Tuesday, March 31, 2009

"நாத்தீக இஸ்லாமியர்" அரிதிலும் அரிது?

தந்தை பெரியார், கெளதம புத்தர், மஹாவீரர் போன்றவர்கள் பிறப்பால் இந்துக்கள்தான். இந்து மதத்தில், அவர்கள் வழிபடும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் வேறு பாதையில் சென்றவர்கள். இவர்கள் அனைவரும் இஸ்லாமியராக பிறந்திருந்தால் "பகுத்தறிவு பாதையில்" போய் இருப்பார்களா? என்பது சந்தேகத்திற்குரியது. ஏன் இந்த சந்தேகம்? அதுபோல் உருவான யாரையும் நான் பார்க்கவில்லை.

இந்து மதத்தில் குறைபாடுகள் அதிகம். ஜாதியை உருவாக்கியது இந்து மதம். மனிதக்கடவுள்கள் இந்து மதத்தில்தான் உண்டு. பாபாஜி, சாய்பாபாஜி அந்த ஜி இந்த ஜினு போய்க்கிட்டே இருக்கும். ஏகப்பட்ட கடவுள்கள். ஆண் பெண், அலி என்று பலவகை கடவுள்கள்.

பொதுவாக இந்து மதக்கடவுள்கள் மனிதர் மாதிரியே உருவமுடைவராக கற்பனை செய்யப்பட்டவர்கள்.

கடவுளுக்கு மனிதனுக்கு உள்ள உடல் உறுப்புகள், மூளையெல்லாம் இருக்கனுமா என்ன?

ஏன் இருக்கக்கூடாது? என்பார்கள், கடவுளை படைத்தவர்கள்!

கடவுளுக்கு மனித உருவம் கொடுத்து, அவருக்கு நகை போட்டுவிட்டு, கை வச்சு, கால் வச்சு, சேலை அணிவித்து, நகைகள் போட்டு அலங்காரம் செய்து வேடிக்கை பார்ப்பவர்கள் இந்துக்கள்தான்.

கடவுளுக்குப் பாட்டுப்பாடி அவரை தூங்க வைப்பவர்கள், மகிழவைப்பர்களும் இந்துக்கள்தான்.

இவ்வளவு "குறைபாடுகள்" இருந்தாலும் ஒரு வகையில் பிறப்பால் இந்துக்களை பகுத்தறிவுவாதிகளாக ஆக்குகிறது. சிந்தனையாளர்களாகவும் ஆக்குகிறது.

இந்தியாவில் இந்துக்களுடையை மக்கள் தொகை 70 விழுக்காடுகளுக்கு மேல் இருந்தாலும், இதில் மத வெறியர்கள் எத்தனை விழுக்காடுகள் என்று பார்த்தால், அதிகம் இல்லை என்று சொல்லலாம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்து மத வெறியர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இந்துவாகப் பிறந்து இந்துமதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களால் வருகிறது.

உருவ வழிபாடு இல்லாத, இஸ்லாம் மதத்தில் இருந்து உருவாகிற கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதிகள் மிக மிக அரிது. அது ஏன் என்று யாராவது விளக்க முடியுமா?

Friday, March 27, 2009

ஜெ ஜெ யுடன் கூட்டணி சேரும் ராமதாஸ் ஒரு சாதாரண அரசியல்வாதிதானா!!!

ஜெயலலிதா ஈழத்தமிழருக்காக போராடுவது உலக மஹா காமெடி! அவருடன் கூட்டணி சேர்ந்து தனி ஈழத்திற்கு போராடுவதாக டாக்டர் ராமதாஸ் சொல்வது அதைவிட காமெடி. இவர் ஜெ ஜெ பற்றி என்ன என்ன சொல்லி இருக்கிறார்!!! எப்படி இதெல்லாம் மறக்குது!!! இவருக்கு எந்தவிதமான தன்மானம், கொள்கை எதுவுமே கிடையாதா!!! 4 எம் பி சீட், 10 எம் எல் ஏ சீட் எப்படியாவது பெற்றுவிட்டால் போதும் இவருக்கு!

