என்ன காமெடினா நம்ம நாடு நாசமாகப்போயிக்கொண்டு இருக்கு. காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுவது, மக்கள் தொகை பிரச்சினை, கழிப்பறை பிரச்சினை, டாஸ்மாக் பிரச்சினை, திருட்டு வி சி டி பிரச்சினை, பஸ்ல வச்சு பெண்களை கதறக் கதற கற்பழிக்கிற அவலநிலை என்று முக்கியமான பிரச்சினைகளைப் பத்தி எவனும் கவலைப் படுவதில்லை. சும்மா மோனோ சோடியம் க்ளுட்டமேட் கெடுதினு என்னைத்தையாவது பெரிய மேதாவித்தனமா ஒளறிக்கிட்டு திரிகிறார்கள்!
மாகி நூடுல்ஸை வளர்த்துவிட்டது யாரு?
நவீன தாய்மார்களெல்லாம் முகநூலில் யாரும் லைக் போடலையேனு கவலையிலேயே எதுவும் சமைக்க மூட் இல்லாமல் சீரியல், மேகி நூடுல்ஸ்னுதான் எதாவது "ஜங்க் உணவை"க் குறைந்த நேரத்தில் சமைத்து பிழைப்பை ஓட்டுறாங்க. சாதாரணமாகப் புறக்கணிக்கப்பட வேண்டுகிற இந்த உணவை இப்படி வளர்த்துவிட்டது நம் உயர்தரத் தாய்க்குலம்தான். எதையாவது அவசர அவசரமாகப் பண்ணிப் போட்டுட்டு வேலைக்கு போகணும் இல்லையா? மாகி நூடுல்ஸ், சீரியல் எல்லாம் வளந்ததுக்கு இவர்கள்தான் காரணம்.
***********************
மாகி நூடுல்ஸ்ல உள்ள மோனோ சோடியம் க்ளுட்டமேட் னா என்ன?
புரதம்னா என்ன? அதுக்கு இதுக்கும் என்ன சம்மந்தம்? ப்ரோட்டீன்னு சொல்லுவாங்க இல்ல? அவைகள் நம் உடம்பில் இருக்கு இல்லை?
கொஞ்சம் கெமிஸ்ட்ரி பேசுவோமா?
நம் உடம்பில் அல்மோஸ்ட் எல்லா வேலைகளையும் செய்வது ப்ரோட்டீன்கள்தான். உதாரணமாக ஹீமோக்ளோபின்கூட ஒரு ப்ரோட்டீன் தான். அதுதான் நம் லங்ஸ் வரும் ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டுபோயி நம் உடம்பில் உள்ள எல்லா செல்களுக்கும் கொடுப்பது. இதுபோல் ப்ரோட்டீன்கள்தான் நம் உடலில் நாம் உயிர் வாழ்த் தேவையான எல்லா வேலைகளும் செய்வது. நீங்க படு சோம்பேறியாக இருக்கலாம் உங்க உடலில் உள்ள ப்ரோட்டின்கள் கடும் உழைப்பாளிகள்! எனிவே ப்ரோட்டீன்கள் நமக்கு உயிர்வாழ மிக மிக முக்கியம்.
ப்ரோட்டீன்கள் அமை(மி)னோ ஆசிட்களால் ஆனது.
அப்படினா?
ப்ரோட்டீன் ஒரு சுவர்னா, அதில் உள்ள செங்கல், சிமெண்ட் எல்லாம் அமைனோ ஆசிட்கள்தான். முக்கியமாக 20 அமினோ ஆசிட்களால் ஆனதுதான் நம் உடம்பில் உள்ள லட்சக்கணக்கான ப்ரோட்டின்கள். ஆக ப்ரோட்டீன்ல இருந்து இப்போ அமைனோ ஆசிட்க்கு தாவிவிடுவோம்.
தாவியாச்சா?
அப்படிப்பட்ட அடிப்படை கற்களான ஒரு அமினோ ஆசிட்தான் இந்த சோடியம் உப்பாக்கப் பட்ட க்ளுட்டமிக் அமிலம் (எம் எஸ் ஜி). க்ளூட்டமிலக் ஆசிட் ஒரு அமிலத்தன்மை பெற்ற அமைனோ அமிலம்.ஏற்கனவே ஒரு ஆசிட் அது. அதென்ன அமித்தன்மை பெற்ற மைனோ அமிலம்? சரி அமித்தன்மை, கார்த்தன்மை உள்ள அமினோ அமிலம் எல்லாம் அப்புறமாப் பார்க்கலாம்.
