Friday, March 30, 2012

மனைவிக்கு கணவன் நவநாகரிக மாமா! (18 பிளஸ் மட்டும்)

கலச்சாரக் காவலர்களை திட்டுவதும் தப்பு இல்லை! அதே சமயத்தில் கலாச்சார சீரழிவை தட்டிக்கேக்கக்கூடாதுனு ஒண்ணுமில்லை! இன்னைக்கு நெலைமைக்கு ஒரு சில பிரச்சினைகளைப் பற்றி எழுதினால் அது நம்ம மக்களை நல்வழிப் படுத்துமா இல்லை, அந்த முயற்சியே அவங்களை இன்னும் கெடுப்பதற்கு ஊக்குவிக்குமா என்கிற கேள்வி எல்லாம் எழாமல் இல்லை! இன்றைய நம் சமுதாயம் குழம்பிப்போயி, என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம், எது சரி, எது தப்பு என்று தெரியாமல் சுதந்திரம் என்ற பெயரில் நாறிப்போய் நிற்கிறதால்தான் இந்த குழப்பம்னு தோனுது!

சரி, இப்போ இந்த 18 +, கற்பனை கதைக்கு போவோம்!

----------------

என்னனுதெரியலை வாராவாரம் இண்டோர் "டென்னிஸ்" விளையாட வரும் இந்த சந்தானத்தை திடீர்னு ரெண்டு வாரமாக காணோம். "என்ன ஆச்சு சந்தானத்துக்கு ?" னு கேட்டால் "பாஸ்டன் மூவ் பண்ணிட்டாராம்" னு ஒரு சிலர் ஏனோ தானோனு சொன்னாங்க. வேற எதுவும் அதுக்கு மேலே காரணம், விளக்கம் எதுவும் சொல்லவில்லை. இது நவநாகரிக உலகம்! அதுக்கு மேலே இன்னொருவருடைய தனிப்பட்ட பிரச்சினைகள் பத்தியெல்லாம் கேட்பது அநாகரிகம், பேசுவது அநாகரிகம்.

என்னனா நமக்கென்ன? கூட டெண்னிஸ் வெளையாட வர்றவங்க எல்லாம் ஃப்ரெண்டா? சும்மா ஒரு டீம்மேட்", அம்புட்டுத்தான். உயிருக்கு உயிரா இருந்த உண்மையான நண்பர்களே காலப்போக்கில் ஒண்ணுமேயில்லாமல் மறைந்து போகிறபோது இதுபோல பட்டும் படாமல் பழகியவர்கள் எல்லாம் சொல்லாம கொள்ளாம திடீர்னு காணாமல்ப் போவதெல்லாம் பெரிய விசயமா என்ன?

கணேஷின் செல் ஃபோன் மணிஅடித்தது...சிவாதான்..

"என்னடா சிவா?"

"கணேஷ்! என்ன நீ இன்னும் புறப்படலையா ?"

"புறப்பட்டுட்டேண்டா..20 நிமிடத்தில் வந்து சேந்துருவேன்!"

"சரி, கொஞ்சம சீக்கிரம் வா! நெறையப்பேர் இருக்க மாதிரி இருக்கு?"

"அதனாலென்ன?"

"ஃப்ர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் சர்வ்ட் தான் ரூல் இங்கே! இங்கே மூனு டென்னிஸ் கோர்ட் தானே இருக்கு. லேட்டா வந்தா நீ நின்னு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்."

"ஹைவே ல எண்டர் பண்ணிட்டேன். சீக்கிரம் வந்துடுறேன், ஆக்ஸிடெண்ட் எதுவும் ஆகலைனா"

"வந்து சேருடா!"

"ஆமா, நம்ம சந்தானத்தை எங்கே ரெண்டு வாரமா காணோம்?"னு இவனிடமும் கேட்டு வைத்தான்.

"தெரியலைடா. ட்ரைவ் சேஃப்லி"

"சரிடா பார்ப்போம்."

சந்தானத்துக்கு என்ன பிரச்சினையோ ? வேலை போயிடுச்சோ? ஒருவேளை மனைவி இன்னொரு காதலனைத் தேடிக்கொண்டாளோ? ஏன்ப்பா இப்படி எல்லாம் யோசிக்கிற? இதல என்ன இருக்கு? இதுதான் நவநாகரிக உலகமாச்சே! இந்தியாவிலேயே "கற்பெல்லாம்" அர்த்தமில்லாதாக மாறிய காலம் இது. கணவனாவது? மனைவியாவது? கற்பாவது? கருமாதியாவது..

இது  "காசுவல் செக்ஸ்" "வைஃப் ஸ்வாப்" எல்லாம் சாதாரணமாக நடக்கும் நவநாகரீக இந்தியா. ஆமாம் "கள்ளக் காதல்"  தப்புனு சொல்றதெல்லாம் தப்புனு சொல்ற காலம் இல்லையா இது. சாரு நிவேதிதா போல வாழ்க்கையில் படுதோல்வியடைந்த "லூசர்"களை "ரோல் மாடல்" களாக வைத்து கொண்டாடும் அரை டவுசர்கள் நெறைந்த உலகம்.

ஆமாம், இந்தியர்கள் "தேஷிவேட்டை" என்று தற்காலிக படுக்கை சுகத்திற்காக தன் மனைவியை இன்னொருத்தன் மனைவிக்காக, ஒரு இரவுக்கு இல்லை சில இரவுகளுக்கு மாற்றுதல்கள் செய்துகொள்ளும் வெங்கங்கெட்ட காலம் இது. ஆமாம் தேஷி சிக் பாஸ்டட்ஸ் நெறைந்த காலம்!

"வைஃப் ஸ்வாப்" செய்றதை எல்லாம் புதுமாதிரியான விபச்சாரம்னு சொல்றதெல்லாம் அநியாயம்னு சொல்ற காலம்! வேற எப்படி சொல்றது? இதுதான் உண்மையான சுதந்திரம்! யோசிச்சுப் பாருங்க! எந்தளவுக்கு கணவன் மனைவிக்குள்ளே ஒரு புரிதல் இருக்கனும்- தன் மனைவியையே கணவன் கூட்டிக்கொடுக்க? அந்த "பெரிய மனசை" இந்தக் காலத்தில் இவனுகளுக்கெல்லாம் மனைவியும் "கிராக்கி"தான்னு அசிங்கமாச் சொல்லக்கூடாது! வேணா, அந்த  மனைவிக்கு, இந்தக் கணவன் "நவ நாகரிக மாமா"னு சொல்லலாம்.

எனக்கு உண்மையிலேயே புரியலை, படு லோ-க்ளாஸான விசயத்தை எல்லாம் கடைசியில் உயர்ந்த சிந்தனைங்கிற மாதிரி சொல்லிப்புடுறானுக சில "பெரிய மனுஷர்கள்" . யாருக்குத் தெரியும்? அவன் அவனோட கூட்டிட்டு வர்ரவ அவனோட மனைவியா இல்லை காதலியா இல்லை அவனோட "கிராக்கியா" என்று? ஆமா.. "ஆண் சைட்" எச் ஐ வி டெஸ்ட்லாம் பண்ணிக்குவானுகளா? கிழிச்சானுக, காண்டமே ஒழுங்கா மாட்ட மாட்டனுக இந்த தேஷிப் பரதேஷிகள்! என்னப்பா இது, "கூட்டிக்கொடுக்கிறதை" எல்லாம் உயர்தர சிந்தனைகள்னு சொல்ல ஆரம்பிச்சுட்டானுக.

 இல்ல, அப்படி மனைவியை மாற்றும்போது, மாற்றானுடைய செக்ஸ்தான் அவளுக்கு இனிமையாக இருந்தால் அப்புறம் என்ன பண்ணுவானுக இந்த பெரிய மனுஷனுகள்? அதுக்கப்புறம் இந்த வீணாப்போன கணவனோட முற்போக்கு சிந்தனையுள்ள அவள் எப்படி இருக்க இல்ல படுக்க முடியும்?  அதே தேஷிஹண்டரையே மாற்றிக்கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானோ? கல்யாணாமாவது கருமாதியாவது!  அந்த  நிலைமை வந்தால் தேஷிஹண்ட்லையே எவனாவது இன்னொரு சின்னப் பையனைத் தேட வேண்டியதுதான். அதான் நாய்மாரி இணையதளத்தில் அலையிறானுகளே பொறம்போக்கு தேஷிகள்!

இல்ல, அந்த  "புதுக் கணவனு"க்கும் கொஞ்ச நாள்ல படுக்க முன்னால வயாகாராவும், போர்னும் தேவைப் பட்டுச்சுனா? இன்னைக்கு மாதிரியா நாளைக்கு இருக்கப் போறான்? பார்க்கலையா நம்ம ஒரு காலத்துல ஊர் மேஞ்ச மன்மதக்குஞ்சுகள் எல்லாம் இப்போ வீரியம் இல்லாமல் ஆண்மிகம்னு சொல்லிக்கிட்டு அலைவதை எல்லாம்? ஆமா, இப்படியே தேடித் தேடி அலைஞ்சு திரிஞ்சு கடைசில ஒண்ணும் முடியாமப் போனதும் ஞானோதயம் வந்து ஆண்மீகக் கடல்ல எறங்கிடுவானுக.

ஒரு வேளை சந்தானத்துக்கு வேறெதுவும் பிரச்சினையோ? யாருக்குத் தெரியும்? என்ன பிரச்சினைனா என்ன? அதை என்ட்ட சொன்னால் என் வேலையைப் போட்டுவிட்டு அவருக்கு உதவப்போறேனா என்ன? எதுக்கு இந்த வெட்டி அலட்டல்? நானும் ஒரு சாதாரண சராசரி சுயநலவாதிதானே?

 ஃப்ரீவேல ட்ரைவ் பண்ணிக்கொண்டு இருக்கும்போது, கணேஷ்க்கு, நேற்றைய நிகழ்வு ஞாபகம் வந்தது. நேற்று எதார்த்தமாக ஏர்போர்ட்ல "பேகேஜ் கலக்ட்" பண்ணுற இடத்தில் மைதிலியைப் பார்த்துட்டான். அவளோட ஹாண்ட்சம் ஹஸ்பண்ட் மற்றும் அழகான ஆண்குழந்தை யுடன் நின்றாள்.

என்ன ஒரு அழகான குடும்பம்! எவ்ளோ சந்தோஷமாக இருக்கிறாள், மைதிலி! நல்லவேளை அவள் கணேஷை கவனிக்கவேவில்லை! போய் "ஹாய்" சொல்லலாமா? னு ஒரு வினாடி யோசிச்சான். நிம்மதியாக இருக்கும் அவளிடம் எதுக்குப் போயி "ஹல்லோ" சொல்லி பழசை ஞாபகப்படுத்தி, அவளைக் கஷ்டப்படுத்தி, நம்மையும் கஷ்டப்படுத்திக்கிட்டு? இந்த "ஹல்லோ"வோ அல்லது அவளுடன் "எந்தவிதமான உறவுமே" இன்றைய நிலையில் தேவையில்லாத ஒண்ணுனு தோனுச்சு அவனுக்கு!

