Friday, March 17, 2017

பதிவெழுத நேரமில்லை!

நேரம் வேகமாகப் போவது அல்லது ஓடுவது நல்லதா? உனக்கு வாழ்க்கை போர் அடிக்கவில்லை என்றே அதன் அர்த்தம். எனக்கும் வாழ்க்கை படுவேகமாக ஓடுகிறது. இதில் என்ன ஒரே பிரச்சினை..90 வயதில் செத்தாலும் நேற்றுத்தான் முதல் பிறந்தநாள் கொண்டாடியதுபோல் ஒரு உணர்வு வரும். வாழ்க்கை போர் அடிக்கவில்லை என்றால் உனக்கு "அற்ப ஆயுசு"னு சொல்லலாமா?

வம்புகள் சில!

இவர் பேரு முரளிக்கண்ணன். தரமான பதிவர்னு ஒரு காலத்தில் பேர் வாங்கியவர். நாகரிகமிக்க "உலக" விசிறி. இவருக்கும் பதிவெழுத நேரமில்லையா என்னனு தெரியலை. அதனால தப்பில்லை. ஆனால் நெறைய தவறான தகவல்கள் கொட்டிட்டு போறார்.

சிந்தாமணி தியேட்டர் னு ஒரு பதிவு. இதில் மதுரை சிந்தாமணியில் ஒரு தலை ராகம் ஓடியதாக காசுவலாக ஒரு பொய்த் தகவலை வெளியிடுகிறார். ஒரு தலை ராகம் படம் மதுரை அலங்காரில் வெள்ளிவிழா கொண்டாடிய படம்னு உலகமே சொல்லும்.

இதெல்லாம் பெரிய விசயமா?

ஆமா!

பதிவெழுத நேரமில்லையா சும்மா ட்வீட் பண்ணிட்டு பொழைப்பை ஓட்டுங்க. சும்மா அரைகுறையா பொய்த்தகவலுடன் ஒளறிக் கொட்டாமல்.

சரி பின்னூட்டத்தில் அதை விமர்சிச்சு ச் சொன்னாலும் அதையும் வெளியிடுவதில்லை. அப்படி என்ன கிழிக்கிறீங்கனு தெரியலை. இல்லை பெரிய கொம்பன் னு நெனைப்பா இருக்கலாம். நல்லாத்தான் வாயில வருது. சும்மா பொய் தகவல்களை வெளியிட்டா யாருக்கும் மரியாதை கெடையாது. புரிஞ்சுக்கிட்டா நல்லது.

HIV  and HIV protease inhibitor பற்றி எழுத ஆசை!




 Hiv gross.png


நேரமில்லை. தமிழ்ல இதை விவரிக்கணும்னா ரொம்ப ரொம்ப நேரமாகும். நேரமில்லை.

கொஞ்ச நேரம்தான் இருக்கு பதிவெழுதியே ஆகணும்னா? இப்படி எதையாவது வெட்டி ஒட்ட வேண்டியதுதான்.

OK, relax please!

Image result for deepika padukone

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்க சொல்றது புரியுது... தவறான தகவல்களை பரப்புபதற்கு பதில் 'சும்மா' இருக்கலாம்...

தொடரருங்க 'தல' உங்க ஆசையெ... அதுக்காக இப்படி படத்தை போட்டு பயமுறுத்தாதீங்க... நன்றி...

Avargal Unmaigal said...

பாஸ் அப்படி சில பேர் தப்பு தப்பா எழுதினால்தான் உங்களை இங்கே பார்க்க முடியுது

Kasthuri Rengan said...

ஹா ஹா ஏன் அந்தப் படம் ஒரு தியேட்டரில் மட்டும்தான் ஓடியதா என்ன ?
இப்போது போல ஒரே சமயதில் மூன்று நான்கு தியேட்டர்களில் ஓடுவது போல அப்போது பழக்கமில்லையா என்ன ?

வருண் said...

***திண்டுக்கல் தனபாலன் said...

நீங்க சொல்றது புரியுது... தவறான தகவல்களை பரப்புபதற்கு பதில் 'சும்மா' இருக்கலாம்...

தொடரருங்க 'தல' உங்க ஆசையெ... அதுக்காக இப்படி படத்தை போட்டு பயமுறுத்தாதீங்க... நன்றி...**

யாரி பார்த்து பயந்தீங்க. எச் ஐ வி வைரஸுக்கு உயிரே கெடையாது. நம் செல்க்களை அது அழிப்பது அதன் சரிவைவ்ல்க்காக மட்டுமே. :)

ஒரு வேளை தீபிகாவைப் பார்த்தா?? :) அழகான பெண்களைப் பார்த்து பயப்படுவது நல்லதுதான் :)

வருண் said...

***Avargal Unmaigal said...

பாஸ் அப்படி சில பேர் தப்பு தப்பா எழுதினால்தான் உங்களை இங்கே பார்க்க முடியுது.***

இதுல பிரச்சினை என்னனா இவருக்கு ஏற்கனவே ஒரு நல்ல ரெப்யூட்டேஷன்.. இவரை நம்பி நாலு பேரு தப்பா எழுத. அவனுகளை நம்பி ஒரு நூறு பேரு.. இப்படியே தொடரும்..

வருண் said...

***Mathu S said...

ஹா ஹா ஏன் அந்தப் படம் ஒரு தியேட்டரில் மட்டும்தான் ஓடியதா என்ன ?
இப்போது போல ஒரே சமயதில் மூன்று நான்கு தியேட்டர்களில் ஓடுவது போல அப்போது பழக்கமில்லையா என்ன ?***

அதானே? உங்க அபிமானப் பதிவராச்சே அவரு? :)

2-3 தியேட்டர்லயா? இல்லை மது, அந்தப் படத்தை ஒரு பயலும் வாங்க மாட்டேன்னு சொல்லீட்டான். அத்னால் சுமாரான அலங்கார்லதான் ரிலீஸ் பண்ணினாங்க. ஆனால் படம் பிச்சுக்கிட்டு ஓடுச்சு. அலங்கார் தியேட்ட்ரையே அந்த வருமானத்தை வச்சுத்தான் புதுப்பித்ததா சொல்லுவாங்க. :)

'பரிவை' சே.குமார் said...

உண்மைதான்... நம்மால் எழுத முடியவில்லை என்றால் பேசாமல் இருக்கலாம்...
முகநூல் வாட்ஸ்-அப் மாதிரி தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாமே...

தனிமரம் said...

அப்படியா தல)) படம் அழகு)))

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இவற்றை எழுதுவதற்கு நிச்சயம் காரணம் இருக்கு அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-