Wednesday, December 28, 2011
ஷங்கரின் நண்பன் படம் தேறுமா?!
ஹரிஸ் ஜெயராஜ் இசையில் நண்பன் படம் பாட்டெல்லாம் வெளிவந்து பாடல்கள் எல்லாம் ரொம்ப நல்லாயிருக்குனுதான் சொல்றாங்க. நம்ம சத்யராஜி வேற வில்லனாக நடிச்சு இருக்காராம்! இப்படி விஜய், ஷங்கர், சத்யராஜ், ஜீவா அது இதுனு பல மேட்டர்கள் இருந்தாலும் "நண்பன்" படத்தில் எந்த ஈர்ப்புமே இல்லாதமாரி ஒரு பிரமை எனக்கு. எனக்கு மட்டும்தானா?
அப்புறம் படம் பொங்கலுக்கே வெளிவிடப்போறாங்களாமில்ல? ஒருவேளை எனக்கும் நம்ம தீராத பக்கங்கள் மாதவராஜ்க்கு மாரி ஷங்கர் படம்னாலே பொதுவாப் பிடிக்காதோ? ரஜினி நடித்ததால சிவாஜி, மற்றும் எந்திரனை எதிர்பார்த்துப் பார்த்தேனா? இப்போ பழையபடி ரஜினி இல்லாமல் ஷங்கர் படம் என்பதால் பிடிக்காமல் போயிடுச்சா? இருந்தாலும் இருக்கும்.
ஒரு வேளை இது 3 இடியட்ஸ் ரி-மேக் என்பதால் இருக்குமா? நான் அந்த 3 இடியட்ஸ் படமும் பார்க்கவில்லை. ஏன்னு தெரியலை ஹிந்திப்படமெல்லாம் சும்மா ஃப்ரீயா டி வி டி கொடுத்து பாக்கச்சொன்னாலும் பார்க்கிறதில்லை. ஆமா, அதானே நல்ல தமிழனுக்கு அழகு? :) அமீர் கான், சாருக் கான், சல்மான் கான் எல்லாம் பெரிய ஆட்கள்தான் . நமக்குத்தேன் அவங்க படம் பார்க்க அம்புட்டு ஈர்ப்பு கெடையாது!
"நண்பன்" ஸ்டில்ஸ் எல்லாம் ஒரு மாதிரி எரிச்சலைத்தான் கிளப்புது. ஒரு வேளை விஜய் "கீரோ" என்பதாலா? இல்லையே விஜய் பிடிக்காட்டியும் அவர் படுத்து ஸ்டில்ஸ் எல்லாம் பொதுவாகப் பிடிக்கத்தான் செய்யும். நண்பன் ஸ்டில்ஸ் மட்டும்தான் பிடிக்க மாட்டேன்கிது? என்ன எழவோ போங்க, "நண்பன்" படத்தை நெனச்சாலே ஏதோ "டிப்ரெஸ்ஸிங் ஃபீலிங்" தான் வருது. "இந்தப்படம் என்னத்தை தேற?" னுதான் தோனுது.
நீங்கலாம் எப்படிப்பா ஃபீல் பண்ணுறீக? அட்வாண்ஸ் புக்கிங் இப்போவே பண்ணீட்டீங்களா? வாழ்க!
எரிச்சல் தரும் ஸ்டில்ஸ்னு சொன்னேன் இல்ல? மேலே கொடுத்திருக்க ஸ்டில் மாதிரி!
ஆனால் தோல்வியே அறியாத இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிச்சு வர்ற முதல்ப்படம் இந்தப்படம்! என் கணக்கெல்லாம் தப்புக்கணக்காகி நிச்சயம் 2012 ல பாக்ஸ் ஆஃபிஸ் ல #1 ஆகத்தான் இந்த நண்பன் இருக்கும் என நம்புவோம்!
Labels:
திரைப்படம்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
shankar seldom fails.shankar is the only director who utilised rajini image for marketing not in the film.Endiran is shankar's film not rajini more over this is the only film In which rajini ranaway by seeing the villain instead of biting the bullet. this shows shankar calibre and nanban is going to be a BLOCKBUSTER Not because of VIJAY BUT SHANKAR
hai i joined as follower as 222
shankar seldom fails.shankar is ***the only director who utilised rajini image for marketing not in the film.Endiran is shankar's film not rajini more over this is the only film In which rajini ranaway by seeing the villain instead of biting the bullet. this shows shankar calibre and nanban is going to be a BLOCKBUSTER Not because of VIJAY BUT SHANKAR
28 December 2011 11:37 AM***
Your response is not bad but certainly UNIMPRESSIVE!
Let us wait and see what happens! We will know the "fate" of this movie in 4 weeks!
***பித்தனின் வாக்கு said...
hai i joined as follower as 222
29 December 2011 5:32 AM**
:-))))
Post a Comment