Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, September 19, 2014

நண்பர்களை அழைக்க முடியவில்லை!

அவர்கள் மேல் கோபமில்லை
எள்ளளவு வருத்தமும் இல்லை
அவர்களைப் பழிவாங்கவும் இல்லை
கடவுளைச் சந்திக்கப் போகும் அவசரத்தில்
ஆருயிர் நண்பர்களை அழைக்க இயலவில்லை
எனது இறுதி சடங்கிற்கு!


புகைப்படம் இணையத்தில் திருடியது


இது ஒரு "மீள் கவிதை" தான்!

அப்புறம் அழுதுடாதீங்க! நான் உயிரோடதான் கிழங்குமாதிரி இருக்கேன்!  சும்மா ஒரு கவிதைமாதிரி..ஆமா, ஆமா, இழவுக்கவிதைதான்! :-)

Friday, August 1, 2014

கவிதை எழுதப்போயி காமெடியனானேன்!

 



கவிதைப் போட்டி நடைபெறப் போகிறதாம்
கவிதை எழுத முயலலாமென்றால்
தமிழ்  இலக்கணம் தெரியாது
தமிழ் இலக்கியமும் படிக்கவில்லை
 எப்படியும் வென்றே ஆகவேண்டுமென்று 
கவிதை என்று மடக்கி மடக்கி
கவி நான் எழுதியது நாலு வரிகள்
அதில் நான் காணாத எழுத்துப் பிழைகளோ நாற்பது
கவிதைப்போட்டியில் வெல்ல வாய்ப்பில்லை
என் காமெடியை மெச்சி ஆறுதல் பரிசெதுவும் தந்தாலேயொழிய!

ஆக்கம்:   கவிதை எழுத முயன்ற காமெடியன் வருண்! 

Thursday, May 8, 2014

கவிஞரே! ஏன் இந்த வீண் வம்பு?

சொல்லவந்த ஒரு விசயத்தை
தெளிவாக சொல்வதை தவிர்த்து
கவிதை வடிவாக்க வேண்டுமென்று
மடக்கி மடக்கி எழுதி
பத்தி பத்தியாக எழுதி
அர்த்தமற்ற கற்பனைகளை
வலுக்கட்டாயமாகக் கலந்து
தேவையேயில்லா வர்ணனைகளை
 அங்கங்கே அதில் பூசி மொழுகி
பிறரையும் குழப்பி தானும்
குழம்புவதுதான் கவிதையா? 
 
******
 
 ஆக்கம்: கவி எழுதவே முடியாத கவிஞர் வருண் :-)
 
Disclaimer: Please don't misunderstand me! This is not meant to criticize growing young Tamil poets. வருண், தன்னால கவிதை எழுத முடியவில்லையே என்கிற இயலாமையை இப்படி வெளிக்காட்டுகிறான் னு நெனச்சுப் படிங்க!  :)

Tuesday, May 6, 2014

கொல்லாப்ஸ் ப்ளீஸ்- கவிதை பை பாகவதர்

கொல்லாப்ஸ் ப்ளீஸ்
கொல்லாப்ஸ் ப்ளீஸ்
வருண்தான் அனானி டோய்

கொல்லாப்ஸ் ப்ளீஸ்
கொல்லாப்ஸ் ப்ளீஸ்
வருண்தான் ராமகிருஷ்ணன் டோய்

கொல்லாப்ஸ் ப்ளீஸ்
கொல்லாப்ஸ் ப்ளீஸ்
வருண்தான் மன நோயாளி டோய்

கொல்லாப்ஸ் ப்ளீஸ்
கொல்லாப்ஸ் ப்ளீஸ்
வருண்தான் ஸ்பிலிட் பர்சனாலிட்டி டோய்

கொல்லாப்ஸ் ப்ளீஸ்
கொல்லாப்ஸ் ப்ளீஸ்
இப்போ விக்கி நக்கி என் அடியாள் டோய்

கொல்லாப்ஸ் ப்ளீஸ்
கொல்லாப்ஸ் ப்ளீஸ்
வருண்தான் அனானி டோய்



ஆக்கம்: பைத்தியம் பிடித்த பாகவதர் சயதேவ் என்கிற பொய்யன்  




பாகவதர் நம்ம நித்யானந்தாவின் சிஷ்யனாம்!