எம் எஸ் ஜி னா?
இது இந்த க்ளூட்டமிக் அமைனோ அமிலத்தின் சோடியம் சால்ட்!
சோடியம் சால்ட்டா? அப்படினா?
சோடியம் க்ளோரைட் தெரியுமா? அதாங்க சாதாரண உப்பு? NaCl???
தெரியும்!
அதுவும் ஒரு அமிலத்தின் உப்புதான்!
அப்படியா??? ரியல்லி?????
ஆமாங்க!
என்ன அமிலம் அது?
ஹைட்ரோ க்ளோரிக் அமிலம்! (HCl)
நெஜம்மாவா?
ஆமா!
புரியலையே?
ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தில் இருந்து எப்படி சோடியம் க்ளோரைட் தயாரிக்கிறது?
ஹைட்ரோக்ளோரிக் அமிலத்தையும் சோடியும் பைகார்பனேட் (சோடாப்பூ) அல்லது சோடியம் கார்பனேட்டையும் சேர்த்தால், சோடியம் க்ளோரைட் கிடைக்கும்!
2 HCl + Na2CO3 -> 2NaCl + H2O + CO2
HCl + NaHCO3 -> NaCl + H2O + CO2
ஆசிட் + பேஸ் -> சால்ட் + வாட்டர் + கார்பன் டைஆக்ஸைட்
அப்போ க்ளூட்டமிக் அமிலமும் சோடியம் கார்பனேட்டும் சேர்த்தால் எம் எஸ் ஜி கிடைக்குமா?
ஆமா!
வருண்!!! இதெல்லாம் அநியாயம்!
நீங்க மட்டும் எங்களுக்கு புரியாத தமிழ்க் கவிதை எழுதி எங்களை புரிஞ்சிக்க வைக்க முயற்சிக்கலாம். நாங்க உங்களுக்கு உங்க உடம்பில் உள்ள ஒரு அமிலத்தையும், நீங்க சாப்பிடுகிற ஒரு உப்பையும் விளக்கினால்அநியாயம்! என்னங்க (அ)நியாயம் இது?
சரி எம் எஸ் ஜி எப்படி தயாரிக்கிறாங்க..
MSG is produced through fermentation of molasses-sugar (molasses) by the bacteria (Brevibacterium lactofermentum). In this fermentation process, will first produce Glutamic Acid. Glutamic acid as a result of this fermentation process, then add soda (Sodium Carbonate), so that will be formed Monosodium Glutamate (MSG). MSG this happens, then purified and crystallized, so it is a crystal-pure powders, ready to be sold in the market.
Before the bacteria were used for fermentation production of MSG, the first such bacteria must be reproduced (in terms of microbiology: cultured or cultured) in a medium called Bactosoytone. This process is known as the breeding process of bacteria, and separate at all (both space and time) with the process above. After the bacteria grow and multiply, then the bacteria were taken for use as biological agents in the fermentation process to make MSG.
Bactosoytone as a medium for bacterial growth, made separate (by Difco Company in the U.S.), by the way-enzymatic hydrolysis of soy protein (Soyprotein). In simple language, soy protein is broken down with the help of enzymes that produce short-chain peptides (peptone) Bactosoytone called it. The enzyme used in hydrolysis process is called porcine, and this enzyme was isolated from the pancreas-pig.
மொலாசஸ் னா என்ன? நம்ம சுகர், சர்க்கரை கரும்பிலிருந்து தயாரிக்கும்போது வரும் ஒரு விஸ்கஸ் லிக்விட்தான், மொலாஸஸ். இதிலுருந்து சாராயமும் தயாரிக்கலாம்.
---------------------------
*க்ளூட்டமிக் அமிலம் அல்லது எம் எஸ் ஜி ஒரு அத்தியாவிசய அமினோ அமிலமா??
அப்படினா?
