ஈ வெ ரா பெயரே இராமசாமி. அது ஒரு சமஸ்கிரதப் பெயர். நம்ம ராம் பகவான் பெயர்! நாத்திகர்கள் அதை ஏன் வைத்துக்கொண்டு அலைகிறீர்கள்? உங்க பேரு வருண், ஏன் எங்க வருண பகவான் பேரை வைத்துக் கொண்டு அலைறீங்க?
இதெல்லாம் யாரு பேசுறா? யாரு இப்படிக் கேள்வி கேட்பது?
பகுத்தறிவு வாதி என்று பிதற்றும் நாத்திகனா? இல்லை! அப்போ யார் இதுபோல் கேள்விகள் கேட்பது?
பக்தகோடிகள்!
பக்தர்கள் எப்படி இப்படியெல்லாம் பகுத்தறிய ஆரம்பித்துவிட்டார்கள்?? இதுபோல் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்! அப்போ பக்தர்களுக்கும் பகுத்தறிவுவாதிகளா?
ஆறாவது அறிவு உள்ள அனைவருமே பகுத்தறிவுவாதிகள்தான்.
தன் வசதிக்காக பகவானை பலவடிவங்களில் உருவாக்கி, தஙகளையே ஏமாற்றிக்கொள்ளும் பக்தர்களாக இருந்தாலும் சரி, அப்படி உருவாக்கிய கடவுளை மதிக்காத நாத்திகனாக இருந்தாலும் சரி எல்லாருமே பகுத்தறிபவர்கள்தான். ஆனால் என்ன? நாத்திகனிடம் மட்டும் இந்த பக்தசிகாமணிகள் பகுத்தறிவு பேசுவார்கள். பகவானிடமோ அல்லது பார்ப்பனர்களிடமோ இதுபோல் கேள்விகளை அவர்கள் கேட்பதில்லை! ஆக உலகில் பகுத்தறியாதவனே கிடையாது. அவன் நாத்திகனாக இருந்தாலும் சரி. ஆத்திகனாக இருந்தாலும் சரி. பண்டாரமாக இருந்தாலும் சரி. புரியுதா?
பக்தப் பதர்களே! நீங்கள் ஏன் உங்க மூளையில்லாத பகவானையும், சாதிய அடையாளங்களையும், அழுக்கு நூலையும் கட்டி அழும் பார்ப்பனர்களையும் இதேபோல் கேள்வி கேட்கக் கூடாது?
உண்மைதான் வீரமணி இஸ்லாமியரையும், கிருத்தவர்களையும், யூதர்களையும் கேள்வி கேட்பதில்லை!
அதேபோல் கடவுள் கடவுள் என்று இல்லாத ஒன்றை உருவாக்கி, கட்டி அழும் நீவீர் ஏன் அதைப் பற்றிப் பகுத்தறியக் கூடாது?
பக்தப்பதர்களே!
இந்துக்கள் அனைவரும் நாத்திகர்களாகிவிட்டால்? பகுத்தறியும் பண்டாரங்கள் எல்லோருமே கடவுள் என்பதே கற்பனைதான் என்பதை உணர்ந்து திருந்திவிட்டால்?
வீரமணி எப்படிப்பா பொழைப்பை ஓட்டுவார்?
ஒண்ணு செய்யுங்கப்பா, பண்டாரங்கள். பக்தர்கள், பார்ப்பனர்கள் அனைவரும் பகவானைப் பகுத்தறிந்து, பகவான் என்பதே கற்பனை என்பதை உணர்ந்து பகுத்தறிவுவாதியாக மாறி, இல்லாத கடவுளையும், இந்து அடையாளத்தையும் தூக்கி எறிங்கள்.
நான் இந்து என்பதன் அர்த்தமென்ன? உங்கள் வசதிக்காக நீங்கள் உருவாக்கிய கடவுள்கள்தான் இவைகள் எல்லாம்! பெரியாரின் பெயரைப் பகுத்தறிவதுபோல், பகவானையும் பகுத்தறிந்து உங்களை இந்து என்றும், இவர்கள் எல்லாம் எங்கள் கடவுள்கள் என்றும் சொல்வதை முதலில் நிறுத்துங்கள்.
அப்படிச் செய்தால்?
வீரமணி, பார்ப்பனர்களையும், பக்தர்களையும் விட்டுவிட்டு இஸ்லாமியர்களையும், கிருத்தவர்களையும் விமர்சிக்கப் போய்விடுவார்.
