ஆமாங்க, இந்த மாட்டுப் பொங்கலுக்கு காளையை அடக்குவேன் இல்லைனா மாடு முட்டி வீர மரணமாவது அடைவேன்! இதுதான் என் கலாச்சாரம், பண்பாடு! முடிந்தால் என்னை அடக்கு பார்ப்போம்னு சொல்லாமல் சொல்லுறாரு..
இப்போ இவரு ஜால்ரா அடிக்கும் அ தி மு க ஆட்சி நடப்பதால், இந்த சோ ராமசாமி பக்தருடைய பதிவு ரொம்ப பவ்வியமாக எழுதப்பட்டு இருப்பதைப் பார்க்கலாம்!
தமிழக மக்களின் உணர்வுகளையும், பண்பாடு, பழக்க வழக்கங்களையும்
சற்றும் உணர முடியாதவர்களிடம், தமிழர்களை கட்டுப்படுத்தும்
அதிகாரம் மட்டும் போய்ச் சேர்ந்திருப்பதால் –
அவர்களால் முடிந்ததை – “ஜல்லிக்கட்டை” தடை செய்வதை –
அவர்கள் செய்யட்டும்….
அவர்களுக்கு உணர்வுகள் புரியாது; பண்பாடு புரியாது;
சட்டம் மட்டும் தான் புரியும் என்றால் – அதுவும்
அவர்களுக்கு வேண்டிய வகையில் மட்டும் தான் புரியுமென்றால் –
அவர்களுக்கு புரிகின்ற அதே சட்டமொழியில் –
புரிய வைத்தால் போயிற்று …
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும்,
மக்களுக்கு தங்கள் மொழி, பண்பாட்டைக் காத்துக் கொள்ள
இந்திய அரசியல் சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகளை
பாதுகாக்கும் விதத்திலும்,
இன்று(வியாழன்) மாலைவாக்கில் –
பொங்கல் விளையாட்டுக்களை – ஏறுதழுவலை –
முறைப்படுத்தி – தமிழக அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு
வர வேண்டும் என்று விரும்புவோம்…
எந்த கொம்பன் (ர்,,,?) ( ! ) மாட்டுப்பொங்கலுக்குள்
இதற்கு தடை கொண்டு வருகிறாரென்றும் பார்ப்போமே…!
இந்த விருப்பம் நிறைவேற உளமாற வேண்டுவோம்…
இப்போ கருணாநிதி அல்லது தி மு க ஆட்சி நடந்துகொண்டிருந்தால் இவரு வார்த்தை ஜாலங்கள் எல்லாம் வேற மாதிரி வீரியத்துடன் இருக்கும்னு நான் உங்களுக்கு சொல்லணுமா என்ன?
சரி, இவரு மாட்டுப்பொங்கலன்று ஏறு தழுவ தமிழ்நாடு அரசு ஏதாவது செய்தால் சரிதான்.
ஆமா, இவரு குரு, சோ ராமசாமி என்ன சொல்றாரு? ஏறு தழுவணும்னா இல்லை வேணாம்னா? அடுத்த முறை நலம் விசாரிக்கப் போகும்போது கேட்டுச் சொன்னால் நல்லாயிருக்கும்.
எனக்கு என்ன புரியலைனா..
சரி, ஒரு 100 ஆண்டுகள் முன்னால தமிழர் கலாச்சாரத்தைப் பார்ப்போம். வைப்பாட்டி வச்சிக்கிறது, அவுசாரிட்டப் போறது, ஒரு பக்கம் பெண்களை தெய்வம்னு சொல்லிக்கிட்டு இன்னொரு பக்கம் பெண்புத்தி பின் புத்தினு சொல்றது. மனைவிக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லைனா இன்னொரு பெண்ணை இல்லைனா அவ தங்கையைகட்டிக்கிறது. என் சொந்தத்திலேயே இதுபோல் அநியாயம் எல்லாம் நடந்து இருக்கு! இது எல்லாமே தமிழர் கலாச்சாரம்தான். அதெல்லாம் ஏன்ப்பா தூக்கி எறியணும்னு சொல்றீங்க அப்போ? பெண்ணடிமைத்தனத்தையும் சரினு சொல்ல வேண்டியதுதானே? அதுவும் நம்ம பண்பாடுதானே? இல்லையா?
ஏறு தழுவியே ஆகணும்னு நிக்கிற இவர் பதிவில் ஒரு பின்னூட்டம்..
today.and.me சொல்கிறார்:
கேவியட் மனு நிலுவையில் இருக்கும்போது மாநில அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க இயலாது என்று சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்களே.
அதேவேளையில் மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்கலாம்,
அல்லது பீட்டா அமைப்புக்கு அங்கீகாரம் அளித்துள்ள மத்திய அரசே அதைத் திரும்பப் பெற்று வழக்கைச் செல்லாததாக்கலாம்.