வன்னியர்களின் தெய்வமான ராமதாஸ், ஒரு சாதாரண சாதிக்கட்சி நடத்தும் அரசியல்வாதி. அவ்வளவுதான். ஒவ்வொரு தேர்தலுக்கும் ராமதாஸ் தி மு க கூட்டணியிலிருந்து அ தி மு க கூட்டணிக்கு தாவுவது, பிறகு தி மு க வுக்கு தாவுது என்பதே பிழைப்பா போச்சு! ஜாதிக்கட்சி வைத்து நடத்தினால், இரண்டு கட்சிகளுக்கு இடையே மாறி மாறி தாவ வேண்டியதுதான். இதற்குமேல் எதுவும் செய்ய முடியாது.

அ தி மு க - ம தி மு க - பா ம க எல்லாம் சேர்ந்து காங்கிரஸ்- தி மு க விடமிருந்து 50% இருக்கைகளை பறிக்க நிச்சயம் வாய்ப்பு உள்ளது! ஆனால், ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்கும் ராமதாஸ் எந்தவிதமான கொள்கையும் இல்லாமல் நேரத்துக்கு நேரம் கூட்டணி தாவும் ஒரு சாதாரண அரசியல்வாதிதான் என்பதை இன்னொரு முறை ஊர்ஜிதம் செய்துள்ளார்.

சாரு நிவேதிதாவுடன் ஒரு நேர்முக பேட்டி! (கற்பனை)!

"வணக்கம் சாரு சார்"

"வணக்கம்!"

"உங்ககிட்ட ஒரு சில கடினமான கேள்விகள் கேக்கலாமா?"

"கேளுங்க"

"விமர்சகரா இருப்பது எளிது. ஆனால் ஏதாவது உருவாக்குவது கடினம்னு உங்களுக்கு தெரியுமா?"

"அது உண்மைதான். ஒரு விமர்சனம் எழுத அடுத்தவர்கள் குறைகளை பார்க்கத்தெரிந்தால் போதும். அதை நம்மால் செய்ய முடியுமா என்று யோசிக்க வேண்டியதில்லை"

"அப்போ அது உங்களுக்கே தெரியும்?"

"எல்லோருக்கும் தெரியும்"

"நீங்க கமலஹாஷன் நடிப்பில் எவ்வளவு திறமைசாலியோ அந்த அளவுக்கு திறமையான எழுத்தாளர்னு உங்களுக்கு தெரியுமா?"

"அப்படினு சொல்றீங்களா?"

"அதுதான் உண்மை! நம்புங்க"

"என்ன சொல்ல வர்ரீங்க?"

"கமலஹாஷன் ஆஸ்கர் பெற தகுதி இருந்தும் அவர் ஹாலிவுட் படங்கள், ஆங்கிலப்படங்கள் செய்யாததால் அவருக்கு கிடைக்கலை.. அது மாதிரி..."

"சொல்லுங்க"

"அதே மாதிரி, இலக்கியத்தில் நீங்க நோபல் பரிசு பெற தகுதி இருந்தும் நீங்க தமிழில் உங்க படைப்புகளை படைப்பதால் உங்களுக்கு கிடைக்கலை"

"அப்படினா சொல்றீங்க?"

"அப்படித்தான் சார்"

"சரி அதை அடைய நான் என்ன செய்யனும்?"

"கம்லஹாஷனிடம் கேளுங்க! உங்களுக்கு அவர் குறைகள் தெரிவதுபோல், உங்க குறைகள் அவருக்குத்தான் தெரியும்! நீங்க இலக்கியத்துக்கு நோபல் பரிசு வாங்க எப்படி எப்படி எழுதனும், எப்படி உலகத்திற்கு உங்க படைப்புகளை அடையச் செய்யலாம் என்று சொல்வார். உங்க "பட்" உங்களுக்கு தெரியாது பாருங்க!"

"நான் இதைப்பத்தி கொஞ்சம் யோசிக்கனும்"

"நல்லா யோசிங்க. நான் வரேன் சார்!"