Monday, August 16, 2010
"சாரு"வை மிரட்டிய எந்திரன் ரசிகன் யார்?
படம் வரும் முன்பே எந்திரன் சாதனைகளும் சங்கடங்களும் ஆரம்பித்துவிட்டது!
* திரு. சாரு நிவேதிதா அவர்களை யாரோ எந்திரன் விமர்சனம் எழுதக்கூடாதுனு மிரட்டியதாகவும், ICU விலிருக்கும் அவர், அதுக்கெல்லாம் பயப்படமாட்டேன் வழக்கம்போல் எந்திரன் ஒரு குப்பையாகத்தான் இருக்கும்னு ஒரு "எந்திரன் விமர்சனம்" எழுதி இருக்கார்! சரி, இப்படியெல்லாம் ஒரு விமர்சகரை மிரட்டுவது யாராக இருந்தாலும் அது கீழ்த்தரமான செயல்தான். அப்படி யாரும் செய்தார்களா? செய்திருந்தால் அது யாராயிருக்கும்? இல்லைனா எந்திரன் பத்தி எழுத சாருவுக்கு இது ஒரு சாக்கானு ஒரு கேள்வி எழாமல் இருக்காது!
இதிலென்ன விசேஷம் என்றால், சாரு, மேதாவி ஞாநி போன்றவர்கள் படம் "குப்பை"னு எழுதினால் பொதுவாப் படம் ப்ளாக் பஸ்டராவது வழக்கம். சிவாஜி மற்றும் தசாவத்ராம் போன்ற படங்கள் இதற்கு நல்ல உதாரணம். அதனால் சாரு குப்பைனு சொல்லப்போற எந்திரன் படம் பல வசூல் சாதனைகள் படைத்து ப்ளாக் பஸ்டர் ஆகும்னு எதிர்பார்க்கப்படுகிறது.
* இசை வந்ததும் வராததுமா ஒருவர் "எந்திரன் இம்சை" னு எந்திரன் இசைக்கு விமர்சனம் எழுதி இருக்கார். ஆனால் இவர் கெட்டநேரமா என்னனு தெரியலை எந்திரன் பாடல்கள் வெளியான முதல் நாள், அமெரிக்கா மற்றும், யு கே வில் டாப் 10 ஐ -ட்யூன் உலக ஆல்பத்தில் ஒண்ணாக வந்துள்ளது. இது தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய வர்லாறு! இம்சையே இப்படினா, உண்மையிலேயே இசை நல்லா இவருக்கு பிடிப்பதுபோல வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் னு யோசிக்கிறீங்களா? இவருக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் டாப் 10 ஆல்பத்தில் வந்திருக்காது!
* தெலுங்கு ரைட்ஸ் 30 கோடிக்கு வாங்கிவிட்டதாக ஒரு தகவல் வந்தது. இப்போ அதுவும் பொய்னு சொல்றாங்க! இதுல செம வேடிக்கை என்னனா சன் பிக்சர்ஸ்க்கு தெரியாமலே இந்த டீலை பண்ணி இருக்கார்களாம்! சரியான் லூசுகள் போல இதை வாங்கிய மற்றும் விற்றவர்கள்!
* ஹிந்தி- ரோபாட் ரிலீஸ்க்கு ஷாருக்-கான் வரவழைக்கப் படுவார், அமீர்கானும் வருவார்னு பிஹைண்ட்-தி-வூட்ஸ் ல ஒரு பொய் செய்தி வந்தது. ஆனால் உண்மையில், அமிதாப் ஃபேமிலி மட்டும்தான் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.
* எந்திரன் 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம்னு சொல்றாங்க!
இதில் குறைந்தது எவ்வளவு திரும்பி வரும்?
