Friday, March 30, 2012

மனைவிக்கு கணவன் நவநாகரிக மாமா! (18 பிளஸ் மட்டும்)

கலச்சாரக் காவலர்களை திட்டுவதும் தப்பு இல்லை! அதே சமயத்தில் கலாச்சார சீரழிவை தட்டிக்கேக்கக்கூடாதுனு ஒண்ணுமில்லை! இன்னைக்கு நெலைமைக்கு ஒரு சில பிரச்சினைகளைப் பற்றி எழுதினால் அது நம்ம மக்களை நல்வழிப் படுத்துமா இல்லை, அந்த முயற்சியே அவங்களை இன்னும் கெடுப்பதற்கு ஊக்குவிக்குமா என்கிற கேள்வி எல்லாம் எழாமல் இல்லை! இன்றைய நம் சமுதாயம் குழம்பிப்போயி, என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம், எது சரி, எது தப்பு என்று தெரியாமல் சுதந்திரம் என்ற பெயரில் நாறிப்போய் நிற்கிறதால்தான் இந்த குழப்பம்னு தோனுது!

சரி, இப்போ இந்த 18 +, கற்பனை கதைக்கு போவோம்!

----------------

என்னனுதெரியலை வாராவாரம் இண்டோர் "டென்னிஸ்" விளையாட வரும் இந்த சந்தானத்தை திடீர்னு ரெண்டு வாரமாக காணோம். "என்ன ஆச்சு சந்தானத்துக்கு ?" னு கேட்டால் "பாஸ்டன் மூவ் பண்ணிட்டாராம்" னு ஒரு சிலர் ஏனோ தானோனு சொன்னாங்க. வேற எதுவும் அதுக்கு மேலே காரணம், விளக்கம் எதுவும் சொல்லவில்லை. இது நவநாகரிக உலகம்! அதுக்கு மேலே இன்னொருவருடைய தனிப்பட்ட பிரச்சினைகள் பத்தியெல்லாம் கேட்பது அநாகரிகம், பேசுவது அநாகரிகம்.

என்னனா நமக்கென்ன? கூட டெண்னிஸ் வெளையாட வர்றவங்க எல்லாம் ஃப்ரெண்டா? சும்மா ஒரு டீம்மேட்", அம்புட்டுத்தான். உயிருக்கு உயிரா இருந்த உண்மையான நண்பர்களே காலப்போக்கில் ஒண்ணுமேயில்லாமல் மறைந்து போகிறபோது இதுபோல பட்டும் படாமல் பழகியவர்கள் எல்லாம் சொல்லாம கொள்ளாம திடீர்னு காணாமல்ப் போவதெல்லாம் பெரிய விசயமா என்ன?

கணேஷின் செல் ஃபோன் மணிஅடித்தது...சிவாதான்..

"என்னடா சிவா?"

"கணேஷ்! என்ன நீ இன்னும் புறப்படலையா ?"

"புறப்பட்டுட்டேண்டா..20 நிமிடத்தில் வந்து சேந்துருவேன்!"

"சரி, கொஞ்சம சீக்கிரம் வா! நெறையப்பேர் இருக்க மாதிரி இருக்கு?"

"அதனாலென்ன?"

"ஃப்ர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் சர்வ்ட் தான் ரூல் இங்கே! இங்கே மூனு டென்னிஸ் கோர்ட் தானே இருக்கு. லேட்டா வந்தா நீ நின்னு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்."

"ஹைவே ல எண்டர் பண்ணிட்டேன். சீக்கிரம் வந்துடுறேன், ஆக்ஸிடெண்ட் எதுவும் ஆகலைனா"

"வந்து சேருடா!"

"ஆமா, நம்ம சந்தானத்தை எங்கே ரெண்டு வாரமா காணோம்?"னு இவனிடமும் கேட்டு வைத்தான்.

"தெரியலைடா. ட்ரைவ் சேஃப்லி"

"சரிடா பார்ப்போம்."