-இன்னும் கொஞ்சம் வரும்

Tuesday, March 27, 2012

கணவர்கள் ஜாக்கிரதை!!!

வாழ்க்கையில் நல்லதையே நெனைக்கனும்,  எதுக்கு தேவையில்லாத சினிமா, பத்திரிக்கை செய்தி எல்லாம் படிச்சு கொலை கொள்ளை, கற்பழிப்பு, தகாத உறவு அது இதுனு செய்திகளைப் தெரிஞ்சு மனதைக் கெடுத்துக்கிட்டு? நம் வாழ்வில் நாம் எளிமையாக வாழ்ந்து வம்பு தும்புக்குப் போகாமல் நிம்மதியாக இருப்போமே? என்று பலர் நினைப்பதுடன் அதுபோல் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துகொண்டும் இருக்காங்க.

ஆனால் ஒருவர் வாழ்க்கையில் திடீர்னு சூறாவளிக் காற்று அடிக்கலாம். அப்போதுதான்  உலகறிவு எவ்வளவு அவசியம்  நமக்கு என்று விளங்கும்.

இது பழைய செய்திதான், இருந்தாலும் முக்கியமான ஒண்ணு என்பதால் பகிர்கிறேன்.

ஒரு 25 வருடத்துக்கு முன்னால மைக்கேல் மார்ட்டன் என்கிற ஒருவரை,  அவருடைய மனைவி, க்ரிஷ்டின் மார்ட்டனை , கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டி, அதை சட்டப்படி "நிரூபித்து"  அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கிவிட்டார்கள்.


மேலே படத்தில் உள்ளது மைக்கேல் மார்ட்டன் (இன்று)!

மனைவியை ஏன் கொலை செய்தார்? என்ற கேள்விக்கு அரசாங்க தரப்பு (கென் ஆண்டர்சன்) கொடுத்த வாதம்,  மார்ட்டன் மனைவி க்ரிஸ்டின் அவருடன் உடலுறவு கொள்ள மறுத்துவிட்டதால், கோபமடைந்து, அடித்து அவர் மனைவியை கொன்னுபுட்டாரு னு குற்றம் சாட்டினார்கள்! அதை ஒரு மாதிரி "ஜோடிச்சு", "நிரூபித்து", கென் ஆண்டர்சன் என்கிற ஒரு "திறமை வாய்ந்த" அரசாங்க தரப்பு வக்கீல் மைக்கேல் மார்ட்டனுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக்கொடுத்துவிட்டு, இன்னைக்கு அதே ஆஸ்டின், டெக்சாஸ்ல ஒரு ஜட்ஜ் ஆகவும் இருக்கிறார். 

மைக்கேல் மார்ட்டன், தான் "கொலை செய்யவில்லை" என்கிற வாதம் எடுபடவில்லை!

* கொலை செய்யப் பட்ட இவரோட மனைவியின் தலையில் ஏதோ ஆயுதம் வைத்துத் தாக்கி அவரை கொன்று இருக்கிறான் கொலையாளி.

* கொலை நடந்த இடத்தில் இருந்த, அல்லது கொலையைக் கண்ணால் பார்த்த சாட்சி பெரியவர்கள் யாருமில்லை.

* கொலை நடந்த இடத்தில் அவருடைய 3 வயது மகன் மட்டும் இருந்து இருக்கிறான். கொலையை பார்த்து இருக்கலாம்..எதோ ஒரு "மான்ஸ்டர்" வந்து தன் அம்மாவை கொன்றுவிட்டதாக அவன் சொன்னதாக சொல்லப்படுகிறது.

* அரசு தரப்பு வக்கீல்கள், வாதத்திறமையால் மைக்கேல் மார்ட்டன் தான் கொலையாளி என்று ஒரு மாதிரியாக ஜோடிச்சு, ஜூரியை நம்ப வைத்து இவருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து சாதித்துவிட்டார்கள்.

மைக்கேல் மார்ட்டன் ஒண்ணும் "பர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்" என்றோ அல்லது ஒரு சில சிறு சிறு தவறுகள் செய்யாதவரோ என்பது பற்றி எல்லாம் தெரியல. அவருக்கும், அவர் மனைவிக்கும் 100% நல்ல உறவு இருக்காமலும் இருந்து இருக்கலாம்தான். ஆனால் இவர் கொலை செய்தாரா? என்பது அவருக்கும் "கடவுளுக்கும்"தான் தெரியும்!


 மேலே, மைகேல் மார்ட்டன் (அன்று), மனைவி க்ரிஸ்டின் மார்ட்டன், அவர்கள் மகன்!

25 வருடத்துக்கு அப்புறம்...

 மைகேல் மார்ட்டன்,  கொலையாளி பட்டத்துடன், மனைவியை இழந்து, தன் மகனை விட்டு, தண்டனை அனுபவித்த பிறகு, டி என் எ  அனாலிசிஸ் (க்ரைம் சீன் கெடச்ச, "முடி" மற்றும், "ரத்தம்" ) செய்து பார்த்த பிறகு, "மார்க் ஆலன் நார்வுட்" என்கிற இன்னொரு ஆள் கொலை செய்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது! இந்த நார்வுட் இதே போல் இன்னொரு பெண்ணையும்  கொலை செய்ததாகவும், இந்த ரெண்டாவது கொலை, கிரிஷ்டின் கொல்லப்பட்டு  நடந்து சுமார் 2 வருடத்துக்குப் பிறகு நடந்ததாகவும், டி என் எ எவிடென்ஸஸ் இருக்கிறதாம்!




மேலே படத்தில் டி என் எ எவிடென்ஸ் படி இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ள
மார்க் ஆலன் நார்வுட்!

* 25 வருடம் தண்டனை அனுபவித்த பிறகு மைக்கேல் மார்ட்டனை விடுதலை செய்துவிட்டார்கள்!!

* மைக்கேல் மார்ட்டன் நிரபராதியாகக் காட்ட உதவும் ஒரு சில எவிடெண்ஸ்களை போலிஸ் மற்றும் அரசுதரப்பு சட்டக் காவலர்கள், வக்கீல்கள் மறைத்துவிட்டதாகவும் தெரிகிறது.

சினிமாக்களில் நடப்பது போலவே ( "Fugitive" and "Shawshanks Redemption"), மனைவி கொல்லப்பட்டார் என்கிற நிலை வந்தால் பொதுவாக அமெரிக்காவில் கணவனைத்தான் பிடிச்சு ஜோடிச்சு உள்ள போடப் பார்க்கிறார்கள் சட்டக்காவலர்கள்!!

கணவர்கள் ஜாக்கிரதை!!! எப்படி ஜாக்கிரதையா இருக்கனும்னு எனக்குத் தெரியவில்லை! ஆனால் கவனமாக இருப்பது நல்லது! மனைவி கொல்லப்பட்டால் நீங்கதான் முதல் சஸ்பெக்ட்!! :(


Monday, March 26, 2012

ஆண்கள் என்னும் மிருகங்கள்!

பொதுவாக செக்ஸ் என்பதே ஒரு மாதிரி மிருக உணர்ச்சி என்றுதான் நம்மளால பல விவாதங்களுக்கு அப்புறம் (ஏற்றுக்)கொள்ளப்படுகிறது. செக்ஸ், மிருக உணர்ச்சியாயிருந்தாலும் ஹார்மோன்களை பெற்ற ஆண் பெண் இருவருக்குமே இள வயதில் செக்ஸ் அவசியம் என்பதால், அதை சமாளிக்க காதல், கல்யாணம், செக்ஸ் லைஃப் னு அந்த காம வாழ்க்கை ஆரம்பிச்சு வாழ்க்கை போயிக்கிட்டு இருக்கு. ஆனால் ஆணும் பெண்ணும் வேற வேற என்பதை நாம் என்றுமே மறுக்க முடியாது. இருவரும் ஒருபோதும் சரி சமம் அல்ல!

நான் பார்த்தவரைக்கும் ஆணைப் பொருத்தவரையில் செக்ஸ் என்பது உயிர் இருக்கும் வரை அவனுக்குத் தேவைப் படுகிறது (அவனால முடியுதோ இல்லையோ, அவனுக்குத் தேவைப் படுது)! பொதுவாக பெண்களுக்கு அப்படியல்ல என்றுதான் தோனுது. இது சம்மந்தமாக இரண்டு உதாரணங்கள் பார்ப்போம்!

* கேஸ் 1

எனக்குத் தெரிய ஒரு 55 வயதுப் பெண், கணவனுக்குத் தேவையான "செக்ஸ் ட்ரைவ்" தன்னிடம் இல்லை என்பதால், அதற்காக ஒரு "தெரப்பிஸ்டை" (டாக்டரை) அனுகி அதை சரி செய்ய தான் ஏதோ ஹார்மோன்கள் எடுத்துக்கொண்டு கணவனுடன் உடலுறவு கொண்டு சமாளிக்கிறாராம். அவர்களுக்குள் கணவன் - மனைவி உறவு தொடருகிறது. மேலும் அவர்கள் குடும்பம் இன்னும் உடையாமல் இருக்கிறது. அவர் எடுக்கும் ஹார்மோன்களால் எதுவும் தீமை ஏற்பட்டதாக இதுவரை தெரியவில்லை.

* கேஸ் 2

சமீபத்தில் ஒரு 60 வயதான ஒரு கோ-வொர்க்கரிடம் பேசும்போது நான் அறிந்தது. அவரும், அவர் மனைவியும் "லீகல்லி செப்பரேட்டெட்" என்றார். "என்ன ஆச்சு?" னு கேட்டால் "ஐ காண்ட் டேக் இட் எனிமோர் மேன்" என்றார். அப்புறம் மெதுவாக, அவர் என்னிடம், "நீ செக்ஸ் பத்தி என்ன நெனைக்கிறனு எனக்குத் தெரியலை, ஆனால் 3 வருடம் முன்னால என் மனைவி, இனிமேல் உடலுறவு என்பது நமக்குள் கிடையாது என்று ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள். அதுக்கப்புறம் எங்களுக்குள் இருந்த ஒரு "பைண்டிங்" எல்லா வகையிலும் போயிடுச்சு." என்றார். "வேற வழியில்லாமல் இப்போ நாங்க "லீகல்லி செப்பரேட்டட்" சுமூகமான முறையில் ஆயிட்டோம்" என்றார். "இப்போ சந்தோஷமா இருக்கீங்களா? " னு கேட்டால், "நிச்சயமாக" என்கிறார். இன்றைய அவர் செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி கேட்பதோ, தெரிந்துகொள்வதோ அநாகரிகம் என்பதால் அதோட நான் நிறுத்திக்கொண்டேன்.

இங்கே நான் சொல்ல வர்றது.. நீங்க கவனித்துப் பார்த்தால் கேஸ் 1, கேஸ்2, ரெண்டும் ஒரே மாதிரி சூழல்தான். ஆனால் ரெண்டுக்கும் அதில் பங்குபெற்றவர்கள் வேறு வேறு மாதிரி ஒரு தீர்வை தேடிக்கிட்டாங்க.

