Sunday, April 20, 2014

ஏன்டி சுபத்ரா! உன் ஆத்துக்காரர் எப்படி?
"ஏண்டியம்மா வர்ஷா! உன் ஆத்துக்காரன்தான் கை நெறையா சம்பாரிக்கிறானே, ஏண்டி டெய்லி அவனோட சண்டை போட்டுண்டே இருக்க?"

"விடுங்கோ மாமி! அதெல்லாம் வெளிய சொல்ல முடியாது! "

"கேக்கிறேன்னு கோவிச்சுக்காதடிம்மா..."

"கேளுங்கோ! கேக்கவேணாம்னா விடவா போறேள்?"

"அவனுக்கு  குடிப்பழக்கம் எதுவும் இல்லையே?"

"குடிச்சாக்கூட பரவாயில்லையே, மாமி!"

"அதான், கோயில் கோயிலாப்போயி பகவானை  தரிசனம் பண்றானே.. அதெல்லாம் குடிக்கமாட்டான்னு நேக்குத் தெரியும்."

"ஆமா, உங்களுக்குத்தான் அவரைப் பத்தி எல்லாமே நன்னாத் தெரியுது, மாமி!"

"ஏண்டிம்மா, நான் இப்போ தப்பா என்னடி சொல்லிட்டேன்? நேக்கு எல்லாம் தெரியும்னு குதற்கமா சொல்ற?"

"நீங்கதானே சொன்னீங்க, மாமி?"

 "இதென்னடி கொடுமை? நாலு சுவத்துக்குள்ள என்ன நடக்கிதுனு நேக்கென்னடி தெரியும்?!"

"ஏன் மாமி? சுவத்துக்குள்ள என்ன நடக்கும்னு நோக்குத் தெரியாதா?! நோக்கில்லாத அனுபவமா?"

"என்னடி இப்படி அசடாட்டம்? நேக்கெப்படி உன் ஆம்படையானத் தெரியும்?"

"அப்போ ஒரு நாள் வந்துதான் பாருங்களேன்! நாலு சுவத்துக்குள்ள எப்படினு"

"நானா? இதென்னடி வெக்கக்கேடு?"

"ஓ நீங்க அத நெனசுண்டேளா?"

"ஏண்டி, நீதான்  எதுக்கு சண்டை போடுறேள் னு சொல்லப்படாதோ? அப்படி என்னடி பெரிய தப்பு செய்றான் உன் ஆம்படையான்?"

"அவருக்கு ஏதோ மன வியாதி போல இருக்கு மாமி! பித்துப் பிடிச்சு இருக்கு"

"அவனைப் பார்த்தா பித்துப் பிடிச்ச பிள்ளையாண்டான் மாதிரியா இருக்கான்?"

"அதெல்லாம் நாலு சுவத்துக்குள்ள நடக்கிறது! நேக்குத்தான் தெரியும் மாமி!"

"என்னடியம்மா சொல்ற?"

"சரி, ஊரெல்லாம் போயி என் ஆத்துக்காரர் பித்துப்பிடிச்சு அலையிறாருனு சொல்லிடாதீங்கோ, மாமி! நான் வரேன்"

-------------------------------

"நம்ம ருக்மணி மாமி நேத்து நமகுள்ள என்ன சண்டைனு நொழச்சி நொழச்சிக் கேக்கிறா.  சொல்லிடவா?"

"என்னடி சொல்லப் போறங்கிற?"

"நீங்க நேத்து சொன்னதை சொல்லவா?"

"நான் உன் புருஷன்டி! சும்மா குடிச்சுட்டு வந்து அடிக்கிறான்னு வேணாச் சொல்லு!"

"எதுக்குப் பொய் சொல்ல? இல்ல நீங்க சொன்னதையே  சொல்லிடுறேன்."

"அதெல்லாம் படுக்கையறையிலே சொல்றதுடி. தூங்கி எழுந்ததும் மறந்துடனும்!"

"அதெப்படி மறக்க முடியும்? உள்ள மூடையும் இப்படி ஏதாவது சொல்லி கெடுத்துடுறேள் ..!  அந்த மாமியை பார்க்கும்போது எனக்கு நீங்க சொன்னதுதான் ஞாபகம் வருது! அது ஒரு அசடு..எதையோ ஒளறிக்கிட்டு இருக்கு"

"சரி, எனக்கு ஒரு ப்ராஜெக்ட் முடிக்கனும். ஈவனிங் லேட்டாத்தான் வருவேன். நீ?"

"நான் எப்போவும் போலதான்."