ஆக, பக்தப்பதர்களான, பார்ப்பன அடிவருடியான நீங்கள்தான் வீரமணியை மற்ற மதத்தவரை நோக்கி அனுப்ப ஊக்குவிக்க முடியும்.
பக்தப்பதர்களே!
திருந்துவீர்களா?
என்ன? என்ன?
உங்க பகவானிடம் கேட்டு சொல்றீங்களா?
பார்ப்பனர்கள் உஙகளை கொலைவெறியுடன் முறைக்கிறார்களா? அப்பாவிப் பார்ப்பனர்களுக்கு கொலை வெறி வருகிறதா?
அதே வெறியா? சங்கர் ராமனையும், காந்தியையும் போட்டுத்தள்ளிய அதே வெறியா?
பார்ப்பனர்கள் அப்பாவி இல்லையா?
புரிந்தால் சரி!
9 comments:
என்ன இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க? சங்கர் ராமன் தனது கையாலேயே தானே தன்னை வெட்டிக்கொண்டு செத்தார் என்பது உங்களுக்கு தெரியாதா?
சங்கர் ராமனின் மனைவியார் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால் இறுதியில் சங்கராசாரியை அடையாளம் காட்ட மறுத்திருப்பார்?
இப்படி இன்னும் பலர் இருக்கிறார்கள் தமிழகத்தில். தா. கிருட்டிணன், தினகரன் ஊழியர்கள் என்று பலர்.
தமிழகத்தின் சாபக்கேடு.
தங்கள் கருத்துக்கு நன்றி, சத்யப் பிரியன்.
மற்றவர்களைப் பத்தி தெரியவில்லை, என்னைப் பொருத்தவரையில், சங்கர் ராமன் கொலயாளிகளும், கொலை செய்ய தூண்டியவர்களும், தா கிருட்டிணனை கொலை செய்தவர்களும், அவர்களைத் தூண்டியவர்களும் உள்ளே போகணும்.
இவன் வெளிய இருப்பதால் இவனும் வெளியே இருக்கணும் என்கிற லாஜிக்கை என்னால் ஏற்றுக்க முடியாது. ரெண்டு பேரையும் பிடிச்சு உள்ள போடுங்க என்பதே என் நிலைப்பாடு!
//
இவன் வெளிய இருப்பதால் இவனும் வெளியே இருக்கணும் என்கிற லாஜிக்கை என்னால் ஏற்றுக்க முடியாது. ரெண்டு பேரையும் பிடிச்சு உள்ள போடுங்க என்பதே என் நிலைப்பாடு
//
அதை தான் நானும் sarcastic ஆக சொல்ல வந்தேன்.
May be I am not good at sarcasm.
ஆட்சியோ, அதிகாரமோ, பணமோ இருப்பவன் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தான் இன்றைய நிலையாக இருக்கிறது.
1000 ஆண்டு கால மடத்தின் தலைவர் என்பதாலேயே ஒருவர் கொலை கூட செய்யலாம், அவரை காப்பாற்ற மத்திய அமைச்சர்கள் கூட முயலுவார்கள். ஆனால் ஏழை சங்கர ராமனுக்கு ஒன்றும் கிடைக்காது.
I believe in karma. If the law of the land does not work, karma will take these bitches out.
Sathya priyan: Your sarcasm was fine! I just wanted make my stand clear on this. That's all.
***I believe in karma. If the law of the land does not work, karma will take these bitches out. ***
When the law and judicial system give up on us, and we when learn that "life is not fair" one another time, we just have to believe in something. So, believing in "Karma" is one of the "solutions" I guess! :-)
நீங்க வேற வருண், ஒரு கோஷ்டி நான் முஸ்லிமா? இந்துவா? என தனிப்படை அமைச்சு ரொம்ப நாளா விசாரிச்சு, இத்தனைக்கும் நான் இரண்டும் இல்லைப்ப ஆளை விடுங்க என பலமுறை சொல்லியும் கேட்க்கலை.. இந்த மாதிரி கேஸ்கள் எல்லாம் அப்படித் தான்..
சங்கர்ராமன் தன்னாத்தானே வெட்டிக்கிட்டு கொலை பண்ண கதை இருக்கே, ஷப்பா. சினிமாவில் கூட இப்படி நடந்திருக்காது அவ்வளவு அயோக்கியத் தனம்..
அப்புறம் தா. கிருட்டிணன் வாங்கிங்கி போனப்ப தன்னைத் தானே கொலை பண்ணிய சம்பவம்.