நம்ம ஊரிலே பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்துவிட்டால், "அப்பாட பெண்ணை கரையேற்றியாச்சு" னு சொல்லி மூச்சு விடுவாங்க, பெற்றவர்கள். ஆனால் பொதுவாக கல்யாணம் என்பது கரை அல்ல, ஆழ்கடல்ல தள்ளி விடுவது. வாழ்க்கை முழுவதும் அவள் நீந்தி கரை சேரனும் என்பதே உண்மை மற்றும் எதார்த்தம்.

"தன் மகளை கரை சேர்ந்த்துவிட்டோம்" என்று நினைப்பதெல்லாம் எந்த மாதிரியான அடி முட்டாள்த்தனம் னு புரிந்துகொள்ளாமல் நம்ம ஊர்ல இன்னும் வாழ்ந்துகொண்டிருக்காங்க.

அட் லீஸ்ட் மேலை நாடுகளில், காலப்போக்கில் மாறும் தங்கள் செக்ஸ் தேவைகளைச் சொல்லி, பேசி ஒரு மாதிரியான தீர்வு கண்டுகொள்கிறார்கள்!

Friday, March 16, 2012

அப்பாடக்கர்! புது தமிழ் வார்த்தை கண்டுபிடித்தல்!

"மச்சி" என்கிற வார்த்தை என் இஸ்லாமிய நண்பன் அவங்க அண்ணியை விளிக்கும் வார்தையாகத்தான் எனக்கு முதன் முதலில் அறிமுகமானது. அத்தாச்சி, அண்ணி, மன்னி இதுபோல் மச்சி என்கிற வார்த்தை அவர்களுக்கு என்று நெனைத்துக்கொண்டு இருக்கும்போது, நண்பர்கள் இடையில் "மச்சி" னு ஒருவரை ஒருவர் ஆண்பாலை அழைக்கும் ஒரு "ட்ரெண்ட்" உருவானது. இதெப்படி பெண்பாலை குறிக்கும் ஒரு வார்த்தை ஆண்களை அழைக்கும் வார்த்தையாக மாறியது என்பது எனக்கு இன்னும் புரியாதது.

"மொக்கை" என்கிற வார்த்தையும் திடீரென பரவலாகப் பேசப்பட்டு எனக்கு அறிமுகமானது. சுத்தமான தமிழ் வார்த்தையாக இருந்தாலும் இந்த வார்த்தையை நான் இந்த அர்த்தத்தில் அறிய பல ஆண்டுகளாச்சு . தமிழ்மணத்திலேயே இதை பயன்படுதுவதால் இது பழைய தமிழ் வார்த்தை என்று நம்புகிறேன் ?

"டபாய்க்கிற" "காலாய்க்கிற" "தோடா" "பீட்டர் விடுவது" போன்ற சென்னை வார்த்தைகளலெல்லாம் பழக்கமே இல்லாமல் இருந்தவை. அவைகளை ரசித்ததும் இல்லை, ஆனால் நாளடைவில் நானே ஒவ்வொரு தர பயன்படுத்துவதும் உண்டு.

ஆமா, "அப்பாடக்கர்" என்கிற வார்த்தை யாருப்பா கண்டுபிடிச்சா? இந்த வார்த்தைக்கு எனக்கு அர்த்தமே இன்னும் புரியலை?

இதுபோல் புதுப் புது தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிப்பவர்கள் யாரு? I mean someone should have started (முதன் முதலா) these words as they did not exist sometime ago ? யாருக்கு க்ரிடிட் கொடுக்கலாம்? சரி, இப்போ "அப்பாடக்கரை"
யாரு கண்டுபிடிச்சானு சொல்லுங்கப்பா!

Wednesday, March 14, 2012

பிரிவோம் சந்திப்போமும் கேரக்டர் கற்பழிப்புகளும்!

தமிழ் சினிமாதான் எப்போவுமே தரமில்லாமல் இருக்குனு சொல்றவங்க முகத்தில் அறைவதுபோல இருக்கு இன்றைய தமிழ் சின்னத்திரையில் வரும் கேவலமான சீரியல்கள்!

There is absolutely no consistency in any characters! இன்னைக்க்கு நல்லவளா இருக்க ஒரு கேரக்டர், இன்னும் ஒரு மூனு மாதத்தில் படுகேவலமான ஒண்ணா மாறிடும்! இல்லை மாற்றப்படும்! இதெல்லாம் டார்வின், ஃப்ராயிடு எல்லாரும் சேர்ந்து உக்காந்து கலந்துரையாடினாலும் எப்படினு விளக்க முடியாமல் குழம்பிவிடுவார்கள். இதுபோல் வில்லனை ஹிரோவாக்குவதும் ஹீரோயினை வில்லனாக்குவதும், அம்மாவை அத்தையாக்குவதும், அத்தானை அண்ணனாக்குவதும் அளவுக்குமீறி நடக்கிறது. இது மாதிரியெல்லாம் நிச்சயமாக மஹாமட்டமான இயக்குனரின் தமிழ் சினிமாவில்கூட இதுவரை வந்ததில்லை!

இந்தமாதிரி சீரியல் ஒளிபரப்புரவனை எல்லாம் உண்மையில் "மனிதர்கள் இவ்வளவு ஈனத்தனமாக இருப்பதில்லை" என்று மனித உரிமைக்கழகம் ஏதாவது செய்யனும் போல இருக்கு! இல்லனா இந்த சீரியல் எடுக்கிற பொறம்போக்குகள் ஏதாவது விறுவிறுப்பான காட்சி வாராவாரம் கொண்டு வரவேண்டுமென்று இதுமாதிரி என்னவேணா செய்வானுக.

உதாரணமாக, பிரிவோம் சந்திப்போம்னு ஒரு சீரியல் விஜய் டிவில வந்துண்டு இருக்கு. ஒரு 4 வாரம் முன்னால வரை, ரேவதி என்னும் ஒரு கேரக்டரில் ஒரு குவாலிட்டி இருந்தது. திடீர்னு அந்த கேரக்டரை, எதுக்காகவோ, யாருக்காகவோ தியாகம் செய்வதாக சொல்லி, எந்தவித நற்குணமும் இல்லாத ஒரு கேவலமான கேரக்டராக மாற்றியமைத்துள்ளார்கள். இதுபோல நெனச்சா வில்லனை ஹீரோவாகவும் பத்தினியை தேவடியாளாகவும் மாத்தவில்லைனா இந்த மரமண்டைகளுக்கு சீரியலை பல வருடங்கள் எப்படி நடத்திச் செல்வதென்று தெரியாமல் போய்விடுகிறது .

என்ன சொல்றீங்க? தமிழ் சீரியல்னா அப்படித்தான்! இதுக்குப் போயி ஏன் அலட்டிக்கிற? னு சொல்றீங்களா? எல்லாருக்கும் தெரிந்த உண்மைதான் இது, நான் இல்லைனு சொல்லவில்லை! ஏன் தமிழ் சீரியல்னா மட்டமாத்தான் இருக்கனுமா? தமிழன்னா பெரிய இவன்னு நம்ம அப்பப்போ சொல்லிக்கிறது இல்லையா? இதெல்லாம் தமிழன் தரத்தை அளக்கும் அளவுகோல்தானே?

இலக்கியத்திலும், எழுத்திலும்தான் நம்மலால எதுவும் சாதிக்க முடியவில்லை. இதுபோல சாதாரண டி வி சீரியலைக்கூட எடுக்க முடியாதா? இதை பயன்படுத்தியாவது ஏதாவது நல்லவைகளை (மனிதர்களை பண்படுத்துவதுபோல) கற்றுக்கொடுப்பார்கள் என்று பார்த்தால், இதிலும் வேஷித்தனம்தான் செய்கிறார்கள்!

How would you say this?

Not maintaining any consistency in characters?

Character molestation??

Tuesday, March 13, 2012

ஜெயமோகன் பேசாமல் பேசி சொல்லாமல் சொன்ன கருத்து!

பொதுப் பிரச்சினையில் ஏன் ஜெயமோகன், கருத்துச் சொல்லுவதில்லை? அதாவது சமீபத்தில் நடந்த எண்கவுண்டர், சரியா, இல்லை தவறானதா? னு எதையாவது சொல்லுங்களேன்? னு ஒரு வாசகர் அன்பர் ஜெயமோகனிடம் கேட்டு இருக்காரு.

உடனே, நான் ஏன் பொதுப் பிரச்சினையில் கருத்துச் சொல்லுவதில்லைனு ஆரம்பிச்சு, பேசாமல் பேசியிருக்காரு, இம்பூட்டு மேட்டரு!!!

அன்புள்ள ஜெயமோகன,

நான் உங்கள் வாசகன். நீங்கள் எழுதும் கட்டுரைகளில் உள்ள சமநிலையான சிந்தனைகளை விரும்பி வாசிக்கக்கூடியவன். நான் எழுதும் முதல் கடிதம் இது.

நெடுநாட்களாக என் மனதில் உள்ள கேள்வி இது. இதை நான் உங்கள் இணையதளத்தில் தேடினேன். நீங்கள் சொன்ன பதிலைப் பார்த்தேன். அதாவது நீங்கள் ஏன் முக்கியமான சமூகப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்வதில்லை?

கருத்துச்சொல்ல ஆரம்பித்தால் தொடர்ந்து அதையே விவாதிக்க வேண்டியிருக்கும் என்று சொல்கிறீர்கள். எழுத்தாளனின் வேலை அது இல்லை என்கிறீர்கள். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமூகப்பிரச்சினைகளில் எழுத்தாளர்கள் உணர்ச்சிகரமாக எதிர்வினை ஆற்றத்தானே வேண்டும்? அது அவர்களின் கடமை இல்லையா?

உதாரணமாக இப்போது சென்னையிலே வங்கியில் கொள்ளையடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு இளைஞர்களை சுட்டுக்கொன்றுள்ளது. இந்த அநீதிக்கு எதிராக எழுத்தாளர்கள் குரல் கொடுக்க வேண்டாமா?

ஜெய்சன் சாமுவேல்



அன்புள்ள ஜெய்சன்,

நான் பொதுவாக சமூகப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்வதில்லை. நம்முடைய சமூகம் இன்று பல்வேறு அதிகார சக்திகள் தொடர்ந்து முரண்பட்டு மோதிக்கொண்டே இருக்கும் ஒரு அரசியல்வெளி. பிரம்மாண்டமான உள்விரிவுள்ள ஒரு ஜனநாயகம் நம்முடையது. ஆகவே எப்போதும் இங்கே கொந்தளிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. ஊடகப்பெருக்கம் உள்ள தேசமாகையால் ஒரு இடத்தின் பிரச்சினை தேசம் முழுக்க சென்று சேர்கிறது. பலநூறு தரப்புகள், பல்லாயிரம் கருத்துக்கள் வருகின்றன. பிரச்சினை இல்லாமல் ஒருவாரம்கூடக் கடந்துசெல்வதில்லை.

