Wednesday, August 31, 2016

மறுபடியும் ரஞ்சித் கைவண்ணத்தில் தாழ்த்தப்பட்டவராக ர*ஜ*னி*?!

கபாலி ஆரம்பமானபோது இதென்ன ஒரு லோபட்ஜெட் படம்..என்னத்த தேற? என்பது போலிருந்தது. தாணுவின் கில்லாடித்தனத்தால் ஹைப் அதிகமாகி மிகப்பெரிய ஓப்பனிங் பெற்று ஒரு வழியாக வெற்றிப்படமாகிவிட்டது.

கபாலி கபாலினு ஒரு வயழியாக ஆடி அடங்கி, அடுத்து 2. பாயிண்ட் ஓ தான் என்று இருக்கும்போது, மறுபடியும் ரஞ்சித்துடன் இணைவதாக அதிகாரப்பூர்வ்மான செய்தி.

தேவையானபோது தங்கள் வசதிக்கு எல்லாம் ஃபிக்‌ஷன். படத்தைப் படமாப் பார்க்கணும் என்றெல்லாம் சப்பை கட்டுபவர்கள் நம்மில் பலர் உண்டு. பல படங்களில் ஆதிக்க சாதியினர் எல்லாரும் அவர்கள் பெருமை பேசி ரசித்துத் தீர்த்துவிட்டார்கள். ஒலகநாயகரின் சபாஷ் நாயுடு கூட பெருவாரியான மக்களின் ஒரு சாதி அடையாளம்தான். சிறுபான்மையினர் பிரச்சினையை ஒலகநாயகர்கூட இதுவரை முன்வைக்கவில்லை!!

மதுரைவீரன் படத்தில் எம் ஜி ஆர் தாழ்த்தப்பட்டவராக நடித்ததாக சொல்வார்கள். ஆனால் வீரன் மாறுகால் மாறுகை வாங்கப்படுவான்.

 சவாலே சமாளியில் சி வா ஜி தாழ்த்தப்பட்டவராக நடித்ததாகக்கூட சொல்வார்கள். அதையும் அதில் பூடகமாகத்தான் சொல்லப்பட்டது எனலாம்.

"புதியதல்லவே தீண்டாமை என்பது! புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது"னு ஒரு பாடல்வரி அதில் உண்டு!

ஆனால் யாருமே அவர்கள் பிரச்சினைகளை ஒரு ஹீரோவாக நடித்து முன்வைத்து வெற்றியடைந்ததாக காட்ட மாட்டார்கள்.

அதே சமயத்தில் சி வா ஜி ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராக பல படங்களில் நடித்துள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அவரவர் பிரச்சினைகள், அவர்வர் படும் இன்னல்கள் எல்லாம் பட்டவர்களுக்குத்தான் தெரியும்.

தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து இப்படி ஒரு ரஞ்சித் என்னும் திறமையுள்ள இயக்குநர் தன் முயற்சியால் முன்னேறி வந்துள்ளது முதலில் நாம் அனைவருமே சந்தோசப்பட வேண்டிய விடயம்.

மேலும் அவர்கள் பிரச்சினையை முன்வைப்பதற்கு இது ஒரு மிகப்பெரிய வாயப்பு அல்லது சந்தர்ப்பம். அதுவும் ஒரு மிகப்பெரிய ஸ்டாரை வைத்து முன்வைப்பது அதைவிட சிறப்பு- பலரையும் சென்றடைய வாய்ப்பு. சும்மா ஒரு லோ பட்ஜெட் படம் எடுத்து டி வி சீரியல் மாதிரி விடுவதைக் காட்டிலும் பெரிய ஸ்டாரை வைத்து எடுத்தால் உலகலவில் பலரையும் சென்றடையும்.

பெண்களை நாம் அடிமைப்படுத்தி அநியாயம் பண்ணியிருக்கிறோம் என்பதை எல்லா ஆண்மகனும் ஒத்துக்கொள்ளணும்.

அதேபோல் தாழ்த்தப் பட்டவர்கள் வாழ்க்கையை நாமும் தெரிந்ந்தோ தெரியாமலோ, சின்னா பின்னப் படுத்தியுள்ளோமென்பதை பார்ப்பனர்களும் ஆதிக்க சாதியினரும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளவேண்டிய தருணம் இது!

 Image result for kabali images


கபாலியில் நிச்சயம் தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்ச்சினைகளையோ, அவர்களும் வெல்லலாம் என்கிற ஒரு கருத்தையோ தெளிவாகவோ அல்லது அழுத்தமாகவோ  ரஞ்சித் முன்வைக்கவில்லை என்றே நான்  நினைக்கிறேன்.
இந்த இரண்டாவது வாய்ப்பிலாவது அதை ரஞ்சித் திறம்பட செய்வார் என நம்புவோம்.

