நம்ம ஊர் முன்னேறிவிட்டதா? இல்லையா பின்னே? அந்தக் காலம் போலில்லாமல் ஒரு பெண் தாய்மையடைலை, அல்லது அவருக்கு கர்ப்பப் பையில் அல்லது கர்ப்பம் அடைவதில் ஏதோ சிறு குறை என்பதால் குழந்தை பிறக்கலைனா டாக்டரிடம் போயி என்னனென்னவோ செய்து ஒரு பிள்ளையைப் பெத்து எடுத்துட்டு வந்துடுறாங்கப்பா! என் சொந்தத்திலேயே பலருக்கு இப்படி குழந்தை பிறந்து கொண்டு இருக்கிறது. அப்படியும் முடியலைனா யாராவது ஒரு வாடகைத் தாயை பணம் கொடுத்து வாங்கிட்டு வந்து குழந்தை பெத்துக்கிறாங்க. என்னுடைய சித்தி, அம்மாவின் கஸின் (தங்கை) ஒருவருக்கு குழந்தை பிறக்கவே இல்லை. இன்று (55 வயதுக்கு மேலான பிறகு) குறையுள்ள பலருக்கும் "இந்த நவீன வழியில்" குழந்தை பிறப்பதைப் பார்த்து, "அப்போ, என் காலத்தில்
இதுபோல் வைத்திய வசதியெல்லாம் இல்லாமல்ப் போய்விட்டதே" என்று இப்போ வயதான காலத்தில் அழுதழுது
கிடக்கிறார்.
பை பாஸ் சர்ஜரி, ஆஞ்சியோப்ளாஸ்ட் சர்ஜெரி எல்லாம் சாதாரணமாப் பண்ணுறாங்க.
ஹெல்த் காண்சியஸ்னெஸ் வந்து வாக்கிங், ஜாகிங்னு கிராமங்களில்கூட ஆளாளுக்கு காலையில் எழுந்து குடும்ப சகிதமாக நடக்க ஆரம்பிச்சுட்டாணுக!
கிட்னி பழுதடைந்தால், யாராவது ஒரு ஏழையிடம் ஒரு விலை கொடுத்து கிட்னி வாங்கிட்டு வந்து பொழைச்சுக்கிறாங்க.
இதெல்லாம் நம்ம ஊரில் மெடிக்கல் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றங்கள்தானே?
சரி, தலைப்புக்கு வருவோம்..
எதார்த்தமாக நீயா நானா பார்த்தால் ..
பொண்ணுங்க, சிறுமிகள் எல்லாம் "லவ் லவ்"னு காதல், தன் காதலன், அவர் கொடுக்கிற முத்தம்னு எல்லாவற்றையும் ஊரறியப் பேச வந்துட்டாங்கப்பா!
இதில் ரெண்டு க்ரூப்பா உக்காந்து இருந்தாங்க. மொதல்ல எனக்கு சரியாப் புரியலை, காதல் சரினு ஒத்துக்கொள்ளும் இந்த இரண்டு குழுவும் எப்படிப்பா எதிர் எதிரணி என்று.
அப்புறம் நான் புரிந்துகொண்டது..
* காதலனுக்காக எதை வேணா விட்டுக் கொடுப்பேன், என்னை எப்படிவேணா மாத்டிக்குவேன்னு ஒரு அணி (உணர்ச்சி வசப்படும் காதலிகள் அணி போல)!
* காதலன்னா என்ன? என்னுடைய தனித்துவத்தை, சுயமரியாதையை, தனி விருப்பங்களை, ("கணக்கு கணக்கா இருக்கணும்") எல்லாவற்றையும் எல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது னு கொஞ்சம் பகுத்தறிதலுடன் காதலிக்கும் பெண்கள் இன்னொரு பக்கம் போல!
அட அட அட என்னமா லவ் பண்ணுறாங்க! ஓரக்கண்ணில் பார்க்கிறதிலே இருந்து, கட்டிப் பிடிக்கிறது, முத்தம் கொடுப்பது எல்லாத்தையும் "பச்சை பச்சையா"ப் பப்ளிக்காப் பேசுறாங்கப்பா!!!
பொதுவாக காதல், இளம்பெண்கள் காதலில் விழுவது என்பதெல்லாம் நம்ம சமுதாயத்தில் காலங்காலமா இருந்துகொண்டுதான் இருக்கிறது. பாட்டி பாட்டன் காலத்திலிருந்தே காதல், காதலிப்பது என்பது இருக்கத்தான் செய்யுது. அந்தக்காலத்துப் பாட்டிகள்கூட யாரையாவது காதலிச்சுத்தான் இருப்பாங்க! 99% காதல் கைகூடாமல் போயி, யாரையாவது படிச்சவர், பசையுள்ளவர், நம்ம சாதிக்காரர்னு ஜாதகம் பார்த்து ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கொண்டு, பழசை மறந்து கற்பு வாழ்க்கை வாழ்ந்து இருப்பாங்க. ஆனால் அதைப் பத்தி ஊரெல்லாம் பார்க்கிறாப்பிலே, கேக்கிறாப்பிலே என்றுமே பேசமாட்டாங்க.
