Monday, January 18, 2016

திரு காவீரமைந்தன் மற்றும் அவர் கருத்தடிமைகளுக்கு!

ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண்- ப்ளாகர் ஐ டி வைத்துள்ள நான் எந்த ஒரு வோர்ட் பிரஸ் தளங்களிலும் பின்னூட்டமிடுவதில்லை. காரணம்? அத்தளங்களில் மென்மடல் அட்ரெஸ் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். கண்டவர்க்கும் என் மென்மடல் ஐ டி யை நான் கொடுப்பதில்லை. முக்கியமாக துக்ளக் சோ பற்றி எப்போதுமே உயர்த்தி எழுதும் தளத்தில் இதுவரை பின்னூட்டமிட்டதில்லை!  ஏதாவது விமர்சிக்க வேண்டியதிருந்தால் என் தளத்திலேயே அவ்விமர்சனம் பதிவாக வந்து நிற்கும்!

 vimarisanam - kavirimainthan சொல்கிறார்:
நண்பர் “நடுநிலை”, “வருண்”, “ஜின்னா”
– என்று இன்னமும் ஒரு டஜன் பெயர்களில்
இங்கு பின்னூட்டம் போட முயலும் இரண்டு அல்லது
மூன்று குறிப்பிட்ட நண்பர்களுக்கு –
உங்கள் பின்னூட்டங்களை நீக்கி விட்டதாக மீண்டும் மீண்டும்

இங்கு எழுதுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது
உங்களுக்கே தெரியும்.
நான் பலமுறை இங்கு எழுதி விட்டேன்.

இடுகைக்கு தொடர்புடையதாகவும்,
நாகரிகமாகவும் எழுதப்படும் எந்த பின்னூட்டத்திற்கும்
இங்கு இடம் உண்டு.
விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்கிற
நோக்கத்துடன் எழுதுபவர்கள் –
மாற்று கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் நிச்சயமாக
வரவேற்கப்படுகிறார்கள். இந்த வலைத்தளத்தின்
நீண்ட கால நண்பர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.
மாறாக – என்னையோ,

இங்கு பின்னூட்டமிடும் தங்களுக்கு பிடிக்காத
மற்ற நண்பர்களையோ – தரக்குறைவாக எழுதும் உரிமை
எவருக்கும் கிடையாது. நான் அதை நிச்சயம் அனுமதிக்க
மாட்டேன். விவாதங்களும், பின்னூட்டங்களும் –
இடுகைக்கான பொருளைப்பற்றியே
இருக்க வேண்டுமே தவிர,
பின்னூட்டம் இடும் தனிப்பட்ட நண்பர்களைப் பற்றி அல்ல..
இதில் “வருண்” எழுதியவை எந்த ரகத்தைச் சேர்ந்தவை ?

வருண் என்கிற நபர் –

வழக்கமாக இங்கு பின்னூட்டங்கள் எழுதும் நண்பர்

டுடேஅண்ட்மீ அவர்களின் பெயரில் –

அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு “போலி id”-யை

உருவாக்கி போலியாக சில பின்னூட்டங்களை

டுடேஅண்ட்மீ என்கிற பெயரில் எழுதியது

பச்சை அயோக்கியத்தனம்.

இந்த மாதிரி நபர்களை
நான் ஏன் இங்கே அனுமதிக்க வேண்டும்…?
அதிமுக ஆட்சியைப் பற்றி நான் தீவிரமாக

விமரிசிப்பது இல்லை தான்… அது என் priority -யில்
இல்லை… இப்போதைக்கு நான் அதைச் செய்ய மாட்டேன்
என்று பலமுறை இங்கே வெளிப்படையாகத் தெரிவித்து
விட்டேன். மீண்டும் மீண்டும் இதைப்பற்றி
குறைகூறுவதில் எந்தவித பயனும் இல்லை.
நான் எதை அவசியம் என்று கருதுகிறேனோ அதைத்தான்
இங்கு எழுத முடியும்…. என்னை யாரும் இப்படித்தான்
எழுத வேண்டுமென்று கட்டாயப்படுத்த முடியாது.
மீண்டும் கூறுகிறேன்…

