Tuesday, August 3, 2010

அமெரிக்கன் பியூட்டி! கடலை கார்னர் (60)

"ஹாய் பிருந்த் டார்லிங்!"

"காலைல மீட்டிங்லாம் உங்களுக்கு எப்படிப் போச்சு, கண்ணன்?"

"இட் வாஸ் ஃபைன். நீ எப்படிடா இருக்க?"

"ஐ மிஸ் யு. உங்களை ஈவனிங் வீட்டுக்கு வரச் சொன்னேன் இல்ல?"

"அதை ஏன் கேக்கிற, வழியிலே ஏதோ ஆக்ஸிடெண்ட் போலடா, ட்ராஃபிக் ஜாம், அதான் அப்படியே அடுத்த எக்ஸிட் எடுத்து என் வீட்டுக்கு போயிட்டேன்."

"இப்படி ஒரு எக்ஸ்க்யூஸா?"

"நெஜம்மாத்தான்டா சொல்றேன்"

"சரி வேறென்ன விஷயம்?"

"ஸ்டெய்ஸி உன்னைப் பத்தி கேட்டாள்.. ஏன் உன்னைக்காணோம்னு கேட்டா, நான் எதையோ சொல்லி சமாளிச்சேன்."

"உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே?"

"உண்மையைத்தான் சொன்னேன்."

"என்ன சொன்னீங்க?"

"பிருந்தா நேக்கடா இருக்கும்போது கொள்ளை அழகா இருக்கானு சொன்னேன்."

"பொய்!"

"நெஜம்மாத்தான்."

"அதுக்கு அவ என்ன சொன்னாள்?"

"அவ உன்னை நேக்கடா பார்த்ததில்லையாம் அதனால .."

"அவ வேற பார்க்கனுமாக்கும்? உண்மையைச் சொல்லுங்க"

"இதுக்கு ஒரு நெஜம் சொல்லனுமா? அவ ஒரு மாதிரி டேர்ன் ஆண் ஆயிட்டா. அதனால கொஞ்சம் கவனமாயிரு அவ கிட்ட"

"ஹா ஹா ஹா. பொய்தானே?'

"நீ நெஜம்மாவே ரொம்ப அழகுடா!"

"இல்லை நான் அதை சொல்லல"

"நீ அழகுனு தெரியுமா?"

"நீங்க சொல்லித்தான் தெரியும்"

"உனக்கு ஸ்டெஃபெனி தெரியுமில்ல?"

"அவளுக்கென்ன இப்போ? லொட லொடனு ஏதாவது பேசிண்டே இருப்பாள்"

"அவளோட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தேன்."

"என்ன சொன்னாள்?"

"பர்சனல் ஸ்டஃப் எல்லாம் சொன்னாள்"

"என்னனு சொல்லுங்க!'

"அவளுக்கும் அவங்க அப்பாவுக்கும் எந்த காண்டாக்டும் இல்லைனு சொல்லுவாடா. நான் நொழச்சுக் கேட்டதில்லை. இன்னைக்கு ஏதோ மூட்ல இருந்தாள். எல்லாத்தையும் சொல்லீட்டா!"

" சொல்லுங்க"

"அவளோட அம்மா ஃப்ளைட் அட்டெண்டண்ட்டா இருந்தாங்களாம். அப்பா பைலெட்டாம். அப்போ அவர் மேரீடாம், அவருக்கு ஒரு ஃபேமிலி இருந்ததாம். இருந்தும் தே ஹாட் திஸ் அஃபையர். "

"தெரிந்துமா?"

"அப்படித்தான் அவள் சொன்னாள். "

"ஷி மஸ்ட் பி க்ரேசி"

"அப்போ அவ அம்மாவுக்கு வயது முப்பத்தி ஆறாம். அவங்க அவ அப்பாவிடம் தெளிவா சொல்லீட்டாங்களாம். அதாவது எனக்கு 36 வயசாயிடுச்சு. இனிமேல் நான் ஒரு ஆளைப் பார்த்து பழகி கல்யாணம் பண்ணி ..இதெல்லாம் நடக்குமானு தெரியலை. உங்களை எனக்குப் பிடிச்சி இருக்கு. எனக்கு ஒரு குழந்தை வேணும். உங்கள் நிலைமை புரியுது. ஆனால் நான் உங்களுக்கு எந்த தொந்தரவும் தரமாட்டேன் னு சொல்லி ஒரு டீல் போட்டுக் கொண்டாங்களாம். அந்தக் குழந்ததைதான் நம்ம ஸ்டெஃபினியாம்! ஒரே ஒரு முறை அவங்க அப்பாவை கூப்பிட்டு பேசினாளாம். அவ்வளவுதானாம்!"

"அவளுக்கு அப்பாவே கெடையாதா?"

"அதான் சொன்னேன் இல்ல, அவளை 100% அவங்க அம்மாதான் பெத்து வளர்த்து இருக்காங்க. ஷி ஹாட் நோ காண்டாக்ட் வித் ஹிம். ஆர் நத்திங் டு டு வித் ஹிம். அதுக்கப்புறம் அவங்க அம்மா இன்னொரு ஆளை கல்யாணம் செய்துக்கிட்டாங்களாம். அவருக்கு ஒரு பையன் ஏற்கனவே இன்னொரு மனவி மூலம் இருந்ததாம். இவங்க நாலு பேரும் தான் இவளோட ஃபேமிலி. இவளோட ஸ்டெப் ப்ரதர் கம்ப்லீட்டா இவளோட ஸ்டெப் டாட் தான் வளர்த்தாராம். இவளை இவ அம்மா வளர்த்தாங்களாம். அவங்க நாலு பேரும்தான் ஒண்ணா வாழ்ந்தாங்களாம். நவ் ஷி மூவ்ட் அவ்ட்"

"அவ ஸ்டெப் டாட் எப்படி?"

