***********************
“நான் கடவுள்” பார்த்தியா?
"நான் தெரியாமத்தான் கேக்கிறேன், பகுத்தறிவுவாதினு வாய்கிழிய பேசுறவன் எல்லாம் இந்த சம்ஸ்கிரதம் பேசும் கஞ்சா சாமியார் படத்துக்கு ஜால்ரா அடிக்கிறானுகளே? அது ஏன்?"
“அதை விடு! படம் பார்த்தியா?”
“பார்த்தேன். அதிலே ஒண்ணும் பெருசா இல்லை. ஏதோ ஒரு முட்டாப்பயமகன், ஒரு தரித்திரம் சொன்னான்னு அவன் மகன காசில கொண்டுபோய் பிச்சை எடுக்க விட்டுட்டு வந்துட்டானாம். அவன் “அகோரி” (கஞ்சா சாமியார்) யாயிட்டாராம். விட்டுட்டு வந்தவனுக்கு ஒருநாள் ஞானம் வந்து அவன் நல்லா வளர்ந்த பிறகு போய் திரும்ப ஒரே வினாடியில் கண்டுபிடிச்சு அவனை ஆத்துக்கு அழச்சுட்டு வர்றாராம். அப்புறம் பரிதாபத்துக்குரிய பிச்சைக்காரர்களையும் உடல் ஊனமுற்றோர்களையும் ரசித்து ரசித்து படமாக்கி இருக்காங்க! அவர்களை வஞ்சிக்கும் சில மிருகங்களையும், இந்த கஞ்சா சாமியார் காப்பாதுறார். இதான்ப்பா கதை"
“அப்புறம்? கஞ்சா சாமிதான் கடவுளா?”
"ஆமா போதையிலே எல்லோரும் கடவுளாகலாம் இல்லையா?"
"கதையை சொல்லு"
“அவன் ஒரு கஞ்சா அடிக்கிற மிருகமா இருக்கான். அதை வீட்டுக்கு கூட்டிவந்து அந்த மிருகத்திடம் தாய் பாசத்தை அள்ளிக்கொட்டுறாங்க அவன் அம்மா. இதுக்கு மேலே அதுலவுள்ள செண்டிமெண்ட்ஸ் பேச எனக்கு மூடு இல்லை!”
“என்னப்பா எல்லோரும் ஆஹா ஓஹோனு சொல்றானுக”
“யாரு நம்ம ஊர் பகுத்தறிவாதிகளா? அவனுகளுக்கு மரை கழண்டுருச்சு”
“படத்திலே என்னதான் பிடிச்சது உனக்கு”
“எம் எஸ் வி மற்றும் கே வி எம் இசையில் ரெண்டு சிவாஜி பாட்டும், ஒரு எம் ஜி ஆர் பாட்டும் வருது. ரொம்ப நல்லா இருக்கு!”
“அதெல்லாம் பழைய பாட்டு இல்லையா?”
"அதான் நல்லாயிருக்கு. இதோ எந்தன் தெய்வம் (பாபு), ஏன் ஏன் (வசந்த மாளிகை) அப்புறம் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் (எம் ஜி ஆர் படம்).
“இந்தப்படத்தில் என்னதான் மெசேஜ்?”
“ஒரு மண்ணும் இல்லை! இனிமேல் பிச்சைக்காரன் அதிகமாயிடுவானுக. They will be proud of their profession! அப்புறம் கஞ்சா சாமியார்லாம் சும்மா நெஞ்ச தூக்கிகிட்டு திரிவானுக. ஏன்னா அவனுகளுக்கு புது வாழ்வு கொடுக்குது இந்தப் படம்"
****************************
மீள் பதிவுதான்!
இந்த பழைய இடுகையில் பின்னூட்டம் இட்டது முக்கால்வாசிப்பேரு இன்று பதிவுலகில் இறந்தவர்கள்! நான் பதிவுலகுக்கு அப்போ சுமாரான புதுசுனால தோனுவதை அப்படியே எழுதிப்புடுவேன். இவரு கோவிச்சுக்குவாரே? அவரு என்ன நினைப்பாரோ? என்றெல்லாம் ரொம்பக் கவலைப் படுவதில்லை. ஆமா, அப்போவே அப்படித்தான்! :)
ஒருவேளை அப்படியெல்லாம் "அவருக்கும்" "இவருக்கும்" கவலைப்பட்டு என் எண்ணங்களை சுருக்கி/அடக்கி இருந்தால் அப்போவே கடையை அடச்சு இருப்பேன். இன்னும் இத்தளத்திற்கு உயிரோட்டம் இருந்து இருக்காது!
10 comments:
வணக்கம்
இரசிக்கும் படி அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இதற்குள் இறந்து விட்டார்களா ,ஏன் ?