இடுகையில் கூறப்படும் பொருளைப்பற்றியும்,
பின்னூட்டங்களில் வரும் கருத்துக்களை பற்றியும் –
விவாதம் செய்வதே சரியாக இருக்கும்…
எழுதுபவரைப் பற்றியோ, பின்னூட்டங்கள் போடுபவர்களைப்
பற்றியோ நாகரிகமற்ற முறையில் பின்னூட்டங்கள்
எழுதுபவர்களுக்கு இந்த தளத்தில் வேலை இல்லை…
அவர்கள் அதை தங்களது சொந்த தளங்களில்
வைத்துக் கொள்ளலாம்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்



யாராவது ஒரு அனானி,என்னைப் பிடிக்காதவன் என் பதிவு மற்றும் பின்னூட்டங்களில் இருக்கும் என் கருத்தை எடுத்து வருண் அல்லது varun என்னும் ஐ டி தயார் செய்து வந்து எதையாவது உளறினால் அது நான் எழுதிய பின்னூட்டமாகாது. அவன் கருத்து  அமெரிக்க அடிமை  ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் சொன்னதாக என்றும் ஆகாது. அந்த அனானி, கூவத்துக்கு அருகில் இருந்தும் அப்பின்னூட்டங்களை எழுதியிருக்கலாம் என்பதை மூளையுள்ளவர்கள் புரிந்து கொள்வது நலம்!

பதிவுலகில் இதுபோல் அனானிகள் உலவுவது சாதாரணம். யாருடைய பெரயரிலேயோ யாரோ போல் கருத்தைச் சொல்லிவிட்டு என்ன நடக்கிறதுனு வேடிக்கை பார்க்கிறதுதான் இந்த இழிபிறவிகளின் வேலை. எவனோ ஒருத்தன் வருண் னு பின்னூட்டமிட, உடனே அத்தளத்தில் உள்ள சில அடிமைகள் எல்லாம் அந்தப் பெயர் உள்ள பதிவரை (ரிலாக்ஸ் ப்ளீஸ் வருணை) விமர்சிக்கிறது.

உடனே தள நடத்துனர் வந்து தளத்தை சுத்தம் செய்துவிட்டு, எதிர்ப்பதிவு எழுதிய அந்தப் பதிவர்தான் (அமெரிக்க அடிமை ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் தான்)  அவர் தளத்தில் பின்னூட்டங்கள் இட்டது என்பது போல் தெரிந்தோ தெரியாமலோ பேசுவது. இதெல்லாம் பதிவுலகில் நடக்கும் நாடகங்கள்.

நான் செய்யாத வேலைக்கு எனக்குக் கிடைக்கும் சம்பளமோ, அல்லது புகழோ அல்லது இகழோ நான் ஏற்றுக்கொள்வதில்லை!

ஆக, நான் சொல்ல வருவது என்னவென்றால், காவீர மைந்தன் தளத்தில் "varun" என்கிற பெயரிலோ வேறு எந்தப் பெயரிலோ பின்னூட்டமிட்டது அடியேன் அல்ல!

I usually dont care about these kind of allegations but today is MLK day, holiday for me! So I had few minutes to let people know that it is someone else's game and I dont deserve the "awarded credit" for it!

Have a nice day, folks!


9 comments:

'பரிவை' சே.குமார் said...

இப்படியெல்லாம் நடக்குதா?
விடுங்க...
நாம செய்யலையில்ல...
அப்புறம் என்ன... விட்டுட்டுப் போய்க்கிட்டே இருங்க...

வருண் said...

நடக்குதாவா? நீங்க வேற இதே தொழிலாத் திரிகிற ஈனத்தமிழர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கானுக. தன் கருத்தை ஒரு ஒரிஜினல் ஐ டி ல வந்து சொல்ல முடியாத முதுகெலும்பில்லாதவர்கள் இவர்கள். கா மைந்தனை எல்லாம் எளிதில் குழப்பி விடுவார்கள். சமீபத்தில் இது மாதிரி ஃபேக் ஐ டி ஆட்கள் குறைந்துள்ளார்கள். இதிலே என்ன பிரச்சினைனா, நம்ம ஒண்ணும் சொல்லவில்லைனா, இவர்கள் சொல்லும் பொய்க்குற்றச்சாட்டெல்லாம் மெய் ஆகிவிடும். ஆனா என்ன? மனசாட்சி இருக்கு, கடவுள் இருக்காருனு வசனம் எல்லாம் பேசலாம்தான். எதார்த்த உலகில் எந்த நீதிபதியும், இல்லைனா ஜூரரும் ஒருவருடைய மனசாட்சியை வாசிக்க முடியாது, அதைப்பத்தி எல்லாம் கவலைப்படுவதில்லை. கடவுளும் அந்தாளுக்குள்ள ஆயிரம் பிரச்சினைகளில் அடிக்கடி விசிட் பண்ணி உண்மையை உரைப்பதும் இல்லை.

