகத்தான் பார்க்கிறார்கள். பாதிக்கப்பட்டவனுக்காக பரிந்துகொண்டுக்கொண்டு போயி தன் மதத்தவர் செய்கிற அயோக்கியத்தனத்தை, மிருகத்தனத்தை வெளியே சொன்னால் நமக்குத்தானே, நம் மதத்துக்குத்தானே அசிங்கம்? என்கிற சிறுமையான மனப்பாங்கு இவர்களுக்கு!  ஆனால், மனசாட்சியுள்ள இவர்கள் உலகுக்குத் தெரியாமல் பாதிக்கப் பட்டவனுக்காக தன் மனதிலேயே வருத்தத்துடன் இருக்கலாம். தன் மதத்தவர் இப்படி தவறு செய்கிறார்களே என வெட்கி தலை குனியலாம். அதனால் என்ன பிரையோஜனம்? தம்மதத்தவரை அயோக்கியனாக நாமே உலகுக்கு காட்டுவது தவறு என்று எண்ணுவது  இவர்களோட அறியாமை. ஆனால், இவர்கள் மதத்தைப் பிடிக்காதவர்கள், இவர்களை பிடிக்காதவர்கள்,  பிறமதத்தவர், பாதிக்கப்பட்ட இவர் மதத்தை சேர்ந்த அந்த பலியானவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக, வீம்புக்கென்றே  வக்காலத்து வாங்குகிறார்கள்! நியாயம் கிடைக்க உதவுறாங்க. இதனால் பாதிக்கப் பட்டவனுக்கு அதே மதத்தை சார்ந்தவரால் அல்லாமல் பிறமதத்தவரால் நீதி கேட்கப்படுகிறது. அந்த அநீதியை உலகறியச் செய்யப்படுகிறது! நீதியும் கெடைக்கலாம்!

ஆக, மதத்தை தள்ளி வைத்துவிட்டு பாதிக்கப் பட்ட இருவரையும் (ரெண்டு சூழல்களிலும் பார்த்தால்) இரண்டு மனிதர்களாக பார்த்தோமென்றால், அவர்களுக்கு ஏதோ ஒரு மதத்தினரால் நியாயம் கேட்கப்படுகிறது. நியாயம் கிடைக்கிறது.

எல்லா மதத்தவரிலும் மற்றும் நாத்திகர்களிலும் அயோக்கியர் இருக்கத்தான் செய்றாங்க என்பது மனசாட்சியுள்ள எல்லாருக்கும் தெரிந்த உண்மைதான்!

அதனால் இந்தப் பதிவுலக  மதச்சண்டையால் பாதிக்கப் பட்ட நம் மக்களுக்கு ஏதோ ஒரு மதத்தினரால் கிடைக்கும் நன்மையை நினைத்து சந்தோசப் படுவோமா? :)