விக்கி நக்கி போலி ஐ டி எப்படி ஆரம்பிக்கிறதுனு விளக்கமா சொல்லுறான்! பாகவதரே பாரு உன் கூட்டாளியின் ஈனப் பொழைப்பை! ( this part below is added later)






 தொடர்புள்ள பதிவுகள்

Monday, May 5, 2014

பதிவுலக அடி முட்டாள்!

அறிவியலா? பொருளாதாரமா?
தொழில்நுட்பமா? சினி நுட்பமா?
மாற்று எரிபொருளா? அணு மின்சாரமா?
வரலாறா? பூலோகமா?
சாதியா? மதமா?
பெரியாரா? பகுத்தறிவா?
பிள்ளையாரா? கொழுக்கட்டையா?
ஒளியின் வேகமா? ஒலியின் வேகமா? 
உயிரியலா? வேதியிலா?
ப்ரோட்டீனா? டி என் எ வா?
லிப்பிடா? கார்போஹைட்ரேட்டா?
ஸ்டெராயிட்ஸா? அல்கலாயிட்ஸா?
எல்லாமே எனக்குத்தான் தெரியும்
எனக்கு மட்டும்தான் தெரியும்
நான் யார் தெரியுமா?

நான் கடவுள் இல்லை
நான் மேதைகளுக்கெல்லாம் மேதை
பின்னூட்டங்களில் வாய்கிழிய பேசுவேன்
இந்தப் பதிவருக்கு எதுவுமே தெரியவில்லை என்பேன்
ஆம் அது என் பேச்சுரிமை
நான் யாரு தெரியுமா?
பதிவுலக அடி முட்டாள் என்பர் என்னை!



தொடர்புள்ள பதிவுகள்



Friday, October 19, 2012

நானும் நீயும் சுயநலவாதிதான்!

நான் வென்றேன்
நான் வீழ்த்தினேன்
நான் நகைத்தேன்
நான் சாதித்தேன்
நான் உதவினேன்
நான் கவர்ந்தேன்
நான் உயர்ந்தேன்
நான் பாராட்டினேன்
என்கிற நான் சுயநலவாதிதான்!

நான் தோற்றேன்
நான் வீழ்ந்தேன்
நான் அழுதேன்
நான் புலம்பினேன்
நான் குழம்பினேன்
நான் இழந்தேன்
நான் மறந்தேன்
நான் உணர்ந்தேன்
என்கிற பரிதாபநானும் சுயநலவாதிதான்!

நான் நீயாவதும்
நீ நானாவதும்
நானும் நீயும் நாமாவதும் இயல்புதானே?

Saturday, October 13, 2012

நாத்திகன் என்பவன் யார்?



பண்பில்லாதவன்
பாசமில்லாதவன்
அன்பில்லாதவன்
இரக்கமில்லாதவன்
ஆணவம் பிடித்தவன்
அநாகரிகமானவன்
என்றெல்லாம் இகழப்படுபவன்!

உண்மையானவன்
கன்னியமானவன்
மனிதாபமுள்ளவன்
மனசாட்சியுள்ளவன்
தன்மானமுள்ளவன்
நேர்மையானவன்
என்று ஒருநாளும் மதிக்கப்படாதவன்!

கடவுளை வாழ்த்தி 
கடவுளை வணங்கி
கடவுளைப் புகழ்ந்து
கடவுளைத் தாலாட்டி
கடவுளைப் பாராட்டி
கடவுளை ஏமாற்றி
தன்னையும்  ஏமாற்றி வாழத்தெரியாதவன்!
 



Thursday, September 27, 2012

சவுதியைப் பார்! துபாயைப் பார்!


இளம் பெண்
வஞ்சிக்கப்பட்டாள்
வன்புணர்வு செய்யப்பட்டாள்
யாரோ தீண்டத்தகாதவளாம்
யார் இப்படி செய்தது?
உயர் சாதி வேஷிமகன்களாம்!
 உயிரை மாய்த்துக் கொண்டானாம் தந்தை
அவளுக்கு நீதி கிட்டாதெனதறிந்து
என்ன ஒரு பரிதாபம்
இதுதான் இந்தியாவா?
இவர்கள்தான் இந்துக்களா?