தமிழ் இசை ரைட்ஸ்: 8 கோடி
தெலுகுப் பட ரைட்ஸ்: 30 கோடி
டி வி ரைட்ஸ் (எல்லா மொழிகளும்): 7 கோடி
கர்நாடகா/கேரளா ரைட்ஸ்: 15 கோடி
ஓவெர் சீஸ் ரைட்ஸ்: 15 கோடி
தமிழ்ப் பட ரைட்ஸ்: 80 கோடி
ஹிந்தி டப்பிங் ரைட்ஸ்: 15 கோடி
இதை கூட்டிப் பார்த்தால், மொத்தம் ஒரு 170 கோடி வருது. போட்ட காசை எடுத்துவிடுவார்கள் போல இருக்கு :)))
Labels:
திரைப்படம்,
திரைவிமர்சனம்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
எனக்குக் கூடத்தான் சாருவைப் பத்தி எதுவும் எழுதக்கூடாதுன்னு கொலை மிரட்டல் வந்தது. நானெல்லாம் வெளிய சொல்லிக்கிட்டா திரியுரேன்?
attagam...
Charu oru Dubakuru..
//* இசை வந்ததும் வராததுமா ஒருவர் "எந்திரன் இம்சை" னு எந்திரன் இசைக்கு விமர்சனம் எழுதி இருக்கார். //
ஏ.ஆர்.ரஹ்மானை பிடிக்காத கும்பல் ஒன்றுள்ளது
ரஜினியை பிடிக்காத கும்பல் ஒன்றுள்ளது
வைரமுத்துவை பிடிக்காத கும்பல் ஒன்றுள்ளது
--
இவர்கள் எல்லாம் பாட்டை கேட்காமலேயே விமர்சணம் எழுதுபவர்கள்
--
CWG பாடல் குப்பை என்று கூட அடுத்த விமர்சணம் வரும் பாருங்களேன்
பிளாக் பஸ்டர்...அப்படின்னா...படம் எல்லாதரப்பு மக்களும் பார்த்து படத்தை ஓடவைப்பது......
வசூல் கணக்கு...விளம்பரத்தில் வருவது...
எந்திரன் 2000 கோடி வசூலாகும்...
அதுல நமக்கு என்ன கிடைக்க போகுது...
ஒரு பாமர ரஜினி ரசிகன்....
படம் சரியில்லைன்னு சொன்னா..நீங்க அவர் கருத்த கேட்பீங்களா ???
விளம்பரதைவிட...மௌத் பப்ளிசிடி....அது மக்களோட விளம்பரம்...
சாரு...சொன்னா என்ன ?
நீர் மோரு ஊத்திரவரா சொன்னா என்ன ?
மொக்கைன்னு சொன்னா மொக்கை மொக்கை தான்...
அதுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கா என்ன ???
சிவாஜியின் வசூல் கிட்டத்தட்ட 380 கோடி ரூபாய். எந்திரன் உங்களின் தற்போதைய கணக்குப்படியே 170 கோடி. படம் ரிலீஸாகி 50 நாட்களை தாண்டும் போது குறைந்தபட்சம் 550 கோடியாவது திரட்டியிருக்கும். ஹிந்தியில் வேறு ரிலீசாகிறது. (ஆயிரம் ரஜினியாம்) சன் டி.வி ஷேர்களை வாங்கி வைக்கப் பாருங்கப்பு....
நீங்க போட்டிருக்குற கணக்கு, மொத்தக் கணக்குல பாதி தான் வரும்னு நினைக்குறேன். ஏன்னா, பொதுவா படம் உருவான விதம், பாடல் உருவான விதம் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க, TV-ல பாத்திருப்பீங்க. பாடல் வெளியீட்டு விழா உருவான விதம் கேள்விப்பட்டிருப்பீங்களா? போன வாரம் அதையும் ரெண்டு நாள் போட்டு கல்லா கட்டியாச்சு. ஒரு படத்த வெச்சு, Theatre தவிர்த்து மற்ற வழிகளில் எப்படி எல்லாம் சம்பாதிக்க கூடிய வழிமுறைகளை வரும் நாட்களில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
அது நீங்களா இருக்காதுன்னு தளபதி நசரேயன் சொன்னாரு...
நல்லா எழுதியிருக்கீங்க..
ரகுமான் பாடல்கள் உலகத்தரத்துல இருப்பதலா.. பொதுவாகவே நம்ம ஆளுங்களுக்கு கேக்க கேக்கத்தான் அவரோட இசை பிடிக்கும்.. எந்திரன் நல்ல இசைதான்..
