Tuesday, September 18, 2012

எய்ட்ஸுக்கு சித்தமருந்து கண்டுபிடித்த ஜெயமோகன்?

"என்ன சொல்றீக? மருந்து கண்டுபிடிச்சிட்டாரா? நம்ம ஜெயமோகனா?"

"ஆமா!"

"நெஜம்மாவா?"

"இதையே எத்தனை முறை திரும்பத் திரும்ப கேக்கப்போற?"

"இல்ல ஆச்சர்யமா இருக்கே?"

"ஐந்தாவது மருந்துனு ஒரு கட்டுரை மாதிரி கதையெழுதி, அதில் சில கேரக்டர்களை உருவாக்கி சொல்லியிருக்காரு"

"என்ன மாரி மருந்தாம்?"

"எல்லாம் உலகப் புகழ்பெற்ற நம்ம சித்த வைத்தியம்தானாம்! அதை வச்சுதானே நாம் எல்லாவியாதியையும் குணப்படுத்தினோம்?"

"எல்லா வியாதியையுமா?"

"ஆமா, நம்ம கடவுள் சத்ய சாய்பாபாவை எப்படிக் காப்பாத்த முயன்றோம்? சித்த மருத்துவமணையில்தானே அவர் நம்மைவிட்டுப் போனாரு? மறந்துட்டியா?!'"

"ஏய்! நீ சும்மா ஜெயமோஹனை வச்சு காமடி கீமடி பண்ணலையே?"

"சே சே! அவரு எவ்ளோ பெரிய மனுஷன்"

"என்ன மருந்துனு எனக்கு புரியிறாப்பிலே சொல்லேன்?"

"ஜெயமோகன்,  உண்மையைப் பொய் போல, கட்டுரையை கதைபோல எழுதிச் சொல்லியிருக்காரு. அதை படிச்சுப் பார்த்து புரிந்துகொள்வது உமது சாமர்த்தியம்"

"ஏய் ஏய் நீயே சொல்லிடு!"

"இந்தா பாரு! ஒருத்தர் கஷ்டப்பட்டு எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிச்சு, அதை அடக்கமாக புனைவுபோல சொல்லியிருக்காரு. அதை படிச்சு புரிஞ்சு கொள்றதுக்கு உனக்கு சோம்பேறித்தனம்?"

"எனக்கு அவர் கதை புரியாது!"

"ஏன்? தமிழ்த் தெரியாதா உனக்கு?"

"இல்லை! அவர் எழுதுற சுத்தமான தமிழ் புரியாது!"

"அப்போ எய்ட்ஸ் வந்தால் சாவு!"

"எனக்கு எய்ட்ஸ் இல்லை! நான் எச் ஐ வி நெகட்டிவ்!"

" சித்த வைத்தியத்தில் கண்டுபிடிச்சியா?'

"இல்லை, எச் ஐ வி ஆண்ட்டிபாடி இல்லைனு சொன்னேன். அல்லோப்பதிதான்"

"அல்லோபதியாவது க்ரோர்பதியாவது! சித்த வைத்தியம்தான் சரியான விடையைச் சொல்லும்! உனக்கு எய்ட்ஸ் இல்லைனா,அவர் கதையை படிக்காதே! படிச்சாலும் புரியாது!"

"எய்ட்ஸ் இருந்தால் புரிஞ்சிருமா?"

"அதுக்காக எய்ட்ஸை வாங்கிட்டு வந்து படிச்சு புரியலைனு சொல்லாதே!"

"உனக்கு இன்னைக்கு நாந்தான் கெடச்சனா?"

"ஆமா, நம்ம பேசியதையெல்லாம் இணையத்தில் போட்டு நீ ஒரு மரமண்டைனு மானத்தை வாங்குறேன்! என்ன உன் பேரை மட்டும் போடமாட்டேன்."

"போடா இணையதளப் பொறுக்கி!"

"ஹா ஹா ஹா!"

2 comments:

Easy (EZ) Editorial Calendar said...

நல்லா தான் கதை விட்டு இருக்கீங்க..

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

வருண் said...

***நல்லா தான் கதை விட்டு இருக்கீங்க..***

என்னவோ போங்க! :)