யாரப்பா நீ?
உன் பெயரென்ன?
இக்பாலா? இமானுவேலா?
கிருத்தவனா? இஸ்லாமியனா?
 ஏன் உலகறிய செய்கிறாய் இந்த அவலத்தை?
எம் வர்ணாஸ்திரத்தை இகழவா ?
 என் நாட்டவரை இழிவுபடுத்தவா?
எம் உயர்சாதியினர் வன்புணர்ந்ததாலா?
 உன் மதத்தில் தலித் இல்லை என்பதாலா?
என்ன ஒரு மதவெறி!
 இதுதான் இந்தியாவா?
இவர்கள்தான் இந்துக்களா?

 விஷமியடா நீ
கீதை படித்தவன் நான்
உலகில் உயர்ந்த மதம் என் இந்து மதம்
வர்ணாஸ்திரம் எம்மதத்தின் இதயம்
சவுதியைப் பார்!
துபாயைப் பார்!
 அபுதாபியைப் பார்!
துருக்கியைப் பார்!
ஈரானைப் பார்!
என்ன ஒரு நியாயப்படுத்தல்!
இதுதான் இந்தியாவா?
இவர்கள்தான் இந்துக்களா?


************************


சம்மந்தப்பட்ட செய்தி!

Mother of two gang-raped by intruders in Jind

IANS Sep 26, 2012, 03.28PM IST
JIND: Close on the heels of the gang-rape of a teenaged Dalit girl by eight youths in Hisar district earlier this month, a married woman in Haryana's Jind district has alleged that she was gang-raped at gun-point last Friday by three youths inside her house.
The victim, who is in her mid-30s and is the mother of two children, and her husband Wednesday threatened to commit suicide in front of the office of the superintendent of police (SP) here, alleging that the Haryana Police were deliberately not taking any action against the accused.

In her complaint to the police, the victim, who lives in Jind district, said three youths entered her house Sep 21 (Friday) and raped her at gunpoint in the presence of her children.
"I filed a complaint with the police Sep 21 itself. The accused are roaming free but the police is not taking any action," the victim said.
The police registered a case of rape following her complaint but did not make any arrest.
She and her husband have now threatened that they will commit suicide in front of the SP's office if the police fail to take action against the accused.
"We have registered a case after her complaint. The accused are on the run but we are trying to arrest them," investigating officer Subhash Chander said Wednesday.
In neighbouring Hisar district, the father of a 16-year-old gang-rape victim committed suicide by consuming a poisonous substance Sep 18 after he came to know that his daughter was gang-raped Sep 9 near Hisar by eight youths, who later circulated an MMS clip of the crime. 
 ---------------------

Well, seems like we have got lots of high-class sick mother-f**kers in Haryana!

Monday, September 24, 2012

பதிவுலக அடி முட்டாள்!

அறிவியலா? பொருளாதாரமா?
தொழில்நுட்பமா? சினி நுட்பமா?
மாற்று எரிபொருளா? அணு மின்சாரமா?
வரலாறா? பூலோகமா?
சாதியா? மதமா?
பெரியாரா? பகுத்தறிவா?
பிள்ளையாரா? கொழுக்கட்டையா?
எல்லாமே எனக்குத்தான் தெரியும்
எனக்கு மட்டும்தான் தெரியும்
நான் யார் தெரியுமா?

நான் கடவுள் இல்லை
நான் மேதைகளுக்கெல்லாம் மேதை
பின்னூட்டங்களில் வாய்கிழிய பேசுவேன்
இந்தப் பதிவருக்கு எதுவுமே தெரியவில்லை என்பேன்
ஆம் அது என் பேச்சுரிமை
நான் யாரு தெரியுமா?
பதிவுலக அடி முட்டாள் என்பர் என்னை!

Sunday, September 9, 2012

நண்பர்களை அழைக்க முடியவில்லை!

அவர்கள் மேல் கோபமில்லை
எள்ளளவு வருத்தமும் இல்லை
அவர்களை பழிவாங்கவும் இல்லை
கடவுளை சந்திக்கப் போகும் அவசரத்தில்
ஆருயிர் நண்பர்களை அழைக்க முடியவில்லை
எனது இறுதி சடங்கிற்கு!

Thursday, May 24, 2012

முட்டாள் வருணே! இது உன் தற்கொலை முயற்சி!