நேரமிருக்கும் போது எனது வலைப்பதிவுக்கும் சென்று வாருங்கள்..
http://abdulkadher.blogspot.com
பூம்...... பூம்.... ரோபோடா..... ரோபோடா.....
//எனக்குக் கூடத்தான் சாருவைப் பத்தி எதுவும் எழுதக்கூடாதுன்னு கொலை மிரட்டல் வந்தது. நானெல்லாம் வெளிய சொல்லிக்கிட்டா திரியுரேன்?//
என்னை.. ஒபாமா கூப்பிட்டு, நீ எப்படி இன்ஷப்சன் எழுதலாம்னு கேட்டு, இந்தியாவுக்கு போகச் சொல்லி மெரட்டுராருங்க.
***முகிலன் said...
எனக்குக் கூடத்தான் சாருவைப் பத்தி எதுவும் எழுதக்கூடாதுன்னு கொலை மிரட்டல் வந்தது. நானெல்லாம் வெளிய சொல்லிக்கிட்டா திரியுரேன்?
16 August 2010 6:59 PM ***
வர வர சாரு செம காமெடியனாகிட்டு வர்ரார். வலையுலக சுப்பர் காமெடியன்னு சொல்லலாம்! :))))
***Blogger sasibanuu said...
attagam...
Charu oru Dubakuru..
16 August 2010 7:13 PM***
:))))
***புருனோ Bruno said...
//* இசை வந்ததும் வராததுமா ஒருவர் "எந்திரன் இம்சை" னு எந்திரன் இசைக்கு விமர்சனம் எழுதி இருக்கார். //
ஏ.ஆர்.ரஹ்மானை பிடிக்காத கும்பல் ஒன்றுள்ளது
ரஜினியை பிடிக்காத கும்பல் ஒன்றுள்ளது
வைரமுத்துவை பிடிக்காத கும்பல் ஒன்றுள்ளது
--
இவர்கள் எல்லாம் பாட்டை கேட்காமலேயே விமர்சணம் எழுதுபவர்கள்
--
CWG பாடல் குப்பை என்று கூட அடுத்த விமர்சணம் வரும் பாருங்களேன்
16 August 2010 7:32 PM***
ஒரு சிலரை ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருப்பது என்னவோ இயற்கைதான். அதுக்காக பிடிக்காதவர் சம்மந்தப்பட்ட விசய்ங்களைப் பற்றி "முதல் விமர்சனம்" முந்திக்கிட்டு எழுதனுமா என்ன? இதுல இவருக்கு பெரிய நியாயஸ்தன் னு நெனப்பு. இன்னொரு காமெடி என்னனா தமிழ்ப் படங்களில் பாடல்களே தேவையில்லைனு வாய்கிழிய பேசுறவர் இவர். :)))
அது கொஞ்சம் கீழ்தரமான செயல்னு தோனுது.
***ஆண்டவன் கட்டளை ! said...
பிளாக் பஸ்டர்...அப்படின்னா...படம் எல்லாதரப்பு மக்களும் பார்த்து படத்தை ஓடவைப்பது......
வசூல் கணக்கு...விளம்பரத்தில் வருவது...
எந்திரன் 2000 கோடி வசூலாகும்...
அதுல நமக்கு என்ன கிடைக்க போகுது...
ஒரு பாமர ரஜினி ரசிகன்....
படம் சரியில்லைன்னு சொன்னா..நீங்க அவர் கருத்த கேட்பீங்களா ???
விளம்பரதைவிட...மௌத் பப்ளிசிடி....அது மக்களோட விளம்பரம்...
சாரு...சொன்னா என்ன ?
நீர் மோரு ஊத்திரவரா சொன்னா என்ன ?
மொக்கைன்னு சொன்னா மொக்கை மொக்கை தான்...
அதுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கா என்ன ???***
உள்ளதைச் சொல்லி நல்லதை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்னு ஆண்ட்வன் கட்டளைல ஒரு பாடல் வரி உண்டு. அதுதான் ஞாபகம் வருது :)))
*** yeskha said...
சிவாஜியின் வசூல் கிட்டத்தட்ட 380 கோடி ரூபாய். எந்திரன் உங்களின் தற்போதைய கணக்குப்படியே 170 கோடி. படம் ரிலீஸாகி 50 நாட்களை தாண்டும் போது குறைந்தபட்சம் 550 கோடியாவது திரட்டியிருக்கும். ஹிந்தியில் வேறு ரிலீசாகிறது. (ஆயிரம் ரஜினியாம்) சன் டி.வி ஷேர்களை வாங்கி வைக்கப் பாருங்கப்பு....***
சிவாஜி/ தசாவதாரம் ரெண்டுமே 300 கோடிக்கு மேலே வசூல் வந்ததா சொல்றாங்க. நான் அதை நம்பலைங்க. ஆனால் நிச்சயமா போட்ட காசைவிட ரெண்டுமடங்கு எடுத்து இருப்பாங்க!
என்னுடைய கணக்கு குறைந்த பட்சம் எவ்வளவு திரும்பி வரலாம் என்பதே! :)))
*** சிவாஜியின் வசூல் கிட்டத்தட்ட 380 கோடி ரூபாய். எந்திரன் உங்களின் தற்போதைய கணக்குப்படியே 170 கோடி. படம் ரிலீஸாகி 50 நாட்களை தாண்டும் போது குறைந்தபட்சம் 550 கோடியாவது திரட்டியிருக்கும். ஹிந்தியில் வேறு ரிலீசாகிறது. (ஆயிரம் ரஜினியாம்) சன் டி.வி ஷேர்களை வாங்கி வைக்கப் பாருங்கப்பு....
16 August 2010 9:47 PM
Delete
Blogger SenthilMohan said...
நீங்க போட்டிருக்குற கணக்கு, மொத்தக் கணக்குல பாதி தான் வரும்னு நினைக்குறேன். ஏன்னா, பொதுவா படம் உருவான விதம், பாடல் உருவான விதம் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க, TV-ல பாத்திருப்பீங்க. பாடல் வெளியீட்டு விழா உருவான விதம் கேள்விப்பட்டிருப்பீங்களா? போன வாரம் அதையும் ரெண்டு நாள் போட்டு கல்லா கட்டியாச்சு. ஒரு படத்த வெச்சு, Theatre தவிர்த்து மற்ற வழிகளில் எப்படி எல்லாம் சம்பாதிக்க கூடிய வழிமுறைகளை வரும் நாட்களில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
16 August 2010 10:24 PM***
நான் குறைந்த பட்சம் எவ்ளோ திரும்பி வரும்னுதான் எழுதி இருக்கேன். படம் பயங்கர வெற்றியடைந்தால் இதைவிட இரண்டு மடங்கு வரலாம் :)
***பழமைபேசி said...
அது நீங்களா இருக்காதுன்னு தளபதி நசரேயன் சொன்னாரு...
16 August 2010 10:51 PM***
நானா?? நான் சாருவுக்கு இப்படியெல்லாம் உதவுவதில்லை :))))
அது சாருவுக்கு "feed" பண்ணுற யாதாவது ஒரு அரைடவுசராயிருக்கும்.
இன்னொண்ணு, 200 நூறுகோடி போல செலவழிச்சு டென்ஷனாயிருக்க சன் க்ரூப் மேலேயும் சாருவுக்கு கொஞ்சம் பயம் இருக்கலாம்.
***Chitra said...
பூம்...... பூம்.... ரோபோடா..... ரோபோடா.....
17 August 2010 12:26 AM***
இன்னும் ஒரு மாதம் எப்படி வெயிட் பண்றதுனு தெரியலை. ஐ ஆம் க்யுரியஸ் ... :)
*** பதிவுலகில் பாபு said...
நல்லா எழுதியிருக்கீங்க..
ரகுமான் பாடல்கள் உலகத்தரத்துல இருப்பதலா.. பொதுவாகவே நம்ம ஆளுங்களுக்கு கேக்க கேக்கத்தான் அவரோட இசை பிடிக்கும்.. எந்திரன் நல்ல இசைதான்..
நேரமிருக்கும் போது எனது வலைப்பதிவுக்கும் சென்று வாருங்கள்..
http://abdulkadher.blogspot.com
16 August 2010 11:10 PM***
நன்றிங்க, நான் நேரம்கிடைக்கும்போது உங்க "வீட்டு"ப்பக்கமா வர்றேன் :)
*** ஹாலிவுட் பாலா said...
//எனக்குக் கூடத்தான் சாருவைப் பத்தி எதுவும் எழுதக்கூடாதுன்னு கொலை மிரட்டல் வந்தது. நானெல்லாம் வெளிய சொல்லிக்கிட்டா திரியுரேன்?//
என்னை.. ஒபாமா கூப்பிட்டு, நீ எப்படி இன்ஷப்சன் எழுதலாம்னு கேட்டு, இந்தியாவுக்கு போகச் சொல்லி மெரட்டுராருங்க.
17 August 2010 5:42 AM***
LOL! Only Sarah Palin can help you! :)
//அது நீங்களா இருக்காதுன்னு தளபதி
நசரேயன் சொன்னாரு...//
வருண், இந்த வதந்திஎல்லாம் நம்புறீங்க ?
***நசரேயன் said...
//அது நீங்களா இருக்காதுன்னு தளபதி
நசரேயன் சொன்னாரு...//
வருண், இந்த வதந்திஎல்லாம் நம்புறீங்க ?***
நீங்க ஒரு தரமான ரஜினி ரசிகர்னு எனக்குத் தெரியும். ஆனால் பழமைபேசி உங்க நண்பர்னு நெனச்சேன்... :)))
//வருண், இந்த வதந்திஎல்லாம் நம்புறீங்க ?//
அப்ப இது வதந்தி அல்லாம, நெசந்தானா?? அவ்வ்வ்வ்......
//ஆனால் பழமைபேசி உங்க நண்பர்னு நெனச்சேன்... :)))
//
இப்படி எல்லாம் எங்க மேல நல்ல அபிப்ராய, இருக்கா நாட்ல??
*** பழமைபேசி said...
//ஆனால் பழமைபேசி உங்க நண்பர்னு நெனச்சேன்... :)))
//
இப்படி எல்லாம் எங்க மேல நல்ல அபிப்ராய, இருக்கா நாட்ல??
17 August 2010 9:13 AM***
என்ன இப்படி கேட்டுட்டீங்க. இது வெறும் ட்ரைலெர்தான். :)))
//இதிலென்ன விசேஷம் என்றால், சாரு, மேதாவி ஞாநி போன்றவர்கள் படம் "குப்பை"னு எழுதினால் பொதுவாப் படம் ப்ளாக் பஸ்டராவது வழக்கம்//
ஹா ஹா ஹா
//இசை வந்ததும் வராததுமா ஒருவர் "எந்திரன் இம்சை" னு எந்திரன் இசைக்கு விமர்சனம் எழுதி இருக்கார். ஆனால் இவர் கெட்டநேரமா என்னனு தெரியலை எந்திரன் பாடல்கள் வெளியான முதல் நாள், அமெரிக்கா மற்றும், யு கே வில் டாப் 10 ஐ -ட்யூன் உலக ஆல்பத்தில் ஒண்ணாக வந்துள்ளது. இது தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய வர்லாறு! இம்சையே இப்படினா, உண்மையிலேயே இசை நல்லா இவருக்கு பிடிப்பதுபோல வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் னு யோசிக்கிறீங்களா? இவருக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் டாப் 10 ஆல்பத்தில் வந்திருக்காது!//
:-))) அதெப்படித்தான் பாட்டு வந்தவுடனே இப்படி பிரிச்சு மேயறாங்களோ :-) ரஜினி னா போதும் உடனே பொங்கி எழுந்திடுறாங்க ..:-)
வாங்க கிரி! :)
செப்டெம்பெர் 24 படம் ரிலீஸ் டேட்டாம் :)
சாரு நடிச்ச குத்துப்பாட்டுதான் உலக இசையின் புதிய பரிணாமம் என்பார்.....
charu = chinna TR
Post a Comment