"இது என்ன கதை? படு மட்டமா இருக்கு!"
"ஏன் இந்தக் கதைக்கு என்னடி?"
"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க?"
"சும்மா ஒரு கதை! அவ்ளோதான்!"
"சும்மா ஒரு 200 வரி எதையாவது லூசுத்தனமா பத்தி பத்தியா எழுதி ,அதை கதைனு நீங்க சொல்லிட்டா அது கதையாயிடுமா?"
"ஏன் ஆகாது? எல்லாரும் அப்படித்தானே எதையாவது கதைனு எழுதுறாங்க?"
"அதுக்காக? இது மாதிரியா? நீங்க நல்ல கதை எல்லாம் தமிழ்ல படிக்கிறதே இல்லையா?"
" நானும் பல கதைகளைப் படிச்சுட்டு "இது என்ன கதை? படு மட்டமா இருக்கு"னு தான் உன்னைமாரியே நெனைக்கிறேன். "
"ஹா ஹா ஹா! உங்களுக்கும் கதை எழுதத் தெரியலை. அடுத்தவா எழுதுற நல்ல கதையையும் பாராட்டத் தெரியலை. ஆனா நெனப்பு மட்டும்.."
"இந்தா பாரு, வசந்தி! நான் கதை எழுதுறேன்னு எவன் எழுதியதையும் தழுவி எழுதுறது இல்லை. ஏதாவது ஒரு கருத்தை சொல்லணும்னா அதை கதை வடிவுல சொல்றது அவ்ளோதான்."
"சரி அப்படியே இருக்கட்டும்! இந்தக் கதையில் வர்ர உங்க பவித்ராவைப் பத்தி என்ன சொல்ல வர்ரீங்க?'
"அப்படினா?"
"இல்லை அவளுக்கு எந்த ஆம்பளையையும் பிடிக்கலைனு சொல்றீங்க. சரியா?'
"ஆமா!"
"அப்போ அவளுக்கு காம உணர்ச்சிகளே, உணர்வுகளே கெடையாதா?"
"நீ என்ன கதை படிச்ச? அவளுக்கு அழகான கவர்ச்சியான் பெண்களைப் பார்த்தால் ஒரு மாதிரி அட்ராக்சன் இருக்கிறப்பிலேதானே எழுதியிருக்கேன்?"
"அப்படினா?"
"அப்படினா பவித்ராவுக்குப் பெண்களைப் பிடிக்கிதுனு சொல்றேன். பெண்கள் மேலே ஒரு அட்ராக்சன்"
"அப்படினா?"
"அப்படினா, அப்படித்தான்!"
"இப்படியெல்லாம்.. பவித்ரா மாதிரி உண்மையிலேயே யாரும் இருப்பாங்களா என்ன?"
"மேலை நாடுகள்ல எல்லாம் இதையெல்லாம் சாதாரணமாக ஏத்துக்கிட்டாங்க! ஹை ஸ்கூல்லயே அவங்க செக்ஸுவல் ஓரியண்டேஷனை கண்டுபிடிச்சு, நான் "straight" நான் "gay"னு தெளிவா சொல்லிடுறாங்க. அதை எல்லாரும் ஏத்துக்கவும் செய்றாங்க. நம்ம ஊர்லதான் இன்னும் இதை பெரிய தப்பாக்குறாங்க! ஒரு 30 வருடத்துக்கு அப்புறம் இவ்ங்களும் இதை ஏத்துக்குவாங்க! இது மாரித்தான் எல்லா விசயத்திலும் நம்ம ஒரு 30 வருடம் பின் தங்கி இருக்கோம்!"
"சரி, இதை சொல்லுங்க! அது மாதிரி உணர்வுகள் இருக்கிற பெண்களுக்கு ஒருவேளை எஸ்ட்ரோஜனுக்கு பதிலா ஆண்களுக்கு சுரக்கும் டெஸ்டாஸ்டீரோன் சுரக்குமா?'
"அதுதான் இல்லை! இது ஹார்மோனல் பிரச்சினை இல்லைனு சொல்றாங்க!"