முட்டாள் மானே!
சிங்கம் உன்னை கடித்துத் திண்பது
உன்னை தண்டிக்க அல்ல
இந்தப் பாவிக் கடவுள் அதற்கு கொடுத்த
பசித் துன்பத்தால்

முட்டாள்  மீனே!
நீ தூங்கும்போதும் நீந்துவது
உனக்கு கெடச்ச பெரிய கிஃப்ட் அல்ல
உன்னால மல்லாக்கப் படுத்துத்
தூங்க இயலாது என்பதால்

முட்டாள் பதிவரே!
நீர் பதிவெழுதுவது
உலகைத் திருத்த அல்ல
உன் அரைகுறைத் தமிழை
எழுதி எழுதி ஓரளவுக்கு செப்பனிட

முட்டாள் வருணே!
நீ இஷ்டத்துக்கு உளறும்
இதெல்லாம கவிதையும் அல்ல
கவிஞர்கள் உன்னை கொலைசெய்யத் தூண்டும்
உன் தற்கொலை முயற்சி!

Monday, May 14, 2012

கவிஞரே! ஏன் இந்த வீண் வம்பு?

சொல்லவந்த ஒரு விசயத்தை
தெளிவாக சொல்வதை தவிர்த்து
கவிதை வடிவாக்க வேண்டுமென்பதால்
மடக்கி மடக்கி எழுதி
பத்தி பத்தியாக எழுதி
அர்த்தமற்ற கற்பனையை
வலுக்கட்டாயமாகக் கலந்து
தேவையேயில்லா வர்ணனையை
அங்கங்கே அதில் பூசி மொழுகி
பிறரையும் குழப்பி தானும்
குழம்புவதுதான் கவிதையா?

Monday, September 12, 2011

திருடிய காதல் கவிதைகள்..

இதைப் படிச்சுட்டு சிரிக்கக்கூட செய்யலாம்.. ஆனால் எல்லாரும் சிரிக்கிறது இல்லை! "love quotes" எல்லாம் தோண்டி எடுத்து அதை கவிதைமாதிரி எழுதித்தந்து இருக்கேன்.

If I never met you, I wouldn't like you.
If I didn't like you, I wouldn't love you.
If I didn't love you, I wouldn't miss you.
But I did, I do, and I will.

When I saw you, I was afraid to meet you...
When I met you, I was afraid to kiss you...
When I kissed you, I was afraid to love you...
Now that I love you, I'm afraid to lose you.

When you smiled you had my undivided attention.
When you laughed you had my urge to laugh with you.
When you cried you had my urge to hold you.

It hurts to love someone and not be loved in return..
But what is the most painful is to love someone and never find the courage to let the person know how you feel.

I'm not supposed to love you..
I'm not supposed to care..
I'm not supposed to live my life wishing you were there..
I'm not supposed to wonder where you are or what you do..
I'm sorry I can't help myself, I'm in love with you...

ஆமா எதுக்கு இதெல்லாம்? இந்த தளத்தின் பெயர்..timeforsomelove இல்லையா? :) அதுக்காக இப்படி திருடியா கொடுக்கிறது?னு கேக்காதீங்க! ஒரு சில நம்ம மக்கள் மாதிரி இதை தமிழாக்கம் செய்து இது என் கவிதைனு சொல்லி நான் "க்ரிடிட்" எடுக்காமல் இருக்கதுக்கு என்னை நீங்க பாராட்டனும்! :)


Tuesday, February 1, 2011

திருடிய கவிதை!


எனக்குக் கவிதை எழுதத்தெரியாதுனு எல்லாருக்கும் தெரியும். ஆனால் எப்போவோ யாரோ எழுதிய கவிதையை ஏன் இங்கே கொடுக்கக்கூடாது?

மின்னல்!

பூமி என்கிற மாது

நிர்வாணமாகக்

குளிக்கும்போது


அதை படம் பிடிக்கும்


கேமிரா!


இதை எழுதியவர், திரு. ராமநாதன் என்கிற கவிஞர்! எபோவோ படிச்சது! மேலே உள்ள படம் இணையத்தில் திருடியது!

Wednesday, June 17, 2009

அபிக்குட்டியும் அழகான குட்டிக்குதிரையும்!

அபி என்று ஒரு குட்டிப்பெண் இருந்தாள். அவள், ஒரு நாள் தன் அப்பா அம்மாவுடன் காரில் வலம் வந்தாள். அந்த கிராமத்து வயல்ப்பகுதியில் காரில் போகும்போது வெளியே வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டே வந்தாள், அபி.

