ஒரு பட்டுப்புடவை தயாரிக்க சுமார் 10 ஆயிரம் பட்டுப்பூச்சிக் குழந்தைகளை ஈவு இரக்கமில்லாமல் கொல்கிறாங்களாம்ப்பா!
வாழு, வாழ விடு! என்பது மனிதர்கள் பேசும் வியாக்யாணம். நீங்க கவனிச்சுப் பார்த்தால் மனிதன் தன் இனம் தவிர மற்ற உயிர்கள் எதையும் வாழ விடுவதில்லை!
மனிதனைப் பொருத்தவரையில் உலகில் வாழும் மற்ற உயிர்கள் எல்லாம் நாசமாகப் போகணும்! இவனுக மட்டும் வாழணும்! இவனுகள் சந்தோஷமாக வாழ யாரை வேணா, எந்த உயிரை வேணா கொல்லலாம். யாரை வேணா காவு கொடுக்கலாம். அதில் தப்பே இல்லை!! இதுதான் மனிதனுடைய வாழ்க்கைத் தத்துவம்!
இன்னும் கொஞ்சம் யோசிச்சா மனிதனைவிட கேவலமான ஒரு ஜன்மம் உலகில் இல்லை என்பது தெளிவுபடும்! இதில் மானிடனாகப் பிறப்பது அரிது..மனிதம் மண்ணாங்கட்டினு அப்பப்போ இவனுகளுக்குள்ளேயே தத்துவம் பேசிக்கொண்டு இவனுகளையே ஏமாத்திக்குவானுக! ஒரு பூச்சி, புழுவைக்கூட நிம்மதியாக வாழவிடாமல் தன் தேவைக்காக யாரை வேண்டுமானாலும் கொல்லுவார்கள், துன்புறுத்துவார்கள்! இவர்கள்தான் மனிதர்கள்! இவனுக ஒரு பட்டுப்பூச்சியைக்கூட வாழ விடமாட்டானுகன்னா வேற யாரை வாழ விடுவானுக?
கடவுளைக்கூட மனிதன் தன் வசதிக்குத்தான் படைச்சிக் கொண்டு வந்து. விலங்குகளை கொல்வதிலோ, அல்லது பலி கொடுப்பதில் எதுவும் பாவம் இல்லைனு கடவுளையே சொல்ல வச்சிடுவாணுக! மற்ற உயிர்களை தன்னைப்போல் மதிக்காமல் வாழும் மனிதனையும் அவன் சிந்தனைகளையும் அவன் நியாயப்படுத்தலையும் கவனித்துப் பார்த்தாலே அவன் படைத்த "கடவுள்" அவனுக்காக அவனே உருவாக்கிய ஒரு கற்பனை என்பதையும் அழகாகப் புரிந்து கொள்ளலாம்!
| தீபிகா! பட்டுப்புடவை கட்டுவது உன்னை சிறுமைப்படுத்துவது பெண்ணே! இருந்தாலும் அந்த "ஸ்மைல்" அடேங்கப்பா! |