அல்லது
காளைகள் பெயரை இப்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கச் செய்தால் ஒழிய இது இப்போதைக்கு சட்டப்படி சரியாவதில்லை.
ஏனென்றால் சட்டப்படி
இதை
தமிழர்களின் கலாச்சாரத்தை அடகு வைத்தவர்
முத்தமிழ் வித்தவர்
தமிழர்களின் காவலர்
மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி
பின்னூட்ட வீரப் பதிவர் பேரு என்ன பார்த்தீங்களா? பெரிய தொரை மகன்! டுடே அண்ட் மீ!னு பேரை வச்சுக்கிட்டு கிழிகிழினு கிழிக்கிறாரு!
அடேங்கப்பா! பின்னூட்டத்தில் வாயி தமிழ் நாட்டிலிருந்து சான்ஃபிராண்ஸிஸ்கோ வரை நீளும் இந்தாளுக்கு! என்ன எழவைச் சொன்னாலும் கா வீர மைந்தனுக்கு முழு நேர ஜால்ரா!
எனக்குத் தெரிய செண்ட்ரல்ல இப்போ ஐயா மோடி ஆள்றாரு. தமிழ்நாடு இப்போ நம்ம "பெரியம்மா" கீழேதான் இருக்கு. ஆனால் இந்த மேதை இப்போவும் பின்னூட்டத்தில் கருணாநிதிக்குத்தான் அர்ச்சனை பண்ணுறான்.
இதுவும் (டுடே அண்ட் மீ தான்) காவீர மைந்தனோட சேர்ந்ந்து ஏறு தழுவப்போதோ என்னனு தெரியலை! பின்னூட்டம் எல்லாம் பார்த்தால் வாயிலேயே மாட்டை அடக்குற ஆள் மாதிரித்தான் தெரியுது!
ஏன்ப்பா இவர்களுக்குள்ளே கருத்து வேறு பாடே வராதா??
ஏறுதழுவ/ மஞ்சு விரட்டு வேணாம் ஐயா, எதுக்கு பாவம் மாட்டைப்போயி?னு காவீர மைந்தனிடம் பின்னூட்டத்தில் சொல்ல ஒரு பயலைக்கூட அந்தத் தளத்தில் காணோம்.
இவர்களுக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லவே இல்லைனா அந்தத் தளம் நடத்துபவர்களுக்கும் அங்கு பின்னூட்டமிடுபவர்களுக்கும் ஐந்தறிவுதான்னு நான் நம்புறேன்.
மனிதன்னா சுய சிந்தனை இருக்கணும். முழுநேர ஜால்ராவா இருந்தால் மாக்கள்தான் இவர்கள்!
--------------------------
இதைவிட வேடிக்கை என்னனா நம்ம வன்னியகுல வீரர் அருள் அவர்கள் மஞ்சு விரட்டுக்கு எதிரா பதிவு எழுதுவது.
அதாவது இது முக்குலத்தோருடைய கலாச்சாரம்னு இவருக்கு அரைகுறையாப் புரிஞ்சிருச்சு. சாதிச் சங்கம் நடத்தும் இவருக்கு இது எங்க வன்னியர் கலாச்சாரம் இல்லை. அதனால் இதுக்கு நாங்க எதிர்ப்புத்தான் சொல்லுவோம்னு நிக்கிறாரு. இதெல்லாம் உண்மையிலேயே பகுத்தறிந்து வரும் கருத்துக்கள் இல்லைனு நான் அடிச்சுச் சொல்லுவேன்! ஏன்னா வன்னியரை இதுவரை எந்தவகையிலும் இவரு விமர்சிச்சு நான் பார்த்ததில்லை!
ஏன்ப்பா ஆளாளுக்கு இன்னும் சாதி அடிப்படையிலேயே எதைனாலும் பேசுறீங்க?
உங்களால் ஒரு சாதாரண மனிதனாக சிந்ந்திக்க முடியாத மூளையில் ஊனம் உள்ளவர்களா நீங்க எல்லாம்?
-------------------------------
வெள்ளம் வந்துடுச்சு, எல்லாம் போச்சுனு ஒப்பாரி வைத்து இன்னும் முடிஞ்ச பாடில்லை. அதுக்குள்ள ஏறு தழுவியே ஆவேன்னு நிக்கிறாங்கப்பா!
மனிதன் எப்போவுமே தன்னால் அடக்க முடிஞ்ச அப்பாவியைத்தான் ஏறி மேய்வான். அது ஏன் மாட்டுட்ட வீரத்தை காட்டுறீங்க? ஒரு புலி, சிங்கத்தை அடக்குறது? கடிச்சிருமா? நீங்களும் திருப்பிக் கடிங்க!!