எழுத்தாளன் இப்பிரச்சினைகள் அனைத்துக்கும் எதிர்வினை ஆற்றி, அதைத்தொடர்ந்து வரும் விவாதங்களிலும் பங்கு கொண்டான் என்றால் அவனுடைய அகச்சக்தி முழுக்க அதற்கே செலவழியும். அவனால் எந்தப் புனைவையும் எழுத முடியாது. ஆகவேதான் சமூகப்பிரச்சினைகளுக்கு எதிர்வினை ஆற்றுவதில்லை என்பதை நான் கொள்கையாகக் கொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம் அவை சூடாக நிகழும்போதாவது முற்றாக அமைதி காக்கிறேன்.

உலகமெங்கும் பெரும்பாலும் எல்லா முக்கியமான எழுத்தாளர்களும் இந்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்கலாம். அவர்களுடைய சொந்த ஆன்மீக,அரசியல்,சமூகவியல் தேடல் ஒன்று இருக்கும். அதனுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு மட்டுமே அவர்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள். ஏனென்றால் அது அவர்கள் செய்துவரும் கருத்துச்செயல்பாட்டின் ஒரு பகுதியாக உள்ளது.

அல்லது, பிற எல்லாத் தரப்பும் மௌனம் காக்கும்போது இலக்கியவாதியின் குரல் எழுகிறது. அவன் பேசியே ஆகவேண்டிய இடம் அது. அப்படிப் பேசி அதற்காகக் களப்பலியான எழுத்தாளர்கள் உலகமெங்கும் உண்டு. அதற்காக இலக்கியத்தையே இழந்தவர்களும் உண்டு. இலக்கியம் மேலான விழுமியங்களுக்காக நிலைகொள்வது. அவ்விழுமியங்களுக்காக இலக்கியத்தை இழப்பதும் முறையானதே.

நேர்மாறாக, தொடர்ந்து எல்லா சமூகப் பிரச்சினைகளுக்கும் எதிர்வினையாற்றும் எழுத்தாளர்கள் உண்டு. அவர்கள் எழுத்தாளர்கள் என்பதை விடக் களப்பணியாளர்கள், அரசியலாளர்கள் என்ற அடையாளத்தை மேலதிகமாகச் சுமப்பவர்கள். அவர்கள் விதிவிலக்குகள். அவர்களின் புனைகதை ஆற்றலை அந்த அடையாளங்கள் பெரிதும் நசுக்கி அழித்திருப்பதையும் நீங்கள் காணலாம்.

நம் சமூகத்தின் பொதுவான மனப்போக்கு என்னவென்றால், அவர்கள் இலக்கியவாதி எழுதுவதை வாசிக்கமாட்டார்கள் என்பதே. அவன் தன் சிந்தனையின் கற்பனையின் நுண்ணிய பகுதிகளை வெளிப்படுத்தியிருக்கும் புனைவுகளை அவர்கள் பொருட்படுத்தி விவாதிக்க மறுப்பார்கள். ஆனால் ஏற்கனவே தாங்கள் செய்து கொண்டிருக்கும் விவாதங்களில் தங்களைப்போல அவனும் வந்து கலந்துகொண்டு தங்களைப்போல ஒரு நிலைப்பாட்டை அவனும் எடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ‘அதாவது நீ எழுத்தாளனாக இருக்காதே, எங்களைப்போல நீயும் பேசு’ என்று சொல்கிறார்கள். நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தின் சுருக்கமான பொருளும் அதுவே.

எழுத்தாளன் அரசியலாளனோ செயல்பாட்டாளனோ அல்ல. அவனுடைய நுண்ணுணர்வும் சரி, அவன் செயல்படும் தளமும் சரி முற்றிலும் வேறானவை. இன்னும் நுட்பமானவை, சிக்கலானவை. அந்தத் தகுதியால்தான் அவன் எழுத்தாளனாக ஆகிறான். அந்தத் தனித்தன்மையுடன் அவன் ஓர் அரசியலாளன் போல, செயல்பாட்டாளன் போல, சேவையாளன் போலச் செயல்பட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

சரி, நீங்கள் சொன்ன விஷயத்தையே பேசுவோம். சென்னை துப்பாக்கிச்சூடு பற்றி மனித உரிமைப்போராளிகள் மற்றும் இதழாளர்கள் பேசுவதை நான் அவசியமான ஒன்றாக நினைக்கிறேன். நம் சமூகத்தில் அரசதிகாரம் எல்லைமீறிச்செல்லாமல் காக்கும் அணைகள் அவை. மக்களின் கூட்டான தார்மீகமே சமூகத்தின் தண்டிக்கும் சக்தியாக இருக்கவேண்டுமென்பதைத் தொடர்ச்சியாக நிறுவிக்கொண்டிருக்கும் செயல்பாடு அது. ஆக்கபூர்வமான சமூகத்தில் இன்று மனித உரிமை, சூழியல் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை ஆகிய மூன்றுக்காகவும் எப்போதும் ஒருங்கிணைந்த குரல் எழுந்துகொண்டிருந்தாகவேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். அதற்காகப் போராடும் ஒவ்வொருவரையும் நான் மதிப்புடன் வணங்குவேன்.

ஆனால் இவர்களில் ஒருவனாக என்னுடைய குரலை இணைக்கமுடியாது. ஏனென்றால் நான் இவர்களில் ஒருவனல்ல. நான் எழுத்தாளன். மேலே குறிப்பிட்ட செயல்பாட்டாளர்களுக்கு ஒற்றை நோக்கு உள்ளது. அதை ஒட்டிய செயல்திட்டம் உள்ளது. அச்செயல்திட்டத்தை ஒட்டி மட்டுமே அவர்கள் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். எழுத்தாளன் அப்படி ஒற்றை நோக்குடன் செயல்பட்டால் அவன் எழுதுவது இலக்கியமாக இருக்காது. தட்டையான பிரச்சாரமாகவே இருக்கும்.

உலகமெங்கும் இலக்கியமென எது எண்ணப்படுகிறதோ அது இப்படிப்பட்ட ஒற்றைநோக்குடைய எழுத்து அல்ல. இலக்கியத்தின் இலக்கு என்பதே சொல்லப்படாதவற்றைச் சொல்வது. பார்க்கப்படாத கோணத்தில் பார்ப்பது. ஆகவே எப்போதும் அது பொதுப்பார்வையைத் தவிர்த்து முரண்பாடுகளையும், விசித்திரங்களையும், விபரீதங்களையும் முன்னிறுத்துகிறது.

இலக்கியமென்பது பிறவழிகளில் சொல்லப்படாதவற்றைச் சொல்வதற்கான ஒரு வழி. உண்மை என்பது அப்பட்டமாக மேலே மிதந்து கிடக்காது என்றும், அது முரண்பாடுகள் நடுவே சமரசப்புள்ளியாகத்தான் இருக்கும் என்றும் அது நினைக்கிறது. எல்லாவற்றையும் அறிந்து, தொகுத்து, அனைத்துக்கும் பொதுவாக உள்ள உண்மையையும் யதார்த்ததையும் சொல்லத்தான் அது முயலும். அப்படிச் சொன்ன படைப்புகளுக்கு மட்டுமே இலக்கிய மதிப்பு உண்டு.

அப்படி இல்லாத ஆக்கங்கள் செயல்பாட்டாளர்களுக்கு உதவும். அவர்கள் அதைக் கொண்டு செல்வார்கள். ஆனால் ஒருபோதும் இலக்கிய வாசகனை அவை நிறைவடையச்செய்யாது. அவனுக்கு உள்ளூரத் தெரியும் அந்த ஆக்கம் சொல்வது இலக்கியம் மட்டுமே சொல்லக்கூடிய சமநிலை கொண்ட உண்மை அல்ல என்று. அப்படைப்பு இலக்கியமாக நிற்கவும் செய்யாது.

நான் தொழிற்சங்க அரசியலில் செயல்பட்டவன். அங்கே நான் செய்தவை அனைத்தும் தொழிலாளர்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டவை. பேசியவை எல்லாமே அந்த நோக்கத்தால் ஆனவை. இலக்கியவாதியாக அவற்றை அப்படியே நான் பேசமுடியாது. இலக்கியவாதியாக நான் அவற்றின் மறுபக்கத்தையும் பார்க்கவேண்டும். தொழிலாளர்களின் மறுபக்கத்தை கவனிக்கவேண்டும். முதலாளிகளின், அரசாங்கத்தின் தரப்பையும் கவனிக்கவேண்டும். அப்போதுதான் அது இலக்கியவாதியின் குரலாக ஆகும்.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு பழைய பழமொழியையே சொல்லவேண்டும். நல்ல இலக்கியம் எலியின் உயிர்வதையை மட்டும் சொல்வது அல்ல. பூனையின் பசியையும் கணக்கில் கொண்டு பேசுவது. இலக்கியம் ‘other side of the other side of the other side’ ஐப் பேசமுயலும் என்ற ஒரு கூற்று உண்டு. சமரசமற்ற கறாரான உண்மையை நோக்கியே அது செல்லவேண்டும். அது எத்தனை கசப்பானதாக இருந்தாலும் அதைச் சொல்லவேண்டும். சொல்பவனை எந்த அளவுக்கு அன்னியப்படுத்தினாலும் அதை அவன் சொல்லியாகவேண்டும்.

அதன் விளைவு ஒருவேளை சமூகத்திற்குத் தீங்கானதாக ஆனாலும்கூட உண்மையைச் சொல்வதே இலக்கியமாக இருக்கும். அதுவே இலக்கியவாதியின் கடமையும்கூட. அக்காரணத்தால்தான் உலகின் பெரும்படைப்பாளிகள் சமகாலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். அவமதிக்கவும் தண்டிக்கவும் பட்டிருக்கிறார்கள். அரசாலும் மதத்தாலும் சமூகத்தாலும் மட்டும் அல்ல, சமூக சீர்திருத்தவாதிகளாலும் முற்போக்காளர்களாலும்கூட அவர்கள் சிறுமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் துப்பாக்கிச்சூடு விஷயத்தில் ஒரு சாதாரணக் குடிமகனாகவும், எழுத்தாளனாகவும் நான் உண்மையை அறிந்துகொள்ள முயன்றேன். நானறிந்தது இது. வங்கிக்கொள்ளை நிகழ்ந்ததும் காவல்துறை அனைத்து வங்கிகளிலும் உள்ள ரகசியக் காமிரா பதிவுகளை ஆராய்ந்தது. ஏனென்றால் கொள்ளையர் பல வங்கிகளை நோட்டமிட்டிருக்க வாய்ப்பிருந்தது. காவல்துறைக்கு அக்கொள்ளையைச் செய்தவர்கள் எவரென பெரும்பாலும் ஊகம் இருந்தது. அந்த முகங்களுக்காகத் தேடியபோது ஒரு முகம் சிக்கியது. அது காவல்துறையின் ரகசியப் பதிவுகளில் உள்ள முகம்.

அந்த முகத்தை வெளியிட்ட காவல்துறை உடனே ஒரு ரகசியத்தகவலாளியிடமிருந்து அந்நபரைப்பற்றிய தகவலைத் தெரிந்துகொண்டது. அந்தத் தகவலாளி பெரும்பாலும் ஒரு பாலியல்தொழிலாளர். அவர் யாரெனக் காவல்துறை ஒருபோதும் வெளிப்படுத்தாது. நேராகக் கொள்ளையர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்ற காவல்துறை அவர்களை அமைதியான முறையில் கைதுசெய்து கொண்டு சென்றது. செல்லும் வழியில் மேலிட உத்தரவு வந்தது. திருப்பிக் கொண்டுவந்து அறைக்குள் குப்புற வீழ்த்தி சுட்டுத்தள்ளியது. இந்தச் சித்திரம் உண்மையாக இருக்கலாமென நான் நினைக்கிறேன்.