சந்தானத்துக்கு என்ன பிரச்சினையோ ? வேலை போயிடுச்சோ? ஒருவேளை மனைவி இன்னொரு காதலனைத் தேடிக்கொண்டாளோ? ஏன்ப்பா இப்படி எல்லாம் யோசிக்கிற? இதல என்ன இருக்கு? இதுதான் நவநாகரிக உலகமாச்சே! இந்தியாவிலேயே "கற்பெல்லாம்" அர்த்தமில்லாதாக மாறிய காலம் இது. கணவனாவது? மனைவியாவது? கற்பாவது? கருமாதியாவது..

இது  "காசுவல் செக்ஸ்" "வைஃப் ஸ்வாப்" எல்லாம் சாதாரணமாக நடக்கும் நவநாகரீக இந்தியா. ஆமாம் "கள்ளக் காதல்"  தப்புனு சொல்றதெல்லாம் தப்புனு சொல்ற காலம் இல்லையா இது. சாரு நிவேதிதா போல வாழ்க்கையில் படுதோல்வியடைந்த "லூசர்"களை "ரோல் மாடல்" களாக வைத்து கொண்டாடும் அரை டவுசர்கள் நெறைந்த உலகம்.

ஆமாம், இந்தியர்கள் "தேஷிவேட்டை" என்று தற்காலிக படுக்கை சுகத்திற்காக தன் மனைவியை இன்னொருத்தன் மனைவிக்காக, ஒரு இரவுக்கு இல்லை சில இரவுகளுக்கு மாற்றுதல்கள் செய்துகொள்ளும் வெங்கங்கெட்ட காலம் இது. ஆமாம் தேஷி சிக் பாஸ்டட்ஸ் நெறைந்த காலம்!

"வைஃப் ஸ்வாப்" செய்றதை எல்லாம் புதுமாதிரியான விபச்சாரம்னு சொல்றதெல்லாம் அநியாயம்னு சொல்ற காலம்! வேற எப்படி சொல்றது? இதுதான் உண்மையான சுதந்திரம்! யோசிச்சுப் பாருங்க! எந்தளவுக்கு கணவன் மனைவிக்குள்ளே ஒரு புரிதல் இருக்கனும்- தன் மனைவியையே கணவன் கூட்டிக்கொடுக்க? அந்த "பெரிய மனசை" இந்தக் காலத்தில் இவனுகளுக்கெல்லாம் மனைவியும் "கிராக்கி"தான்னு அசிங்கமாச் சொல்லக்கூடாது! வேணா, அந்த  மனைவிக்கு, இந்தக் கணவன் "நவ நாகரிக மாமா"னு சொல்லலாம்.

எனக்கு உண்மையிலேயே புரியலை, படு லோ-க்ளாஸான விசயத்தை எல்லாம் கடைசியில் உயர்ந்த சிந்தனைங்கிற மாதிரி சொல்லிப்புடுறானுக சில "பெரிய மனுஷர்கள்" . யாருக்குத் தெரியும்? அவன் அவனோட கூட்டிட்டு வர்ரவ அவனோட மனைவியா இல்லை காதலியா இல்லை அவனோட "கிராக்கியா" என்று? ஆமா.. "ஆண் சைட்" எச் ஐ வி டெஸ்ட்லாம் பண்ணிக்குவானுகளா? கிழிச்சானுக, காண்டமே ஒழுங்கா மாட்ட மாட்டனுக இந்த தேஷிப் பரதேஷிகள்! என்னப்பா இது, "கூட்டிக்கொடுக்கிறதை" எல்லாம் உயர்தர சிந்தனைகள்னு சொல்ல ஆரம்பிச்சுட்டானுக.