"ஹி இஸ் எ ஜெர்க், னு சொல்றா! நான் டீட்டைலா கேக்கலை!"

"ஏதோ சின்மா கதை மாதிரி இருக்கு"

"நானே அவகிட்ட சொல்லீட்டேன். இது மாதிரி ஒரு ஆளை செக்கண்ட் பேர்சனா பார்ப்பேன்னு நெனைக்கவே இல்லைனு. இவ்வளவு பிரச்சினைகளுடன் இவ படிச்சு வந்திருக்கா பாரு! நமக்கெல்லாம் இது மாதிரி என்ன பிரச்சினை இருக்கு, சொல்லுடா?"

"ஏன் இப்படி வாழ்றாங்க?"

"தெரியலை. இதுதான் அமெரிக்கன் பியூட்டி!"

"ஸ்டெஃபெனிக்கு அவ அம்மா மேலே கோபம் இல்லையா?"

"தெரியலை. அவ என்ன சொல்றானா, அது அவ அம்மாவோட பர்சனல் திங். நான் அதை எப்படி கேள்வி கேக்க முடியும்னு"

"எல்லாருக்கும் இதுபோல ஒரு அனுபவம் கெடைக்காது இல்லை?"

"இதோட படிச்சு இந்த அளவுக்கு வெற்றியடைந்து இருக்கா பாரு! எவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்கும் ஹை ஸ்கூல், மிடில் ஸ்கூல்ல படிக்கும்போதெல்லாம்?"

"தட்ஸ் ரியல்லி க்ரேட் தட் ஷி குட் ஓவெர்கம், கண்ணன்"

"நான் அப்படித்தான் அவகிட்ட சொன்னேன்"

-தொடரும்

7 comments:

Chitra said...

"தெரியலை. அவ என்ன சொல்றானா? அது அவ அம்மாவோ பர்சனல் திங். நான் அதை எப்படி கேள்வி கேக்க முடியும்னு"

.....Thats the "beauty of the American culture"..... :-)

சமூதாயம் என்ன நினைக்குமோ என்று கவலைப்படுவதில்லை.

வருண் said...

வாங்க, சித்ரா!

தாயைத் தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை!

நிறத்தை தேர்ந்துடுக்கும் முகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை!

உன் வாழ்க்கை மட்டும் உந்த கையில் அதை வென்றுவிடு! :)

அரசூரான் said...

நான் - எங்க அம்மா, நீ - உங்க அப்பா, நம்மதான் குடும்பம், ஒத்த குடும்பம்தான் ஆனாலும் கூட்டு குடும்பம். இது அமெரிக்கா பியூட்டி இல்ல அமெரிக்கர்களின் லூட்டி.

எ..எ...ஏ கிக்கு ஏறுதே,
உண்மையெல்லாம் சொல்லத் தோணுதே.

வருண் said...

***Blogger அரசூரான் said...

நான் - எங்க அம்மா, நீ - உங்க அப்பா, நம்மதான் குடும்பம், ஒத்த குடும்பம்தான் ஆனாலும் கூட்டு குடும்பம். இது அமெரிக்கா பியூட்டி இல்ல அமெரிக்கர்களின் லூட்டி.

எ..எ...ஏ கிக்கு ஏறுதே,
உண்மையெல்லாம் சொல்லத் தோணுதே.

30 August 2010 2:45 PM***

நம்ம ஊர்ல இதுமாதிரி இல்லைனு சொல்றீங்களா?

தளபதி படத்தில், நம்ம ரஜினி ரோல்போல் நம்ம ஊர்ல நெறையா இருக்குங்க.

நம்ம ஊர்ல ஸ்டெஃபினி பிறந்து இருந்தால், இல்லாத கலாச்சாரத்திற்கு பலியாகி வீணாப்போகி இருப்பாள்.

These days americans live a much better life than our call-center f'ck up culture and charu-jaalraa society in India!

a said...

Nice one.............

அரசூரான் said...

வருண், நம்ம ஊருல தனிமனித சுதந்திரம் எனபது செல்லாக்காசு. இங்கு/அமெரிக்காவில் அதற்க்குதான் முதல் மரியாதை.

நீங்க சொன்ன கருத்தில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. கால் செண்டர் கலாச்சாரத்திற்கு முன்பே இலை மறை காயாக நம்ம ஆளுங்க அடிச்சி ஆடிகிட்டுதான் இருக்காங்க... வெளிய தெரியல அவ்வளவுதான்.

அஃபீஸியலா ரெண்டு பொண்டாட்டியும் அன்அஃபீஸியலா... வேண்டாம் விட்டுடுவோம்.

வருண் said...

Thanks அரசூரான் !

There are certainly ugly things happening in US as well.

I happened to come across this disgusting news too.

http://ibnlive.in.com/news/3-us-teens-charged-with-raping-90yearold-woman/129851-2.html

All Americans should be ashamed of it.