நெடுங்காலம் நீடிக்கும் இரு அமைப்புகள் நடுவே கண்டிப்பாக ஒரு நடைமுறைச் சமரசம் இருக்கும். சமீபத்தில் இந்திய அரசின் உயரதிகாரியாக இருந்த பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய கலங்கியநதி நாவலில் அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான போரும் கொலைகளும் நடந்துகொண்டிருக்கும்போதே அப்படி ஒரு நடைமுறைச் சமரசம் இருக்கும் சித்திரம் அபாரமாகப் பதிவாகியிருப்பதை வாசித்தேன். அக்கட்டுரையில் இவ்வரியைச் சொல்லியிருந்தேன்.

அத்தகைய சமரசம் காவல்துறைக்கும் குற்றவாளிகளுக்கும் நடுவிலும் உண்டு. காவல்துறைக்கு நிறைய எல்லைகள் உள்ளன. அதன் திறமைக்குறைவு, வசதியின்மை, ஊழல், அரசியல் கட்டாயம், இந்திய சட்டத்துறையின் சிக்கல்கள் என பல காரணங்கள். ஆகவே நடைமுறையில் காவல்துறை ஓர் எல்லைவரை குற்றங்களை அனுமதிக்கின்றது.

திருட்டு வழக்குகளைக் காவல்துறை கையாளும் விதத்தைப்பற்றி வழக்கறிஞர்களான நண்பர்கள் அளிக்கும் சித்திரம் வேடிக்கையானது. இங்கே உண்மையில் திருட்டை ஒழிக்கக் காவல்துறை முயல்வதில்லை, அது காவல்துறையின் எல்லைக்கு மீறிய விஷயம். திருட்டுவழக்குகளை ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வது மட்டுமே அது செய்யும் பணி. பெரும்பாலான வழக்குகள் திருடர்களே ஐந்துக்கு ஒன்று என்பது போலத் தங்களை ஒப்புக்கொடுப்பவை. திருட்டு இந்த அளவு வரை நிகழலாமென திருடர்களுக்கும் காவலர்களுக்கும் ஒரு பரஸ்பரப் புரிதல் உள்ளது.

இங்கே பெரும்பாலான திருட்டுகள் பதிவாவதே கிடையாது. திருட்டுக்கொடுத்தவர் மிகவும் அழுத்தம் கொடுத்தால் திருட்டுப்பொருளையே திருடனிடமிருந்து பேசி வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். அதற்குள்ளேயே பல கணக்குகள். திருட்டைக் காவலர் பெரிதாக நினைப்பதில்லை, ஆனால் வழிப்பறி தங்கள் அதிகாரம் மீதான நேரடிச் சவால் என எண்ணுவார்கள். திருட்டுடன் கொலை என்றால் அதன் கணக்கு வேறு. தொடர்திருட்டு என்றால் அது மேலிடத்தொல்லையை உருவாக்கும்.

இந்த பிகார் திருடர்கள் விஷயம் இதேபோலக் காவல்துறைக்கு மிகவும் தெரிந்த, வேறுவழியில்லாமல் அது விட்டுவைக்கிற ஒரு இந்தியப்பிரச்சினை. பிகாரில் உள்ள பல கிராமங்களே ஒட்டுமொத்தமாக திருடர்கிராமங்கள். ஒருங்கிணைந்த பெரிய கொள்ளை அமைப்புகள் அங்கே உள்ளன. அங்குள்ள காவல்துறையும் நீதித்துறையும் அதற்கு உடந்தையாக உள்ளன. அந்தத் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெரும் பணக்காரர்கள்.

அவர்கள் பிற இந்திய மாநிலங்களில் சென்று திருடிவிட்டு பிகாருக்குள் சென்றுவிட்டால் அவர்களைப் பிடிக்கவே முடியாது. சட்டப்படி பிகாரின் காவல்துறைக்குத் தகவல்தெரிவித்து அங்கே சென்று அவர்களைப் பிடிக்கவேண்டும். அந்தத் தகவல் உடனே அவர்களுக்குக் காவலர்களாலேயே சொல்லப்பட்டுவிடும். அங்கே அவர்களுக்கு எல்லாவகையான அடியாள் பாதுகாப்பும் நீதித்துறைப் பாதுகாப்பும் உண்டு. பிகார் போலீஸுக்குத் தெரியாமல் பிகாரித் திருடர்களைப் பிடிக்கப்போய் தமிழக போலீஸின் உயரதிகாரிகள் உட்படப் பலர் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களை இங்கேயே பிடித்தால்கூட நீதிமன்றத்தில் ஆஜராக்கியதுமே ஜாமீன் கிடைத்துவிடும். உடனே கிளம்பிச்சென்றுவிடுவார்கள். திரும்பப் பிடிக்க முடியாது. முதலில் அப்படி ஒரு மனிதனை அல்லது விலாசத்தையே தேடிப்பிடிக்கமுடியாது. இது ஒரு பிகாரிய பிரச்சினை மட்டும் அல்ல. இப்படிப்பட்ட குழுக்கள் தமிழகத்திலேயே உண்டு. திருச்சி ராம்ஜிநகரில் அப்படி ஒரு திருட்டு உலகம் இருந்தது என்றார் நண்பர். அவர்கள் வடமாநிலங்களில் திருடிவிட்டு இங்கே வருவார்கள். அவர்களை நம்மூர் போலீஸ் பாதுகாக்கும்.

ஆகவே தமிழகப் போலீஸும் கேரளப்போலீஸும் பிகாரி திருடர்களைப் பிடிப்பதே இல்லை. ஏனென்றால் ஜாமீனில் சென்றவர்களைத் திரும்பப் பிடிக்கமுடியாவிட்டால் அது பெரிய சிக்கல். ஆகவே அவர்களைப் பிடிக்கவேண்டுமென்றால் அந்தத் திருடர்களே ஒப்புக்கொண்டு சின்ன வழக்குகளில் வந்து பிடிகொடுக்கவேண்டும். இவ்வாறாக நம் காவலர் திருடர் எனத் தெரிந்தும் நிறையப் பேரை நடமாட விட்டிருக்கிறார்கள். அதாவது பிகாரி கொள்ளையர்களை தண்டிக்கவேண்டுமென்றால் சுட்டுக்கொலைசெய்யவேண்டும், வேறு எதுவுமே நடைமுறையில் சாத்தியமல்ல. இதுவே யதார்த்தம்

இந்த விதிமுறை மீறப்படுவது சில அபூர்வ வழக்குகளில். என்னிடம் பேசிய ஒரு நண்பர் சிலவருடங்களுக்கு முன்னால் ஓர் அரசியல்வாதி திருடர்களால் கொல்லப்பட்டபோது மட்டும் தமிழகக் காவல்துறை உயரதிகாரி துணிந்து பிகார் காவல்துறைக்குச் சொல்லாமல் பிகார் சென்று திருடர்கள் சிலரைப் பிடித்துக்கொண்டு வந்ததாகச் சொன்னார்.

இந்த ஆட்டம் நேற்றும் நடந்தது, இன்னும் நடக்கும். நடுவே இப்படி ஒரு நிகழ்ச்சி ஏன்? தொடர் திருட்டுகளால் மாநிலத்தில் அச்ச உணர்ச்சி மேலோங்குகிறது என்றும் சட்ட ஒழுங்கை சரியாக வைத்திருப்பவர் என்ற முதல்வரின் பிம்பத்திற்குக் குறைவு ஏற்படுகிறது என்றும் தெரிந்ததும்தான் இதற்குக் காரணம். இதனூடாகத் திருடர்களுக்குக் காவல்துறை ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறது – ‘இதற்கு மேல் ஆட்டம் வேண்டாம். இதுதான் எல்லை’ என. ஆகவே இந்தக் கொலை.

இதை பிகாரிகள் எதிர்பார்க்க மாட்டார்கள். அதிகபட்சம் சிலநாள் ரிமாண்டும் ஜாமீனும்தான் அவர்கள் எதிர்பார்க்கக்கூடியது. அவர்களின் அமைப்பில் கொஞ்சநாள் அச்சம் நிலவும். அதுவே காவல்துறையின் நோக்கம்.

இதுதான் நானறிந்தது. உண்மை இதற்கு நெருக்கமாக எங்கோ உள்ளது. உலகம் முழுக்க ஆயுதமேந்திய அமைப்புசார் வன்முறையானது அரசுகளால் ஆயுதம் மூலமே எதிர்கொள்ளப்பட்டு வருகிறது என்பது ஓரு யதார்த்தம். அதை சட்டநடவடிக்கைகள் மூலம் ஒன்றும் செய்ய முடியாது. அதிலும் மாநிலங்கள் தனி நாடுகளாகவே செயல்படும் இந்தியாவில் வேறு ஒன்றுமே சாத்தியமில்லை என்பது காவலர் தரப்பு.

மனித உரிமையாளர்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் நியாயமானவை. இப்படி எவரை வேண்டுமானாலும் போலீஸ் சுட்டுக்கொல்லலாமே. நாளை நம்முடைய குழந்தைகளை பிகாரி போலீஸ் இப்படி விசாரணை இல்லாமல் சுட்டுக்கொன்றால் நாம் விடுவோமா? இப்படி காவலர்களே கொல்லலாம் என்றால் எதற்கு சட்டம், நீதிமன்றம் எல்லாம்? அவர்களின் எதிர்ப்பும் போலீஸின் பொய்களை அவர்கள் அம்பலப்படுத்துவதும் முக்கியமான சமூக எதிர்வினையே. அது போலீஸின் எல்லையை நிர்ணயிக்கும் சமூக விசை.

அதேசமயம் திருடர்களின் சட்ட உரிமை, சட்டபூர்வ நடவடிக்கை பற்றி அவர்கள் பேசுவதெல்லாம் இந்திய யதார்த்தத்தில் கேலிக்குரியவை. அந்த வேகத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களை நிரபராதிகள் என்றும் போலீஸைக் குற்றவாளிகள் என்றும் காட்ட அவர்கள் முயலும்போது இன்னும் அபத்தமாக ஆகிறது அது.

ஓர் எழுத்தாளனாக நான் என்ன செய்யவேண்டும்? எது சரி எது தவறு என சொல்வதற்கு முன்னால் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அல்லவா புரிந்துகொள்ளவேண்டும்? மனித உரிமைக்காகத் திருட்டை அனுமதிக்க முடியுமா? இல்லை, நடைமுறைத் தேவைக்காக சட்டத்தை ரத்துசெய்யமுடியுமா? நான் இந்த தர்மசங்கடப்புள்ளியை முதலில் முன்வைக்கவேண்டும். அதில் இருந்து மேலே செல்லமுடிந்தால் செல்லவேண்டும்.