-----------------------------------------

"ஏண்டி சுபத்ரா! எல்லா ஆம்பளைகளுமே என் புருசன் மாதிரித்தானா?"

"உன் புருசன் என்ன நல்லாத்தானே இருக்காரு? அழகா, நெறையா சம்பாரிக்கிறாரு."

"நான் அதை சொல்லலடி.."

"வேறென்ன?"

"சொல்லவே அருவருப்பா இருக்கு!"

"அப்போ சொல்லாதே!"

"உனக்குப் புரியலையா?"

"என்ன எந்நேரமும் போர்ன் பார்க்கிறாரா? உன்னையும் பார்த்து ரசிக்கச் சொல்றாரா?"

"அடிப் பாவி!"

"அதைத்தானே சொல்ற? இந்தக்காலத்து ஆம்பளைங்க எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்!"

"என்னடி சொல்ற?"

"இன்னைக்கு எல்லா ஆம்பளைகளுமே ஆண்மை இல்லாதவனுகதான்! இது மாதிரி ஏதாவது எவளோட தூண்டுதலையோ வச்சுத்தான் ஒரு பத்து நிமிசம் தாக்குப் பிடிக்கிறானுக!"

"இல்லைனா?"

"அதான் சொன்னேன் இல்ல?"

"என்ன சொன்ன?"

" இன்னைக்கு புருசனோட சந்தோஷமா ஒருத்தி இருக்கேன்னு சொன்னாள்னு வச்சுக்கோ.. அது பச்சைப் பொய்! இல்லைனா நைட்டு, அவள், அவனோட "ஏதோ பண்ணிட்டுப்போ"னு குடிச்சுட்டு போதையிலே அவள் படுத்து இருக்கனும்."

"இது வேறயா செய்ற?"

"ரெட் வைன் இதயத்துக்கு  நல்லது! எஸ்பெஷல்லி உன்னை, என்னை மாதிரி மிருகங்களுடன் வாழும் பெண்கள் இதயத்துக்கு!"

"அல்கஹால் நல்லதா? என்னடி இது புதுக்கதை!"

"மொதல்ல, உயிரோட வாழ, நம்ம  இதயம் வெடிக்காம இருக்கனும் இல்ல? அல்கஹால் ஒண்ணும் உன் ரத்தக் குழாயை அடச்சிடாது. ஆனா இந்த ஆம்பளைங்க செய்றதெல்லாம் பார்த்துக்கொண்டு சுயநினைவோட இருந்தால் நம்ம இதயம் சுக்கு நூறா வெடிக்க வச்சிடும்!"

 

-நிறைவடைகிறது

ஆமா, இதுவும் மீள்பதிவுதான். 

ஆனால் கொஞ்சம் எடிட் பண்ணி, சில படங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

10 comments:

நாடோடி said...

இந்தகதைகள் உங்கள் தளத்தில் ஏற்கனவே நான் படித்தது தான்.. வருண் மீள்பதிவா போட்ட எப்படி? அப்புறம் எப்படி புக்கு போடுறது?... :)

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

வருண் said...

வாங்க நாடோடி! :)

உங்களை ரெண்டு தர படிக்க வச்சு கஷ்டப்படுத்திட்டேனா? :)))

பதிவெழுத மூட் இல்லை. அதான் சும்மா தோண்டி எடுத்து எதையோ பதிவுனு போட்டுட்டு இருக்கேன்.

ஆண்களின் "அசிங்கப் பகுதியை" இப்படிப் பிச்சுப் பிச்சு வச்சா, எல்லாரும் வாசிச்ச்சுட்டு அமைதியா போயிடுறாங்க. :))) ரொம்ப கூணிக் குனிய வைக்கிதுபோல இதுபோல் "கற்பனைகள்" :)))

srikanth said...

ஐய்யர் பற்றி கதை போடும் சூத்ரன் வருண் தில் இருந்தா முஸ்லிம் அல்லது வேற ஜாதி போடு. ஒரு வேலை வருணுக்கு ஆண்மை இல்லையோ. பாவம். என் ஹெல்ப் வேணுமா.

saamaaniyan said...

செருப்பால் அடித்தது போன்ற பதிவு ! இதிலிருக்கும் உண்மையை எந்த ஆண் ஏற்றுக்கொள்வான் என தெரிவில்லை என்றாலும் யதார்த்தம் இதுதான்.

எனது பாலியல் புரிதலற்று புழுத்துபோகும் சமூகம் கட்டுரையில் இந்திய ஆண்களின் க்கான சில காரணங்களை கொடுத்துள்ளேன். நேரமிருப்பின் படித்துவிட்டு உங்களின் கருத்தை பதியுங்கள். நன்றி.
aamaaniyan.blogspot.fr/2014/02/blog-post.html

வருண் said...

