Monday, December 17, 2012

கவுதம் மேனனுக்கு எப்படி ஜால்ரா அடிப்பது?

நான் ஒரு கவுதம் மேனன் ஜால்ராங்க!  எப்படியோ கெளதம் மேனன் எடுத்த நடு நிசி நாய்கள் படத்தை வித்தியாசமான பார்வையில் பார்ப்பதாகச் சொல்லி சிறந்த படம்னு  விமர்சனம் எழுதி அவருடைய நன்மதிப்பை ஓரளவுக்குப் பெற்றேன். என்னது?  "படம் நல்லாயிருந்ததுனா  நல்லாயிருக்குனு எழுது.  நல்லாயில்லைனா நல்லா இல்லைனு எழுது. விமர்சனம் என்கிற பேரில் விபச்சாரம் பண்ணக்கூடாது" னு  மேதாவிகள் சொல்றானுகளா!  ஆமா,  ஊர் உலகம் ஆயிரம் சொல்லும்!  அதனாலென்ன? ஊர் ஒலகம் நமக்கு சாப்பாடு போடாது! மேதாவிகள் சொல்றதையெல்லாம் நம்ம சீரியஸா எடுக்கப்படாது!

என்ன நடுநிசி நாய்கள் விமர்சனத்துக்கு வந்த எதிர்ப்புக்கெல்லாம் எப்படியோ "உண்மையைத்தான் எடுத்தாரு", "உனக்கு திறந்த மனசு இல்லை" "கலாச்சாரக் காவலர்கள் சும்மா உண்மையை ஏத்துக்க மாட்டேன்கிறாங்க" அப்படி இப்படி னு சொல்லி எப்படியோ நான் சமாளிச்சுட்டேன்.

இப்போ மறுபடியும் என் கெட்ட நேரம்!

அதான் இந்த "நீதானே என் பொன் வசந்தம்" விமர்சனம் எழுத வேண்டிய கட்டாய சூழல் எனக்கு!

படம் நல்லாவேயில்லைனு எல்லாரும் சொல்லிட்டானுக. என்னங்க ஒருத்தன்கூட இந்தப்படம் நல்லாயிருக்குனு இதுவரை சொல்லவில்லை!  ஆமா, படம் குப்பையாப் போச்சு! இப்போ நான் என்ன பண்ணுறது?  என்னனு விமர்சன்ம எழுதி அழறது?

 நம்ம என்னதான் கவுதமுக்கு ஜால்ரா அடிப்பதுபோல் விமர்சனம் எழுதினாலும் ஓரளவுக்காவது- கொஞ்சமாவது  நியாயமா எழுதனும். அப்படி எழுதினா இந்தப்படம் நல்லாயில்லைனு சொல்லியேதான் ஆகனும்!  எவனுக்குத்தான் அவன் படம் நல்லாயில்லைனு விமர்சிச்சாப் பிடிக்கும், சொல்லுங்க? கவுதம் மேனன் என்ன விதிவிலக்கா? அப்படி ஒரு விமர்சனம் எழுதிய, அவன் படம் பிடிக்காத எனக்கு,  எப்படி அந்தாளு வாய்ப்புத் தருவான்? இல்லை நட்பு பாராட்டுவான்? உண்மையா நான் விமர்சனம் எழுதினா எனக்கு கவுதம் மேனனிடம் கெடைக்கப்போவது கெட்ட பெயர்தான்! சந்தேகமே இல்லை! இப்போ என்ன பண்ணுறது?

ஒண்ணு பண்ணலாம்.. இப்போதைக்குப் படம் பார்க்கல, படம் பார்க்க முடியலை, டிக்கட் கெடைக்கலை, வேற தியேட்டர் போயிட்டேன்..னு எதையாவது கதை எழுதி தப்பிச்சிட வேண்டியதுதான். என்ன இப்போ? ஒரு 10 நாள் ஓடட்டும், படம் ஓப்பனிங் கலக்சன் எல்லாம் ஆகி முடிக்கட்டும் அப்புறம் எழுதுவோமே ஓரளவுக்கு சுமாரான  விமர்சனம்? இல்லைனா விமர்சனம் எழுதாமலே விட்டுப்புடுவோம்!

என்னை யாருனு உங்களுக்குத் தெரியுதா?  என்ன அது? ஆமா ஆமா, நான் ஒரு பதிவுலக வியாபாரி! :-)

4 comments:

சேக்காளி said...

போங்கய்யா நீங்களும் ஒங்க ராஜாவும்
http://www.sekkaali.blogspot.com/2012/09/blog-post.html

புதிய கோணங்கி ! said...

வணக்கம் சேகரண்ணே
நல்லா இருக்கீங்களா

வருண் said...

***புதிய கோணங்கி ! said...

வணக்கம் சேகரண்ணே
நல்லா இருக்கீங்களா***


வாங்க புதிய கோணங்கியண்ணா!

சாவைநோக்கி போயிண்டு இருக்கேன். :( அதான் டிசம்பெர் 21, 2012 வருதாமில்லை?

பிரியங்களுடன்
வருண் :-)

சேக்காளி said...

வரும் ஆனா வராது.
(அதான் டிசம்பெர் 21, 2012 வருதாமில்லை?)அது கண்டிப்பா வரும்.சாவைநோக்கி போயிண்டு இருக்கேன்.சாவு வராது.பயப்படாதீங்க.