மாறாக, இந்த மனித உரிமையாளர்களின் மேலோட்டமான வாதங்களை ஏற்று நானும் கோஷமிட்டால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆனால் அதற்கு எழுத்தாளனாகிய நான் எதற்கு? அதைத்தான் அவர்களே செய்கிறார்களே?

உண்மை முக்கியம் என நினைத்து நான் இதில் உள்ள உண்மையைப் பேசப்போனால் அது மனித உரிமையாளர்களால் விரும்பப்படாது. நான் ’பிற்போக்கானவன்’, ‘சமூக அமைப்பின் குரலாகப் பேசுபவன்’, ‘மனிதாபிமானமில்லாதவன்’ என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் விளக்கம் அளித்தே நான் ஓய வேண்டியிருக்கும்.

இந்தக் கட்டுரையில் நான் ஒற்றைப்படை நிலைப்பாடு எடுக்காத காரணத்துக்காகவே என்னென்ன வசைகள் வருகின்றன என்று கவனியுங்கள். இங்கே எழுத்தாளனை அவனுடைய படைப்புகளை வாசிக்காத ஒரு பெரும் கும்பல் எப்போதும் வசைபாடிக்கொண்டே இருக்கிறது.

இந்த விஷயத்தில் மட்டும் அல்ல, சமூகத்தில் பரபரப்பாகப் பேசப்படும் எல்லா விஷயத்துக்கும் இப்படி மறுபக்கமும், மறுபக்கத்தின் மறுபக்கமும் உண்டு. அவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு பார்த்தால் மட்டுமே இலக்கியவாதியாக நான் பேசமுடியும். எழுத்தாளன் அவற்றை அப்படி எல்லாத் தருணத்திலும் பேசிக்கொண்டிருக்கமுடியாது.

ஆக மௌனமாக இருப்பதே வழி. அதற்கும் மேல் இந்தப் பிரச்சினை என்னுடைய மனசாட்சியைத் தாக்குமென்றால் இதை என் புனைவுலகுக்குக் கொண்டுசெல்லவேண்டும். புனைவுலகில் நான் இதை எல்லாத் தரப்புகளையும் பேசச்செய்து ஒரு சமநிலைநோக்கைப் பார்த்து இதைக் கொண்டுசெல்லமுடியும்.நானறியும் உண்மையை இன்னும் கூர்மையாகவும், இன்னும் முழுமையாகவும் சொல்லமுடியும். அதுதான் என் ஊடகம்.

அப்படி இலக்கியத்தில் முழுமையான தர்க்கங்களுடன், உணர்ச்சிக் கூர்மையுடன் சொல்லப்பட்ட விஷயங்களையேகூட நம்முடைய பொத்தாம்பொது வாசகர்கள் அவர்கள் ஏற்கனவே பேசிக்கொண்டிருக்கும் ஒற்றைப்படை அரசியலை நோக்கி இழுத்துச்சென்று மடத்தனமாக விவாதிப்பதே இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நம்முடைய இலக்கிய விவாதங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே இது தெரியும். இந்நிலையில் இலக்கியவாதி இலக்கியம் எழுதாமல் இவர்களின் டீக்கடைப்பெஞ்சு விவாதங்களில் சென்று அமர்ந்தால் வேறு வேலையே வேண்டியதில்லை.

ஆகவேதான் நான் பேசாமலிருக்கிறேன்.

ஜெ


ஜெயமோகன், எதையுமே வித்தியாசமாகத்தான் செய்வாரு போலயிருக்கு. நான் பொதுப் பிரச்சினையில் ஏன் கருத்து சொல்வதில்லைனு ஆரமிச்சு, அவர் கருத்தை தெளிவாகவே சொல்லியிருக்காரு. உங்களுக்கு அவர் "சொல்லாமல் சொன்ன கருத்து" புரியுதாப்பா?

அவரோட கருத்து ஒருபுறம் இருக்கட்டும்! நம்ம ஜெயவேல், நான் எண்கவுண்டர் தப்புனு எழுதிய பதிவுல கொடுத்த பின்னூட்டத்தில் போலிஸுடைய தற்காப்பு நிலைப்பாடும், அதனால ஆன விபரீதத்தால்தான் அவர்கள் பலியானார்கள்னு சொன்னாரு. ஆனால் நம்ம ஜெயமோஹன், குற்றவாளிகள் எப்படி சுட்டுக்கொல்லப் பட்டார்கள்னு கேள்விப்பட்டு யிருக்காருனு பாருங்கப்பா! கவனம்! நான் அவரு கேள்விப்பட்டதாக சொன்னதாகத்தான் சொல்லியிருக்கேன்! தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம்!

இவரு கருத்து சொல்லாமலிருக்கும்போதே இம்பூட்டு சொல்லியிருக்காரு. ஒரு வேளை கருத்து சொல்லியிருந்தால்? நெனைக்கவே பயம்ம்மா இருக்கு எனக்கு! :)

Thursday, March 8, 2012

காதல் தோல்விகள் பலவிதம்!

காதல் தோல்வி பலவகைனு உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆமா, காதல் தோல்வி மட்டுமல்ல, காதலும் பலவகைகள்தான். உடல் காதல், உள்ளக் காதல், இரக்கக் காதல், காமக் காதல், ஆண்லைன் காதல், இண்டர்னெட் காதல், கத்திரிக்கா காதல்னு சொல்லிக்கிட்டே போகலாம்தான். இதுல எந்த மாதிரி காதல் தோல்வி பரவாயில்லைனு பார்ப்போமா?

* முதல் ரகம்..ஒரு பொண்னைப் பார்த்து உங்களுக்கு ரொம்ப பிடிச்சிப் போயிடுது. அதனால அவளை நீங்க ஒரு தலையாக விரும்புறீங்க. ஆனால், அவளுக்கு உங்களை காதலிக்கத் தோணவில்லை! நீங்க செய்த எல்லா முயற்சியும் தோல்வி. உங்களுக்காக காதல் அவளிடம் அரும்பாமலே முடிஞ்சு போயிடுது. நீங்க தாடி வளர்த்துக்கிட்டு திரிஞ்சு, அப்புறம் செட்டில் ஆகி அந்தப்பொண்ணை முழுவதுமாக மறக்கலைனாலும் ஓரளவுக்கு மறந்து வாழ்றீங்க. இதுபோல கோடிக்கணக்கில் காதல் தோல்விகள் நடந்துகொண்டு இருக்கு.



* அடுத்த ரெண்டாவது ரகம், ஒரு பெண்ணை விரும்புறீங்க. அவளும் உங்களை விரும்புறாள். காதல் ரெண்டு பக்கமும் மலர்ந்துவிடுது. காதலில் வெற்றி! ஆனால் உங்க குடும்ப சூழல், சாதி, மதம், பெற்றோர்கள் இதெல்லாம் எதிரா அமைந்து இருவரும் கல்யாணம் செய்ய முடியாமல்ப் போயிடுது. குஷ்பூ அக்கா சொல்ற மாதிரி ப்ரிமாரிட்டல் செக்ஸெல்லாம் தப்பு இல்லை என்பதால் உங்க காதல் வரம்பு மீறியும் போயிருக்கலாம்தான். கடைசியில் அவ வேறு ஒருத்தனை, பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிறா, நீங்களும் கொஞ்ச நாள் ஒப்பாரி வச்சுட்டு இன்னொருவரை கட்டிக்கிறீங்க. இது போல காதல் தோல்வி, நம்ம அரேஞ்சிட் மேரேஜ் கலாச்சாரத்தில் ரொம்ப சாதாரணம்னு உங்களுக்கே தெரியும்.

* அடுத்த ரகம், அதாவது மூனாவது ரகம் பார்ப்போம்! ஒரு பெண்ணை விரும்புறீங்க. அவளும் விரும்புறா. குடும்பம், மதம், சாதி எல்லாம் ரெண்டு பேருக்குமே பிரச்சினை இல்லை. ஆனால் நாள் ஆக ஆக உங்க காதல் உடையஆரம்பிக்கிது. ஒருவரிடம் உள்ள குறைகள் இன்னொருவருக்கு பெரிய குறையாகி.. காதலர்களுக்குள்ளே காதலே இல்லாமல்ப் போயிடுது. உங்களை கொஞச நாள்ல சுத்தமாக அவளுக்குப் பிடிக்காமல்ப் போயிது. அவ இன்னொருவரை காதலிக்க ஆரம்பிச்சுடுறா இல்லைனா உங்களைப் பிடிக்கலைனு சொல்லி உங்களை ஒதுங்கிக்க சொல்லிடுறா. அதாவது வேற வழியில்லாம்ல ரெண்டு பேரும் "ப்ரேக் அப்" பண்ணிக்கிறீங்க. இதிலே யாரு "ப்ரேக் அப்" பண்ணூறா அல்லது "டம்ப்" பண்ணுறா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். இதுபோல காதல் தோல்வி அயல்நாடுகளில் ரொம்பச் சாதாரணம். நம்ம ஊர்லயும் ஹை சொசையிட்டிலயும் இப்போ அதிகமாகிக்கொண்டு வருகிறது.




*நாலாவது ரகம்..காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறீங்க. 10-20 வருடத்துக்கு அப்புறம், காதலையும் காணோம், ஒரு மண்ணாங்கட்டியையும் காணோம். செக்ஸ் செம போராயிடுது. உங்க காதலரோட செக்ஸ் வச்சுக்கிறதுக்கு சுய இன்பமே பரவாயில்லைனு தோனுது. காதல் உடைந்து, கல்யாணமும் உடைந்து போகுது. ஆனால் இதில் பாதிக்கப் படுறவங்க நீங்க ரெண்டுபேரு மட்டுமல்ல! உங்க குடும்பம், குழந்தைகள். இதை சாதாரண "விவாகரத்து"னு சொல்ல முடியாது. ஏன்னா நீங்க ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணியிருக்கீங்க. இதுபோல் காதல் தோல்வி மேலை நாடுகளில் மற்றும் நம்ம ஹை சொசைய்ட்டிலயும் பார்க்கலாம்.

இதுக்கு மேலே இன்னும் பல வகைகள் இருக்கத்தான் செய்து, "கள்ளக் காதல்" "புனிதமான கள்ளக் காதல்" "ஆண்லைன் காதல்" இப்படி பலவகை. இதெல்லாம் கேவலமான விசயம் என்றாலும், இதில் இன்வால்வ் ஆகியுள்ள இருவருக்கு அப்படி தோணுவது இல்லை. இதெல்லாம் பெரிய தப்புதான்னு ஒத்துக்குவாங்க, ஆனால் இதில் ஒரு கில்ட்டி ப்ளெஷர் இருக்கும் அவர்களுக்கு. இவைகளும் பொதுவாக கொஞ்ச காலத்துக்குப் பிறகு முறிவதுதான் வழக்கம்.