புனேவியில் நரேந்திர தபோல்கார், இப்போ மும்பையில் கோவிந்த பன்சாரே கூட வாங்கிக் போன போது தன்னைத் தானே துப்பாக்கி எடுத்து சுட்டு செத்திடாங்களாம்.
இன்னும் இந்த நாடு என்னவோ எல்லாம் பார்க்க இருக்கோ..
அது வரைக்கும் தாலி வேணுமா வேண்டாமா? என பேசிக்கிட்டு மாட்டுக்கறி சாப்பிடுறவனை ஜெயில்ல போட்டுகிட்டு நாஷமா போகட்டும்..
இவ்வளவு பராக்கிரம கடவுள் பணியாரம் பண்டாரங்களால் ஒழுங்காக பருவ மழையை வரவைக்க முடியுதா? ஒரே நாளில் கழீஜான கங்கையை சுத்தமாக்க முடியுதா> இல்லையே..
சங்கர்ராமன் கொலை தான் ரொம்பவே என்னை பாதிச்சது. ஒரு பார்ப்பனருக்கே அந்த நிலைமை அதுவும் கோவிலுக்குள்ளேயே என்றால் மற்றவர் நிலைமை என்னவாகும் சொல்லுங்க..
உண்மையில் ஆத்திகம், நாத்திகம் பேசி அரசியல் பண்ற எந்தவொரு கபோதிக்கும் ஆத்திகமோ நாத்திகமோ முக்கியமில்ல லட்சுமிகள் மட்டுமே முக்கியம். துட்டுக்காக துண்டையும் மாற்றுவார்கள், எதையும் செய்வார்கள்...
ஆந்திராவில் லட்சம் விவசாயிகள் தற்கொலை பண்ற அதே காலப் பகுதியில் தான் திருப்பதி உண்டியல் கலக்சனும் அதிகாமனது என்றால் பாருங்கோ.. இந்தியாவை நினைச்சாலே சில நேரம் பிபி எகிறுது.. நாஷமா போகட்டும் எக்கேடாவது ஆகட்டும் என்று இருக்கலாம் என பார்த்தால் அதற்கும் மனம் ஒவ்வவில்லை.. :(
அன்பின் வருணுக்கு நான் உங்கள் பதிவுகளின் தொடர்பாளன் பதிவில் உங்கள் கருத்துக்கு நீங்களே சொந்தமானவர் இருந்தாலும் சொல்ல வரும் கருத்துக்களை நாசுக்காக சொல்லலாமே என்பதே என்கருத்து. காழ்ப்பும் வெறுப்பும் தேவையா. இதைக் கூட எழுதாமல் தாண்டிவிடலாம் என்றிருந்தேன் இருந்தாலும் நட்பு கருதி மனசில் பட்டதைக் கூறி விட்டேன் வாழ்த்துக்கள்
*** Iqbal Selvan said...
நீங்க வேற வருண், ஒரு கோஷ்டி நான் முஸ்லிமா? இந்துவா? என தனிப்படை அமைச்சு ரொம்ப நாளா விசாரிச்சு, இத்தனைக்கும் நான் இரண்டும் இல்லைப்ப ஆளை விடுங்க என பலமுறை சொல்லியும் கேட்க்கலை.. இந்த மாதிரி கேஸ்கள் எல்லாம் அப்படித் தான்..
சங்கர்ராமன் தன்னாத்தானே வெட்டிக்கிட்டு கொலை பண்ண கதை இருக்கே, ஷப்பா. சினிமாவில் கூட இப்படி நடந்திருக்காது அவ்வளவு அயோக்கியத் தனம்..
அப்புறம் தா. கிருட்டிணன் வாங்கிங்கி போனப்ப தன்னைத் தானே கொலை பண்ணிய சம்பவம்.
புனேவியில் நரேந்திர தபோல்கார், இப்போ மும்பையில் கோவிந்த பன்சாரே கூட வாங்கிக் போன போது தன்னைத் தானே துப்பாக்கி எடுத்து சுட்டு செத்திடாங்களாம்.
இன்னும் இந்த நாடு என்னவோ எல்லாம் பார்க்க இருக்கோ..
அது வரைக்கும் தாலி வேணுமா வேண்டாமா? என பேசிக்கிட்டு மாட்டுக்கறி சாப்பிடுறவனை ஜெயில்ல போட்டுகிட்டு நாஷமா போகட்டும்..