நம் உடலில் உள்ள ப்ரோட்டீங்களில் முக்கியமாக 20 அமினோ அமிலங்கள் உண்டு. அவைகளை 9 அமினோ அமிலங்களை நம் உடலில் உள்ள செல்களால் தயாரிக்க முடியாது. இவைகளை நாம் அத்தியாவிசய (essential amino acid) அமினோ அமிலம் என்கிறோம்.
நாம் பிற உயர்களை நம்பித்தான் இருக்கிறோம். தாவரம் அல்லது விலங்குகளை கொன்னு, அல்லது பறித்துத் தான் இவைகளை நாம் பெற முடியும்!
இந்த க்ளுட்டமிக் அமிலம், அல்லது மோனோ சோடியம் க்ளுட்டமேட் ஒரு அத்தியாவிசய அமைனோ அமிலமா?
இல்லை!!!
Is this an essential amino acid? Glutamic acid or MSG is NOT an essential amino acid! Our body can make this amino acid!
----------------------------
* எம் எஸ் ஜி உடல் நலத்திற்கு தீங்கானதா?
அப்படி எதுவும் நிரூபிக்கப் படவில்லை. ஆனால் அது போல் ஒரு நம்பிக்கை (மூட நம்பிக்கை) உலவுகிறது என்பேன் நான்.
பல படித்தவர்களும் விஞ்ஞானிகளும் டாக்டர்களும் எம் எஸ் ஜி கெடுதினுதான் சொல்றாங்க. ஆனால் அதுவும் அவர்கள் நம்பிக்கை. நிரூபிக்கப் படவில்லை!
ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், சர்க்கரை, ஊறுகாய்கூட விஷம்தான். எம் எஸ் ஜி அந்தளவுக்கு மாகி நூடுலில் சேர்க்க மாட்டாங்க, முடியாது!
பின் குறிப்பு: எனக்கு நேரமில்லைனால இது ஒரு அவசரமாக அரைகுறையாக எழுதிய பதிவு. கருத்துப் பிழை இருக்காது. ஆனால் எழுத்துப் பிழை நிறையவே இருக்கும். முடிந்தால் மன்னிக்க! முடியலைனாலும் மன்னிக்க! :)))
15 comments:
ஹலோ Doctor!!! :)
மன்னிக்க தெரிஞ்சவன் மனுசன்
மன்னிப்பு கேக்க தெரிஞ்சவன் பெரிய மனுசன்
அப்டின்னு கேள்விபட்டிருக்கிறோம்.
நீங்க பெரிய மனுசந்தேன்.
ஓட்டு பெட்டி இல்லைங்களா?
கொஞ்சம் சுத்தி வளைச்சு லேசான பாடமெல்லாம் எடுத்துத்தான் சொல்லவர்றீங்க. இந்த அமினோ அமிலம் , மோனோ சோடியம் இதையெல்லாம் தாண்டி வேறு ஏதோ இந்தப் பிரச்சினையில் ஊடாடுதுன்னு நினைக்கிறேன். நெஸ்லேவின் இந்திய வியாபாரம் ஒரு நாளைக்கு 3600 கோடி என்று கேள்விப்பட்டேன். இந்தப் பெருந்தொகையே வேறு எதற்கோ கூட்டிச்செல்லலாம். மோனோ சோடியத்தை இவர்கள் எப்படி எடுத்துச்சென்று தீர்ப்பு சொல்லுகிறார்கள் என்பதற்குக் காத்திருப்போம்.
Varun,
I understand that compared to other burning problems in India, Maggi noodles is not that important. But, health care wise junk food eating especially noodles is unhealthy. I hope I have written one post about the effects of tertiary-butyl hydroquinone (TBHQ), the preservative found in all the noodles. Everyday Instant noodles consumption adds to Diabetics and Cardiac problems.
Apart from TBHQ, high sodium content, MSG in also have health effects. The effects of monosodium glutamate is well studied in human and animal models. Several papers were published. Please find the references herewith.
Simon, RA. (2000). Additive-induced urticaria: experience with monosodium glutamate (MSG). J Nutr, 130(4S Suppl): 1063S-6S
Fernstrom, JD. (1996). Short-term neuroendocrine effects of a large oral dose of monosodium glutamate in fasting male subjects. J Clin Endocrinol Metab, 81(1): 184-91.