காதல் தோல்வி என்பது ஒரு வாழ்க்கைப் பாடம்தான். அதை நீங்க எப்படி எடுத்துக்கிறீங்ககிறது ரொம்ப முக்கியம். யாரு மேலே தவறு இருந்தாலும், நீங்க உங்க மனதை அதிகம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ரொம்ப முக்கியம். உணர்ச்சி வசப்பட்டு ஒரு சிலர் தற்கொலை அது இதுனு செய்துவிடுவார்கள். ஒரு சிலர், தோல்வியால், ஏமாற்றப் பட்டதால் தன் மாஜி காதலரை வார்த்தையால் தாக்குவதும், பல வயலண்ஸ் நடப்பதும்கூட பார்க்கிறோம்.

ஆனால் எந்தத் தோல்வியுமே, அன்று தோனுவதுபோல் இன்று தோனுவது இல்லை. காலத்தால் மாறக்கூடியது.

So, when it comes to losing in your love life, YOU ARE NOT ALONE! There are millions of LOSERS out there! You must REMEMBER THAT!

அதனால காதல் தோல்வியை ஒரு வாழ்க்கைப் பாடமாக கற்றுக்கொண்டு, வாழ்க்கையை அனுகுவது புத்திசாலித்தனம். நீங்க புத்திசாலினு எனக்கு நல்லாத்தெரியும்! :-)

Wednesday, March 7, 2012

நியூ டெல்லிக்கு சிறுமை சேர்க்கும் என்ஸைம் மற்றும் கிருமிகள்!


ராமன் விளைவு என்பது இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு கண்டுபிடிப்பு. இதேபோல் கண்டுபிடிப்புகள் நம் இந்தியர்களிடம் இருந்து அதிகமாக வராதா? அடிக்கடி வராதா? என்று இந்தியர்கள் ஏங்குவது என்னவோ உண்மைதான்.

ப்ரோட்டீன் சம்மந்தப்பட்ட ஆராய்ச்சியில் "ராமச்சந்திரன் மேப்" என்கிற ஒரு சின்ன காண்ட்ரிபியூஷனும் இந்தியர்களிடம் வந்து இருக்கு.

டிஸ்காட்டிக் லிக்விட் க்ரிஸ்டல்ஸ் கண்டுபிடிப்பும் ராமன் ரிசேர்ச் இண்ஸ்டிட்யூட்க்கு பெருமை சேர்க்கும். இந்தியர்கள், இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இதுபோல் அரிதான சில அறிவியல் குறிப்புகள் மட்டுமே உள்ளன.

இன்று, விஞ்ஞான ஆர்ட்டிக்கிள் ஒண்ணு கண்ணுக்குத் தென்பட்டது. அதாவது ஒரு புதிய வீரியம் மிக்க மருந்து, (ஆண்ட்டிபயாட்டிக்/ஆண்ட்டி பாக்ட்டீரியல் ஏஜெண்ட்), கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக சொல்லியிருக்காங்க. இந்தியாவில் அல்ல! இந்தியர்களால் அல்ல! அமெரிக்காவில் ஒரு இடத்தில். அதில் என்ன விசேஷம் என்றால்..

The enzyme is called New Delhi metallo-β-lactamase, or NDM-1, and it has been found in bacterial strains around the world since its isolation in 2008. It’s particularly ugly because it makes bacteria able to resist a broad range of antibiotics — including the type that are typically used to fight antibiotic-resistant bacteria. It can resist the most powerful drugs that still work on drug-resistant bacteria, in other words. A superbug indeed. To make matters worse, it confers this ability on gram-negative bacteria, little bugs that are harder to treat — like E. coli and K. pneumoniae. The Staph strain MRSA, the superbug we hear about most often, is a gram-positive bacteria.
இந்த "நியூ டெல்லி மெட்டல்லோ பீட்டா லாக்டமேஸ்" என்கிற என்சைம்தான் என்னைக் கவர்ந்தது!

என்னடா இது "நியு டெல்லி என்சைம்" இதுனு கொஞ்சம் தோண்டி எடுத்தேன். நான் எதிர்பார்த்தது போல இதில் பெருமை சேர்க்க எதுவும் இல்லை! இது சிறுமை சேர்க்கும் ஒரு ஆர்ட்டிக்கிள்!

எனிவே, நம்மை தாக்கும் சில பல பாக்ட்டீரிக்களில் இருக்கின்றனவாம் இந்த "டெல்லி என்சைம்". இந்த என்சைம் கொஞ்சம் வம்பானதுனு சொல்றாங்க. இது ஏன் ஒரு பெரிய பிரச்சினைக்கு உள்ளதுனு கேட்டால், இந்த என்சைம், நமக்குத் தீங்கு செய்யும் பாக்ட்டீயாவில் இருந்துகொண்டு, அந்த பாக்டீரியாவிற்கு பெரியளவில் உதவுதுதாம். எப்படினா, பாக்டீரியா நம் உடம்பில் வந்தவுடன் அதை கொல்ல நாம் மருந்துகள் எடுப்போம் (அனேகமாக ஆண்ட்டிபயாட்டிக்கள் அல்லது ஆண்ட்டி பாக்டீரியல் ஏஜெண்டுகள்). அந்த ஆண்ட்டிபயாட்டிக் மருந்துதான் பாக்ட்டீரியாவுடன் சண்டை போட்டு அவைகளைக் கொல்லும்.

இந்த "டெல்லி என்சைம்", அதுபோல் நாம் எடுக்கும் ஆண்ட்டிபயாட்டிக்கை வைத்து நம்மைத் தாக்கும் பாக்ட்டிரியாக்களை கொல்லவிடாமால் தடுக்க உதவுகிறதுதாம்! அதாவது., இது பாக்டீரியாவிற்கு உதவி செய்து நாம் கொல்ல அனுப்பும் எந்திரமான ஆண்ட்டிபயாட்டிக்கை வலுவிழக்கச் செய்யுமாம்.

அதுபோல் இந்த "டெல்லி என்சைம்" உதவியுடன் வாழும் பாக்டீரியாக்களை கொல்ல ஒரு வீரியம் மிக்க மருந்து கண்டு பிடித்துள்ளதாக அந்த ஆர்ட்டிக்கிளில் சொல்லப்பட்டுள்ளது.

இது ஏன் "டெல்லி என்சைம்"னு பேரு?

The Study

A 76-year-old woman returned to Vancouver, Canada, in early 2010 after spending 3.5 months in northern India. Before her trip, she had been in good health. In India, persistent nonbloody diarrhea developed, for which she did not seek medical attention. One month later, she was treated in the hospital for hypertension and congestive heart failure. She was discharged 3 days after admission but readmitted 3 days later because of ongoing diarrhea and decreased consciousness. Unspecified encephalitis and a urinary tract infection were diagnosed, but despite antibacterial drug therapy, her neurologic status did not improve over the next 3 weeks. She was discharged from the hospital in India and transferred to Canada.

When she arrived at the hospital in Vancouver on February 14, 2010, her vital signs reflected distributive shock: temperature 38.3°C, blood pressure 100/80 mm Hg, and heart rate 126 beats/minute. Sepsis was suspected and she was given imipenem and vancomycin. Within 24 hours, her level of consciousness had deteriorated, and she was admitted to the intensive care unit and intubated for airway protection. Blood cultures were negative, but urine culture (>1 × 108 CFU/mL) grew highly drug-resistant K. pneumoniae N10–0469 (February 15, 2010) with intermediate resistance to chloramphenicol and susceptibility to colistin. The urine was packed with leukocytes, and no other source for sepsis was found. A perirectal sample, screened for resistant gram-negative rods, grew K. pneumoniae N10–0506 and E. coli N10–0505 (February 16, 2010). A stool specimen was negative for ova and parasites but positive for Clostridium difficile toxin.

The patient was given vancomycin and metronidazole for the C. difficile infection and colistin for the K. pneumoniae infection. Treatment with colistin was discontinued shortly after its initiation because of the onset of renal complications; treatment with chloramphenicol was successful. Test results for infectious causes of encephalitis (e.g., malaria smears, cerebrospinal fluid culture for bacteria, and staining for acid-fast bacteria and fungi) were negative, as were test results for cryptococcal antigen, herpes simplex viruses 1 and 2, Japanese encephalitis virus, and rabies virus. Results of computed tomographic scans, magnetic resonance imaging of the head, and an electroencephalogram were suggestive of global metabolic encephalopathy. Neurologic symptoms did not improve, despite the successful treatment of the urinary tract infection. Subsequently, E. coli N10–0705 isolate with an extended-spectrum β-lactamase phenotype was obtained from urine on March 9, 2010, for which the patient was treated with imipenem.

Ventilator and vasopressor support were eventually removed, and the patient was transferred to the general medicine ward. Several days later, her condition worsened and she died; the final diagnosis was toxic metabolic leukoencephalopathy, probably related to sepsis. The patient’s family refused to allow an autopsy.

* அதாவது ஒரு 76- வயது பெண்மணி கனடாவிலிருந்து இந்தியா போனபோது, ஏற்பட்டது இந்த "பாக்டீரியல் இன்ஃபெக்சன்" இந்த "டெல்லி என்சைம்" பேரு அதிலிருந்து வந்தது.

* அந்த 76-வயது பெண்மணி கனடா மருத்துவர்கள் எவ்ளோ போராடியும் கடைசியில் எந்தவிதமான மருந்தாலும் குண்டப்படுத்த முடியாமல் இறந்துவிட்டார்.

நம்முடைய தவறு இதில் என்ன?


* அவர் பாதிக்கப்பட்ட இந்த மாரி "மல்ட்டிரெசிஸ்டண்ட்" பாக்டீரியாக்களை உருவாக்குவது நம்மதான் (இந்தியா போன்ற நாடுகள்). ஒரு வியாதி வரும்போது அதை முழுமையாக குணப்படுத்தாமல், கொஞ்சம் சரியானதும் விட்டுவிடுவது மிகப்பெரிய தவறு. இப்படி விடுவதால் எந்த எஞ்சியிருந்த கிருமிகள் மிகவும் வலுவடைந்து, மருந்துகளையே ஒண்ணுமில்லாமல் போகுமளவுக்கு எதிர்ப்பு சக்தி அவைகளுக்கு உருவாகி அவைகளை அழிக்க முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடுகின்றன.

* ட்யுபர் குளோசிஸ் (காச நோய்) வந்தால், அதை முழுமையாக உடம்பில் இருந்து ஒழிக்க 1 வருடம்போல மருந்து சாப்பிடனும். ஒரு சிலர், 3 மாதத்தில் நிறுத்திவிடுவது போன்ற தவறுகளால் இது போல் வலுவடைந்த கிருமிகளை நாம் உருவாக்குறோம். அப்படி உருவாக்கப் படும் கிருமிகளுக்கு மருந்து கெடையாது. அதுபோல் பாக்டீரியாக்களை உருவாக்கி, அவைகள் நம்மைத் தாக்கினால், கடைசியில் நான் இந்த அம்மாபோல பரிதாபமாக சாக வேண்டியதுதான்.

Tuesday, March 6, 2012

மங்காத்தாவா? நண்பனா? ஒரு விவாதம்!


ஷங்கரோட இணைந்தும் விஜய்யால் அஜீத்தின் மங்காத்தாவை வசூலில் வீழ்த்தமுடியவில்லைனு சொல்றாங்க அஜித் ரசிகர்கள் . ஆனால் விஜய் ரசிகர்கள், நண்பன், மங்காத்தாவைவிட மாபெரும் வெற்றி பெற்றதாக நம்புறாங்க! உண்மை என்ன?னு பார்ப்போமா?