எனக்கு நேரம் இருந்ததால் இதைத் தெளிவு படுத்தினேன். வேலை அதிகமாக இருந்து இருந்தால் பேசாமல் விட்டு இருப்பேன்.

Saha, Chennai said...

கா.மை பற்றி சில விஷயங்கள்.

//இடுகைக்கு தொடர்புடையதாகவும்,
நாகரிகமாகவும் எழுதப்படும் எந்த பின்னூட்டத்திற்கும்
இங்கு இடம் உண்டு. விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்கிற
நோக்கத்துடன் எழுதுபவர்கள் –
மாற்று கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் நிச்சயமாக
வரவேற்கப்படுகிறார்கள். இந்த வலைத்தளத்தின்
நீண்ட கால நண்பர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.//

கா.மை சும்மா அப்டித்தான் சொல்லுவாரு, அதெல்லாம் உண்மையில்லைன்னு அவருக்கே தெரியும்.

மழை வெள்ளம் தெடர்பான அவரது இடுகையில் "நாகரிகமாகவும்" "விவாதங்களில் பங்கேற்க வேண்டும்" என்கிற நோக்கத்துடனும் எழுதிய எனது மாற்று கருத்து நிச்சயமாக வரவேற்கப்படவில்லை. திரும்ப திரும்ப அவரால் நீக்கப்பட்டது. அந்த வலைதளத்தின் நீண்ட கால அடிமைகளுக்கு இது நன்றாகவே தெரியும். நீக்கப்பட்டது குறித்து அவர் எனக்கு கொடுத்த பட்டம் "திரு.ஸ்டாலின் அவர்களின் தொண்டர்".

அந்த பதிவும் அதற்க்கு பதிலான எனது நீக்கப்பட்ட பின்னூட்டமும் நண்பர்களின் பார்வைக்கு.

https://vimarisanam.wordpress.com/2015/12/23/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/

எனது நீக்கப்பட்ட பின்னூட்டம்

----------------------------------------------------------

மாண்புமிகு புரட்சிதலைவி இதய தெய்வம் டாக்டர் அம்மாவின் ஆணைக்கிணங்க (லண்டனிலும்) மழையா? (வசன உபயம் சேலம் கலக்டரு).

//” இடுக்கண் வருங்கால் நகுக ” என்பதை நமக்கு நாமே
நினைவுபடுத்திக் கொள்ளவே, மனதை லேசாக்கிக்
கொள்ளவே இந்த இடுகை….!!!//

ஹை, ஜாலி, எனக்கு ஒரு கை ஒடஞ்சது பரவால்ல, ஆனா, பக்கத்து வீட்டுக்காரனுக்கு ரெண்டு கையும் ஓடைஞ்சிடுச்சே… ஜாலியோ ஜாலி…

==

//இடுக்கண் வருங்கால் நகுக//

இந்த இடத்தில் அந்த குறளுக்கு பதிலாக அதற்கு அடுத்த குறள்
“வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.”
(வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.- சாலமன் பாப்பையா உரை)
போட்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும், செய்வீர்களா, செய்வீர்களா..

==

அதுசரி, அந்த கட்டுரையில் இருந்து
//வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் வெள்ளம் புகுந்ததால் பாதிப்புகள் ஏற்பட்டன என்றாலும்,தமிழ்நாட்டில் வெள்ளம் நிகழ்த்திய பாதிப்புடன் ஒப்பிடும்போது அங்கு சேதம் மிகவும் குறைவு. புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட பெரிய பாதிப்பு என்று அங்கு வர்ணிக்கப்படுவது, மின்சாரத்தடை தான். //

அப்டியா? அப்டி ஒன்னும் பெர்சா இல்லியாமே..

Repeetu
//புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட பெரிய பாதிப்பு என்று அங்கு வர்ணிக்கப்படுவது, மின்சாரத்தடை தான்.//

இது லண்டன்காரவுகளுக்கு (தமிழ் தெரிஞ்சா படிச்சிட்டு மனச தேத்திக்குங்க.)