"சரி, இந்தப் பவித்ரா இன்னொரு பெண்னோட சேர்ந்து வாழ்றானே வச்சுக்குவோம். இது என்ன வாழ்க்கை அவள் வாழ்றது? இதுல என்ன சந்தோசம் கிடைக்கும்?"
"மொதல்ல சந்தோசமான வாழ்க்கைனா என்னனு சொல்லு!"
"யாராவது ஒரு நல்ல பார்ட்னரை தேர்ந்தெடுத்து, அவரைக் கல்யாணம் பண்ணி, குழந்தைகள் பெற்று, அவர்களை வளர்த்து ஆளாக்கி, அவங்க வளந்ததும் நம்ம நிம்மதியா வயதாகி சாகிறது."
"இதுதான் பலருக்கு சந்தோசமான வாழ்க்கை! இதுலயும் மாரிட்டல் ப்ராப்ளம்ஸ், செக்ஸுவல் ப்ராப்ளம்ஸ், இன்ஃபெடிலிட்டி, கணவன் ஏமாத்துவது, மனைவி கணவனை ஏமாத்துவது, மிட் லைஃப் க்ரைஸிஸ், அது இதுனு இருக்கத்தான் செய்யுது. சரி, எல்லாரும் இப்படித்தான் வாழணும்னு இல்லையே, வசந்தி!"
"அப்படினா?"
" நல்லா இருந்த ஒரு ஆளுக்கு 25 வயதில் திடீர்னு ஒரு நாள் கால்ப்பந்து ஆடும்போது "படாத இடத்தில்" பந்து அடித்து, அந்த இடத்தில் அடி பட்டதால, ஆண்மை இல்லாமல் போயிடுதுனு வச்சுக்குவோம்.."
"சரி"
"அவர் இனிமேல் இதுபோல் நீ சொன்ன ஒரு சாதாரண வாழக்கை வாழ முடியாது"
"அதனால?"
"வாழ்க்கை பூரம் அவர் இந்த ஆக்ஸிடெண்டை நினைத்து, தான் இழந்ததை நினைத்து அழது அழுது புலம்பி வாழணுமா, அவரு? இதுதான் அவருக்கு வாழ்க்கையா? இல்லைனா, செக்ஸை மட்டும் விட்டுவிட்டு, விளையாட்டு அது இதுணு மற்றவைகளில் தன் மனதைச் செலுத்தி சந்தோஷமாக அவர் வாழ கத்துக்கணுமா?"
"இது ஒரு ஸ்பெஷல் கேஸ்"
"இந்த மாரி சில விபத்துகளால் பிறப்புறுப்பை பாதியில் இழக்கிறவங்களும் இந்த உலகில் வாழ்த்தான் செய்றாங்க. உடனே அவங்க எல்லாம் தற்கொலை பண்ணிட்டு செத்துடுறது இல்லை!"
"எதுக்கு அதுபோல் ஒருவரைப் பற்றி நீங்க இப்போ யோசிக்கணும்னு தெரியலை!"
"கோவிச்சுக்காதே! இப்போ நெறையப்பேருக்கு மார்புப் புற்றுநோய் வருதுணு சொல்றாங்க. கொஞ்சவயதிலே பல பெண்களுக்கு வருது. அவங்க அதை "ட்ரீட்" பண்ணிட்டு கேன்சர் சர்வைவராக வாழத்தான் செய்றாங்க! ஏன் உனக்குக்கூட ஒரு நாளைக்கு வரலாம்!'
"இப்போ எதுக்கு இதைப் பத்தி எல்லாம் சொல்லி என்னை மூட் அவ்ட் ஆக்குறீங்க?'
"இங்க பாரு! நீ சொல்றபடி. ஒரு சாதாரண வாழ்க்கை எல்லாருக்கும் அமைவதில்லை! அவர்களும், இந்த உலகில் நம்மோட வாழ்ந்துகொண்டுதான் இருக்காங்க! அவங்களுக்கும் வாழ்க்கையில் இன்பம் துன்பம் எல்லாம் வந்து போயிட்டுத்தான் இருக்கு! சரியா?"