ஆதிக்க சாதியினர் மற்றும் பார்ப்பனர்கள் எல்லாம் படத்தைப் படமாகவும், ஃபிக்‌ஷனாகவும் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம். சில்லரைத்தனமாக சாதி வெறியுடன் இதில் முன்வைப்பதை அனுகாமல், தலித்கள் அவர்கள் படும் இன்னல்களை, மற்றும் அவர்களும் நம் எல்லோருக்கும் எல்லா வகையிலும் சமம்தான் என்று முன் வைக்கும் கருத்துக்களை ஒரு திறந்த கண்ணோட்டத்துடன் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

It is about time to grow up, guys! And show the world that you are not stupid and ignorant anymore! And that you are really really civilized and open-minded!

14 comments:

Yaathoramani.blogspot.com said...

அடுத்த படமாவது ஒரு நிறைவான
படமாக அமையவேண்டுமெனத்தான்
மிக அழுத்தமாகச் சொல்லாமல்
சில பதிவுகள் இது குறித்து
எழுதி வருகிறேன்
வாழ்த்துக்களுடன்....

Nambikkai Kannan said...

கபாலி தாழ்த்தப்பட்டவர்களின் வலியை சொல்லும் படம் இல்லை.

நிச்சயம் கபாலி 2 வும் அப்படி தான் இருக்கும்.
மேடை கிடைக்கும் வரை வீர வசனம் பேசுவார்கள்.
பெரிய இடத்துக்கு சென்ற பின் அடக்கி வாசிப்பார்கள்.
அதை தான் ரஞ்சித் செய்கிறார்.

valampuri said...

படத்தை தமிழ்நாட்டில் எடுக்கச்சொல்லவும்

G.M Balasubramaniam said...

அதேபோல் தாழ்த்தப் பட்டவர்கள் வாழ்க்கையை நாமும் தெரிந்ந்தோ தெரியாமலோ, சின்னா பின்னப் படுத்தியுள்ளோமென்பதை பார்ப்பனர்களும் ஆதிக்க சாதியினரும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளவேண்டிய தருணம் இது!/ படங்கள் மூலம் தெரியப்படுத்த முடியுமா திரைப்படத்தை ஒரு பொழுது போக்காகத்தான் பலரும் பார்க்கிறார்கள் கலை வாணர் சொல்லாத சீர்திருத்தக் கருத்துகளா கலை வாணரின் நல்லதம்பி பார்த்திருக்கிறீர்களாகிந்தனார் காலட் சேபம் நினைவில் இருக்கிறதா

வருண் said...

***Ramani S said...

அடுத்த படமாவது ஒரு நிறைவான
படமாக அமையவேண்டுமெனத்தான்
மிக அழுத்தமாகச் சொல்லாமல்
சில பதிவுகள் இது குறித்து
எழுதி வருகிறேன்
வாழ்த்துக்களுடன்....****


பார்க்கலாம் சார். :)

வருண் said...

****Vaanga Pesalam said...

கபாலி தாழ்த்தப்பட்டவர்களின் வலியை சொல்லும் படம் இல்லை.

நிச்சயம் கபாலி 2 வும் அப்படி தான் இருக்கும்.
மேடை கிடைக்கும் வரை வீர வசனம் பேசுவார்கள்.
பெரிய இடத்துக்கு சென்ற பின் அடக்கி வாசிப்பார்கள்.
அதை தான் ரஞ்சித் செய்கிறார்.***

ரஞ்சித் இயக்கத்தில்னு சொன்னபோது, இதை நீங்க சொல்லியிருந்தால் உங்களைப் பாராட்டலாம். படம் வந்த பிறகு அதைப் பார்த்த பிறகுதான் எல்லாரும் பேசுறோம். அதேபோல் அடுத்தபடம் வெளிவந்த பிறகு பேசலாம். இப்போவே எதுக்கு எல்லாம் தெரிந்த மாதிர்ரி ரொம்பப் பேசுறீங்கனு விளங்கவில்லை

வருண் said...

