அவர் ஒரு நாத்திக அறிவியலாளன் இறந்துட்டார். உடனே இரங்கல் தெரிவிச்சு நானும் மேதை
தனக்கும் சொந்தம்னு காட்டிக்கணும். இதுதான் இன்றைய "உலகம்". "மக்கள் நீதி".
"மய்யக் கருத்து".
இவர் யாரு? பிறப்பால் ஆங்கிலேயர். ஆக்ஸ்ஃபோர்ட் பலகலைகழகத்தில் பேராசிரியர். தியரிடிகல் ஃபிசிஸிஸ்ட்! முக்கியமாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இது ஒண்ணும் அபூர்வமெல்லாம் இல்லை. நான் பார்த்தவரையில் பொதுவாக அறிவியல்த்துறையில் உள்ளவர்களில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் அதிகம்.
அறிவியல் சாதனைகளுக்குப் பெரிய பரிசுனா.. நோபல் பரிசு எதுவும் பெறவில்லை. அதனால் இவர் குறைந்தவர் இல்லை. இவர் ஒரு பெரிய தியரிடிகல் ஃபிசிசிஸ்ட்தான். அப்படி என்னதான் ஆராய்ச்சி பண்ணினார்? "ப்ளாக் ஹோல்ஸ்" னு சொல்றாங்க. அப்படினா? அதைப்பற்றி நான் கவனமாக இன்னும் படிக்கவில்லை!
இப்போலாம் ஜெயமோகன்தான் பிரபஞ்சம் பத்தி ரொம்ப எழுதுறார். இன்னொரு பக்கம் நம்ம ஹார்வேட் மேதை கமலஹாசன். விஞ்ஞானத் துறையில் உள்ளவன் எல்லாம் ஏதாவது ஒரு சின்ன மூலையில் ஆராய்ச்சி பண்ணி சின்ன சின்ன விசயங்களைப் புரிந்துகொள்ள போராடிக்கொண்டு இருக்கார்கள். ஆனால் ஜெயமோஹனும், கமலஹாசனும்தான் எல்லாம் தெரிந்ததுபோல் உளறித் தள்ளுகிறார்கள்.
"Credit hog" னு சொல்வார்கள். என்ன எழவைனாலும் பேசி பெரிய ஆள்னு காட்டிக்கணும். உளறுவது புரியவில்லை என்றால். உளறுபவந்தான் ஊனன். கேட்பவனல்ல என்கிற உண்மை விளங்காத மடமை நிறைந்த "உலகம்" இது.
மனிதன் சின்னச் சின்னப் பிரச்சினைகளை என்றுமே அனுகுவதில்லை. ஏனென்றால் அவனால் அதற்கு சின்ன சின்ன தன் கட்டுப்பாட்டில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடிவதில்லை. பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு தான் தீர்வு காண்பதுபோல் நடிக்கிறது. இதுதான் இன்றைய "உலகம்"! எலி வேட்டையை விட புலி வேட்டைக்குச் என்று அது கடித்து சாவதுதான் பெருமை.
சரி நம்ம ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றி வேற ஒருகோணத்தில் அனுகுவோம்.
ஸ்டீஃபென் ஹாக்கிங்க்கு என்ன நோய்?
ஏன் அவர் வாதம் வந்ததுபோல் ஆனார்?
எ எல் எஸ் என்கிறார்கள் இவருக்கு வந்த வியாதி. இதுவும் ஒரு neurodegenerative disease என்பார்கள். அவ்வகையை சேர்ந்த வியாதி. Huntington disease. Alzheimer's disease போல "நியூரான்" பாதிக்கப் படுவது. ஏதாவது ம்யூட்டேட்டட் ஜீன் வீரியமற்ற ஒரு ப்ரோட்டீனை உருவாக்குவதால் ஏற்படும் செல் சிதைவுகள் அல்லது டெப்பாஸிட்கள்தான் இதற்குக் காரணம்.