"மறைத்தல்"தான் காதலுக்கு தனி அழகு என்று காலங்காலமாக நம்ம சமுதாயத்தில் நம்பப்பட்டது. ஒரு பெண் நிர்வாணமாக தன் அழகைக்காட்டி அலைவதைவிட, அவளுடைய வளைவு, சுழிவுகளை, கவர்ச்சியான உடலை மறைத்தால்தான் அதற்கு "இன்னும் கவர்ச்சி" "மேலும் அழகு" என்று இன்றும் நம்புவதுபோல், காதலையும், காமத்தையும் அந்தரங்கமாகவோ, மனதுக்குள் புதைத்தோ, அல்லது நாலு சுவர்க்குள்ளே வைத்தோப் பேசுவதுதான் அழகு என்றுதான் நம்பினார்கள்.
அப்படி மறைப்பதுதான், தம் காதலை, காதலனை தமக்குள்ளேயே வைத்திருப்பதுதான் காதலுக்கும், காமத்திற்கும் அழகு என்று நம்பி இவைகளை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டாடிக் கொள்வார்கள், கொண்டார்கள். ஊரறிய இதைப் பத்தி ஒருபோதும் பேசமாட்டார்கள்!
ஆனால் இன்று?
அடேங்கப்பா!!!
Honestly, naked women never look attractive to me. So are the girls who come forward and talk about their personal matters like "love" and "lovers" "sex" and "intimacy" to the world.
It was kind of ticklish to me! For some reason I did not like that at all. May be like-minded women, enjoyed such an episode? I dont know!
Showing posts with label நீயா நானா. Show all posts
Showing posts with label நீயா நானா. Show all posts
Wednesday, March 12, 2014
Monday, March 4, 2013
அமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி !!
மகன் ஆக்ஸிடெண்ட்ல இருந்துட்டான்! மகனுக்கு புற்று நோய்! மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான்! மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு! னு உலகறிய டி வியில் வந்து அழும் அம்மாமார்களை நம் தாயைப்போல் மதிக்கவும் அவங்களுக்காக கண்ணீர் விடவும் தோன்றுவது மனித இயல்பு. அவர்கள் பட்ட துயரம் நம் வாழ்க்கையிலும் ஒரு சின்ன தடுமாற்றத்தை சில நிமிடங்களோ, சில மணிநேரங்களோ, சில நாட்களோ ஏற்படுத்துவதுண்டு. நாமெல்லாம் நல்லவர்களோ இல்லை கெட்டவர்களோ ஆனால் இதயம் இல்லாதவர்கள் அல்ல!
ஆனால், "என் தேசம் என் மக்கள்" ல மகன்களை எவ்ளோவோ காசைச் செலவழிச்சு படிக்கவச்சு பெருமைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துவிட்டு பணம் பகட்டுனு மகன் கிழிக்கிற கிழிப்பைப் பார்த்து ரசித்துக்கொண்டு, திமிருடனும், பெருமையுடன் வாழும் ஒரு தாய் வந்து, "என் மகன் அமெரிக்காவுக்கு பரதேசம் போயிட்டான், ரொம்ப மிஸ் பண்ணுறேன்" னு கோபிநாத்துடன் சேர்ந்து ஒப்பாரி வைப்பதை எல்லாம் சகிக்க முடியாது! கேவலமாயிருக்கு அதுபோல் ஒரு தாய்வந்து ஏதோ சினிமா நடிகைமாரி நீலிக்கண்ணீர் விட்டு அழுவது!
You and your son chose this ****ing life! Why are you coming in TV and crying about it as if someone forced you to do so, IDIOT?!
என் தேசம் என் மக்கள்னு இதுபோல் பணக்கார, பகட்டுடன் வாழும் அரைவேக்காடுகளை வைத்து பொழைப்பு நடத்தும் கோபிநாத், இனிமேல் மரியாதையாக அந்தம்மா வீட்டுக்குப்போயி சேர்ந்து ஒப்பாரி வைத்துவிட்டு, ஆறுதல் சொல்லிவிட்டு வருவது நல்லது!
TV ல வந்து இதுபோல் நீலிக்கண்ணீர்விடும் அம்மாக்களை ஒதுக்கிவிட்டு வேற ஏதாவது சமுதாயத்துக்கு தேவையான பிரச்சினைகளை இனிமேல் பேசலைனா, கோபிநாத்க்கு இனிமேல் பலவிதமான அர்ச்சனைகள் நடக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

Subscribe to:
Posts (Atom)