தல ரசிகர்: ஷங்கரோட கூட்டணி சேர்ந்தும் சென்னையில் இன்னைக்குவரை கலக்ஷன் 7.89 கோடிகள்தான். "சத்தியத்" தில் இத்தனை நாள் ஓடுச்சு, அப்படி ஓடுச்சு, இப்படி ஓடுச்சுனு சொன்னாங்க, ஆனால் உண்மை என்னனா நண்பன் 8 கோடிய இன்னும் பிடிக்கலை! ஃப்ளாப்னு சொல்லப்பட்ட ஏழாம் அறிவுகூட 9 கோடிக்கு மேலே வசூல் செய்தது.

தளபதி ரசிகர்: ஆமா, மங்காத்தா, சென்னையில் ஏதோ பத்துக்கோடி வசூல் செய்ததுபோல கதை விடுறீங்க. சென்னையில் மங்காத்தா வசூல் எவ்ளோ? அதைச் சொல்லுங்க.

தல ரசிகர்: 4 வாரத்திலேயே மங்காத்தா 8 கோடியை கடந்துவிட்டது. அதுக்கப்புறம் ஒண்ணும் பெருசா வசூல் வரவில்லைதான். ரிப்பீட் ஆடியண்ஸ் நண்பனுக்கு வந்து குவியிறானுகனு ஏதோ கதை விட்டுக்கிட்டு இருக்கீங்க. அப்புறம் ஏன் இன்னும் எட்டுக்கோடியைக்கூட நண்பன் தொடவில்லை?

தளபதி ரசிகர்: பிஹைண்ட்வுட்ஸ் வேணும்னே தளபதியைக் கவுத்துறானுக. நண்பனை இன்னும் சூப்பர் ஹிட்னு சொல்லிக்கிட்டு அலையிறாங்க. ஆனால் இதே 8 கோடி வசூல் செய்த மங்காத்தாவை ப்ளாக் பஸ்டர்னு சொன்னார்கள். இதெப்படி இருக்கு?

தல ரசிகர்: அப்படிப் பார்த்தால், 9 கோடி வசூல் செய்த ஏழாம் அறிவையும் சூப்பர் ஹிட்னு சொல்லனும். அதை ஹிட்னு கூட சொல்லவில்லை! நண்பனுக்கு ஆன செலவு (பட்ஜெட்) மங்காத்தாக்கு ஆனதை விட 3 மடங்க ஆயிருக்கலாம். அதையெல்லாம் கணக்கில் எடுத்துத்தான் சொல்றாங்கனு நெனைக்கிறேன்

தளபதி ரசிகர்: சரி, யு கே ல மங்காத்தா வசூலை மிஞ்சிவிட்டது நண்பன்! அதாவது தெரியுமா உங்களுக்கு?

தல ரசிகர்: யாரு சொன்னா?

தளபதி ரசிகர்: யு கேல நண்பன் வசூல், $340,000! மங்காத்தா வசூல் $ 268,000!

தல ரசிகர்: பெரிய 62,000 டாலர்கள்! யு கே சரி, மலேசியா நிலவரம் என்ன தெரியுமா?

தளபதி ரசிகர்: அங்கேயும் நண்பந்தான் அதிக வசூல் பண்ணியிருக்கும்!

தல ரசிகர்: அதுதான் கெடையாது! இன்னைக்கு வரை நண்பன் வசூல், $872,498 ஆனால் மங்காத்தா வசூல் என்ன தெரியுமா? $1,104,911 ! சுமாரா 228,000 டாலர்கள் வித்தியாசம்!

தளபதி ரசிகர்: ஆந்திராவில் நண்பன் செம ஹிட் தெரியுமா?

தல ரசிகர்: யாரு சொன்னா? ஆந்திராவில் நண்பன் படம் எடுபடவில்லை! ஏழாம் அறிவு அளவுக்குக்கூட ஓடலை. ஏழாம் அறிவு இதைவிட 3 மடங்கு அதிகமா வசூல் பண்ணுச்சு!

தளபதி ரசிகர்: சரி, உங்க மங்காத்தா ஆந்திராவில் எப்படிப் போச்சு?

தல ரசிகர்: அதை ஆந்திராவில் ரிலீஸ் பண்ணினாங்களா என்னனு தெரியலை. ஆனால் நண்பன் ரிலீஸ் ஆகி ஷங்கர் பேரைக் கெடுத்ததுதான் அது சாதிச்சது.

தளபதி ரசிகர்: என்ன சொல்லுங்க, தளபதி தொடர்ந்து மூனு ஹிட் கொடுத்து இருக்காரு!

தல ரசிகர்: அதென்னவோ ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் ஷங்கர் படத்துக்கு அடுத்து வர்ற படம் ஃப்ளாப் ஆவதுதான் வழக்கம்.. அனேகமா துப்பாக்கி.. வெத்து துப்பாக்கிதான்..

தளபதி ரசிகர்: துப்பாக்கி ஃப்ளாப் ஆகுமா? சாண்ஸே இல்லை!

தல ரசிகர்: அந்நியனுக்கு அப்புறம் வந்த "மஜா" மாதிரித்தான் துப்பாக்கி தலையெழுத்தும் ஆகப்போது!

தளபதி ரசிகர்: இப்படியே எதையாவது சொல்லிக்கிட்டு திரிங்க. அப்புறம் அஜீத்தோட அடுத்த படம் என்ன?

தல ரசிகர்: பில்லா 2!

Friday, March 2, 2012

அது இது எது, சிவ கார்த்திகேயனும் பழமொழிகளும்!

அது இது எது? னு விஜய் டி வி ல வருகிற அந்த ஷோவை அனேகமா எல்லாரும் பார்த்துக்கிட்டுத்தான் இருப்பீங்க. எனிவே, அதுல வர்ற நம்ம மெரீனா ஹீரோ, சிவ கார்த்தி, அப்பப்போ வந்து இந்த பழமொழிக்கு சரியான அர்த்தம் என்னனு சொல்லுங்கனு கேக்கிறதும், அதுக்கப்புறம் அதற்கு சரியான அர்த்தம்னு எதையாவது விளக்கம் ஒண்ணை சொல்லிப்புட்டு இதுதான் சரியான அர்த்தம் ஏதோ இவருதான் பழமொழிக்கு அத்தாரிட்டி போல சொல்றதும்..

"இது தவறானது", "இதுதான் சரி"னு விளக்கம் சொல்றதெல்லாம், ஏதாவது அகராதி மேற்கோள் காட்டிச் செய்றதுதான் சரியான முறை. சும்மா இவரைப்போல் அரை டவுசர்கள் எல்லாம் வந்து இதற்கு அர்த்தம் இதுதான்னு அடிச்சு சொல்றதெல்லாம் கேணத்தனமா இல்லையா?

நிற்க, நான் அவரு சரியானதுனு சொல்ற அர்த்தத்தை தப்புனு சொல்லவில்லை! அதை ஏன் சரியானதுனு நாங்க ஏற்றுக்கனும்? னு கேக்கிறேன்.

நீங்க என்ன சொல்லுங்க, பழமொழினு வரும்போது, சில அடல்ட்ஸ் ஒன்லி பழமொழிகள்தான் மிகவும் அர்த்தமுள்ளதாகவும், தெளிவாகவும் இருக்கு..

என் நண்பன் ஒருவன் இதை அடிக்கடி சொல்லுவான். இன்னைக்கும் இந்தப் பழமொழி கேட்டால் சிரிப்பாத்தான் வருது.

* கழுதைக்கு வாக்கப்பட்டுட்டு "செக்ஸ்"க்கு பயந்தா எப்படிடா? LOL!

அப்புறம் மரப்பசுல நம்ம ஜானகிராமன் எழுதிய ஒண்ணு. இதை ஜானகி ராமன் "இன்வெண்ட்" பண்ணியதாக நான் சொல்லவில்லை. மரப்பசு மூலமாக கேள்விப்பட்ட பழமொழி, அம்புட்டுத்தான்.

* அரிசிப் புழு சாப்பிடாதவனும் அவி(வு)சாரி கையால் சாப்பிடதாவனும் இந்த உலகத்திலேயே இருக்கமுடியாது!

நம்ம "பழமொழி அத்தாரிட்டி" சிவ கார்த்திகேயன் தான் இந்தமாரி பழமொழிகளுக்கும் சரியான அர்த்தம் சொல்லனும்!

----------------

பழமொழி பத்தி கூகிள் பண்ணும்போது இது ரெண்டும் மாட்டுச்சு..


* ஆபத்துக்கு உதவுவானா அவிசாரி ஆம்படையான் ?

இதுக்கு அர்த்தம் புரிகிற மாதிரி இருக்கு..ஆனால் சரியாப் புரியலை.

* ஆச்சானுக்குப் பீச்சான் மதனிக்கு உடப்பிறந்தான் நெல்லுக் குத்தறவளுக்கு நேர் உடப்பிறந்தான்.

இதுக்கு சுத்தமா அர்த்தம் புரியலை! :( இப்போ நெஜம்மாவே நம்ம சிவ கார்த்திகேயன் உதவி ரொம்பத் தேவைதான் போங்க!

தாழ்மையான வேண்டுகோள்:

நானும் பழமொழி சொல்றேன்னு "வரம்பு மீறும்' பழமொழிகளை, மற்றும் விளக்கங்களை பின்னூட்டத்தில் அள்ளிக் கொட்டிடாதீங்கப்பா! நன்றி!

நிறக்குருடு குறைபாடு உள்ளவரா நீங்கள்?

நிறக்குருடு அல்லது கலர் ப்ளைண்ட்னெஸ் என்பது ஒரு குறைபாடு. இந்தக்குறைபாடு உள்ளவர்களுக்கு கண்பார்வை நல்லாத் தெரியும். ஆனால், ஒரு சில நிறங்களை வேறுபடுத்த முடியாது. இதுபோல குறைபாடு உள்ளவர்கள் ஒரு சில வேலைகளுக்கு (Army, Navy etc) தகுதியில்லாதவர்களாவார்கள்.

கீழே உள்ள படத்தில் ஒரு மஞ்சள் சதுரமும், அரக்கு வட்டமும் தெரியனும். உங்களுக்கு அரக்கு வட்டம் தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.



கீழே உள்ள படத்தில் ஒரு மஞ்சள் வட்டமும், அரக்கு சதுரமும் தெரியனும். உங்களுக்கு அரக்கு சதுரம் தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.




கீழே உள்ள படத்தில் ஒரு அரக்கு "படகு போல்" வரைந்த படம் தெரியனும். உங்களுக்கு அரக்கு படகு தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.



இது ஒண்ணும் பெரிய வியாதி/குறைபாடு இல்லை. இதுபோல் குறைபாடு இருந்து அதை நீங்கள் உணராமல் இருப்பதைவிட தெரிந்துகொள்வது நலம். அதை வெளியில் (இங்கேயும்தான்) சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! :)

credit should go to: Colorblindness-test