*** srikanth said...

ஐய்யர் பற்றி கதை போடும் சூத்ரன் வருண் தில் இருந்தா முஸ்லிம் அல்லது வேற ஜாதி போடு. ஒரு வேலை வருணுக்கு ஆண்மை இல்லையோ. பாவம். என் ஹெல்ப் வேணுமா.***

திரு ஸ்ரீகாந்த்:

ஐயர் ஜானகிராமன், ஒரு அய்யராத்து மாமி, ரங்கமணி, தன் வீட்டில் குழந்தை பொறக்கணும்னு, தன் மாட்டுப்பொண்ணையே இன்னொருவனுக்கு கூட்டிக் கொடுப்பதாக எழுதி இருப்பார். அதெல்லாம் படிச்சதில்லையாடா அபிஷ்ட்டு. சும்மா வந்துட்டான் ஐயர் முஸ்லீம்னு சொல்லிக்கிட்டு!

போயி நளபாகம் படிச்சு கூட்டிக்கொடுக்கும் மாமி ரங்கமணி பத்தி, அம்மா வந்தாள் படிச்சு தகாத உறவில் இருக்கும் தாய், மாமி அலங்காரம் பத்தி, அப்புறம் மரப்பசு படிச்சு ஆத்துப்பொண்ணு அம்மணி பத்தியெல்லாம் என்னமா எழுதிருக்காரு ஒரு ஐயர், ஜானகி ராமன்னு தெரிஞ்சுக்கோ! இப்படி மக்குமாரி ஒளறிக்கிட்டு இருக்கியே? :))

வருண் said...

***saamaaniyan saam said...

செருப்பால் அடித்தது போன்ற பதிவு ! இதிலிருக்கும் உண்மையை எந்த ஆண் ஏற்றுக்கொள்வான் என தெரிவில்லை என்றாலும் யதார்த்தம் இதுதான்.

எனது பாலியல் புரிதலற்று புழுத்துபோகும் சமூகம் கட்டுரையில் இந்திய ஆண்களின் க்கான சில காரணங்களை கொடுத்துள்ளேன். நேரமிருப்பின் படித்துவிட்டு உங்களின் கருத்தை பதியுங்கள். நன்றி.
aamaaniyan.blogspot.fr/2014/02/blog-post.html***

கருத்துக்கும், தொடுப்பிற்கும் நன்றி சாம். நேரம் இருக்கும்போது கட்டாயம் பார்க்கிறேன். :)

sekar said...

//ஆண்களின் "அசிங்கப் பகுதியை" இப்படிப் பிச்சுப் பிச்சு வச்சா, எல்லாரும் வாசிச்ச்சுட்டு அமைதியா போயிடுறாங்க. :))) ரொம்ப கூணிக் குனிய வைக்கிதுபோல இதுபோல் "கற்பனைகள்" //


மஞ்சள் கண்ணாடிப் போட்டுப் பார்த்தால் எல்லாமே மஞ்சளாத் தான் தெரியும் அது போல் உள்ளது உங்கள் கற்பனை.

மற்றவர்களை (கூணி குனிய) வைத்து பார்ப்பதில் உங்களுக்கு சந்தோசம் கிடைக்கும் என்றால் இது போல் நிறைய எழுதுங்கள்
வாழ்த்துக்கள்.

வருண் said...

வாங்க சேகர்:

மஞ்சக் கண்ணாடி போட்டால் ஆண்கள் எல்லாரும் மஞ்சளாத்தான் தெரியுவாங்க என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் 90% ஆண்கள் இயற்கையிலேயே மஞ்சளாக இருக்கும்போது, நான் சிவப்புக் கண்ணாடி போட்டு ஆண்கள் எல்லாரும் சிவப்புனு சொன்னால் என்னுடைய கூற்று 90 விழுக்காடுகள் தவறாக ஆகிவிடும். சரியா?

மாறாக மஞ்சள் கண்ணாடி போட்டுப் பார்த்து அல்லா ஆண்களும் மஞ்சள்தான்னு சொல்வதில் பிழை 10 விழுக்காடுகள்தான். சரியா?

உங்க கருத்துக்கும், ஆதங்கத்துக்கும் நன்றி. :)

sekar said...

எனக்கு அதற்கு மேல் எதுவும் சொல்லத் தெரியவில்லை. ஒருவேளை உலக அறிவு எனக்குக் கம்மி தானோ என்னவோ?