 இல்ல, அப்படி மனைவியை மாற்றும்போது, மாற்றானுடைய செக்ஸ்தான் அவளுக்கு இனிமையாக இருந்தால் அப்புறம் என்ன பண்ணுவானுக இந்த பெரிய மனுஷனுகள்? அதுக்கப்புறம் இந்த வீணாப்போன கணவனோட முற்போக்கு சிந்தனையுள்ள அவள் எப்படி இருக்க இல்ல படுக்க முடியும்?  அதே தேஷிஹண்டரையே மாற்றிக்கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானோ? கல்யாணாமாவது கருமாதியாவது!  அந்த  நிலைமை வந்தால் தேஷிஹண்ட்லையே எவனாவது இன்னொரு சின்னப் பையனைத் தேட வேண்டியதுதான். அதான் நாய்மாரி இணையதளத்தில் அலையிறானுகளே பொறம்போக்கு தேஷிகள்!

இல்ல, அந்த  "புதுக் கணவனு"க்கும் கொஞ்ச நாள்ல படுக்க முன்னால வயாகாராவும், போர்னும் தேவைப் பட்டுச்சுனா? இன்னைக்கு மாதிரியா நாளைக்கு இருக்கப் போறான்? பார்க்கலையா நம்ம ஒரு காலத்துல ஊர் மேஞ்ச மன்மதக்குஞ்சுகள் எல்லாம் இப்போ வீரியம் இல்லாமல் ஆண்மிகம்னு சொல்லிக்கிட்டு அலைவதை எல்லாம்? ஆமா, இப்படியே தேடித் தேடி அலைஞ்சு திரிஞ்சு கடைசில ஒண்ணும் முடியாமப் போனதும் ஞானோதயம் வந்து ஆண்மீகக் கடல்ல எறங்கிடுவானுக.

ஒரு வேளை சந்தானத்துக்கு வேறெதுவும் பிரச்சினையோ? யாருக்குத் தெரியும்? என்ன பிரச்சினைனா என்ன? அதை என்ட்ட சொன்னால் என் வேலையைப் போட்டுவிட்டு அவருக்கு உதவப்போறேனா என்ன? எதுக்கு இந்த வெட்டி அலட்டல்? நானும் ஒரு சாதாரண சராசரி சுயநலவாதிதானே?

 ஃப்ரீவேல ட்ரைவ் பண்ணிக்கொண்டு இருக்கும்போது, கணேஷ்க்கு, நேற்றைய நிகழ்வு ஞாபகம் வந்தது. நேற்று எதார்த்தமாக ஏர்போர்ட்ல "பேகேஜ் கலக்ட்" பண்ணுற இடத்தில் மைதிலியைப் பார்த்துட்டான். அவளோட ஹாண்ட்சம் ஹஸ்பண்ட் மற்றும் அழகான ஆண்குழந்தை யுடன் நின்றாள்.

என்ன ஒரு அழகான குடும்பம்! எவ்ளோ சந்தோஷமாக இருக்கிறாள், மைதிலி! நல்லவேளை அவள் கணேஷை கவனிக்கவேவில்லை! போய் "ஹாய்" சொல்லலாமா? னு ஒரு வினாடி யோசிச்சான். நிம்மதியாக இருக்கும் அவளிடம் எதுக்குப் போயி "ஹல்லோ" சொல்லி பழசை ஞாபகப்படுத்தி, அவளைக் கஷ்டப்படுத்தி, நம்மையும் கஷ்டப்படுத்திக்கிட்டு? இந்த "ஹல்லோ"வோ அல்லது அவளுடன் "எந்தவிதமான உறவுமே" இன்றைய நிலையில் தேவையில்லாத ஒண்ணுனு தோனுச்சு அவனுக்கு!

-இன்னும் கொஞ்சம் வரும்

Tuesday, March 27, 2012

கணவர்கள் ஜாக்கிரதை!!!

வாழ்க்கையில் நல்லதையே நெனைக்கனும்,  எதுக்கு தேவையில்லாத சினிமா, பத்திரிக்கை செய்தி எல்லாம் படிச்சு கொலை கொள்ளை, கற்பழிப்பு, தகாத உறவு அது இதுனு செய்திகளைப் தெரிஞ்சு மனதைக் கெடுத்துக்கிட்டு? நம் வாழ்வில் நாம் எளிமையாக வாழ்ந்து வம்பு தும்புக்குப் போகாமல் நிம்மதியாக இருப்போமே? என்று பலர் நினைப்பதுடன் அதுபோல் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துகொண்டும் இருக்காங்க.

