Thursday, September 10, 2015

சாமி என்னும் கற்சிலைக்கு எதுக்குப் பாலாபிஷேகம்?

ஏழைகள் நிறைந்த நாடு இந்தியா. நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது அபத்தம். ப்ரோட்டீன் ரிச் உணவான பாலை மாட்டை ஏமாத்தி அதிடம் இருந்து பறித்து, மனிதன் தன் தேவைக்கு பயன்படுத்துகிறான். சரி, போகட்டும். ஏழ்மை நாடான இந்தியாவில் சினிமா நடிகர் களின்  'கட் அவ்ட்'க்கு பாலை  ஊற்றுவதைவிட  அந்தப் பாலை ஏழைக்குழந்தைகளுக்குத் தரலாம். இதில் மாற்றுக்கருத்து சிந்திக்கத் தெரிந்த மூளை உள்ள யாருக்கும் இருக்காது. அப்படி சிலைக்கு பாலாபிஷேகம் செய்பவன் ஒரு அடிமுட்டாள்!

 



 Image result for பாலாபிஷேகம்



சரி, கடவுள் என  ராமன், இலக்குவன், முருகன், கணேசன், ஐய்யப்பன், சரஸ்வதி, லட்சுமி, காளியாத்தா, மாரியாத்தா னு உள்ள உருவச் சிலைகளை வடித்து மனிதன் தன் மனவியாதிக்கு மருந்தாக பயன்படுத்துகிறான்.

தான் செய்யும் அயோக்கியத்தனத்தால் தனக்கு ஏற்படும் மனப் பிராந்தியை சரி செய்ய இதுபோல் கடவுள்ணு சொல்லிப் பல கற்பனை கேரக்டர்களை உருவாக்கி தன் மனவியாதிக்கு மருந்தாக பயன்படுத்துகிறான். சரி போகட்டும், எப்படியோ அவன் மனம் நன்னிலை அடைந்தால் சரி.

 


அதோட நின்றானா? அதுமட்டுமல்லாமல் அதே சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்கிறான். இது மட்டும் அபத்தம் இல்லையா? எனக்கு விளங்கவில்லை!

 உடனே நம்ம பக்தசிகாமணிகள் எல்லாம் நம்மளை வில்லனைப் பார்ப்பதுபோல் பார்ப்பார்கள்.

மனிதர்களின் முக்கியமாக, பக்தகோடிகளின் மூளை வினோதமானது. தனக்கு விருப்பமுள்ள அபத்தத்தை எல்லாம் கண்டு கொள்ளாது. தனக்குப் பிடிக்காத அபத்தத்தை பூதக்கண்ணாடி இட்டுப் பார்க்கும். வேடிக்கையான உலகம் இது!

Thursday, August 20, 2015

திமு காரன் கழகம் வெட்டிப்பேச்சு மேலே கேஸ் போடாதா?

தி மு காரனிடம் இருந்து சொத்தை மீட்ட கதைனு ஒரு பதிவர் விஷப் பதிவெழுதிக்கொண்டு இருக்கிறார். அதாவது எவனோ ஒரு அரசியல்ப்பொறுக்கி  செய்த அடாவடித்தனத்தை அவன் தி மு காரன் என்கிற முத்திரை கொடுத்து கழகத்தை ஒட்டுமொத்தமாக  இழிவுபடுத்தும் ஒரு கதை இது.

எனக்குத் தெரிய நேத்து தி மு கவில் இருந்தவன் இன்னைக்கு அதிமுகவுக்கு மாறுவான். நாளைக்கு காங்கிரஸ் போவான். ஒருவனை இந்தக் கட்சிக்காரன் என்று முத்திரை குத்துவதைவிட அவன் ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதி என்கிற முத்திரையே சரி.

எம் சி ஆரே ஒரு காலத்தில் திமுக காரந்தான்.

அடிதடி தாமரைக்கனி அதிமு காரந்தான்.

இதுபோல் விஷம் கலந்து தி மு கழகத்தை இழிவுபடுத்தும் ஒரே எண்ணத்துடன் இந்தக் கதை எழுதுபவரை தி மு க கண்டுகொள்ளாமல் விடுவதும், சட்டப்படி அனுகாததும் எனக்கு  அதிசயமாக இருக்கிறது. இதுபோல் விஷம் கலந்து எழுதும் பதிவர்களை சட்டப்படி துரிதமாக சந்திக்காமல் வளரவிடுவது திமு கழகத்திற்கு நல்லதன்று!

Wednesday, August 19, 2015

என்ன?!! ஒரு ஹாண்டா சிவிக் ஐந்து மில்லியன் டாலரா??!

பொதுவாக அமெரிக்காவில் இந்தியர்கள் விரும்பி வாங்கும் கார், ப்ராண்ட் டொயோட்டாதான். ஒரு டொயோட்டா கேம்ரி இல்லைனா கரோல்லா  வாங்கினாதான் இவர்களுக்கு நல்ல கார் வாங்கிய திருப்தி. லக்ஸுரி கார்னு வேணும்னா லெக்சஸ்- டொயோட்டா மேக்தான். சைனீஸும் இதே வகைதான்.

அமெரிக்கர்கள் ஹாண்டாதான் பெட்டர் கார் என்று நம்பி அதைத்தான் பலர் விரும்பி வாங்குவாங்க. என்னையும் ஒரு ஹாண்டா கைனுதான் சொல்லணும். என்ன ஹாண்டா விலை டொயோட்டாவைவிட கொஞ்சம் அதிகமா இருக்கும். பார்கெய்ன் பண்ணும்போது ஹாண்டா டீலர்  ரொம்ப இறங்கி வரமாட்டாங்கனு சொல்லலாம். அதனால நல்ல கார், கேம்ரி அல்லது கரோல்லா வாங்குறதுக்கு பதிலா எதுக்கு இந்த வீணாப்போன ஹாண்டாக்காரன் விக்கிற அக்காட் அல்லது சிவிக் கு இவ்வளோ காசு கொடுக்கணும் என்பதுதான் இந்தியர்கள் லாஜிக்.

நீங்க பெண்ஸ், பி எம் டபுள்யு கார் வச்சிருக்க வகையராவா? அப்போ கீழே தொடர்ந்து படிங்க!

ஹாண்டா சிவிக் ப்ரைவேட் ஜெட் ஒண்ணு வெளியிட்டு இருக்காங்கலாம்!! ஆமாங்க கார் இல்லை "ஜெட் ப்ளேன்"!!

விலை ரொம்ப ச்சீப்னு சொல்றாங்க!!

சும்மா 4.5 மில்லியன் டாலர் தானாம்!!!





 






அதெல்லாம் அஃபோட் பண்ண  முடியுமா?

மைக்ரோ சாஃப்ட் சி இ ஒ, நம்ம கூகுள் சி இ ஒ சுந்தர் பிச்சை, கமலஹாசன் ரஜினி காந்த் எல்லாம்  வாங்க முடியும்தானே??