இவ்வளவு பராக்கிரம கடவுள் பணியாரம் பண்டாரங்களால் ஒழுங்காக பருவ மழையை வரவைக்க முடியுதா? ஒரே நாளில் கழீஜான கங்கையை சுத்தமாக்க முடியுதா> இல்லையே..
சங்கர்ராமன் கொலை தான் ரொம்பவே என்னை பாதிச்சது. ஒரு பார்ப்பனருக்கே அந்த நிலைமை அதுவும் கோவிலுக்குள்ளேயே என்றால் மற்றவர் நிலைமை என்னவாகும் சொல்லுங்க..
உண்மையில் ஆத்திகம், நாத்திகம் பேசி அரசியல் பண்ற எந்தவொரு கபோதிக்கும் ஆத்திகமோ நாத்திகமோ முக்கியமில்ல லட்சுமிகள் மட்டுமே முக்கியம். துட்டுக்காக துண்டையும் மாற்றுவார்கள், எதையும் செய்வார்கள்...
ஆந்திராவில் லட்சம் விவசாயிகள் தற்கொலை பண்ற அதே காலப் பகுதியில் தான் திருப்பதி உண்டியல் கலக்சனும் அதிகாமனது என்றால் பாருங்கோ.. இந்தியாவை நினைச்சாலே சில நேரம் பிபி எகிறுது.. நாஷமா போகட்டும் எக்கேடாவது ஆகட்டும் என்று இருக்கலாம் என பார்த்தால் அதற்கும் மனம் ஒவ்வவில்லை.. :( ***
இக்பால்: யாரையும் திருத்த முடியாது என்பதில் எனக்கு என்றுமே நம்பிக்கை உண்டு.
ஆனால், அமைதியாக இருந்த பதிவுலகில் ரகுவீரன் எழுதிய குப்பையை நான் இங்கே கொண்டு வந்து போட்டு நாறடிக்கவில்லை.
பகுத்தறிவு என்பது ஒரு தனிமனிதனைச் சார்ந்தது. அவன் சிந்தனைகள் என்பதே. அதே சிந்தனையை அவன் அவனுடைய சகோதரிக்கோ, காதலியையோ, தாய் தந்டையருக்கோ புகட்டி அவர்களை சரி செய்துவிட்டுத்தான் உலகைப் பார்க்கணும் என்பது விதண்டாவாதம்.
அவன் பகதர்களையும் பக்தகோடிகளையும் விமர்சிக்கும்போது, அவன் தாய் தந்தையர், சகோதர்கள் நண்பர்கள் - பக்தகோடிகளாக இருந்தால்- அவர்கள் அனைவருமே அந்த பக்தகோடிகளில் அடங்குவார்கள்.
பகுத்தறிவு என்பது தனி ஒரு மனிதன் சம்மந்தப் பட்டது. அவன் சிந்தனைகளை அவன் குடும்பத்தாருடன் அவன் வலியுறுத்தி வெற்றியடைய வேண்டிய அவசியம் இல்லை. அவன் குடும்பத்தாரும் அவர் விமர்சிக்கும் உலகில் ஒரு அங்கத்தினரே என்பதை புரியாமல் உளறக்கூடாது!
***G.M Balasubramaniam said...
அன்பின் வருணுக்கு நான் உங்கள் பதிவுகளின் தொடர்பாளன் பதிவில் உங்கள் கருத்துக்கு நீங்களே சொந்தமானவர் இருந்தாலும் சொல்ல வரும் கருத்துக்களை நாசுக்காக சொல்லலாமே என்பதே என்கருத்து. காழ்ப்பும் வெறுப்பும் தேவையா. இதைக் கூட எழுதாமல் தாண்டிவிடலாம் என்றிருந்தேன் இருந்தாலும் நட்பு கருதி மனசில் பட்டதைக் கூறி விட்டேன் வாழ்த்துக்கள்***
தங்கள் அன்பிறகு நன்றி சார்.
என்னை விடுங்க, காந்தி என்ன அப்படி தப்பு செய்துவிட்டார, சார்? யார் மேலும் காழ்ப்புணர்வைக் காட்டவில்லையே? எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள் என்று கனிவாக்த்தானே சொன்னார்? அவரை நாம் என்ன செய்தோம்? ஒரு பாவமும் அறியாத "நாம்" சுட்டுக் கொல்லவில்லையா என்ன, சார்?
தங்கள் அன்பிற்கு மறுபடியும் நன்றி சார்.
அன்பின் இனிய வலைப் பூ உறவே!
அன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
Post a Comment