Friday, May 25, 2012

கொடுமையான மிகவும் கொடூரமான வியாதி லூபஸ்!

சமீபத்தில் ஒரு பழைய நண்பரிடம் (ஓல்ட் ஃப்ரெண்டு) ரொம்ப நாள் கழிச்சு பேச நேர்ந்தது. அதாவது ஒரு 5 வருடத்துக்குப் பிறகு பேசியதாலே. எங்களுக்கு தெரிந்தவர்களில் யாரு யாரு செத்துட்டா, யாரு யாரு உயிரோட இருந்துகொண்டு யாரைக் கொன்னுக்கிட்டு இருக்கா, யாருக்கு வேலை போச்சு, யாரெல்லாம் இந்தியா திரும்பிப் போயிட்டாங்க, யாரு யாருக்கு மாரிட்டல் ப்ராப்ளம்ஸ், யாரு டைவோர்ஸ் வாங்கிட்டானு பல கதைகள் பேசும்போது..

எனக்கு சுமாராக தெரிந்த ஒரு பெண்மணிக்கு "லூபஸ்" என்கிற வியாதி வந்துவிட்டதாக நணபர் வருத்தத்துடன் சொன்னாரு.

லூபஸா? அப்படினா என்ன?னு கேட்டேன்.

கூகில் பண்ணிப் பாரு! எனக்கும் டீட்டயிலா தெரியாது! ஆனா கொடூரமான வியாதி என்றார்.

கூகில் பண்ணி பார்த்ததும்..லெப்ரோஸி, டி பி, எயிட்ஸ் போன்ற வியாதிகளை விட லூபஸ் கொடுமையானதுனு கற்றுக்கொண்டேன்.

என்ன சொல்ல வர்ற? கொடுமையானதுனா என்ன? அது வந்தால் சீக்கிரம் செத்துடுவாங்களா?னு உங்களுக்கு கேள்வி எழும்.

அப்படினு நான் சொல்ல வரலை...அதாவது நமது உடம்பிலே எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி சண்டை போடுவதற்கென்றே ஒரு சில செல்கள் இருக்கு. அவைகள் ஏதாவது பாக்டீரியா அல்லது வைரஸ் நம் உடம்பிற்குள் வந்ததும், அவைகளைக் கொல்ல, எதிர்ப்பு சக்தியை உருவாக்கி போராடும். 

ஜலதோசம், காய்ச்சல் கொடுக்கிற வைரஸை எல்லாம் எளிதாக அடித்து கொன்னுபுடும்.

டி பி, லெப்ரோஸி போன்ற பாக்டீரியாக்களிடமும் சண்டை போடும் ஆனால் ஓர்ளவுக்குத்தான். ஆண்ட்டிபயாட்டிக்ஸ், ஆண்ட்டி பாக்டீரியல் ஏஜண்டுகள் (அதாவது மருந்து மாத்திரைகள்)தான் பாக்டீரியாக்களை அடக்கி ஒடுக்க உதவும்.

இந்த எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி போராடும் செல்களை தாக்குவதுதான் எச் ஐ வி! அதனால அது கொஞ்சம் பிரச்சினையான வியாதி.

இந்த லூபஸ்ங்கிற இந்த  வியாதில என்ன கொடுமைனா, நம்ம உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தி, நம் உடம்பில் உள்ள நல்ல செல்களையே தாக்க ஆரம்பிச்சுடுமாம்! :( அதுபோல செய்வதால் ஏற்படும் ஒரு வியாதி இது. அதாவது வெளியிலிருந்து வரும் கிருமிகளை கொல்ல உருவாக்க வேண்டிய எதிர்ப்பு சக்தி உருவாக்கும் நமது செல்கள்,  நம் உடம்பிலே உள்ள நல்ல செல்களையே தாக்கும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி பலவித பிரச்சினைகளை உண்டாக்குமாம்! இதுதான் கொடுமை.


சில படங்கள் இங்கே!


 Swollen Hands - Raynauds


Discoid Lupus Photo
 
 Lupus is an autoimmune disease where the body's immune system becomes hyperactive and attacks normal, healthy tissue. When the body's immune system is operating normally it produces antibodies to fight viruses and bacteria and other antigens. Lupus makes the antibodies created unable to differentiate between antigens and healthy tissue causing the antibodies to attack healthy tissue. Resulting symptoms include inflammation, swelling, damage to joints, skin, kidneys, blood, heart and lungs.
இது ஒரு மாதிரி அரிதான வியாதினு சொல்லலாம். மற்றும் இன்னும் ஏன் இப்படி நமது செல்கள் "க்ரேஸியா" மாறி, நம்மையே "தற்கொலை" செய்யுதுனு புரியலைனு சொல்றாங்க. இதில் பல வகைகள்  இருக்காம்!

ஆமா, இதை நாங்க தெரிஞ்சு என்ன ஆகப்போது?னு கேக்குறீகளா? யாம் பெற்ற இன்பம் பெறுக இந்த வலையுலகம்னு ஒரு கெட்ட எண்ணம்தான்!


4 comments:

Yaathoramani.blogspot.com said...

அறியாத புதியவகை நோயாய் இருக்குதே
படிக்கவே பயமாக இருக்குது
பதிவாக்க அறியத் தந்தமைக்கு நன்றி

விழித்துக்கொள் said...

theriyadha kodumaiyaana noyaipattri theriviththtamaikku nandri
surendran

MANO நாஞ்சில் மனோ said...

பயமா இருக்கே, கொடுமையா இருக்கே....!!

Unknown said...

Dear varun,
Pls see this site.
this have link
http://www.anatomictherapy.org/

வருண்
இந்த வெப் சைட்ட பாருங்க...
http://www.anatomictherapy.org/
120 வயசு வரை எந்த நோயும் வராம இருக்குற முறை இருக்கு ..
வைத்தியம் முற்றிலும் இலவசம்
அதன பெண்ணுக்கு இந்த முறைய சிபாரிசு பண்ணுங்க
நன்றி
வினோத்