vimarisanam - kavirimainthan சொல்கிறார்:
நண்பர் “நடுநிலை”, “வருண்”, “ஜின்னா”
– என்று இன்னமும் ஒரு டஜன் பெயர்களில்
இங்கு பின்னூட்டம் போட முயலும் இரண்டு அல்லது
மூன்று குறிப்பிட்ட நண்பர்களுக்கு –
உங்கள் பின்னூட்டங்களை நீக்கி விட்டதாக மீண்டும் மீண்டும்
இங்கு எழுதுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது
உங்களுக்கே தெரியும்.
நான் பலமுறை இங்கு எழுதி விட்டேன்.
இடுகைக்கு தொடர்புடையதாகவும்,
நாகரிகமாகவும் எழுதப்படும் எந்த பின்னூட்டத்திற்கும்
இங்கு இடம் உண்டு.
விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்கிற
நோக்கத்துடன் எழுதுபவர்கள் –
மாற்று கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் நிச்சயமாக
வரவேற்கப்படுகிறார்கள். இந்த வலைத்தளத்தின்
நீண்ட கால நண்பர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.
மாறாக – என்னையோ,
இங்கு பின்னூட்டமிடும் தங்களுக்கு பிடிக்காத
மற்ற நண்பர்களையோ – தரக்குறைவாக எழுதும் உரிமை
எவருக்கும் கிடையாது. நான் அதை நிச்சயம் அனுமதிக்க
மாட்டேன். விவாதங்களும், பின்னூட்டங்களும் –
இடுகைக்கான பொருளைப்பற்றியே
இருக்க வேண்டுமே தவிர,
பின்னூட்டம் இடும் தனிப்பட்ட நண்பர்களைப் பற்றி அல்ல..
இதில் “வருண்” எழுதியவை எந்த ரகத்தைச் சேர்ந்தவை ?
வருண் என்கிற நபர் –
வழக்கமாக இங்கு பின்னூட்டங்கள் எழுதும் நண்பர்
டுடேஅண்ட்மீ அவர்களின் பெயரில் –
அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு “போலி id”-யை
உருவாக்கி போலியாக சில பின்னூட்டங்களை
டுடேஅண்ட்மீ என்கிற பெயரில் எழுதியது
பச்சை அயோக்கியத்தனம்.
இந்த மாதிரி நபர்களை
நான் ஏன் இங்கே அனுமதிக்க வேண்டும்…?
அதிமுக ஆட்சியைப் பற்றி நான் தீவிரமாக
விமரிசிப்பது இல்லை தான்… அது என் priority -யில்
இல்லை… இப்போதைக்கு நான் அதைச் செய்ய மாட்டேன்
என்று பலமுறை இங்கே வெளிப்படையாகத் தெரிவித்து
விட்டேன். மீண்டும் மீண்டும் இதைப்பற்றி
குறைகூறுவதில் எந்தவித பயனும் இல்லை.
நான் எதை அவசியம் என்று கருதுகிறேனோ அதைத்தான்
இங்கு எழுத முடியும்…. என்னை யாரும் இப்படித்தான்
எழுத வேண்டுமென்று கட்டாயப்படுத்த முடியாது.
மீண்டும் கூறுகிறேன்…
இடுகையில் கூறப்படும் பொருளைப்பற்றியும்,
பின்னூட்டங்களில் வரும் கருத்துக்களை பற்றியும் –
விவாதம் செய்வதே சரியாக இருக்கும்…
எழுதுபவரைப் பற்றியோ, பின்னூட்டங்கள் போடுபவர்களைப்
பற்றியோ நாகரிகமற்ற முறையில் பின்னூட்டங்கள்
எழுதுபவர்களுக்கு இந்த தளத்தில் வேலை இல்லை…
அவர்கள் அதை தங்களது சொந்த தளங்களில்
வைத்துக் கொள்ளலாம்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
யாராவது ஒரு அனானி,என்னைப் பிடிக்காதவன் என் பதிவு மற்றும் பின்னூட்டங்களில் இருக்கும் என் கருத்தை எடுத்து வருண் அல்லது varun என்னும் ஐ டி தயார் செய்து வந்து எதையாவது உளறினால் அது நான் எழுதிய பின்னூட்டமாகாது. அவன் கருத்து அமெரிக்க அடிமை ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் சொன்னதாக என்றும் ஆகாது. அந்த அனானி, கூவத்துக்கு அருகில் இருந்தும் அப்பின்னூட்டங்களை எழுதியிருக்கலாம் என்பதை மூளையுள்ளவர்கள் புரிந்து கொள்வது நலம்!
பதிவுலகில் இதுபோல் அனானிகள் உலவுவது சாதாரணம். யாருடைய பெரயரிலேயோ யாரோ போல் கருத்தைச் சொல்லிவிட்டு என்ன நடக்கிறதுனு வேடிக்கை பார்க்கிறதுதான் இந்த இழிபிறவிகளின் வேலை. எவனோ ஒருத்தன் வருண் னு பின்னூட்டமிட, உடனே அத்தளத்தில் உள்ள சில அடிமைகள் எல்லாம் அந்தப் பெயர் உள்ள பதிவரை (ரிலாக்ஸ் ப்ளீஸ் வருணை) விமர்சிக்கிறது.
உடனே தள நடத்துனர் வந்து தளத்தை சுத்தம் செய்துவிட்டு, எதிர்ப்பதிவு எழுதிய அந்தப் பதிவர்தான் (அமெரிக்க அடிமை ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் தான்) அவர் தளத்தில் பின்னூட்டங்கள் இட்டது என்பது போல் தெரிந்தோ தெரியாமலோ பேசுவது. இதெல்லாம் பதிவுலகில் நடக்கும் நாடகங்கள்.
நான் செய்யாத வேலைக்கு எனக்குக் கிடைக்கும் சம்பளமோ, அல்லது புகழோ அல்லது இகழோ நான் ஏற்றுக்கொள்வதில்லை!
ஆக, நான் சொல்ல வருவது என்னவென்றால், காவீர மைந்தன் தளத்தில் "varun" என்கிற பெயரிலோ வேறு எந்தப் பெயரிலோ பின்னூட்டமிட்டது அடியேன் அல்ல!
I usually dont care about these kind of allegations but today is MLK day, holiday for me! So I had few minutes to let people know that it is someone else's game and I dont deserve the "awarded credit" for it!
Have a nice day, folks!