நியுரான் என்றால் என்ன? நேர்வ் செல்லுக்குப் பெயர் நியூரான்.
எ எல் எஸ் வியாதி வந்தவர்களுக்கு மூளை பாதிக்காது! இந்த வியாதி மூளையை பாதிக்காது என்பதால்தான் ஸ்டிஃபென் ஹாக்கிங் உடைய சிந்தனைகள் பாதிக்கப் படவில்லை. அவர் அறிவியற்பணியை கடைசிவரை தொடர முடிந்தது.
நம்முடைய தசைகள் ஒழுங்காக இயங்க ஒரு சில நியூரான்கள், தசை செல்களோடு கம்யுனிகேட் செய்தால்தான் மூளை, நியூரான் மூலம் சொல்லும் விசயத்தை, தசைகள் செய்ய இயலும். இப்போ ஒரு காஃபி கப்பை எடுத்து அதிலுள்ள காஃபியை பருக வேண்டுமென்கிற சிந்தனை. மூளையில் தோன்றி, அது நியூரான்கள் மூலம் உங்க தசைகளுக்கு "எலெக்ட்ரிகல் சிக்னல்" ஆக கம்யுனிகேட் செய்யப் படும். அந்த தகவலை எடுத்து செல்வது "மோட்டார் நியூரான் கள்". அந்த மோட்டார் நியுரான்கள் தசைக்கு சொல்லி, தசை, எ டி பி, கால்சியம் போன்ற வேதிப்பொருள்களை பயன்படுத்தி, ஆக்டின், மயோசின், ட்ரோப்போமைசின், ட்ரோப்பனின் என்று பல ப்ரோட்டின்களை பயன்படுத்தி செயல்படுத்தணும். நீங்க ஒரு சிப் காஃபி குடிப்பதற்கு எத்தனை ப்ரோட்டின்கள் வேலை செய்யணும்தெரியுமா? :) மலைத்துப் போய்விடுவீர்கள் அதையெல்லாம் கேட்டால்.
இந்த வியாதி வந்தவர்கள் உடலில் உள்ள மோட்டார் நியூரான்களில் குறைபாடு உண்டாகி, அது தசை செல்களிடம் ஒழுங்காக கம்யுனிகேட் பண்ண இயலாது. அதனால் உண்டாகும் விளைவே இந்நோயாளிகள் படும் கஷ்டங்கள்!
சரி, இந்த மோட்டார் நியுரான் செயல்திறன் இழந்ததால் ஏற்படும் வியாதிதான் எ எல் எஸ்?
இந்த நியூரான்கள் ஏன் செயல் திறன் இழக்குது?
ஜெனடிக்ஸ்.
நம்முடைய ஜீன்களில் ஏற்படும் சில "இடம் பெயர்தல்" கோளாறு. அதாவது ஜீனில்
உள்ள கோளாறு, ப்ரோட்டீன்களில் கோளாறாகி, ப்ரோட்டீன்கள் செய்ய வேண்டியதை
சரியாக செய்ய முடியாமல்ப் போய்விடுவதால்.
ஏன் இதுபோல் ம்யூட்டேசன் நடக்குது? இதில் வேடிக்கை என்னவென்றால் இயற்கையில் ம்யூட்டேசன் நடக்கவில்லை என்றால் நாமே உருவாகி இருக்க மாட்டோம். அதனால் ம்யூட்டேசனை ஒரேயடியாக குறை சொல்லிவிட முடியாது. இதுபோல் சில ம்யூட்டேசன்களால் ஒரு சிலர் பாதிக்கப்படுறாங்க. அவ்வளவே!
மேலே உள்ள படத்தில் சரியாக வேலை செய்யும் மோட்டார் நியுரானும், நம்முடைய தசைகளும் எப்படி கம்யுனிக்கேட் பண்ணுகிறது என்கிறது காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment