Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Tuesday, May 27, 2014

கோச்சடையான் வசூலில் எப்படி?

கோச்சடையான் படத்தை சவுந்தர்யா எடுத்தாரு எடுத்தாரு எடுத்துக்க்கிட்டே இருந்தாரு. ஆண்டுகள் கடக்கக் கடக்க, படம் வெளியாகுமா? என்கிற சந்தேகம் வலுத்துக்கொண்டே போனது. கடைசியில் ஒரு வழியா  படம் வெளி வந்துவிட்டது. சவுந்தர்யாவின் அனுபவத்தை வைத்துப் பார்த்தால் இப்படத்திற்கு வந்துள்ள  விமர்சங்கள் நல்லாவே வந்து இருக்கின்றன.

முக்கியமாக ரஜினி ரசிகர்களை இந்தப்படம் ஏமாற்றவில்லை!

அடுத்தது, வசூல் நிலவரம் எப்படி?

எந்திரன், விஸ்வரூபம் போன்ற படங்களோட கோச்சடையானை கம்பேர் பண்ண வேண்டுமா? இல்லைனா சும்மா வசூல் பற்றி சொல்லலாமா?

என்னைப் பொருத்தவரையில் இந்தப்படம் போட்ட காசை எடுத்தாலே மிகப் பெரிய வெற்றினு சொல்லுவேன்.

கடந்த வீக் எண்ட் வசூல் 42 கோடி என்று ஈரோஸ் நிறுவனமே வெளியிட்டு உள்ளது.

அதாவது இது அஃபிஸியல் ஸ்டேட்மெண்ட்! சும்மா ஆளாளுக்கு ஒண்ணச் சொல்லி, கடைசியில் தயாரிப்பாளர்கள் வந்து இன்னொரு தொகையை எந்திரனுக்கு சொன்னது போலல்லாமல், இது தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாகச் சொன்ன தொகை!

இது பெரிய தொகையா? னு கேட்டால், சேட்டலைட் ரைட்ஸ், ம்யூசிக் ரைட்ஸ்னு பல மொழிகளில் இந்தப்படம் ஏற்கனவே விற்கப்பட்டு இருக்காம், சும்மா சுமாரான ஒரு தொகையைப்போட்டு அதை கூட்டினால் ஒரு 20 கோடியாவது தேறிடும்.சரி இப்போதைக்கு 62 கோடினு வச்சுக்குவோம்.

இது மூன்று அல்லது நான்கு நாட்கள் வசூல். இது கோடை விடுமுறை காலம். இந்தப் படம் சிறுவர்களை ஏமாற்றவில்லை. அதனால் ஓரளவுக்கு தொடர்ந்து வசூலாகிக்கொண்டே போச்சுனா மூனு வாரத்தில் 200 கோடியை தொட்டுவிடுமா? என்பதெல்லாம் தெரியவில்லை!

சரி, எப்படி 42 கோடி கணக்கு?

அமெரிக்கா மற்றும் கனடாவில் 3 கோடி

தமிழ்நாடு  25 கோடி

ஆந்திரா, கேரளா, கர்நாடகா: 7 கோடி

ஹிந்தி வேர்ஷன்: 3 கோடி

யு கே, மலேசியா, சிங்கப்பூர், மிடில் ஈஸ்ட், ஆஸ்திரேலியானு எல்லாத்தையும் கூட்டி ஒரு 4 கோடி

கணக்கு சரியா வருதா? :)

இதில் வேடிக்கை என்னவென்றால், கமல் ரசிகர்களெல்லாம் இந்த 42 கோடி வசூலையே பொய்னு சொல்ல ஆரம்பிச்சுட்டானுக.

விஸ்வரூபம் வந்த போது, ஒரு நாளைக்கு 10 கோடி 15 கோடினு கூட்டிக்கிட்டே போனானுக! அப்போ அதையும் நம்பலையா இவர்கள்??

* ஆந்திராவில் மனம் ரிலீஸ் ஆச்சு, அதனுடைய வசூல் கோச்சடையான் வசூலைவிட ஆந்திரா மற்றும் அமெரிக்காவில் இரண்டு மடங்கு தான். இல்லைனு யாரும் சொல்லவில்லை! இருந்தும், மொத்த வசூல் என்னனு பார்த்தால் கோச்சடையான் வசூலில் பாதிகூட மனம் வசூல் கெடையாது. ஏனென்றால், மனம், கனடா, மலேசியா, சிங்கப்பூர், மற்றும் மிடில் ஈஸ்டில் கனிசமான தொகை வசூல் செய்யவில்லை. அதேபோல், கோச்சடையான் பிர மாநிலங்களில் வசூல் செய்வதுபோல், மனம்  தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா போன்ற மாநிலங்களில் எதுவும் பெருசா வசூல் பெறவில்லை!

* அதேபோல் HEROPANDI என்கிற  ஹிந்திப்படம் ஒண்ணு ரிலீஸ் ஆச்சு. வட இந்தியாவில் மட்டும்தான் இந்தப்படம் பெரியளவில் வசூல் செய்தது. ஓவர் சீஸ்ல சொல்லிக்கிறாப்பிலே வசூல் செய்யவில்லை.

ஆக, மொத்த வசூல்னு பார்த்தால் கோச்சடையாந்தான் முன்னால நிக்கிது என்பது புரியும்.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஆந்திரா மற்றும் மொத்த வசூல் எவ்ளோனு மனம் மற்றும் ஹீரோபாண்டிக்கு நான் கொடுக்கத் தயார்.

* HEROPANDI  collection 20 கோடிகள் (பாக்ஸ் ஆஃபிஸ் இந்தியா , Times of India சொல்வது)

Heropanti Box Office: earns Rs 21 crores in opening weekend



* மனம்

 NoImage
இப்போ 4 வது நாள் கலக்சன் என்னனு பார்த்தால்..

கோச்சடையான் 8-10 கோடி வசூல்

மனம் 2.5-3 கோடி வசூல்

ஹீரோபாண்டி  6.5 கோடிகள்.


நிச்சயம் கோச்சடையான், கோடை விடுமுறையில் தொடர்ந்து ஒரு ரெண்டு வாரமாவது தொடர்ந்து இதே வசூலைத் தரும். யாரு உண்மையான வின்னர்னு நீங்களே சொல்லுங்கள்!










Friday, January 24, 2014

ருசிகர சினிமாச் செய்திகள்!

சத்யராஜ் ஹீரோவா நடிச்சு, கலவரம்னு ஒரு படம் ரிலீஸ் ஆகி இருக்குபோல. இதென்ன "டப்" படமா என்னனு தெரியலை. பிஹைண்ட் வுட்ஸ் (Behindwoods),  சைஃபை (sify, இப்படித்தான் நான் தமிழ்ல சொல்றது), rediff மற்றும் வலையுலகில் ஒரு பயகூட இதுக்கு விமர்சனம்னு என்ன எழவையும் எழுதக்காணோம். ஹிந்துல மட்டும் ஏதோ வந்தது. ஏன் இப்படி ஒரு படத்தை ஒரு மனதா எல்லோரும் புறக்கணிக்கிறாங்கனு தெரியலை.

விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆகும்போது, பேர்ரி ஆஸ்பான், அந்தப்படத்தை தொடர்ந்து பத்துத்தர பார்த்து ரசித்ததாவும், அவர் குடும்பமே வந்து பார்த்து மூக்கில் விரலை வைத்து ஆச்சர்யமாப் பார்த்து கமலை வானளாவ புகழ்ந்ததாகவும் கமலே சொல்லாமல் சொல்லி விஸ்வரூபத்தை இஷ்டத்துக்கு ப்ரமோட் பண்ணினார்.அதன் பிறகு ஆஸ்பான் இவரை வைத்து படம் தயாரிக்கப் போவதாகவும் பல செய்திகள் வந்தன.அது மாதிரி எதுவும் நடக்கிறதா எதுவும் தெரியலை. அதுக்குள்ள கமலுக்கும் ஆஸ்பானுக்கும் கருத்து வேறுபாடு வந்து ப்ராஜெக்ட் நின்றுச்சா என்ன?

ரஜினியின் மகள் சவுந்தர்யா, அப்பாவை வைத்து பொம்மைப்படம் ஒண்ணு (அதான்ப்பா கோச்சடையான்) எடுக்கிறாரு எடுக்கிறாரு எடுத்துக்கிட்டே இருக்காரு. சங்கர், எந்திரன், சிவாஜி எடுத்தபோது இழுத்த இழுவையைவிட பல மடங்கு இழுக்கிறார். கடைசியில் ஆடியோ வெளியே வரப்போதாம். வந்தால்த்தான்/வந்த பிறகுதான் நான் அதை நம்புவேன். இதெல்லாம் ரஜினிக்குத் தேவையா? மகள்னா அன்பா இருக்க வேண்டியதுதான். எதுக்கு இதுபோல் ஒரு ப்ராஜெக்ட் செய்ய அனுமதிக்கனும்? அப்படியே அவரிடம் திறமை இருந்தால், இளநடிகர்களை வச்சு ஏதாவது சின்ன ப்ராஜெக்ட் பண்ணி தன் இயக்கத்திறமை வலிமைப்படுத்தாமல் ஏன்ப்பா இப்படி?

பொங்கலுக்கு ஜில்லாவும், வீரமும் மோதியது. அதென்னனு தெரியவில்லை இணையதள மீடியா மற்றும் சின்னத்திரை மீடியா எல்லாருமே இந்த இரு படங்களின் வெற்றி, விமர்சனம் பற்றி ரொம்பவே அடக்கி வாசிக்கிறாங்க. ரெண்டு படமுமே வெற்றி! ரெண்டுமே சுமார்தான்! ரெண்டுமே பாக்ஸ் ஆஃபிஸ் ல பக்கத்தில் பக்கதில் நிக்கிதுனு ஒரேயடியா யார் வெற்றி பெற்றார்கள்னு சொல்ல மறுக்கிறார்கள். இது சினிமா வரலாற்றில் ஒரு புதுமையான நிலை! I have never seen any such a "tie" in any box office war between two big stars, let it be Sivaji vs MGR or Rajni vs Kamal!

Tuesday, September 10, 2013

புத்துயிர் பெற்று வரும் கோச்சடையான்!

"மருதநாயகம்" னு எவனாவது சொன்னால், "உனக்கு வேற வேலை இல்லையா? சும்மா கமல் மருதநாயகம் எடுக்கப் போறாரு, எடுப்பாரு னு இந்த எழவையே எத்தனை வருடம்டா சொல்லிக்கிட்டு அலைவீங்க?" என்று எகத்தாளமாக பேசுவதில் தவறேதும் இல்லை!  இப்போ நம்ம சவுந்தர்யா சேச்சியுடைய "மோஷன் பிக்ச்சர் டெக்னாலஜியான கோச்சடையானையும்" இழுக்க இழுக்க, இதுவும் "மருதநாயகம்" நிலையைத்தான் அடைந்து கொண்டு இருந்தது. இப்போ சமீபச் செய்திகளால் கோச்சடையானுக்கு ஏதோ புத்துயிர் வந்துவிட்டதுபோல் இருக்கிறது!

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்து அவருடைய உண்மையான "ஹெல்த்" எப்படி இருக்கிறது என்கிற கேள்விக்குறி எல்லோர் மனதிலும் இருப்பதால், சவுந்தர்யாவின் கோச்சடையான் போல ஒரு அனிமேஷன் அல்லது மோஷன் பிக்ச்சர் எடுக்கும் முயற்சி நிச்சயமாக நல்ல ஐடியாதான். ஆனால் அதை செயல்படுத்த எத்தனை ஆண்டுகள்? என்பதே  பிரச்சினை. படம் வெளிவர காலம் கடக்கக் கடக்க படம் வெளி வராது என்றுதான் ஊர் உலகம் பேசும்.

எதிர்பார்த்ததைவிட காலம் தாமதம் அடைந்துவிட்டதால், நம்ம சூப்பர் ஸ்டாருடைய கோச்சடையான் இப்ப வரும், வந்துரும், வந்துக்கிட்டே இருக்குனு சொல்லச் சொல்ல எரிச்சல்தான் வந்தது. மற்றவர்களைவிட முக்கியமாக ரஜினி ரசிகர்களுக்கு!

ஒரு வழியாக இப்போது இந்தப்படத்தின் ட்ரைலர் வெளிவந்துவிட்டது! படம் டிசம்பர் 12 வெளிவருவதாக சொல்கிறார்கள். இருந்தாலும் "மணிரத்னமே மார்க்கட் இழந்து நிற்கும் இந்த நவீன திரையுலக காலத்தில் கத்துக்குட்டி சவுந்தர்யாவின் கோச்சடையான் எந்தளவுக்கு வெற்றி பெறும்?" என்கிற கேள்வி ரஜினி ரசிகர்கள் எல்லோருக்கும் பீதியைக் கிளப்புகிறது என்றால் அது மிகையல்ல.

இந்தப்படத்தில் ஒரு சில ப்ளஸ் பாயிண்ட்ஸ்னு பார்த்தால்..

* ஏ ஆர் ரகுமானின் இசை!

* நம்ம க்யூட் தீபிகா படகோன் இருக்கார்!

* இந்தப் படத்திற்கு ஜெயலலிதாவின் "கருணை"யால் வரிவிலக்கு கொடுக்கப் படுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது

ஆனால் என்னதான் ரஜினி ரசிகர்கள் கூட்டம் எங்கும் இருந்தாலும் அவர்கள் மட்டும் பார்ப்பதால் இந்தப் படம்  மட்டுமல்ல  எந்தப் படமும் வெற்றியடையாது. பொது ஜனங்கள், முக்கியமாக ஓரளவுக்கு  சிறுவர்களை கவர்வதுபோல இந்தப்படம் இருந்தால், அவர்களை வைத்து படம் ஓரளவுக்கு வெற்றியடையலாம். மற்றபடி, இவ்வளவு காலதாமதத்திற்குப் பிறகு படம் வெளிவந்தாலே அதுவே ஒரு பெரிய வெற்றிதான்!

 கோச்சடையான் ட்ரைலர் தொடுப்பு (என் டி ட்டிவி)! (இதில் ஏதோ காப்பிரைட் பிரச்சினை இருப்பதாகத் தெரிகிறது).

முள்ளும் மலரும் படத்தில் உணர்ச்சிபொங்கப் பார்த்த ரஜினியை இந்த கோச்சடையான் பொம்மை ரஜினியோட ஒப்பிட்டுப் பார்த்தேன்! சோகம்ப்பா! :(

Thursday, May 16, 2013

கேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்!

யாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா?? போயி வாசிச்சுப் பாருங்கப்பா! 

சினிமா வியாபார உக்தி பத்தி பேசும்போதெல்லாம் எல்லாத்தையும் கண்டுபிடிச்சவன்  கம்லஹாசந்தான்னு கேவலமா ஒரு லைன் எழுதாமல் இருக்க மாட்டான் இந்த ஆளு! 





The money from Malaysia & Singapore, Dasavatharam, sivaji
சினிமா வியாபாரம்

He is paid off by Kamalhassan or what??

In every article he writes,  he is licking Kamlahassan's behind in behindwoods! கீழே கொடுக்கப்பட்டதை வாசிங்கப்பா!


Before anyone, it was Kamal who understood there are business possibilities for Tamil movies in regions like US, UK, Far East and Middle East. He also urged the individual sales of rights rather than bundled rights. Through his model, big stars’ films started to earn really good returns through FMS sales. Distributors indeed owe a lot to Kamal for bringing in this new trend.

 If that is the case, how did he screw up in viswaroopam???  


Endhiran FiveStar $3,048,246



Vishwaroopam FiveStar




$325,871

Why dont you write Kamalhassan screwed up in Viswaroopam showing Viswaroopam collection in Malaysia and Singapore and middle east??

Kamal’s Dasavatharam and Rajini’s Sivaji enjoyed price and collections in Telugu equal to their Tamil versions. Kamal’s many films have been dubbed into Tamil from Telugu and became super hits as well. Salangai Oli was as big a hit in Tamil as it was in Telugu. Similarly, Kamal’s Tamil movies enjoy success in Telugu too.
Movies like Dasavatharam, Sivaji and Endhiran are built with universal storyline and themes that would not look out of place in a Tamil, Hindi, Telugu or even Malayalam. That is how the humongous budgets of 100+ crores are made possible.

* What kind of Chronological order you follow, anyway??
 

* Based on which movie came out first?? In other words, based on the dates those were released??

If that is the case it should go like 

Sivaji, Dasavatharam, Enthiran and Viswaroopam 


* Or Is this based on alphabetical order?

If that is the case it should go like..

Dasavatharam, Enthiran, Sivaji, Viswaroopam!!


You don't seem to follow any f***king order properly?  Because you think you can write anything, some 2000 morons will follow you right??

Or your only motivation is kissing Kmalahassan's bottom shamelessly??

ஆமா, நீ பாடுறதெல்லாம் கமலஹாசன் புகழ்,  அப்புறம் ரஜினி ஸ்டில்லை மட்டும் ஏன் பெருசா போட்டுக்கிற? வியாபாரிதானே நீ? அதான? ஆனால் இதெல்லாம் வியாபாரம் இல்லை! விபச்சாரம்!

What an worthless trash he writes in the name of "cinema business" as if he distributed million movies! This book should be tossed in the GARBAGE CAN as it is packed with LIES!

Monday, May 13, 2013

பகுத்தறியத் தெரியாத உலகநாயகன்!

 குறைகள் இல்லாத மனிதனோ, நிகழ்வுகளோ கெடையாது. இதற்கு நானும் நீங்களும் விதிவிலக்கு இல்லை. ஆனால் நம்மைச்சுற்றிய பெரிய உலகில் நாம் ஒரு சிலரைத்தான்  ரொம்ப கவனமாக கவனிக்கிறோம். ஏன் அப்படி?

 

ஒண்ணு அவர்களை நமக்கு ரொம்பப் பிடிக்கணும் இல்லைனா அவர்களைப் பார்த்தாலே பிடிக்காமல் இருக்கணும்.

 

அழகான பெண்ணைப் பார்த்து ரசிக்கிறோம்.

 
அழகான பிடித்த நடிகையின் நளினமில்லாதா அசைவுகள்கூட நமக்கு அழகாத்தான் தோனுது.

 அதே சமயத்தில் பிடிக்காத நடிகை அழகா செய்வதுகூட அசிங்கமாத் தோனுது. நம்ம எல்லாம் புத்தர் இல்லை! சாதாரண மனிதர்கள்தான். ஒரு பக்கம் பெரிய பெரிய தத்துவத்தை எல்லாம் அள்ளி விடுவோம். இன்னொரு பக்கம் அதற்கு எதிர்மாறாக வாழ்க்கையில் வாழ்ந்துகொண்டு இருப்போம். அதையெல்லாம் சப்பைகட்டுக் கட்ட பழமொழிகள், இதிகாசத்தில் நடந்த நிகழ்வுகளை மேற்கோல் காட்டுவது இதுபோல் பொழைப்பை ஓட்டிக்கிட்டு திரிவோம்.


ஆனால் ஒண்ணு நமக்குப் பிடிக்காதவர்களுக்கு நடந்த  ஒரு நிகழ்வை, அல்லது நமக்குப் பிடிக்காதவர்களைப்பத்தி விமர்சிக்கும்போதுகூட உண்மையை என்றுமே சொல்லணும். உண்மையைப் பேசும்போது மற்றவையெல்லாம் அடிபட்டுப் போயிடும்! வாய்மையே என்றும் வெல்லும்!

உலகநாயகன் கலந்துகொண்டு கலக்கிய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியைப் பத்தி ஏற்கனவே விமர்சிச்சாச்சு. இருந்தாலும் அதுல ஒரு முக்கியமான மேட்டரை விட்டுப் புட்டேன்.

அதென்னானா.. இந்த விஸ்வரூப பிரச்சினை தலைவிரிச்சு ஆடிய நேரம். அதாவது தமிழ்நாட்டு அரசாங்கம் இஸ்லாமியர்களை கைகாட்டி படத்தை வெளியிட முடியாமல் இடைக்காலத் தடை விதித்த நேரம் அது. நம்மாளு, லோகா அவர்கள்  யு எஸ் வந்துட்டாரு! படத்தை ப்ரமோட் செய்வதற்கு. ஆனால் நம்ம ஊர்ல ஜெயா, படத்துக்கு முட்டுக்கட்டை கொடுத்துக்கொண்டு இருந்தாரு..

இந்த ஒரு சூழலில், யு எஸ்ல வந்து ப்ரிமியர் ஷோ எல்லாம் முடிஞ்சதும்  நம்மாளு பிரச்சினையை சமாளிக்க இந்தியா திரும்பி வந்துவிட்டார்.

இப்போ இவரு மேற்கேயும் கிழக்கேயும் 20,000 மயில்கள் மாறி மாறி பறந்து இருக்காரு. அப்போ அவர் நிலைமை எப்படி இருக்கும்? அமெரிக்காவிலிருந்து இந்தியா பறக்கிறவனுக்குத் தெரியும்.. ஜெட் லாக்! பகலெல்லாம் எங்கடா படுத்து தூங்கலாம்னு இருக்கும். நைட் எல்லாம் தூக்கமே வராது. இந்த எழவு சரியாக ஒரு வாரம்கூட ஆகலாம்!

ஆனா நம்மாளு இந்த ஜெட் லாக் கைக்கூட அவருக்கு சாதகமாக பயன்படுத்திக் கிட்டாருப்பா..

கேள்வி!

* விஸ்வரூபப் பிரச்சினை முத்திப்போயி இருக்கிற இந்த சூழலில், இது சம்மந்தமான முடிவு எடுக்க  சில மணி நேரங்கள் ஆகும்னு சொன்னதும்.. நீங்க எப்படி இருந்தீங்க? டென்ஷனா இருந்தீங்களா?

என்பது பிரகாஷ் ராஜின் கேள்வி!

இவரு உடனே, அம்மணிட்டக் கேளுங்கனு கவுதமியை கையைக்காட்ட, அம்மணி  சொன்னாரு, "கொஞ்ச நேரம் (இடைப்பட்ட ரெண்டு மணி நேரம்?) தூங்கி எழுந்துக்கிறேன்னு படுத்துட்டாரு" னு பெருமையுடன் சொன்னாங்க கவுதமி.

அதாவது  இதுக்கு என்ன அர்த்தம்னா, நம்மாளு இம்பூட்டு பிரச்சினையிலும் தூங்கும் அளவுக்கு ஒரு இரும்பு இதயம் படைத்தவர் என்பதுபோல ஒரு ஸ்டண்ட், பப்ளிசிட்டி அள்ளிக்கிட்டுப் போயிட்டாரு.

ஆனால் உண்மை என்ன? நம்மாள "ஜெட் லாக்" போட்டு கொன்னுடுச்சு! அப்போதைக்கு அவரோட பெரிய பிரச்சினை தூக்கம்தான்! எங்கேடா துண்டைப் போட்டுப் படுப்போம்னு இருந்து இருக்கும். பகுத்தறியிறேன் மண்ணாங்கட்டினு சொல்லிக்கிட்டு திரிகிற ஒலகநாயகனுக்கு ஜெட்லாக் வந்ததுகூட தெரியலையா? இல்லைனா  அதைக்கூடத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஒரு விளைந்த பார்ப்பானா இவரு னு நீங்கதான் சொல்லணும்!

Tuesday, March 12, 2013

விஸ்வரூபர் வென்றதும் இழந்ததும் தோற்றதும்!

விஸ்வரூபத்தின், வியாபார வெற்றிக்காக கமலஹாசனுக்கு வாழ்த்துக்கள் சொல்லி ஆரம்பிப்போம். ஹே ராம்க்கு அடுத்து, கமலுடைய  இயக்கம், ராஜ் கமல் கம்பெணி தயாரிப்புனு என்று வந்த படம் இது! ஹே ராம் படம் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப் பட்டாலும், வியாபார ரீதியாக படு தோல்வியைத்தான் தழுவியது.

கமல் அடைந்த வெற்றி!

விஸ்வரூபம்! 

இயக்கி, தயாரித்து வெளியிட்ட எந்த ஒரு படத்திலும் இதுவரை பெரிய வெற்றிடையாத கமலே மறுபடியும் திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு!  விஸ்வரூபம் என்ன ஆகுமோ? என்கிற பயம் எல்லாருக்குமே இருந்தது.  

90-95 கோடி செலவழிச்சு எடுத்த படம் இது! கமல் தன் வீட்டையே அடகு வச்சு  பெரிய தொகை "இண்வெஸ்ட்" செய்து  எடுத்த படம்! இம்பூட்டுப் பணம் போட்டு இது போல் ஒரு ரிஸ்க் எடுப்பதற்கு ரொம்பவே தைரியம் வேண்டும்.
என்ன ஆகப்போதோ?

படம் வெளிவரும் முன்பே..

* டி ட்டி எச்ல வெளியிட முயற்சி தோல்வி! அதனால பொங்கலுக்கு வெளிவரவில்லை!

* தியேட்டர் ஓனர் எல்லாம் ஒன்றுகூடி கமலுக்கு எதிராக  பலவிதமான பிரச்சினைகள்!

* இஸ்லாமியர்கள் எதிர்ப்பு!

* ஆளுங்கட்சியின் அதிரடி 144 தடை உத்தரவு!

இப்படி பலவிதமான பிரச்சினைகள்.

கடைசியில் விஸ்வரூபம் எல்லாப் பிரச்சினைகளையும் உடைத்தெறிந்தது! அதைவிட முக்கியம், போட்டிக்கு வந்த படங்கள், பெரிய பட்ஜெட் அகெக்ஸ் பாண்டியன், மணிரத்னத்தின் கடல் போன்றவைகளை உருத்தெரியாமல் ஆக்கிவிட்டு  மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. 

ஹே ராம் தோல்விக்குப் பிறகு  14 வருடங்களுக்குப் பிறகு, தன்  58 வயதில் கமலின் விஸ்வரூபம் அடைந்த வியாபார வெற்றி தமிழ் சினிமா வரலாற்றில், கமலுக்கு இன்னொரு  முக்கியக் மைல்க்கல் என்றுதான் சொல்லணும்.  இந்தப்படத்திற்கு இன்றுவரை வசூல் 205-220 கோடி என்கிறார்கள். இதை கமல் தரப்பே சொல்வதால் ஏற்றுக்கத்தான் வேணும்.

தியேட்டர்காரன், விநியோகஸ்தர்கள் அது இதுனு போக, இதில் தயாரிப்பாளர் கமல் கைக்கு 100 கோடி வந்தாலே கமல் போட்ட காசை எடுத்ததாக ஆகிவிடும். பிறகு சாட்டலைட் ரைட்ஸ், லொட்டு லொசுக்குணு ஒரு 20-30 கோடி வந்ததுனா, கமல் சம்பளம் 25 கோடியைச் சேர்த்து 50 கோடிபோல கமல் சம்பாரித்ததாக ஆகும்.

ஆக, புகழ், பணம், விமர்சங்கள் எல்லாவற்றிலுமே விஸ்வரூபம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. தடைகளை உடைத்து கமல் வென்றார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை! வாழ்த்துக்கள்!

------------

கமல் இழந்தது என்ன?

* கமல்,  இஸ்லாமியர்கள், பல இஸ்லாமிய நாடுகளும் இவர்மேல் வைத்திருந்த மதிப்பை இழந்துட்டார்னுதான் சொல்லணும். இவர் தாலிபன்களுக்கு எதிராகதான் கொடிபிடிக்கிறார் என்றெல்லாம் இவரைப் புரிந்து கொள்ளவில்லை! இஸ்லாமியரையும், இஸ்லாமையும் இவர் அவமானப்படுத்துவாதத்தான் எடுத்துக்கொள்ளப்பட்டது..

அதன் விளைவால்

 * மலேசியா, மையக்கிழக்கு நாடுகளில் வசூல் ஆகவேண்டிய ஒரு 15-20 கோடி கமலுக்கு ஒழுங்காக வந்துசேரவில்லை.

* காலங்கடந்து மலேசியாவில் ரிலீஸ் செய்ததால், திருட்டு வி சி டி ஏற்கனவே வெளிவந்துவிட்டதால் வரவேண்டிய வசூலில் 20% தான் கமலுக்கு வந்து இருக்கு.

 *அதேபோல் மையக்கிழக்கு நாடுகளில் இந்தப்படம் ரிலீஸே ஆகவில்லை! அங்கிருந்து வர வேண்டியது சுமார் 6-8 கோடி.

* இவருடைய டி ட்டி எச் வெளியீடு முயற்சி என்று ஆரம்பிச்சு வெற்றிபெறாமல் விட்ட ஒரு பிரச்சினையால் தியேட்டர் ஓனர் எல்லாம் இன்னும் கடுப்பாகத்தான் இருப்பாங்க.

* டி ட்டி எச் முயற்சியால் கடுப்பான கேரள திரையரங்கு ஓனர்கள், கடைசிவரை பெரிய மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் மற்றும் தரமான திரையரங்குகளில் இந்தப்படத்தை  வெளியிடத் தயாராக இல்லை. கடைசியில் வேற வழியில்லாமல் சாதாரண திரையரங்குகளில் மட்டுமே வெளியிட்டதால், விஸ்வரூபத்திற்கு 3.5 கோடி போலதான் கேரள வசூல் வந்தது என்கிறார்கள். டி ட்டி எச் பிரச்சினை வராமலிருந்து இருந்தால் நல்ல உயர்தர திரையரங்குகளில் படம் வெளிவந்து இருந்தால், 8-10 கோடி வசூல் செய்து இருக்கும் என்கிறார்கள்.

* கமல் என்றாலே காண்ட்ரோவெர்ஸி என்று இருந்தது ஒரு உச்சத்தை அடைந்துவிட்டது இந்த விஸ்வரூபப் பிரச்சினை. இப்போ ஒரு மாதிரி காண்ட்ரோவெர்ஸி க்ளைமேக்ஸ் எல்லாம் முடிந்துவிட்டது. இந்த சூழலில், இனிமேல்  மறுபடியும் விஸ்வரூபம் ரெண்டு, மூனுனு ஆரம்பிச்சு இன்னொரு புதிய காண்ட்ரோவர்ஸி தொடர்ந்து வந்தால், இந்தாளுக்கு வேற வேலை இல்லைனு மக்கள் கடுப்பாகிவிடுவார்களோ? என்ற பயம் கமலுக்கு வந்து இருக்கலாம். வரணும்.

தோல்விகள்???

என்னதான் விஸ்வரூபம் பெரிய வெற்றியடைந்தாலும்,  எந்திரனின் கலக்சனில் ஒரு 60-65% கலக்சன் தான் பெற்றது இந்த மெஹா பட்ஜெட் படம். 

மற்றவர்கள் எப்படியோ, கமல், நிச்சயம் தன்னுடைய விஸ்வரூபம் முந்தைய தமிழ் சினிமா வசூல் சாதனைகளை முறியடிக்கணும்னு (முக்கியமாக எந்திரன்) எதிர்பார்த்துத்தான் இருப்பார். கமலுக்கு இந்தப் போட்டி போடும் மனம் இருப்பதை அவரே பச்சையாக சொல்லியுள்ளார். அது நடக்கவில்லை! இது ஒரு மாதிரியான தோல்விதான்.

சென்னையில் வசூல் நிலவரம்..