ஒன்னும் கவலைப்படாதீங்க, ஒங்க ஊருலயாச்சும் கடுமையான புயல் வெள்ளதால உங்களுக்கு லேசா பாதிப்பு , ஆனா எங்களுக்கெல்லாம், கொஞ்சம் அதிகமா மழை பேஞ்சதுக்கே இத்தனை வருசமா கஷ்டப்பட்டு சம்பாரிச்சு வாங்குன சொத்தெல்லாம் போச்சு. அதுனால நீங்க மனச தேத்திக்குங்க. என்ன பண்றது, பாதிக்கப்பட்டவங்களுக்கு பாதிக்கப்பட்டவங்கதான் ஆதரவு.. ஹம்ம்..

==

சபாஷ், இதையும் நீக்குங்க.

காமை ஐயா சாயம் வெளுக்குது.... ஜால்ராக்களுக்கு மட்டும்தான் இடமா... எதுனால என் பின்னூட்டங்களை நீக்குனீங்கன்னு சொல்ல முடியுமா? ஏதாவது, மரியாதை குறைவான வார்த்தைகள் இருந்ததா? நீங்கள் நிஜமாலுமே நேர்மையாளர் தானா என்பதை, உங்கள் மன சாட்சியையே கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால் ஒன்று இனிமேல் உங்கள் மனதரிந்து "நடுநிலையாளர்" என்று மட்டும் கூறிவிடாதீர்கள். அது அந்த வார்த்தைக்கு அழகல்ல.

----------------------------------------------------------

நிஷா said...

நிஜம் தான் வருண், சிலதை கண்டுக்காமல் விட்டு விட வேண்டும் எனும் நம்மவர் போக்குத்தான் இந்த மாதிரி அடுத்தவரை குறை சொல்லி தவறாய் பட்டம் கட்டும் பலர் வளரவும் காரணமாகின்றது.

அவன் என்னமோ சொல்லிட்டு போகின்றான், உண்மை எனக்கும் கடவுளுக்கும் தெரியுமென சொல்லி எத்தனை காலம் தான் நம்மை ஏமாற்றுவோம் என தெரியவில்லை. அதை படிக்கும் எத்தனை பேர் இது நிஜமோ அவன் அப்படித்தான் என நம்பி இருப்பார்கள் என்பதை புரிந்தாவது நம் சார்பில் விளக்கம் கொடுக்கணும் என்பது ஒரு பக்க்ம் இருக்க இப்படியான குற்றச்சாட்டுகளை கண்டுக்க ஆரம்பித்தால் நம் வேலை அப்பேல் தான்!

KILLERGEE Devakottai said...


தங்களின் ஆதங்கம் நியாயமானதே... விட்டுத்தள்ளுங்கள் நண்பரே....

வருண் said...

****Saha, Chennai said...

கா.மை பற்றி சில விஷயங்கள்.

//இடுகைக்கு தொடர்புடையதாகவும்,
நாகரிகமாகவும் எழுதப்படும் எந்த பின்னூட்டத்திற்கும்
இங்கு இடம் உண்டு. விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்கிற
நோக்கத்துடன் எழுதுபவர்கள் –
மாற்று கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் நிச்சயமாக
வரவேற்கப்படுகிறார்கள். இந்த வலைத்தளத்தின்
நீண்ட கால நண்பர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.//

கா.மை சும்மா அப்டித்தான் சொல்லுவாரு, அதெல்லாம் உண்மையில்லைன்னு அவருக்கே தெரியும்.***

சஹா:

நம் பொன்னான நேரத்தை செலவிட்டு, நமக்கு நேர் எதிரான "பொலிட்டிக்கல் வியூ உள்ள" பதிவர்கள் பதிவில் பின்னூட்டம் எழுதப்போகும்ப்பொது நம் கருத்து அத்தளங்களில் அநியாயமாக பறிக்கப்படுவது உண்மைதான். அப்படிப் பறிக்கப்படும்போதும், அதை செய்துவிட்டு "பெரிய மனுஷன் போலவும்" "நியாயஸ்தன்" போலவும் நடிப்பவர்களையும், அதற்கு ஜால்ரா அடிக்கும் "சுய சிந்தனை இல்லாத அடிமைகளையும்" பார்க்கும்போது விரக்திதான் நமக்கு மிஞ்சும்.

