ரொம்ப நாளாச்சு எதையும் எழுதி.
மதுரைத் தமிழன் ஏன் இப்படி தலைப்பு விசயத்தை ஏன் கேவலமாக விமர்சிக்கிறாங்க? அதுவும் தமிழில் கொச்சைப் படுத்துறாங்கனு ஏதோ எழுதி இருந்ததைப் பார்க்க நேர்ந்தது.
பொதுவாக இதுபோல் இன்வால்வ் ஆகி இருக்கவங்க ரெண்டு பேர் மேலயும் தப்பு அல்லது அவங்க செய்றது சரி னு கூட சொல்லலாம்.
சரி னா?
The Departed movie plot has an affair. I found that "lovely affair"!
வைப்பாட்டி யா இருக்கவங்க செய்றது தப்புனா, அவங்கள வச்சிருக்க ஆம்பளை மேல அதைவிட தப்பு. Everyone knows that ஆனால் நம்ம கலாச்சாரத்தில் மட்டுமல்ல பொதுவாக எளியவர்தான் பாதிக்கப் படுவாங்க.
நான் பழங்கதை பேசிட்டு இருக்கேன்.
இன்றைய நிலை என்ன ?
எனக்குத் தெரியாது.
ஆனால் இப்போ எல்லாம் இது நம்ம கல்சர்ல சாதரணமாகி விட்டதுனு சொல்றாங்க. இதுக்கு காரணம் என்ன? ஏன் குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இப்படி சைடு ல ஏதாவது ஆரம்பிக்கிறாங்க.
பங்காளிகளில் நான் துரியோதனன் மாரி எல்லாம் பங்காளி இருப்பாங்களா? னு நினைத்த காலம் உண்டு.ஆனால் இப்போ ரியல் வாழ்வில் அதை விட பல மடங்கு போசமானவங்கள பார்க்கிறேன். வயதாக ஆக, கூடப் பிறந்த உறவுகள் எல்லாம் எளிதில் உடைகிறது. சுய நலம், கரப்ஷன் எல்லாமே அதிகமாகுது. சின்ன வயதில் நல்லவங்களா இருக்காங்க. வயதாக ஆக "வைசர்" ஆக பொதுவாக யாரும் ஆவதில்லை. நீங்க நியாயமாக நல்லவராக விட்டுக் கொடுத்துப் போனாலும், அதையும் யாரும் பாராட்டவோ போவதில்லை. உங்கள பைத்தியம்னு நெனச்சுக்குவாங்க.அல்லது எவ்ளோ காசு வச்சிருக்கானோ, இதெல்லாம் இவனுக்கு பெரிய காசு சொத்து இல்லைனு பேசுவாங்க. உங்கள் பெரியமனிதத் தன்மையை தவறாகத்தான் இன்டர்ப்ரெட் செய்வாங்க. நீங்க அவங்கள இக்னோர் பண்ணனும். நல்ல பேர் எல்லாம் வாங்குறது மிகவும் கடினம்.
நான் பார்த்தவரைக்கும் பெரிய மனுஷத் தன்மை பைத்தியக்காரத்தனம்!
அதேபோல் இந்த அஃபையரும் அப்படித்தான். நாம் கதைகளில் படிப்பதை விட நிஜ வாழ்வில் சாதாரணமாக நடக்குது.
இதுக்குக் காரணம் என்னனா, பல காரணங்கள். நான் சொல்ல ஆரம்பிச்சா சொல்லிக்கிட்டே போகலாம். இபோதைக்கு அதுல இறங்கவில்லை.
ஆனால் பொதுவாக இதுல அஃபையர்ல இன்வால்வ் ஆகி இருக்கவங்களுக்கு உண்மையான காதல் போலதான் தோணும். ஒருத்தரை ஒருத்தர் நேசிப்பாங்க, மதிப்பாங்க.
கொஞ்ச நாள்தான் இதுவும்.
இன்னொரு பிரச்சினை இப்போ ஆரம்பிக்கும். அது என்னனா இது வந்து ரெண்டாவது உறவு. மூனாவது உறவு ஒண்ணு ஆரம்பிக்கலாம். அதாவது இந்த ரெண்டாவது உறவில் உயிருக்கு உயிராக இருப்பவங்களுக்கு இடையில் பிணக்குகள் வரலாம். ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பிக்கலாம். கள்ளக் காதலோ, நல்ல காதலோ லாங் டேர்ம் ரிலேஷன்ஷிப்ல பிரச்சினை வரத்தான் செய்யும். இது ஒரு தொடர்கதையாவும் ஆகலாம். அதையும் பார்க்கிறேன்.
இதெல்லாம் பார்த்துத்தான் ஒருவனுக்கு ஒருத்தினு சட்டம் கொண்டு வந்தாங்களா என்னனு தெரியலை. ஆண்கள் "அவர்கள் ரஜினிகாந்த்" பாத்திரத்தை விட கேவலமா மாரி விடுறாங்க.
ஆக என்னதான் சொல்ல வர்ர?னு கேக்குறீங்க?
நான் இப்போ பார்க்கும் உலகம் கதைகளில் படிப்பதைவிட பல மடங்கு போசமாத்தான் இருக்கு. அண்ணன் தம்பி அல்லது அண்ணன் தங்கை உறவா இருந்தாலும். அல்லது அஃபையர் அல்லது கள்ளக் காதலாக இருந்தாலும். மனிதர்கள பயங்கரமாக மாறி விடுறாங்க. இது ஏன்? னு அனலைஸ் பண்ணலாம். புரிஞ்சுக்கலாம்.
ஆனால் இதை சரிப்படுத்த முயல்வதோ, நினைப்பதோ வேஸ்ட் ஆஃப் டைம்.உலகில் நம்ம யாரையும் கண்ட்ரோல் பண்ண முடியாது. நம் ஒருவரைத் தவிர. இது என் அசையா நம்பிக்கை!.
We can only observe and analyze, "why people do what they are doing?" That is the best we can do! Nothing more!
No comments:
Post a Comment