
கொஞ்சநாள் முன்னால் சென்னையில் ஒரு ஏழை கல்லூரி மாணவி திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு அவரை கல்லூரி ஆசிரியைகள் அசிங்கப்படுத்தி, கடைசியில் அவர் இந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார் என்று படித்தோம். எங்கே இதெல்லாம் நடக்குது? நம்ம க்ரேட் இந்தியாவிலேதான்! இதேபோல அமெரிக்காவில் நடந்தால் என்ன ஆகும்??
பொதுவாக் இதேபோல் இண்ணொசண்ட்டான ஒருவரை அமெரிக்காவில் அவமானப்படுத்துவதுபோல ஒரு சின்ன தவறு செய்தால் அதற்கு அபதாரம் (விலை) குறைந்தது மில்லியன் டாலர்னு சொல்லுவாங்க!
இது உண்மையா??
ஆம் என்கிறது இந்த சமீபத்திய செய்தி!
கிருத்திகா பிஸ்வாஸ் என்கிற இந்திய மாணவியை ஏதோ abusive e-mail அவள் படித்த பள்ளிக்கு அனுப்பியதாக நியு யார்க் போலிஸ் அவரை கைது செய்துள்ளது. ஒரு நாள் சிறையில் அடைத்து அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக சொல்கிறார், அழுகிறார் கிருத்திகா பிஸ்வாஸ்! ஆனால் இந்த மாணவி குற்றம் சாட்டப்பட்ட குற்றத்தை செய்யவில்லை, இவர் இண்ணொசண்ட் என்றும் பின்னால் தெரிய வருகிறது! நியூ யார்க் போலிஸ் தவறு செய்துவிட்டது! இந்த பிரச்சினை இதோட முடியுமா?
அதுதான் இல்லை! இது அமெரிக்கா! இங்கே இதுபோல் அவமானப்படுத்திவிட்டு "அய்யோ தவறுதாக உன்னை கஷ்டப்படுத்தி விட்டோம்! மன்னிச்சுக்கோங்க!"னு நியுயார்க் சிட்டி மன்னிப்பு கேட்டால் அந்த பிரச்சினை முடிந்துவிடாது!! There is a price for that!
தவறுதாக அவரை அரஸ்ட் செய்து சித்ரவதை செய்தற்கு விலை என்ன? 1.5 மில்லியன் டாலர்! ஆமா, தவறு செய்யாத தன்னை அரெஸ்ட் செய்ததற்கு 1.5 மில்லியன் டாலர் நியூ யார்க் சிட்டி கொடுக்க வேண்டுமென்று கிருத்திகா பிஸ்வாஸ் தரப்பில் law suit file பண்ணுறாங்க!
இதில் சந்தேகமே இல்லாமல் கிருத்திகா பிஸ்வாஸ் வெற்றியடைவார்! ஆனால் ஒரு மில்லியன் கொடுக்கப்படுமா இல்லை அரை மில்லியன் கொடுக்கப்படுமா என்பதுதான் சந்தேகம்!
Krittika Biswas Sues NewYork City for $1.5 million - Indian Diplomats Daughter wrongly arrested and ill treated in Prison - USA India Diplomat Daughter Kritika Biswas sue New York NY City
Krithika Biswas has sued the New York City for $1.5 million. Krittika Biswas daughter of vice counsel at the Indian Consulate in Manhattan, Debashish Biswas, was wrongfully arrested and allegedly ill treated in the prison.
Krittika Biswas was arrested for more than 24 hours on February 8 2011, under suspicion of sending obscene email to her teacher at Queens' John Browne High School. Later she alleged she was ill treated at the prison.
Kritika Biswas had denied diplomatic immunity that prevents police from arresting Diplomats Kin. Later it was found it was not Krttika Biswas who had sent the mail.
Tags: Krittika Biswas Sues NewYork City for $1.5 million - Indian Diplomats Daughter wrongly arrested and ill treated in Prison - USA India Diplomat Daughter Kritika Biswas sue New York NY City
source:
இங்கே க்ளிக் செய்யவும்!