என்னைப் பொருத்தவரையில் நாம் அடுத்தவன் வீட்டில் நுழையும்போதுதான் தீண்டாமையை நம் மேல் அமல்ப்படுத்த முடியும். அதைத் தவிர்க்க ஒரே வழி அவன் வீட்டிற்கு செல்வதை புறக்கணிக்கணும். அடுத்து நாம் செய்யவேண்டியதை நம் வீட்டிலிருந்தே செய்யணும். அதற்கு நமக்கு ஒரு வலைதளம் கட்டாயம் வேண்டும். அப்படி ஒரு வலைதளம் இல்லாதவரைக்கும் இதுபோல் ஆட்களை வலையுலகில் சமாளிப்பது கடினமே.

சப்போஸ், எனக்கு இவ்வலைதளம் இல்லை என்றால், "இதெல்லாம் பொய் குற்றச்சாட்டு, நான் குற்றவாளி அல்ல!" காவீர மைந்தன் எவனையோ பார்த்து அது தனக்கு எதிர் பதிவு எழுதிய வருண் தான் அதுனு புருடா விடுறாருனு சொல்லக்கூட முடியாத பரிதாப நிலையில் இருப்பேன் நான்.

வருண் said...

*** நிஷா said...

நிஜம் தான் வருண், சிலதை கண்டுக்காமல் விட்டு விட வேண்டும் எனும் நம்மவர் போக்குத்தான் இந்த மாதிரி அடுத்தவரை குறை சொல்லி தவறாய் பட்டம் கட்டும் பலர் வளரவும் காரணமாகின்றது.

அவன் என்னமோ சொல்லிட்டு போகின்றான், உண்மை எனக்கும் கடவுளுக்கும் தெரியுமென சொல்லி எத்தனை காலம் தான் நம்மை ஏமாற்றுவோம் என தெரியவில்லை. அதை படிக்கும் எத்தனை பேர் இது நிஜமோ அவன் அப்படித்தான் என நம்பி இருப்பார்கள் என்பதை புரிந்தாவது நம் சார்பில் விளக்கம் கொடுக்கணும் என்பது ஒரு பக்க்ம் இருக்க இப்படியான குற்றச்சாட்டுகளை கண்டுக்க ஆரம்பித்தால் நம் வேலை அப்பேல் தான்!***

உண்மைதான் நிஷா. இதுபோல் பிரச்சினிகள் வரும்போது அந்நேரத்தில் நமக்கு இருக்கும் மனநிலை மற்றும் இருக்கும் அல்லது இல்லாத கால அவகாசத்தைப் பொருத்து என் "ரியாக்சன்" இருக்கும். பல நேரங்களில் கண்டு கொள்வதில்லை. ஒரு சில நேரங்களில் பேசித் தீர்த்து விடுகிறதும் உண்டு. புரிதலுக்கு நன்றி. :)

வருண் said...

***KILLERGEE Devakottai said...


தங்களின் ஆதங்கம் நியாயமானதே... விட்டுத்தள்ளுங்கள் நண்பரே....***

வாங்க தேவகோட்டையாரே!

நம் மக்கள் மனநிலை பற்றி நன்கு அறிந்தவன் நான் நண்பரே. "வருண் அப்படியெல்லாம் செய்ய மாட்டான்"னு சொல்லவும் செய்றவங்களும் இருப்பாங்க. "யாருக்குத் தெரியும்? செய்தாலும் செய்து இருப்பான்"னும் சொல்வார்கள். அதைவிட பிரச்சினை என்னனா, இதில் எதை யாரு சொல்வார்கள் என்பதும் நம்மால் சரியாகக்கணிக்க முடியாது.

எல்லாம் "அறியாமை" தான். வேறென்ன? :)

S.Raman, Vellore said...

அவரது ஒரு பதிவில் சிறுபான்மையினர் குறித்து வஞ்சப் புகழ்ச்சி அணியில் வில்லங்கமான ஒரு கருத்தை விதைத்திருந்தார். அது குறித்த எனது பின்னூட்டத்தையும் நீக்கி விட்டார். இது நியாயமா என்று கேட்டதற்கு அவரும் அவரது அடிமைகளும் பொங்கி எழுந்து விட்டனர். அடிப்படையாக நான் எழுப்பிய கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை. அந்த டுடே & மீ கூட அவரது பினாமி ஐ.டி என்றே தோன்றுகிறது.