விஸ்வரூபம் எந்திரனை வீழத்தவில்லை என்பது மட்டுமல்ல, விஸ்வரூபம், துப்பாக்கியைக்கூட வீழ்த்தவில்லை என்பதே நிதர்சனம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள டேட்டா வை வைத்து புரிந்து கொள்ளுங்கள்!


 துப்பாக்கி! (5 வார வசூல்)

Week : 5

Thuppakki

Total collections in Chennai : Rs. 13,25,91,260
Verdict: Blockbuster


 விஸ்வரூபம் (5 வார வசூல்)

 Week : 5

Vishwaroopam
Total collections in Chennai : Rs. 11,74,50,039
Verdict: Blockbuster


எந்திரன் (4 வார வசூல்தான் கொடுத்து இருக்கேன்)

 

Week 4:

 No. Weeks Completed: 4
No. Shows in Chennai over this weekend: 434
Average Theatre Occupancy over this weekend: 78%
Collection over this weekend in Chennai:Rs.90,62,982
Total collections in Chennai: Rs. 14.75 Crore

Wednesday, February 13, 2013

விஸ்வரூபம் எந்திரனை வென்றதா? உண்மைகள்!

ஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும்  வெளிவந்துவிட்டது! தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்பதாக சென்னை வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. பிரமாண்ட தயாரிப்பில் வெளிவந்த எந்திரனை, வசூலில் விஸ்வரூபம் மிஞ்சிவிட்டதாக பல செய்திகள் வந்துவிட்டன!

vishwaroopam-makes-profit-joins-the-elite-group-photos-pictures-stills
உலகநாயகன் கட் அவ்ட்க்கு பாலாபிஷேகம்!
வசூலில் எந்திரனை மிஞ்சிவிட்டதா விஸ்வரூபம்?? இது உண்மையா? இல்லை, கட்டுக்கதையா? இல்லை ஓரளவுக்கு உண்மையா? இல்லை அப்பட்டமான பொய்யா? என்பதைப் பார்ப்போம்!  இது ரொம்ப இப்போ அவசியமாக்கும்? னு ஒரு சிலர் கேலியாகக் கேட்பதுண்டு! ஒரு சிலர் மனதுக்குள்ளே கேட்டுக்கொள்வதும் உண்டு.

நான் ஏற்கனவே விளக்கம் கொடுத்து இருக்கேன். மறுபடியும் இன்னொரு முறை சொல்றேன்.. வலையுலகில் பலவிதமான பொய் செய்திகள் பரவ ஆரம்பித்து விடுகிறது. இந்தப் பொய்கள், விக்கிப்பீடியா போன்ற பல தளங்களில் பல விசமிகளால் பதிக்கப்படுகினறன. வருங்காலத்தில் இந்தப்பொய்கள் உண்மையாக மாற்றப்படுகிற/மாறுகிற அபாயம் உள்ளது. அதனால் சில உண்மைகளை நாம் நம் தளத்திலாவது  பதித்து வைக்க வேண்டிய கட்டாய சூழல்!

உலகநாயகன் கமல்ஹாசன்!

விஸ்வரூபம் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் நம்ம கமல்ஹாசனுக்கு எப்போவுமே தன்னம்பிக்கை  மிகவும் அதிகம்.  தாந்தான் தமிழ்நாட்டிலே, ஏன் இந்தியாவிலேயே சிறந்த கலைஞன் என்று முழுமையாக நம்புபவர் இவர்! மூன்று முறை தேசிய விருது வாங்கியவர் அல்லவா நம்ம பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள்? நெனைப்பு இருக்கத்தான் செய்யும்!  அது பாட்டுக்கு இருக்கட்டும்!

கமலஹாசனை உலக நாயகன்னு தான் அவருடைய விசிறிகள்   எல்லாரும் சொல்றாங்க! இந்த கணிணி மற்றும் இணையதள உலகில் அவருக்கு யாருக்குமே கெடைக்காத அளவுக்கு "இண்டெர்நேஷனல் ரெகக்னிஷன்" அதிகமாகிவிட்டதாக அவர் விசிறிகள்  பலரும் நம்புவதால் இந்தப் பெயர் அர்த்தமானதாக கருதுகிறார்கள். "மேலும் இந்த உலகமகா கலைஞன் ஹாலிவுட் போயி பெரிய பெரிய சாதனைகள் சாதிக்காமல் ஏன் இப்படி தமிழ்நாட்டிலிருந்து தன்னை அழித்துக்கொள்கிறார்?" என்றெல்லாம் கமல் விசிறிக்கள் பலரும் கவலைப் பட்டு நொந்து நொந்து சாகிறாங்க, பாவம்!  இப்படி எண்ணுவதற்கு தற்போதைய காரணம், பேர்ரி ஆஸ்பான் என்னும்  ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளர், இயக்குனர். இவர் கமலின் விஸ்வரூபத்தை திரும்பத் திரும்ப 4 தடவை பார்த்துப்புட்டு, கமலை புகழ்ந்து தள்ளியதாகவும், கமலை வைத்து தான் படம் தயாரிக்கப் போவதாகவும் பேசிவிட்டதாகவும், கமலே பரப்பிவிட்ட ஒரு உண்மை செய்திதான் முக்கியக்காரணம். இந்த செய்தியை கமல் பரப்பிவிட்டதுக்குக் காரணமே தான் தயாரித்த விஸ்வரூபத்தை  உலகமெங்கும் பிரபலப்படுத்த என்கிறார்கள் ஒரு சிலர்.

ஹாசன் குடும்பம் என்றாலே ஒரு தனி ரகம்தான். நடிப்பிலும் சரி, வார்த்தை ஜாலங்களிலும் சரி, சாதனைகளிலும் சரி, தான் சாதித்தாக சொல்லப்படுவதிலும் சரி! சகோதரி அணுஹாசனை வேண்டுமானால் இதில் விதிவிலக்குனு சொல்லலாம்! சமீபத்தில் சுஹாஷினி ஹாசன் விஜய் டி வி லே எதிலோ சொன்னார், அவர் கணவர் "மண்ணாப்போன கடல்" மணிரத்னத்திற்கு ஹாலிவுட்ல இருந்து பல "ஆஃபர்கள்" வந்ததாம்.  அதை எல்லாம் மணி தட்டிக் கழிச்சுட்டார்னு அடக்கமாக பெருமையாகவும் சொன்னார் இந்த ஹாசன். பாவம் இதை மணிரத்னம் ஒருபோதும் வெளியே சொன்னதில்லை! இதையும் இன்னும் ஒரு ஹாசன் தான் தன்னக்கடத்துடன் அம்பலப்படுத்தியது! என்னமாரி ஆஃபர்கள் அவை என்பது மிகப்பெரிய கேள்வி! என்னைக்கேட்டால் ஒருவழியா கமலும் மணியும்  ஹாலிவுட்க்கு போய் தொலைஞ்சா  அவங்களும் நல்லா இருப்பாங்க. நம்மளும் நிம்மதியா இருக்கலாம்! ஏன் இப்படி இங்கேயே இருந்துகொண்டு நம்ம உயிரை வாங்குறாங்கனு தெரியலை.

கமல் விசிறிகள்!!!

எனக்கு ஒரு பெரிய சந்தேகம்..

கமலஹாசனுக்கு அவர் தீவீர  விசிறிகள் அவருக்கு பெரிய பலமா இல்லை பலவீனமா? னு கேள்வி அடிக்கடி எழுவதுண்டு.சினிமா விசிறிகளில் இவர்கள் ஒரு தனி வகை. அதென்ன?னு கேக்குறீங்களா? ஏதோ கமல்ஹாசன் என்கிற சினிமா நடிகனின் ரசிகரா இருப்பதே ஒரு பெருமை என்பதுபோல் இவர்கள் பிதற்றுவதைப் பார்த்து நம்மல மாரி ஒரு சிலர்  சிரித்தாலும்,  உலக அனுபவம் இல்லாதவங்க, கொஞ்சம் படிப்பு ஞானமில்லாதவங்க எல்லாம் இவர்கள் பிதற்றல்களைக் கேட்டு என்னவோ ஏதோனு பயந்துவிடுவார்கள். அந்தளவுக்கு தரித்திரமாப் பேசுவார்கள் இந்த அதிமேதாவியின் விசிறிகள்!

 மனித இயல்பு  எப்படினா, ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் அவரை அளவுக்கு மீறி அவருடைய விசிறிகளும், க்ரிட்டிக்களும், புகழ்ந்தால் பலருக்கும் எரிச்சல்தான் வரும். உண்மையிலேயே திறமையான ஒருவரை இதுபோல் இஷ்டத்துக்கு புகழ்ந்து பேசுவதால், இவன் என்ன பெரிய புடுங்கியா? னு பல நல்ல உள்ளங்களைக்கூட  நெனைக்க வைத்துவிடுவார்கள்! அளவுக்கதிகமாக ஒருவரைப் புகழப் புகழ, ஒரு பக்கம் பலருக்கு எரிச்சல்தான் அதிகமாகும். அதான் குழம்புகிறேன்.. கமல் விசிறிகள் கமலுக்கு பலமா இல்லைனா பலவீனமா?என்று.


விஸ்வரூபம் பாக்ஸ் ஆஃபிஸ் உண்மை நிலவரம்!

சரி, இவ்வளவு பப்ளிசிட்டிக்கு அப்புறம்,  டி ட்டி எச் ல அல்மோஸ்ட் சாதனை புரிந்த, ஹாலிவுட் ஜாம்பவான் பேர்ரி ஆஸ்பானால் கண்டுகொள்ளப்பட்ட, உலகமகாக் கலைஞன், மறத்தமிழன் கமலஹாசனுடைய சமீபத்திய மெஹா பட்ஜெட் விஸ்வரூபம் பாக்ஸ் ஆஃபிஸ் உண்மை  நிலவரத்தை கவனிப்போம்!

********************************

அமெரிக்கா &  கனடா: விஸ்வரூபம் மற்றும் எந்திரன்

 VISHWAROOPAM [Tamil]: In its third weekend, the film has collected $ 59,953 on 32 screens, with the per screen average working out to $ 1,874. Total: $ 9,98,802 [Rs. 5.38 crores].

VISHWAROOPAM [Telugu]: In its third weekend, the film has collected $ 16,047 on 15 screens, with the per screen average working out to $ 1,070. Total: $ 1,90,441 [Rs. 1.03 crores]. 

அமெரிக்க கண்டத்தில் விஸ்வரூபம் வசூல் எம்பூட்டுனு ரெண்டையும் கூட்டினால், 6.41 கோடிகள்!

சரி, இதே நாடுகளில் எந்திரன் வசூல் செய்தது எம்பூட்டுனு பார்ப்போம்!

account ‏@taran_adarsh 18 Oct 10 Endhiran [Tamil+Telugu] official figures: US 20 cr (20 கோடிகள்),  https://twitter.com/taran_adarsh/status/27720616820

அதாவது, அமெரிக்காவில்

எந்திரன், விஸ்வரூபத்தை விட, 3 மடங்குபோல் வசூல் செய்துள்ளது. இதுதான் அமெரிக்கா உண்மை நிலவரம்!

****************************************

 சரி, அமெரிக்காவை விட்டுவிட்டு, யு கேல எப்படினு பார்ப்போம்!

யு கே வில்: விஸ்வரூபம் மற்றும் எந்திரன்


VISHWAROOPAM [Tamil]: In its third weekend, the film has collected £ 30,231 on 21 screens, with the per screen average working out to £ 1,440. Total: £ 2,75,318 [Rs. 2.33 crores].

விஸ்வரூபம் வசூல்:  £ 2,75,318 (அதாவது 2.33 கோடிகள், 3 வார வசூல்)


   எந்திரன் வசூல்:  £ 625, 404  (தமிழ் ஹிந்தி)(அதாவது 5 கோடிக்கு மேலே, இரண்டுவார வசூல்)

17 11 Endhiran Ayngaran $172,555 -63.1% 34 +4 $5,075 $785,837 2

26 - Endhiran (Hindi) n/a $38,482 - 23 - $1,673 $191,357 2

 யு கேவில் மட்டும் சுமார் 2 மடங்குக்கு அதிகமாக எந்திரன் வசூல் செய்துள்ளது!

எந்திரன் ஐரோப்பா முழுவதும் எம்பூட்டு வசூல் செய்ததுனு பார்த்தால். 
UK-Eur 8 cr, 8 கோடிகள் https://twitter.com/taran_adarsh/status/27720616820

*************************

மலேசியா சிங்கப்பூரில்: எந்திரன் வசூல்:  

SE Asia [incl Malaysia, Singapore] 21 cr, (21 கோடிகள்)

விஸ்வரூபம், இஸ்லாமியர்கள் பிரச்சினையால், மலேசியாவில் சரிவர ரிலீஸ் ஆகவில்லை. சிங்கப்பூரில் இப்போ ஓடிக்கிட்டு இருக்கு. என்ன வசூல்னு இனிமேல் தெரியும்!

*****************************
மத்திய கிழக்கு (இஸ்லாமிய) நாடுகளில்: எந்திரன் வசூல்: 

Gulf 7 cr, rest 5 cr.( 12 கோடிகள் வசூல் ஆகியுள்ளது)

மத்தியகிழக்கு நாடுகளில் விஸ்வரூபம் ரிலீஸ் ஆகுமா என்னனு தெரியலை!

***********************************

வடநாட்டில் ஹிந்தி விஸ்வரூப் எப்படி?

* முதல் வார வசூல் எந்திரனும், விஸ்வரூபமும் சுமார் 11.5 கோடிகள் (நெட்) 

* ரெண்டாவது வாரத்தில் என்ன ஆச்சுனா, விஸ்வரூபம் எந்திரனைவிட மோசமான அளவுதான் வசூல் செய்துள்ளது!

ஆக, ஹிந்தியிலும் விஸ்வரூப், ரோபாட் வசூலை முறியடிக்கவில்லை!

*************************

ஆந்திராவில் எப்படி?
 

*ரோபோ வசூலை விஸ்வரூபம் முறியடிக்கவில்லை என்பது உலகுக்கே தெரியும்!

*************************
 கேரளா எப்படி?

கேரளாக்கு எல்லாரும் பறந்து போய் விஸ்வரூபம் பார்த்ததென்னவோ உண்மைதான். ஆனால், டி ட்டி எச் பிரச்சினையால், நல்ல தரமான தியேட்டர்களில் விஸ்வரூபம் ரிலீஸ் ஆகவில்லை! அதனால் எந்திரன் வசூலை முறியடிப்பது என்பது நடக்கிற காரியம் இல்லை!

******************************

தமிழ் நாடு!  

சென்னையில் முதல்வார கடைசி வசூல்னு பார்த்தால் விஸ்வரூபம் எந்திரன் வசூலை முறியடித்துவிட்டது என்பது உண்மைதான்..

 விஸ்வரூபம் முதல் வார சென்னை வசூல்


Week : 1
Total collections in Chennai : Rs. 4,10,26,576
Verdict: Grand Opening
No. Shows in Chennai (Weekend): 891
Average Theatre Occupancy (Weekend): 99%
Collection in Chennai (Weekend): Rs. 3,06,40,101

எந்திரன் முதல் வார சென்னை வசூல்
Endhiran
No. Days Completed: 3
No. Shows in Chennai over this weekend: 894
Average Theatre Occupancy over this weekend: 99%
Collection over this weekend in Chennai: Rs. 2,02,38,075

Verdict: Grand Openingஆனால்..
 
எந்திரன் 4 வாரம் முடிந்த பிறகு வசூல்:

No. Weeks Completed: 4
No. Shows in Chennai over this weekend: 434
Average Theatre Occupancy over this weekend: 78%
Collection over this weekend in Chennai:Rs.90,62,982
Total collections in Chennai: Rs. 14.75 Crore

Verdict: Blockbuster

எந்திரனைப் போல்  விஸ்வரூபமும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்னும் 10 நாட்களாவது தாக்குப் பிடிச்சா, சாண்ஸ் இருக்கு..


இன்னும் ரெண்டு வாரத்தில் விஸ்வரூபம் எவ்ளோ அள்ளுதுனு பார்ப்போம்! :)







Wednesday, January 30, 2013

விஸ்வரூபம் பாக்ஸ் ஆபிஸ் உண்மை நிலவரம்!

மலேசியா சிங்கப்பூர் மற்றும் மத்தியகிழக்கு இஸ்லாமிய நாடுகளில் விஸ்வரூபம் வெளிவராததால் அங்கிருந்து வழக்கமாக வருகிற வருமானம் பெரிய அளவில் விஸ்வரூபத்திற்கு பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளிலும் அங்கே வாழும் இஸ்லாமியர்களும், கமலஹாசனையும் விஸ்வரூபத்தையும் சரியாக புரிந்து கொள்வார்கள் என்று நம்பினாரா கமஹாசன்?? நாத்திகரான கமலஹாசனுக்கு மத நம்பிக்கை, சாதி நம்பிக்கை உள்ளவர்கள் மனப்போக்கு நிச்சயம் புரியவில்லை என்பதே தெளிவாக விளங்குகிறது!

சரி, இஸ்லாமிய நாடுகள் அல்லாத மேலை நாடுகள்.. அமெரிக்கா, கனடா, யு கே போன்ற நாடுகளில் விஸ்வரூபம் கலக்சனை மட்டும் பார்ப்போம்.

* அமெரிக்கா மற்றும் கனடாவில் விஸ்வரூபம் வசூல்!

 U.S.A. BOX-OFFICE


  • RACE 2: In its opening weekend, the film has collected $ 8,84,757 [Rs. 4.77 crores] on 153 screens, with the per screen average working out to $ 5,783.

Note:- The figures mentioned below of *all* films are of *reported screens* only. The totals could be much higher.

  • VISHWAROOPAM [Tamil]: In its opening weekend, the film has collected $ 6,34,912 [Rs. 3.43 crores] on 44 screens, with the per screen average working out to $ 14,430. 
  • VISHWAROOPAM [Telugu]: In its opening weekend, the film has collected $ 1,02,657 [Rs. 55.38 lacs] on 28 screens, with the per screen average working out to $ 3,666.

* யு கே வில் விஸ்வரூபம் வசூல்

U.K. & IRELAND BOX-OFFICE


  • RACE 2: In its opening weekend, the film has collected £ 3,56,258 [Rs. 3.02 crores] on 76 screens, with the per screen average working out to £ 4,688. 
  • VISHWAROOPAM [Tamil]: In its opening weekend, the film has collected £ 95,676 [Rs. 81.23 lacs] on 19 screens, with the per screen average working out to £ 5,036. Includes Thu previews.

இந்தியாவை விட்டுத் தொலைத்துவிட்டு , மேலை நாடுகளில் வசூல் எப்படினு பார்த்தால் தமிழ்ப் படங்களின் முந்தைய சாதனையை விஸ்வரூபம் முறியடித்தது னு சொல்ல முடியாது என்பதே உண்மை நிலவரம் ! 

Thursday, January 10, 2013

என்னுடைய டி ட்டி எச் புக்கிங் பணம் எங்கே கமல்ஹாசன்?

கமல் என்னனா, தான் சொன்னதுபோல் படத்தை டி ட்டி எச் ல கொடுக்காமல்,  "இது என் பொருள், நான் வைக்கிறதுதான் சட்டம்" னு இன்னும் வீம்பு பேசிக்கொண்டு இருக்கிறார். இதைப் பார்த்து எரிச்சல் அடைந்தோ என்னவோ "டைம்ஸ் ஆஃப் இந்தியா" வில் ஒரு கட்டுரை வந்து இருக்கு. அதில் ஒரு ஆள், A Subramani, என் பணம் எங்கே கமல்? னு கேட்டு ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.


kamalahassan


Mr Kamal Haasan, where is my money?

 எழுதியவர். எ. சுப்பிரமணி!


Irked over the delay of Vishwaroopam, Kamal Haasan's latest flick, on DTH, a fan writes to apprise the actor how he felt cheated.


Dear Padmashri Mr Kamal Haasan,


I am writing this representing the collective and the rightful indignation of thousands of your fans who shelled out sums ranging from Rs 500 to Rs 1,200 to watch the so-called pre-release premiere of your film 'Vishwaroopam' on DTH.


Mr Kamal, I am the head of a family of four and, just like you, Rajni and Barack Obama, I too have two daughters. We restrict our cinema theatre visits only for real biggies such as Enthiran and Avatar for a wholesome effect. And the moment you unveiled Vishwaroopam, we decided that the film fell in that category and that we all should book tickets in a swanky theatre for a quality entertainment. We, of course, were aware that such an experience comes with a fat price tag.


But, then, you started talking about pre-release of the V-film on DTH. You did everything right to promote your film. You got the audio CD released by a physically disabled fan. Your appearance on a hugely popular TV show as guest was a mega hit among children. You spoke so well that many children, as those in my family, prevailed upon their fathers to book a slot on DTH. You spoke as to how you spent Rs 95 crore on the movie, and how it is your right to choose the medium of release. You even claimed that you already had 390 theatres under your kitty to release the film after its DTH debut.


Then you visited the Chennai city police commissioner's office, with your publicist in tow, complaining of certain threats. Even when my Editor doubted whether it was a publicity stunt, I, quite naively, defended you, saying, "no, boss. It looks like Kamal's battle against the theatre lobby."


When Regent Saimira dragged you to high court demanding refund of Rs 4 crore it had apparently paid you as advance for a still-born film and sought to stall Vishwaroopam's release, your advocate-brother and your goodself filed a counter explaining the economics behind film-making. You said the failed deal cost you Rs 40 crore. You won the case, Mr Kamal, as the court dismissed the suit.


Then, convinced that you will stand by your resolve to give us a pre-theatre release experience of the V-film at 9.30pm on January 10, I paid up not Rs 1,000 but an apex fare of Rs 1,200. While I had decided to return early for the advertisement-free entertainment that night, my children decided to stay up for the rendezvous.


Well, Mr Kamal, today is January 10. Where is the film? And, more importantly, where is my money?


On Wednesday, you again appeared in TV, your publicist in tow, telling us that the release date has been postponed and that you would try to release the film simultaneously on DTH and theatres. You said your money is at stake and that you felt cheated.


Hold on, Mr Kamal, you are mouthing my dialogue. It is we, having signed up for the DTH rendezvous, who should be complaining that we had been betrayed, my children disappointed and our money stolen from our wallets. When my daughter asked me, "daddy, is Kamal uncle cheating us?" I defended you and tried hard to explain her the business matrix behind your failure. But it did not wipe off her disappointment entirely.


Remember the Baaba days of superstar Rajnikanth. Riding high on his popularity wave in 2002, they slapped an entry fee on Rajni fans, merchandised his pictures and even banned his fans from using his images without 'authorisation'. They sought to metamorph a people's star into a body corporate, a Rajni Inc. The film bombed -- of course not because fans failed Rajni. It was vice versa.


But more than grieving over the failure of their superstar's film, Rajni fans felt betrayed.


Kamal fans and those who hold him aloft as the pride of Indian cinema are now engulfed in the same sense of betrayal. I know people who bought new DTH because of Vishwaroopam. Now the set top box in their hall will grimly remind them of the betrayal. You may say it is all beyond your limits and that you too lost to the theatre lobby, but we put the money in an unknown service provider's kitty believing your words.


Two things are clear. One, you have got tons of free publicity for your film and you are sure to reap a bumper harvest. Two, you proved my Editor right.


Now, Mr Kamal, tell us how are you going to help us get back the money?

இதுபோல் டி ட்டி எச் காரன் அவன் இவன்னு பலரும் பிரச்சினை செய்ய வாய்ப்பிருக்கு. எனக்கென்னவோ ஆழம் தெரியாமல் கமல் காலை விட்ட மாதிரித்தான் இருக்கு.

ஆனால், இப்போவும் கமலஹாசன் பேசுவதைப் பார்த்தால்  இன்னும் அடங்கிறமாரி தெரியலை! He has not apologized to anyone! He just blames others!

Tuesday, January 8, 2013

விஸ்வரூபம் முதலில் DTH யில் ரிலீஸ் முயற்சி படுதோல்வி!

சந்தேகமே இல்லாமல், விஸ்வரூபம், தியேட்டரில் வெளிவரும் முன்னால்  டி ட்டி எச் ல் வெளிவரப்போவதில்லை என்று உறுதியாகிவிட்டது! என்னப்பா  நம்ம கலைஞானி, உலக நாயகன் கமலுக்கு இப்படி ஒரு சோதனை?! 

Vishwaroopam to hit theatres first

A still from the much-awaited Kamal movie
From The HIndu

Kamal Haasan’s novel move to leverage technology and create a new revenue stream for his film Vishwarooopam through a direct-to-home television premiere has been torpedoed by the traditional players — theatre owners and distributors keen on protecting their turf.
By Tuesday night, the actor-director, Tamil Nadu Film Theatres Owners’ Association and producer-director Keyar together decided that the film will hit the theatres first. “The day and date when it is expected to be released will be decided at the second round of meeting tomorrow [Wednesday],” said R Pannerselvam, general secretary of the association. In an age when the money a movie makes in the first few weeks of its release often determines its success, Mr. Haasan was hoping the DTH screening would be a big help.

An official statement from Airtel CEO for DTH/Media Shashi Arora said: “In line with the postponement of the release date of the movie Vishwaroopam across theatres and DTH platform by Rajkamal Films, we have stopped booking for the movie premiere that was scheduled for January 10 at 9.30 p.m.” 

Ever since the actor announced his ambitious plan for DTH, it has been a match of bobbing and weaving with a section of theatre owners and distributors who view the move as being detrimental to the theatre business. 

Last week, the Tamil Nadu Theatre Owners Association and the Tamil Nadu Film Distributors Federation decided not to screen and distribute movies that are released on DTH platform. Subsequently, bookings were open only in a limited number of theatres for Vishwaroopam.
 -----------------

 Chennai, Jan. 8: Following his marathon meetings with theatre owners and film distributors, Kamal Haasan has put off the release date of his mega-budget movie Vishwaroopam — both on the direct-to-home platform and theatres.

Though there is no official communiqué from RaajKamal Films on this to the media, it is learnt that the producer has sent out mails to all DTH service providers stating the decision to postpone the release date of the movie. Following this, DTH service providers have stopped accepting bookings from their subscribers.

In his response to Business Line, Shashi Arora, CEO, Airtel DTH, said with the postponement of the release date of the movie by RaajKamal Films, the service provider was not taking bookings any more for the movie premiere that was scheduled for January 10 at 9.30 p.m. “We are awaiting confirmation from the producer on the revised dates,” he said.

Representatives of RaajKamal Films are seeking at least 400 screens across Tamil Nadu to launch the movie. But, since most theatre owners have already signed up for two other Tamil films and a Telugu film, due for release around the same time, screens are not available on January 11. Hence, theatre owners have requested RaajKamal Films to reschedule the release to a subsequent date, “preferably to January 26,” sources said.

Even though some theatres launched bookings for the movie, not many booked tickets as there was confusion among Kamal Haasan's fans on the release date.

The whole episode started with Haasan's decision to premiere the multi-lingual film on the DTH platform a day before its theatre release. Theatre owners protested this move saying “it will set a precedent for other film makers and producers that can wipe out the business of cinema halls,” and they refused to offer screens. Even theatre owners in Andhra Pradesh, Karnataka and Mumbai too joined the protest.

The film maker is now set to be in talks with theatre owners to decide on the release date of the film - both in theatres and the DTH platform.

 
TNTOA not issued any press statement, confirm their stand after Federation ( theater& distributors) meeting. lot of confusion.
TNTOA hav agreed to release the muvi only if the DTH telecast is after 5 weeks frm the date of release
Vishwaroopam theatrical release postponed 2 Jan 25. TNTOA will cooperate & give maximum screens provided no DTH premiere.


இப்படி ஒரு சோகமான நிலைமை ஆகிவிட்டதால்  நம்ம விடாக்கண்டன் கமலஹாசன் பெரிய வம்பில் மாட்டிக்கிட்டார், பாவம்.

இதில் கமலுக்கு துரோகம் செஞ்சவங்கனு பார்த்தால் ஒரு பெரிய லிஸ்டே கொடுக்கலாம்! அதை எல்லாம் விடுங்க!

இந்த புதிய முயற்சியின் தோல்விக்கு முக்கியக் காரணம் என்னனு பார்த்தால்..நம்ம பொதுமக்கள்தான்..

ஆமா, டி ட்டி எச் ஒளி பரப்பு அட்வாண்ஸ் புக்கிங் எதிர்பார்த்த அளவு அமோகமாகப் போகவில்லை! ரூ 1000 அல்லது ரூ 500 கொடுத்துப் பார்க்க லட்சக்கணக்கான மக்கள் தயாராக இல்லை! அதாவது ஒரு 10-15 லட்சம் பேரு புக் பண்ணி இருந்தால், கமல், தனக்கே ஆன திமிருடன் தியேட்டர்க் காரனுகளை கண்டுக்காமல்கூட விட்டு இருக்கலாம்! ஆனால் கமலோட கெட்ட நேரம் அது நடக்கவில்லை! டி ட்டி எச் மூலம் வரப்போகும் வருமானம் ரொம்ப கம்மியாக இருப்பதால், போட்ட காசை எடுக்கணும்னா  நல்ல தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்து பெரிய ஓப்பனிங் கலக்சன் எடுக்க வேண்டியது தயாரிப்பாளர் கமலஹாசனுக்கு இன்றியமையாத்தாகிடுச்சு.
தியேட்டர் ஓனர், விநியோகஸ்தர்கள்னு பலருடனும் கருத்து வேற்றுமையால் மோதியதால் இவர் படத்துக்குக் கிடைத்த மிச்ச மீதீ தியேட்டர்கள் தரமானவைகள் அல்ல!  இந்த சூழ்நிலையில், ஒரு வேளை,, ஒரு வேளை, படமும்  விழுந்துச்சுனா,  நிலைமை ரொம்ப மோசமாயிடும்னு ஆயிப்போச்சு. அதனால இப்போ கமல் தன் நிலையில் இருந்து இறங்கி தியேட்டர் ஓனர்கள் வழிக்குப் போக வேண்டிய கட்டாயம் உண்டாயிருச்சு!


* நம்ம சண்டியர் கரன் னு கமல் அபிமானி சொன்ன எஸ்டிமேட், ரூ 300 கோடி வசூல்  எல்லாம் சும்மா வதந்திதான்னு தெளிவாகத் தெரியவருகிறது!

* எனக்கு இப்போ டி ட்டி எச் காரர்களை கமல் எப்படி சமாளிக்கப் போறாருனு தெரியலை. அவனுக ஏதாவது நஷ்டயீடு வேணும் அது இதுனு சொன்னால்.. எனக்கு நெனைக்கவே பயம்மா இருக்கு!

*  டி ட்டி எச் ஐடியா உலகமஹா ஐடியாணு உசுப்பேத்தி விட்டவர்களை எல்லாம் என்ன செய்றது இப்போ?

சரி நடந்தவை  நடந்தவைகளாக இருக்கட்டும்! நடப்பவைகள் நல்லவைகளாக அமையட்டும். விஸ்வரூபம் படம் பெருவெற்றியடைந்தால் இதெல்லாம் ஒண்ணுமே இல்லாமல்ப் போய்விடும்! இன்னும் கமல் தோற்கவில்லை!