அப்போது ஒரு அழகான வெள்ளை நிறக்குட்டிக்குதிரையை அபி பார்த்தாள். அது மட்டுமன்றி, அதன் அருகில் “இந்தக் குட்டிக்குதிரை விற்பனைக்கு” என்கிற ஒரு பலகையும் போட்டிருப்பதை கவனித்தாள், அபி.

“அப்பா! எனக்கு அந்த அழகான குட்டிக்குதிரை வேணும்” என்றாள் தன் அப்பாவிடம்.

“இல்லை அபி! அந்தக்குதிரையையெல்லாம் வாங்கித்தர முடியாதும்மா, செல்லம்” என்றனர் அப்பா அம்மா இருவரும்.

“அம்மா! எனக்கு அந்தக்குட்டி குதிரை கட்டாயம் வேணும்!” என்றாள் அபிக்குட்டி அழுத்தமான குரலில்.

“இல்லைடா, அபிக்குட்டி! அந்த குதிரையை வாங்கித்தர முடியாது! வீட்டுக்கு போனவுடன் உனக்கு ஐஸ்க்ரீம் தருகிறேன். சரியா?” என்றாள் அம்மா.

“எனக்கு ஐஸ்க்ரீம் எல்லாம் வேணாம்! எனக்கு அந்தக் குட்டிக் குதிரைதான் வேணும்! எனக்குக் கட்டாயம் அந்தக்குதிரை வேணும்!” என்றாள் அபிக்குட்டி பிடிவாதமாக.

“இப்படியெல்லாம் அடம் பிடிக்கக்கூடாது அபிக்குட்டி! அப்பா அம்மா சொன்னால் கேக்கனும்!” என்றாள் அம்மா கொஞ்சம் கடிந்து.

உடனே அபிக்குட்டி அழ ஆரம்பித்துவிட்டாள். அழுதுகொண்டே அவள்,

“அந்த குட்டிக்குதிரை நீங்க வாங்கித்தரவில்லை என்றால் நான் செத்துப்போய்விடுவேன். எனக்கு அந்த அழகான குட்டிக்குதிரை வேண்டும்”

“குதிரை கிடைக்கவில்லையென்றால் அப்படியெல்லாம் நீ சாக மாட்டாய்! அதுபோல் யாரும் இறந்ததில்லை!” என்றார் அப்பா, அம்மாவுடன் சேர்ந்து.

வீட்டிற்குபோனவுடன் அபிக்குட்டி படுக்கைக்குப்போனாள், அவளால் சாப்பிடமுடியவில்லை, தூங்கமுடியவில்லை, அழுதுகொண்டே இருந்தாள், அபிக்குட்டி, அந்தக்குட்டிக்குதிரையை நினைத்து. கடைசியில் அபிக்குட்டி இறந்தே விட்டாள்- அந்தக் குட்டிக்குதிரை கிடைக்காததால்! :(

----------------

இது என்னுடைய ஒரிஜினல் சிந்தனை அல்ல! எனக்குப்பிடித்த ஒரு ஆங்கில கவிதையை உரைநடையாக தமிழில் சொல்ல முயன்றுள்ளேன். ஒரிஜினல் ஆங்கிலக்கவிதை கீழே உள்ளது! The poem is really beautiful unlike my crude translated version! :)

Little Abigail and the Beautiful Pony


There was a girl named Abigail
Who was taking a drive
Through the country
With her parents
When she spied a beautiful sad-eyed
Grey and white pony.
And next to it was a sign
That said,
FOR SALE--CHEAP
"Oh," said Abigail,
"May I have that pony?
May I please?"
And her parents said,
"No you may not."
And Abigail said,
"But I MUST have that pony."
And her parents said,
"Well, you can't have that pony,
But you can have a nice butter pecan
Ice cream cone when we get home."
And Abigail said,
"I don't want a butter pecan
Ice cream cone,
I WANT THAT PONY--
I MUST HAVE THAT PONY."
And her parents said,
"Be quiet and stopp nagging--
You're not going to get that pony."
And Abigail began to cry and said,
"If I don't get that pony, I'll die."
And her parents said, "You won't die.
No child has ever died yet from not getting a pony."
And Abigail felt so bad
That when they got home she went to bed,
And she couldn't eat,
And she couldn't sleep,
And her heart was broken,
And she DID die--
All because of a pony
That her parents wouldn't buy.

(This is a good story
To read to your folks
When they won't buy
You something you want.)