ஆனால் ஒருவர் வாழ்க்கையில் திடீர்னு சூறாவளிக் காற்று அடிக்கலாம். அப்போதுதான்  உலகறிவு எவ்வளவு அவசியம்  நமக்கு என்று விளங்கும்.

இது பழைய செய்திதான், இருந்தாலும் முக்கியமான ஒண்ணு என்பதால் பகிர்கிறேன்.

ஒரு 25 வருடத்துக்கு முன்னால மைக்கேல் மார்ட்டன் என்கிற ஒருவரை,  அவருடைய மனைவி, க்ரிஷ்டின் மார்ட்டனை , கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டி, அதை சட்டப்படி "நிரூபித்து"  அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கிவிட்டார்கள்.


மேலே படத்தில் உள்ளது மைக்கேல் மார்ட்டன் (இன்று)!

மனைவியை ஏன் கொலை செய்தார்? என்ற கேள்விக்கு அரசாங்க தரப்பு (கென் ஆண்டர்சன்) கொடுத்த வாதம்,  மார்ட்டன் மனைவி க்ரிஸ்டின் அவருடன் உடலுறவு கொள்ள மறுத்துவிட்டதால், கோபமடைந்து, அடித்து அவர் மனைவியை கொன்னுபுட்டாரு னு குற்றம் சாட்டினார்கள்! அதை ஒரு மாதிரி "ஜோடிச்சு", "நிரூபித்து", கென் ஆண்டர்சன் என்கிற ஒரு "திறமை வாய்ந்த" அரசாங்க தரப்பு வக்கீல் மைக்கேல் மார்ட்டனுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக்கொடுத்துவிட்டு, இன்னைக்கு அதே ஆஸ்டின், டெக்சாஸ்ல ஒரு ஜட்ஜ் ஆகவும் இருக்கிறார். 

மைக்கேல் மார்ட்டன், தான் "கொலை செய்யவில்லை" என்கிற வாதம் எடுபடவில்லை!

* கொலை செய்யப் பட்ட இவரோட மனைவியின் தலையில் ஏதோ ஆயுதம் வைத்துத் தாக்கி அவரை கொன்று இருக்கிறான் கொலையாளி.

* கொலை நடந்த இடத்தில் இருந்த, அல்லது கொலையைக் கண்ணால் பார்த்த சாட்சி பெரியவர்கள் யாருமில்லை.

* கொலை நடந்த இடத்தில் அவருடைய 3 வயது மகன் மட்டும் இருந்து இருக்கிறான். கொலையை பார்த்து இருக்கலாம்..எதோ ஒரு "மான்ஸ்டர்" வந்து தன் அம்மாவை கொன்றுவிட்டதாக அவன் சொன்னதாக சொல்லப்படுகிறது.

* அரசு தரப்பு வக்கீல்கள், வாதத்திறமையால் மைக்கேல் மார்ட்டன் தான் கொலையாளி என்று ஒரு மாதிரியாக ஜோடிச்சு, ஜூரியை நம்ப வைத்து இவருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து சாதித்துவிட்டார்கள்.

மைக்கேல் மார்ட்டன் ஒண்ணும் "பர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்" என்றோ அல்லது ஒரு சில சிறு சிறு தவறுகள் செய்யாதவரோ என்பது பற்றி எல்லாம் தெரியல. அவருக்கும், அவர் மனைவிக்கும் 100% நல்ல உறவு இருக்காமலும் இருந்து இருக்கலாம்தான். ஆனால் இவர் கொலை செய்தாரா? என்பது அவருக்கும் "கடவுளுக்கும்"தான் தெரியும்!