வருண்,
பாலா என்ற மனநோயாளி என்றும் அப்படித்தான். சேதுவிலேயே இவருடைய ரூபம் எனக்குத் தெரிந்தவிட்டது. நந்தா என்ற படத்தில் அம்மாவே மகனுக்கு விஷம் ஊட்டுவது போல புதுமை செய்திருப்பார். இந்த ஆளிடம் புதிதாக என்ன இருக்கிறது என்று ஒரு விசேஷ அந்தஸ்து இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று புரியவில்லை. ஏழைகளையும் உடல் ஊனமுற்றவர்களையும் விளிம்பு நிலை (இது பாலா வுக்கேன்றே தயாரிக்கப் பட்ட சொல் போலிருக்கிறது) மனிதர்களையும் காட்டி வியாபாரம் செய்தால் அது மேதாவித்தனமான ரசனையின் வெளிப்பாடு என்று ஒரு மதியிழந்த கூட்டம் நம்புகிறது.
போகட்டும். இந்த சைக்கோ என்றுமே திருந்தாது. torture -porn என்று சொல்லக்கூடிய cult பட இயக்குனராக பாலா பின்னாளில் அறியப்படுவார்.
***ரூபன் said...
வணக்கம்
இரசிக்கும் படி அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-***
வாங்க ரூபன்! உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு! புத்தாண்டு வாழ்த்துக்கள்!:)
***Bagawanjee KA said...
இதற்குள் இறந்து விட்டார்களா ,ஏன் ?***
என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்னு "முகநூல்" "ட்விட்டர்னு" சொல்லி பரலோகம் போயிட்டா! :(
***காரிகன் said...
வருண்,
பாலா என்ற மனநோயாளி என்றும் அப்படித்தான். சேதுவிலேயே இவருடைய ரூபம் எனக்குத் தெரிந்தவிட்டது. நந்தா என்ற படத்தில் அம்மாவே மகனுக்கு விஷம் ஊட்டுவது போல புதுமை செய்திருப்பார். இந்த ஆளிடம் புதிதாக என்ன இருக்கிறது என்று ஒரு விசேஷ அந்தஸ்து இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று புரியவில்லை. ஏழைகளையும் உடல் ஊனமுற்றவர்களையும் விளிம்பு நிலை (இது பாலா வுக்கேன்றே தயாரிக்கப் பட்ட சொல் போலிருக்கிறது) மனிதர்களையும் காட்டி வியாபாரம் செய்தால் அது மேதாவித்தனமான ரசனையின் வெளிப்பாடு என்று ஒரு மதியிழந்த கூட்டம் நம்புகிறது.
போகட்டும். இந்த சைக்கோ என்றுமே திருந்தாது. torture -porn என்று சொல்லக்கூடிய cult பட இயக்குனராக பாலா பின்னாளில் அறியப்படுவார். ***
மனிதர்களிடம் எத்தனையோ நற்பண்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்றைக்கூட பாலாவின் எந்த ஒரு பாத்திரத்திலும் நான் இதுவரைப் பார்க்கவில்லை! அதெல்லாம் அவருக்கு அர்த்தமல்லாததாகவும் தேவையற்றதாகவும் போய்விட்டது. அதனால்தான் பாலாவும் நமக்குத் தேவையற்றவராகவும், புறக்கணிக்கப்பட வேண்டியவராகவும் தெரிகிறார்,காரிகன்
பல வருடங்களுக்கு முன் ஜூவியில் சைகோ கொலைகாரர்கள் பற்றி ஒரு தொடர் வந்தது. அதில் ஒரு சைகோ கொலைசெய்த உடன் அந்த பிணத்தின் சூடு குறையாத ரத்தத்தை தெளிவாக பார்க்க வேண்டும் என்பதற்காகவே, அப்போது இத்தனை பிரபலமாக இல்லாத C.F.L பல்பை வாங்கி மாட்டி வைத்திருந்தானாம். அவனுக்கும் பாலா படங்களுக்கும் என்ன வித்தியாசம் என எனக்கு தெரியவில்லை. பாலா படம் பார்க்கிற அளவு எனக்கு மனதிடம் இல்லப்பா. பாலா படம் கசாப்புக் கடை...
சரியான அலசல் வருண். பாலா என்ற சைக்கோ சைக்கோத்தனமான படங்களையே எடுக்கிறார். தவறும் இல்லை. ஏனெனில் ஆங்கிலத்திலும் ஹாஸ்டல் சீரீஸ் போன்ற படங்கள் வருகின்றன. ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால் இவரின் படங்கள் என் இவ்வளவு கொண்டாடப்படுகிறது என்பதுதான். உலகம் முழுவதும் சிக் கல்ட்வகை படங்களுக்கு சிக் கல்ட் வகை மக்களிடம் வரவேற்று இருக்கு, ஆனால் பாலாவு படங்களுக்கு இவ்வளவு வரவேற்று இருப்பது சமூகக் கோளாறு.
சரியான அலசல்....
Same feeling Varun!
Hi Kaarigan,
Based on your comment here, your thoughts are almost similar to mine.
Post a Comment