Lawrence, DT. (2007). Food poisoning. Emerg Med Clin North Am, 25(2): 357-73; abstract ix
Yang, WH. (1997,1999). The monosodium glutamate symptom complex: assessment in a double-blind, placebo-controlled, randomized study. J Allergy Clin Immunol, (6 Pt 1): 757-62.
Ohguro, H., Katsushima, H., Maruyama, I., Maeda, T., Yanagihashi, S., Metoki, T., Nakazawa, M. (2002). A high dietary intake of sodium glutamate as flavoring (ajinomoto) causes gross changes in retinal morphology and function. Exp Eye Res., 75(3):307-15.
Lorden, JF. (1986). Behavioral and endocrinological effects of single injections of monosodium glutamate in the mouse. Neurobehav Toxicol Teratol, 8(5): 509-19.
Mukundammaa!
Maggi India says..
///Maggi India @MaggiIndia
@lcckannan We do not add MSG to MAGGI noodles. Some ingredients may contain naturally occurring Glutamate, which
can be mistaken for MSG.
11:07 AM - 18 May 2015 ///
************************
FDA says..
///What’s the difference between MSG and glutamate in food?
The glutamate in MSG is chemically indistinguishable from glutamate present in food proteins. Our bodies ultimately metabolize both sources of glutamate in the same way. An average adult consumes approximately 13 grams of glutamate each day from the protein in food, while intake of added MSG is estimates at around 0.55 grams per day.
How can I know if there is MSG in my food?
FDA requires that foods containing added MSG list it in the ingredient panel on the packaging as monosodium glutamate. However, MSG occurs naturally in ingredients such as hydrolyzed vegetable protein, autolyzed yeast, hydrolyzed yeast, yeast extract, soy extracts, and protein isolate, as well as in tomatoes and cheeses. While FDA requires that these products be listed on the ingredient panel, the agency does not require the label to also specify that they naturally contain MSG. However, foods with any ingredient that naturally contains MSG cannot claim “No MSG” or “No added MSG” on their packaging. MSG also cannot be listed as “spices and flavoring.”
Has FDA received any adverse event reports associated with MSG?
Over the years, FDA has received reports of symptoms such as headache and nausea after eating foods containing MSG. However, we were never able to confirm that the MSG caused the reported effects.
These adverse event reports helped trigger FDA to ask the independent scientific group Federation of American Societies for Experimental Biology (FASEB) to examine the safety of MSG in the 1990s. FASEB’s report concluded that MSG is safe. The FASEB report identified some short-term, transient, and generally mild symptoms, such as headache, numbness, flushing, tingling, palpitations, and drowsiness that may occur in some sensitive individuals who consume 3 grams or more of MSG without food. However, a typical serving of a food with added MSG contains less than 0.5 grams of MSG. Consuming more than 3 grams of MSG without food at one time is unlikely.
********************
If Maggi noodles is lying (they may), then it is a different story. One could also get "glutamate" from other ingredients as well. Maggi can use that as an "excuse" (for their lie) or it may also be true! I dont know.
All I am saying is, just because I hate maggi noodles, I am not going to say "it has msg or msg is very harmful". I think most People politicizing the issues these days. They dont care about the facts!
இந்த விவகாரம் சம்பந்தமாக எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.கொஞ்சம் புரிந்தது. மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கிறேன். இதை விட முக்கியமான விஷயங்கள் உள்ளன என்றாலும் ஒரு விழிப்புணர்வின் தொடக்கமாக அமையட்டும்.
நூடுல்ஸ் என்றதும் பெரிய சைஸ் சேமியா என்று தான் நினைத்துக் கொள்வேன். முன்பெல்லாம் அவசர டிஃபனுக்கு சேமியாவும் ரவாவும் கை கொடுத்தது.இப்போது விளம்பரங்களின் தாக்கத்தால் நூடுல்ஸ்.
வருணின் மற்றும் ஓர் வித்தியாசமான பதிவு
முடியாத கதை போலவே உள்ளது... (பதிவு மட்டுமல்ல...!)
வருண்,
மக்கள் நலனைத் தாண்டிய எதோ ஒரு அரசியல் இதில் இருப்பதாகவே தோன்றுகிறது. நீயா நானா பாணியில் ஒருவேளை ஐரோப்பிய யூனியன் இந்திய மாம்பழங்களை தடை செய்ததின் எதிர் வினையாக இருக்கலாமோ?