" "
"என்ன பேச்சையே காணோம்?"
"ப்ரெஸ்ட் கேன்சர் யாருக்குனாலும் வரலாமா?'
"அப்படித்தான் சொல்றாங்க"
"இல்லை அதுக்கப்புறம், சர்ஜரிக்கு அப்புறம்... வாழ்க்கை அவங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரே டிப்ரெஷனா இருக்காதா?"
"என்ன பண்ணுறது? வாழ்க்கையை வேறமாரிப் பார்த்து வாழ்க் கற்றுக்கணும். நெனச்சதும் சாகவா முடியும்?"
"ஆமாம். நெனச்ச நேரம் சாக முடியாது இல்ல? பல ரெஸ்பாண்ஸிபிலிட்டிகள் இருக்கும் நமக்கு இல்லை?"
"அதைத்தான் சொல்றேன். ஒருவரின் வாழ்க்கை எப்ப வேணா எப்படி வேணா தலை கீழாக மாறலாம். ஒருவருக்கு திடீர்னு பல இழப்புகள் ஏற்படலாம்.. அதையெல்லாம் பார்க்கும்போது ஒரு பெண் "ஓரினச்சேர்க்கை"யில் ஆர்வம் உள்ளவளா அவள் தன்னை உணர்ந்து அதற்கேற்றார்போல் அவர் வாழ்க்கையை அமைப்பது ஒண்ணும் பெரிய தப்பில்லை!'
"ஆக உங்க பவித்ரா கதை உலகுக்கு ரொம்பத்தேவையான ஒண்ணுனு சொல்றீங்களா?'
"நான் அப்படி சொல்லவில்லை!"
"என்னதான் சொல்றீங்க?"
"அந்தக் கதையை நீ இவ்ளோ மட்டம் தட்ட வேண்டியதில்லை!"
"உங்க கதைனால "ரொம்ப நல்லாயிருக்கு"னு பொய் சொல்லணுமா நான்?"
"மக்கு! அது என் கதையே இல்லைடி! யாரோ ஷாமளா னு ஒரு அம்மா "நெட்" ல எழுதிய கதை! நான் எழுதினமாரி, "காப்பி பேஸ்ட்" பண்ணி உன்னிடம் காட்டினேன்."
"ஆக இது உங்க கதையே இல்லை?"
" இப்போச் சொல்லு! கதை எப்படி இருந்தது?"
"உங்க கதை இல்லாதனால..இப்போ யோசிச்சுப் பார்த்தால் கொஞ்சம் அர்த்தமுள்ளதாகத்தான் இருக்கு!"
**********
4 comments:
அது சரி.
விவரங்கள் நிறைந்திருந்திருக்கும் உங்கள் கதை நல்லா இருக்கு.
நல்ல கதை சகோ. இப்புடியலாம் சொன்னாக் கூட கேட்க மாட்டேன்பாங்க ! என்ன தான் தாம் தூம்னு குதிச்சாலும் 30 ஆண்டுகள் கழித்து ஏத்திட்டுப் போவாங்க ..
***சே. குமார் said...
அது சரி.
விவரங்கள் நிறைந்திருந்திருக்கும் உங்கள் கதை நல்லா இருக்கு. ***
வாங்க, குமார்! நன்றி :)
***இக்பால் செல்வன் said...
நல்ல கதை சகோ. இப்புடியலாம் சொன்னாக் கூட கேட்க மாட்டேன்பாங்க ! என்ன தான் தாம் தூம்னு குதிச்சாலும் 30 ஆண்டுகள் கழித்து ஏத்திட்டுப் போவாங்க ..***
வாங்க, இகபால் செல்வன்!
30 வருடத்திற்கு பிறகும் இந்தக் கதை இணையத்தில் இருக்கும். அப்போ வந்து இதுபற்றி என்ன பின்னூட்டம் இடுறாங்கணு பார்ப்போம். :)
Post a Comment