Tuesday, February 27, 2018

ஶ்ரீதேவி, ஜெயேந்திரர், மநீம சின்னம்!

நடிகைகள் எல்லாம் கொஞ்ச வயதிலேயே நிம்மதியாகப் போயி சேர்ந்து விடுகிறார்கள்.

ஶ்ரீவித்யா, சுஜாதா இப்போ ஶ்ரீதேவி. பாவம் இரண்டு பதின்மவயதில் இருக்கும் மகள்கள்.

ரஜினியுடன் நடித்தப் படங்களில், தர்ம யுத்தம், ப்ரியா  இரண்டும் நான் ரசித்து பார்த்தவை. வில்லனாக நடித்த படங்களீல் 16 வயதினிலே, மூன்று முடிச்சு, குறிப்பிடத்தக்கது.

என்னைக் கேட்டால் இவர் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யுமுன் இருந்த இவர் மூக்கு நல்லாயிருந்தது.

ஆனால் ஒன்னு ரஜினியின் இரங்கல் ட்வீட் உண்மையான ஒரு தோழியின் இழப்பு என்பது போல் உருக்கமாகவே இருந்தது.

-----------------------

பெரியவா ஜெயேந்திரர்  மரணத்தை தழுவிவிட்டாராம். சங்கர் ராமனை இந்நேரத்தில் சந்தித்து இருப்பா!

 kanchi-shankaracharya-jayendra-saraswathi-died


-----------------------

கவுதமியிடமிருந்து கமல் மேல் இப்படி ஒரு தாக்கு நான் எதிர்பார்க்கவில்லை! இது அரசியல் என்பதை எல்லாம் நான் நம்பப் போவதில்லை.

வாணி, சரிகா இப்போ இவர்.

 கமலஹாசன் இன்கம் டாக்ஸ் மட்டும்தான் ஒழுங்கா கட்டுவார் போல இருக்கு. பாவம் இவருக்குக் கூட சம்பள பாக்கியை கொடுக்கலை ராஜ் கமல் கம்பெனி என்பது பரிதாபம்.

என்னைப் பொருத்தவரையில் உடல் தானம், ரத்த தானம், இன்கம் டாக்ஸ் சரியா கட்டுறது இதெல்லாம் விட இதுபோல் கடன்களை திருப்பி கொடுக்க வேண்டியது "பெரிய மனுஷனுக்கு" ரொம்ப முக்கியம்.

------------------------------

சினிமாவைத் தான் ஹாலிவுட்ல இருந்து திருடினார் . இப்போ என்னடானா, கட்சி சின்னம் கூடவா திருட்டு?

இதுபோல் திருடிப் பழகிவிட்டால் "க்ரியேட்டிவிட்டி" சுத்தமாக இல்லாமல்ப் போய்விடும் என்பதற்கு இந்தாளூ நல்ல உதாரணம்.




makkal neethi mayyam logo



---------------------------

உச்ச நீதிமன்றம் லதா ரஜினிகாந்தை 6 கோடிபோல கடனைத் திருப்பிக் கொடுக்கணும்னு தீர்ப்பு வந்ததா பத்திரிக்கையில் படிச்சேன்.

எனக்கு என்ன புரியலைனா 6 கோடியெல்லாம் பெரிய விசயமா என்ன?  ஏன் இப்படி இருக்காங்க இந்தம்மா?!!!

-----------------------------------



No comments: