Monday, May 11, 2015

நீதிபதி குன்ஹாவின் இன்றைய மனநிலை!!

பார்பனர்கள்போல் நான் சிந்திப்பதில்லை! எப்போதுமே என் சிந்தனைகள் ஓரளவுக்கு அர்த்தமுள்ளதாகவே இருக்கும். எனக்காக ஒரு கடவுளை உருவாக்கி என்னையே ஏமாற்றிக்கொள்பவனல்ல நான்! மனசாட்சியை ஓரமாக வைத்துவிட்டு நான் உருவாக்கிய  பகவானிடம் நான் வேண்டுவதில்லை! அதனால்தான் நான் சட்டம் படிக்கவில்லை! ஆனால் பாவம் நீதிபதி குன்ஹா. அவர் மனநிலை எப்படி இருக்கும்? சட்டம் படித்து நாசமாகப் போய்விட்டார். அவர் படித்த சட்டத்தை, நீதியை எல்லாம் நமது சமூகம் மற்றும் அரசியல் சூழல் கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டது. அவருக்காக நாம் ஒப்பாரி வைக்க வேண்டிய இச்சூழலில், நாமெல்லாம் அநீதி வென்றதைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். என்ன பரிதாபம்?! I really really feel sorry for Mr. Cunha today!

Saturday, May 9, 2015

ரசனை, கடந்தவார ஸ்டாக் மார்க்கட், அன்னையர் தினம்!

கீழே படத்தில் உள்ள ரெண்டு படங்களில் இவங்க ரெண்டு பேருமே செலிப்ரிட்டிகள்தான். பலரால் ரசிக்கப் படுகிறவர்கள்தான். ஆனால் எல்லாரையும் எல்லாராலும் ரசிக்க முடியாது. ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் வேறமாதிரித்தான் இருக்கு. மற்றவர்கள் ரசனை பத்தி எனக்குத் தெரியாது. என் ரசனை பத்தி, அதான் நான் ரசித்தது பத்தி  சொல்லுறேன்.

ஒருத்தரைப் பார்த்தால் பிடிக்கிது இன்னொருத்தரைப் பார்த்தால் கொலவெறி வருது.
சன் டிவி சண்டே கலாட்டா தேவதர்ஷினி! ரொம்பப்பிடிச்ச செலிப்ரிட்டி! அந்த அண்ணனை இப்போதைக்கு ஃப்ரியா விடுங்க!


விஜய் டிவில வரும் இவனைப் பார்த்தாலே எனக்கு கொலைவெறிதான் வரும்! இவன் வாயைத் திறந்தால் கேட்கவே வேணாம்.


உங்க முதல் தியரி..

அவ (தேவதர்ஷினி) ஒரு பொண்ணு,  நீ ஒரு ஆணு, அப்படி இப்படினு ஏதாவது தியரி விடாதீங்கப்பா. அதெல்லாம் ஓரளவுக்குத்தான் இன்ஃப்ளுவெண்ஸ் பண்ண முடியும். அதுவே முழுமையான காரணம் இல்லைனு நான் நம்புகிகிறேன். ஏன்னா டி வி ல செலிப்ரிட்டியா வர்ர அழகான எல்லாப் பொண்ணுங்களையும் நான் ரசிப்பதில்லை.

என்ன என்ன? தேவதர்ஷினி பொண்ணு இல்லை, ஆண்ட்டியா?? நான் இந்த விவாதத்துக்கு வரலை. :)))

உங்க அடுத்த தியரி என்ன?

 உனக்கு சன் டிவிதான் பிடிக்கும்போல.. விஜய் டி வி பிடிக்காதுபோல.. அதுவும் உண்மை இல்லை. நான் அதிகமாகப் பார்ப்பது விஜய் டி வி தான். சன் இல்லை.

என் ரசனை அப்படி, அவ்வளவுதான்.  This guy annoys me but Devadharshini can not annoy me even if she tries hard.

*******************

ஸ்டாக் மார்க்கட்:

போன வாரம் ட்விட்டர் (TWTR)  மேலே இருந்து ஒரு 22-26 % கீழே போயி பாதாளத்தில் விழுந்துவிட்டது. அதைத் தொடர்ந்து LNKD மற்றும் yelp போன்ற சமூக வலைதள ஸ்டாக் மார்க்கட்  பாதாளத்தில் விழுந்துவிட்டது. முகநூல் அந்தளவுக்கு பாதிக்கப் படவில்லை.

இந்த ஷேர்ஸ் வாங்கி வைத்திருந்தவர்கள் நிலைமை கஷ்டம்தான். YELP மட்டும் மேலே வந்துவிட்டது. ட்விட்டர், லின்க்ட் இரண்டும் இன்னும் பாதாளத்தில்தான் இருக்கு.

*************************

இன்று அன்னையர் தினம்:

மேலே உள்ள படம் நான் வரையவில்லை! திருடியது





Saturday, May 2, 2015

நான் உத்தம வில்லன் பார்த்த கதை!

எனக்கு உத்தமவில்லன் பட சம்மந்தமான ஸ்டில்களைப் பார்க்கும்போதே ஒரு மாதிரியான உணர்வு. எப்படிச் சொல்றது? கொஞ்சம் பீதி, கொஞ்சம் ஒரு மாதிரியான, எப்படினு தெளிவாகச் சொல்ல முடியாத உணர்வு.  நிச்சயம் அது ஒரு நல்லுணர்வு இல்லைனு மட்டும் தெரியும். மற்றபடி அதை விவரமாகச் சொல்லத் தெரியவில்லை.

 இல்ல, நான் கொஞ்சம் பயந்த சுபாவம் வேறயா? அதனாலேயா என்னனு தெரியலை, கீழே உள்ளதுபோல் வந்த ஸ்டிலகளைப் பார்த்தால் கொஞ்சம் இல்ல ரொம்பவே பயம்.


உங்களுக்கு பயமா இல்லையா?



உங்களுக்கு ஒரு மாதிரியான உணர்வு ஏற்படலையா?

சரி, விடுங்க, என் பிரச்சினை எனக்கு.

ஆனால், கமலஹாசன் என்கிற ஒரு உன்னதக் கலைஞன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன்  என்று  சொல்வதே  எனக்கெல்லாம் பெருமை சேர்க்கும்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை! அப்படிப்பட்ட மாபெரும் ஒரு கலைஞனை நாம் பெரிதாக நினைக்கவில்லை என்றால், அவனுடைய தன்னலமில்லா ஆக்கங்களை மதித்து,  பாராட்டி, மெச்சவில்லை என்றால்..பாமரன் என் நிலைமை  என்ன ஆகும்னு யோசிச்சுப் பாருங்க. கலாரசனையே இல்லாத ஒரு ஜடம் இந்த வருண்ணு நம்ம விமர்சனம் எழுதுவதில் பிரபலங்கள் கேபுளு, அப்புறம் பிச்சைப்பாத்திரம் சுரேஷு, அப்புறம் பெயரைச் சொல்ல முடியாத பல கலாரசிகர்கள் எல்லாம் சொல்லிடுவாங்க. உலகம் மேதைகள் சொல்வதை நம்புமா இல்லைனா பாமரன் சொல்வதை நம்புமா? அதனால சரி, எப்படியாவது இந்த உன்னதக் கலைஞனுடைய தன்னலமில்லாத உழைப்பை, தமிழர்க்காகவும், கலைக்காகவும் செய்யும் சேவையை நாம்  "அக்னாட்ஜ்" செய்தே ஆகணும்னு, உத்தம வில்லன் படம் பார்க்க டிக்கட்டை வாங்கி விட்டேன். வெறும் பதிணைந்தே டாலர்கள் தான். ஆண்லைன்லயே வாங்கியாச்சு.

அமெரிக்காவில் படம் ரிலீஸ் ஆவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. சரி நம்ம உன்னதக் கலைஞனின் அற்புதப் படைப்பைப் பார்த்துப் பரவசம் அடைவோம்னு தியேட்டர்ப் பக்கம் போனால் அங்கே இருக்க மக்கள் கூட்டத்தில் நம்மள மாதிரி சல்லவாரிப்பயளுக எவனும் இல்லை. கோட்டு சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு  நம்மைவிட பல மடங்கு நாகரீகத்திலும், அறிவிலும், அழகிலும் உயர்ந்தவர்களாக இருப்பவர்கள்போல எனக்குத் தோன்றினார்கள்.  உள்ளே சினிமா ஹாலில் நுழைவதற்காக லாபியில் நடக்கும்போது  ஒரே படபடப்பு. அந்த பீதி தரும் ஸ்டில் கள் என் கண் முன்னால் வந்து நின்னது. எனக்கு மறுபடியும் பயம் தொத்திக் கொண்டது. உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு.

நான்  யோசிச்சு யோசிச்சு ஒரு வழியா ஒரு நல்ல முடிவுக்கு வந்துவிட்டேன்.  எப்படியோ  இந்த மாபெரும் கலைஞனை நாம் பாராட்டும் வகையில் நம் பங்குக்கு ஒரு டிக்கட் வாங்கியாச்சு. அந்தக் கலைஞனுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நம்ம வைக்க வேண்டிய தட்சணையை  வச்சாச்சு. இனிமேல் படத்தைப் போயிப் பார்க்கணும் என்பது அவசியமா?? படம் பார்த்துட்டு.. சப்போஸ் அந்த படைப்பு நமக்குப் பிடிக்கலைனா? வாயைத் திறந்து அந்த உண்மையை யாரிடமும் சொல்ல முடியுமா? நிச்சயம் வாயைத் திறக்க முடியாது. ஆக உண்மையான விமர்சனம் என்று  நம்ம தளத்தில் எழுதவும் முடியாது. அப்படி எழுதினால் விளைவுகள் பயங்கரமா இருக்கும். நாதாரிப்பய! இவனுக்கு கமல்மேல எப்போவுமே காண்டு, னு சொல்லிடுவாளே!. கொஞ்சம் யோசிங்க! நம்ம கேபுளு , பிச்சைப் பாத்திரம் போன்ற சினிமாவைக் கறைத்துக் குடிச்ச மேதைகள் சொல்வதை ஊர் உலகம் நம்புமா? இல்லை இந்தக் கேணப்பய வருண் உளறுவதை உலகம் நம்புமா?

ஆக, படத்தைப் பார்த்து ஒரு வேளை படம் பிடிக்கலைனா.. வெளியில் கலைஞானியின் படைப்பு எனக்குப் பிடிக்கலைனு நிச்சயம் சொல்ல முடியாது என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை. அப்போ ஒண்ணு செய்வோமே? படத்தைப் பார்க்காமலே விட்டுடுவோமே? அப்படிச் செய்தால் இப்போ நமக்கும் பெரிய நஷ்டமில்லை! அந்த மாபெரும் கலைஞனுக்கும் நஷ்டமில்லை! காசு கொடுத்து டிக்கட்தான் வாங்கியாச்சு இல்லை? அதுதானே தமிழுக்கும், கலைக்கும், ஒரு உன்னதக் கலைஞனுக்கும் நான் செய்ய வேண்டிய நற்பணி? நம்முடைய கடமை முடிந்தது அல்லவா?  அப்படினு ஒருநல்ல முடிவுக்கு வந்து டிக்கட்டை கிழிச்சுக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

வீட்டுக்கு வந்து நம்ம மார்ட்டின் ஸ்கார்சேசி யுடைய the departed dvd   யை இன்னொரு முறை பார்த்தேன்.

 

இதுதான் நான் உத்தம வில்லன் பார்த்த கதை.