என்ன வருண் நொந்து நூடில்ஸ் ஆ ஆயிட்டீங்க போல ஹா ஹா... நூடில்ஸ் சை பற்றி ப் பேசித்தான் உங்க கவிதை எல்லாம் சூப்பர் தான் ரசித்தேன்.அட சீரியல் பார்க்க வசதி செய்கிறாளா மகி. மகி வாழ்க. நாங்க எல்லாம் ஜங் பூட் சாப்பிடுவதில்லை.
ரொம்ப bad என்று பிள்ளைகளும் விரும்ப மாட்டார்கள். விளக்கங்கள் அழகாக கொடுதுள்ளீர்கள். நன்றி நன்றி! மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@ அண்மையில் முக நூலில் இப்படி எழுதி இருந்தது கண்டேன் “ இடியாப்ப வாழ்வுதனை நூடில்ஸ் கவ்வும் முடிவில் இடியாப்பமே வெல்லும் ”
இன்றைய செய்தி. அமெரிக்கா ஹால்திராம் பொருட்களை தடை செய்யப் போவதாக சொல்கிறது. இது ஒரு பனிப் போர் போலவே இருக்கிறது.
மக்கலே,
Before the Maggi Noodles Scare: Look at What the U.S. FDA Found in Indian Snacks
http://blogs.wsj.com/indiarealtime/2015/06/11/before-the-maggi-noodles-scare-look-at-what-the-u-s-fda-found-in-indian-snacks/
நேத்து ஒரு இந்தியன் ஸ்டோர்ல போயி மாகி நூடுல்ஸ் பாக் எடுத்துப் பார்த்தேன். அதில் எதுவும் எம் எஸ் ஜி இருப்பதாகப் போடவில்லை!
ஆனால்.. சோடியம் 37% இருப்பதாக போட்டு இருந்தது!!!!
ஊறுகாய்ல எல்லாம் ஏகப்பட்ட சோடியம் இருக்கும்தான். ஆனால் ஊறுகாய் நாம் அதிகமாக சேர்ப்பதில்லை. அது ஒரு மெயின் டிஷ் இல்லை. ஆனால் மாகி நூடுல்ஸ் டெய்லி சாப்பிட்டால் ஹை சோடியம் இருப்பதால் நிச்சயம் நல்லது இல்லை!
I would reject the maagi noodle because of HIGH SODIUM, not because of "MSG" as people claim! :)
இதுபோன்ற மிகசிறந்த சிந்தனை த் திறன் கொண்ட . நாடு மொழி மக்கள் அறிவர்கள் மேல் பற்று கொண்டவர்கள் இருக்கிறார்கள் போல ...... பாராட்டுகள்
பிளஸ் டூ கெமிஸ்ட்ரி வாத்தியார் போல கொஞ்சம் உயர் நடையில், ஆனா ரொம்ப தெளிவாவே விளக்கிருகீங்க வருண்! என் குழந்தைகள் எத்தனயோ நாட்கள் லஞ்ச் பாக்ஸ்ல நூடில்ஸ் வைக்குமாறு கேட்டிருக்கிறார்கள், ஆறு ஆண்டுகளில் ஒருமுறை கூட அப்படி கொடுத்தத்தில்லை. வேலைக்குச் செல்லும் அம்மாக்கள் குடும்பத்துக்கே காலையில் சமைத்துவிட வேண்டி இருப்பதால் பெரும்பாலும் நூடில்ஸ் நாடுவதில்லை. மதியம் சமைத்து சூடாக சாப்பிடும் தாய்மார்கள் தான்(கணவரும் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து விடும் நிலையில்) காலையில் ஏதேனும் இட்லி,தோசையை கூட குழந்தைகள் லஞ்சில் pack செய்துவிடுகிறார்கள். இது நடைமுறையில் நான் பார்த்தது. ஏதோ எனக்குத் தெரிந்ததை சொன்னேன். யாரும் blame பண்ற ஐடியா இல்ல:) ஆனா இப்படி ஒரு பதிவுக்கு மொக்கை என்று லேபல் பண்ணலாமா நீங்க!!!!
Post a Comment