பொதுவாக திரு. ராகவன் அவர்கள், பார்க்கும் கோணத்திற்கும், அவர் கருத்துக்கும், நான் பார்க்கும் கோணத்திற்கும், என் கருத்துக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான்! ஏன் என்றால் சமுதாயத்தில் அவர் சூழலில் நான் வளரவில்லை. அவர் பெற்ற கசப்பான அனுபவங்களோ, அவர் ரசித்த இனிமையான அனுபவங்களோ நான் அனுபவித்ததில்லை! அதனால் அவர் உணர்வுகளை சரிவர புரிந்துகொள்ள முடியாமல் அவரையும் அவர் பதிவுகளையும் பலவிதமாக விமர்சித்து இருப்பவன் நான். இருப்பினும் ஒரு சில தருணங்களில் "நமக்குள் இருப்பது வெறும் கருத்து வேறுபாடுதான், திரு. ராகவன்" என்பதை அவர் தளத்தில் அவரிடம் பின்னூட்டத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறேன். பெரிய மனிதன் என்பதால் திரு ராகவன், கருத்து சம்மந்தமான என் நிலைப்பாட்டை சரி வர புரிந்து கொண்டார் என்றே சொல்ல வேணும்.
திரு ராகவன் அவர்கள், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கும்போதும் "தொடர்ந்து, பதிவுலகில் தன் அனுபவத்தை (கஷ்டங்களைக்கூட) பலருக்கும் உதவும் வகையில் ஆக்கப்பூர்வமாக எழுதி, அதை பகிர்ந்து கொண்டிருக்கிறாரே?" என்று அதிசயமாக இருக்கும் எனக்கு. மேலும் சமீபத்தில் அவர் தளத்தில் வந்த மிகவும் உற்சாகமாகப் பதிவுகளையும், பிறதளங்களில் எழுதும் அவர் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது, "திரு ராகவன் அவருக்கு வந்த நோயை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வென்றுவிட்டார், இனிமேல் தொடர்ந்து நிறையப் பதிவுகள் எழுதுவார்" என்றுதான் நேற்றுக்கூட நினைத்தேன் ! திடீர் என்று அவருக்கு ஏற்பட்ட Cardiac arrest ஆல் அவர் நம்மை எல்லாம் விட்டு சென்றுவிட்டார் என்கிற இன்றைய செய்தி என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
![]() |
| We miss you, Mr. Raghavan |
My heartfelt condolences to his family and his relatives and friends who know him personally well. I want them to know Tamil bloggers (who likes and dislikes his posts and responses) are going to miss him as much as they do. I want them to know, Mr. Raghavan will be there in our thoughts as long as we live! And of course his posts will live for ever in Tamil blog world.