 மேலே, மைகேல் மார்ட்டன் (அன்று), மனைவி க்ரிஸ்டின் மார்ட்டன், அவர்கள் மகன்!

25 வருடத்துக்கு அப்புறம்...

 மைகேல் மார்ட்டன்,  கொலையாளி பட்டத்துடன், மனைவியை இழந்து, தன் மகனை விட்டு, தண்டனை அனுபவித்த பிறகு, டி என் எ  அனாலிசிஸ் (க்ரைம் சீன் கெடச்ச, "முடி" மற்றும், "ரத்தம்" ) செய்து பார்த்த பிறகு, "மார்க் ஆலன் நார்வுட்" என்கிற இன்னொரு ஆள் கொலை செய்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது! இந்த நார்வுட் இதே போல் இன்னொரு பெண்ணையும்  கொலை செய்ததாகவும், இந்த ரெண்டாவது கொலை, கிரிஷ்டின் கொல்லப்பட்டு  நடந்து சுமார் 2 வருடத்துக்குப் பிறகு நடந்ததாகவும், டி என் எ எவிடென்ஸஸ் இருக்கிறதாம்!




மேலே படத்தில் டி என் எ எவிடென்ஸ் படி இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ள
மார்க் ஆலன் நார்வுட்!

* 25 வருடம் தண்டனை அனுபவித்த பிறகு மைக்கேல் மார்ட்டனை விடுதலை செய்துவிட்டார்கள்!!

* மைக்கேல் மார்ட்டன் நிரபராதியாகக் காட்ட உதவும் ஒரு சில எவிடெண்ஸ்களை போலிஸ் மற்றும் அரசுதரப்பு சட்டக் காவலர்கள், வக்கீல்கள் மறைத்துவிட்டதாகவும் தெரிகிறது.

சினிமாக்களில் நடப்பது போலவே ( "Fugitive" and "Shawshanks Redemption"), மனைவி கொல்லப்பட்டார் என்கிற நிலை வந்தால் பொதுவாக அமெரிக்காவில் கணவனைத்தான் பிடிச்சு ஜோடிச்சு உள்ள போடப் பார்க்கிறார்கள் சட்டக்காவலர்கள்!!

கணவர்கள் ஜாக்கிரதை!!! எப்படி ஜாக்கிரதையா இருக்கனும்னு எனக்குத் தெரியவில்லை! ஆனால் கவனமாக இருப்பது நல்லது! மனைவி கொல்லப்பட்டால் நீங்கதான் முதல் சஸ்பெக்ட்!! :(


Monday, March 26, 2012

ஆண்கள் என்னும் மிருகங்கள்!

பொதுவாக செக்ஸ் என்பதே ஒரு மாதிரி மிருக உணர்ச்சி என்றுதான் நம்மளால பல விவாதங்களுக்கு அப்புறம் (ஏற்றுக்)கொள்ளப்படுகிறது. செக்ஸ், மிருக உணர்ச்சியாயிருந்தாலும் ஹார்மோன்களை பெற்ற ஆண் பெண் இருவருக்குமே இள வயதில் செக்ஸ் அவசியம் என்பதால், அதை சமாளிக்க காதல், கல்யாணம், செக்ஸ் லைஃப் னு அந்த காம வாழ்க்கை ஆரம்பிச்சு வாழ்க்கை போயிக்கிட்டு இருக்கு. ஆனால் ஆணும் பெண்ணும் வேற வேற என்பதை நாம் என்றுமே மறுக்க முடியாது. இருவரும் ஒருபோதும் சரி சமம் அல்ல!

நான் பார்த்தவரைக்கும் ஆணைப் பொருத்தவரையில் செக்ஸ் என்பது உயிர் இருக்கும் வரை அவனுக்குத் தேவைப் படுகிறது (அவனால முடியுதோ இல்லையோ, அவனுக்குத் தேவைப் படுது)! பொதுவாக பெண்களுக்கு அப்படியல்ல என்றுதான் தோனுது. இது சம்மந்தமாக இரண்டு உதாரணங்கள் பார்ப்போம்!

* கேஸ் 1

எனக்குத் தெரிய ஒரு 55 வயதுப் பெண், கணவனுக்குத் தேவையான "செக்ஸ் ட்ரைவ்" தன்னிடம் இல்லை என்பதால், அதற்காக ஒரு "தெரப்பிஸ்டை" (டாக்டரை) அனுகி அதை சரி செய்ய தான் ஏதோ ஹார்மோன்கள் எடுத்துக்கொண்டு கணவனுடன் உடலுறவு கொண்டு சமாளிக்கிறாராம். அவர்களுக்குள் கணவன் - மனைவி உறவு தொடருகிறது. மேலும் அவர்கள் குடும்பம் இன்னும் உடையாமல் இருக்கிறது. அவர் எடுக்கும் ஹார்மோன்களால் எதுவும் தீமை ஏற்பட்டதாக இதுவரை தெரியவில்லை.

* கேஸ் 2

சமீபத்தில் ஒரு 60 வயதான ஒரு கோ-வொர்க்கரிடம் பேசும்போது நான் அறிந்தது. அவரும், அவர் மனைவியும் "லீகல்லி செப்பரேட்டெட்" என்றார். "என்ன ஆச்சு?" னு கேட்டால் "ஐ காண்ட் டேக் இட் எனிமோர் மேன்" என்றார். அப்புறம் மெதுவாக, அவர் என்னிடம், "நீ செக்ஸ் பத்தி என்ன நெனைக்கிறனு எனக்குத் தெரியலை, ஆனால் 3 வருடம் முன்னால என் மனைவி, இனிமேல் உடலுறவு என்பது நமக்குள் கிடையாது என்று ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள். அதுக்கப்புறம் எங்களுக்குள் இருந்த ஒரு "பைண்டிங்" எல்லா வகையிலும் போயிடுச்சு." என்றார். "வேற வழியில்லாமல் இப்போ நாங்க "லீகல்லி செப்பரேட்டட்" சுமூகமான முறையில் ஆயிட்டோம்" என்றார். "இப்போ சந்தோஷமா இருக்கீங்களா? " னு கேட்டால், "நிச்சயமாக" என்கிறார். இன்றைய அவர் செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி கேட்பதோ, தெரிந்துகொள்வதோ அநாகரிகம் என்பதால் அதோட நான் நிறுத்திக்கொண்டேன்.

இங்கே நான் சொல்ல வர்றது.. நீங்க கவனித்துப் பார்த்தால் கேஸ் 1, கேஸ்2, ரெண்டும் ஒரே மாதிரி சூழல்தான். ஆனால் ரெண்டுக்கும் அதில் பங்குபெற்றவர்கள் வேறு வேறு மாதிரி ஒரு தீர்வை தேடிக்கிட்டாங்க.

நம்ம ஊரிலே பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்துவிட்டால், "அப்பாட பெண்ணை கரையேற்றியாச்சு" னு சொல்லி மூச்சு விடுவாங்க, பெற்றவர்கள். ஆனால் பொதுவாக கல்யாணம் என்பது கரை அல்ல, ஆழ்கடல்ல தள்ளி விடுவது. வாழ்க்கை முழுவதும் அவள் நீந்தி கரை சேரனும் என்பதே உண்மை மற்றும் எதார்த்தம்.

"தன் மகளை கரை சேர்ந்த்துவிட்டோம்" என்று நினைப்பதெல்லாம் எந்த மாதிரியான அடி முட்டாள்த்தனம் னு புரிந்துகொள்ளாமல் நம்ம ஊர்ல இன்னும் வாழ்ந்துகொண்டிருக்காங்க.

அட் லீஸ்ட் மேலை நாடுகளில், காலப்போக்கில் மாறும் தங்கள் செக்ஸ் தேவைகளைச் சொல்லி, பேசி ஒரு மாதிரியான தீர்வு கண்டுகொள்கிறார்கள்!