*** அதேபோல் தாழ்த்தப் பட்டவர்கள் வாழ்க்கையை நாமும் தெரிந்ந்தோ தெரியாமலோ, சின்னா பின்னப் படுத்தியுள்ளோமென்பதை பார்ப்பனர்களும் ஆதிக்க சாதியினரும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளவேண்டிய தருணம் இது!/ படங்கள் மூலம் தெரியப்படுத்த முடியுமா திரைப்படத்தை ஒரு பொழுது போக்காகத்தான் பலரும் பார்க்கிறார்கள் கலை வாணர் சொல்லாத சீர்திருத்தக் கருத்துகளா கலை வாணரின் நல்லதம்பி பார்த்திருக்கிறீர்களாகிந்தனார் காலட் சேபம் நினைவில் இருக்கிறதா ***

வாங்க ஜி ஏம் பி சார்ர். நல்லதம்பி பார்த்ததில்லை சார். எப்படியாவது பார்க்க முயல்கிறேன். நீங்க சொல்றது உண்மைதான் பொழுதுபோக்குக்காகப் பார்த்துவிட்டு மறந்துடுவாங்க. இருந்தாலும் நம் கருத்தைச் சொல்லிவிட்டோம் என்கிற திருப்தி அதை உருவாக்கிய இயக்க்குநருக்கு கிடைக்கும்னு நினைக்கிறேன்.

வருண் said...

***valampuri said...

படத்தை தமிழ்நாட்டில் எடுக்கச்சொல்லவும்***

அது இருக்கட்டும்..அனானியாகக் குரைக்கும் வலம்புரி்னு நீர் 2010 ல இருந்து வாலம்புரி ஓசைனு ஒரு தளம் நடத்துறீர் போல இருக்கு? இத்தனை காலத்தில் அதில் ஒரு பதிவு எழுதக்கூட உனக்கு வக்கில்லை? பெரிய புடுங்கி மாதிரி அவனை இப்படி செய்யச்சொல்ல்லு இவனை அப்படி செய்யச் சொல்லுனு அனானி நாயி நீ ஆர்டர் போடுற?? உன்னை என்ன செய்யலாம்??

அருள்மொழிவர்மன் said...
This comment has been removed by the author.
வருண் said...


***என்பதைக் கேட்கும்போது நிச்சயம் மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய பார்வையில் ஒரு படைப்பாளியைப் படைப்பாளியாகப் பார்க்கவேண்டுமே தவிர மீண்டும் மீண்டும் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பு/சமூகத்திலிருந்து வந்தவர் என்று முத்திரை குத்திப் பறைசாற்றத் தேவையில்லை. ரஞ்சித் இன்னும் நல்ல கருத்துள்ள படங்களை அளித்தால் அனைவருக்கும் சந்தோசம்தான். இன்று நல்ல கருத்துக்களடங்கிய படங்களை மக்கள் பார்ப்பது மட்டுமின்றி சிந்திக்கவும் தொடங்கியுள்ளனர். ஆதிக்க சாதியினர் என்று நீங்கள் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டிருப்பது எனக்குப் புரியவில்லை.***

உங்க கருத்தை பிச்சுப் பிச்சுப் போட்டுப் பார்க்கலாம்..

முதல் வரி மகிழ்ச்சினு சொல்றீங்க? ஆனால் தலித அடையாளத்தை அதில் சொல்லியிருக்கேன். அதை நீங்க கண்டுக்கவில்லை. அது ஏன் ன்னு தெரியவில்லை. பின்னால் தலித் அடையாளம் தேவையில்லை என்கிறீர்கள்??

படைப்பாளி படைப்பாளியக பார்க்கவேண்டும்?? அப்போ தசாவதாரம் படத்தில் காட்டும் பூவராகனையும் மனிதனாக சாதி அடையாளம் இல்லாமல் பார்க்க வேண்டும் இல்லையா?

அங்கே மட்டும் பூவராகன் சாதியை ஏன் கண்டு பிடிச்சீங்க? அந்த அடையாளத்துடன் ஏன் விமர்சனம் வைக்கிறீங்க?

நீங்களே ஒரு ஹிப்போக்டரைட் தான் னு புரியுதா??

கருத்துக்கு நன்றி, அருள்மொழிவரமரே!:)





அருள்மொழிவர்மன் said...
This comment has been removed by the author.
வருண் said...

***அருள்மொழிவர்மன் said...

தங்களின் பதிவை வாசித்து கருத்தளித்தது என் தவறுதான். இனி திருத்திக்கொள்கிறேன்.***

It is a big world, Sir. You can certainly find the "appropriate blog/bloggers" for your "level" to share your extraordinary civilized thoughts. So can I find someone else to debate my thoughts too! Take care!

'பரிவை' சே.குமார் said...

வாசித்தேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆதிக்க சாதியினரின் தவறுகளை மனப்பூர்வமாக உணரவைக்கவேண்டும்