Saturday, September 10, 2022
ஆரம்பிப்பது எளிது, முடிக்கிறது கஷ்டம்?
காதல், நட்பு, திருமணம், கதை எழுதுவது எல்லாமே ஆரம்பிக்கிறது எளிது. ஆனால் அதை முடிப்பது கஷ்டம்.நம்ம வாழ்ந்து சாகும் போதும் நெறைய விசயங்கள் "அன்ஃபினிஷ்ட்" ஆகத்தான் இருக்கும்.
நான் எழுதுற கதைகள சரியாக முடிக்க இயலவில்லை னு யோசிக்கும்போது இதுதான் தோணுச்சு. பொன்னியின் செல்வன் கதையைக் கூட கல்கி ஒழுங்கா முடிச்சு இருக்க மாட்டார். முடிக்கும் முன்னாலயே போய் சேர்ந்துட்டாரானு தெரியவில்லை.
உறவுகளூம் அபபடித்தான். புதிதாக பழகும்போது நல்லா இருக்கும். அப்புறம் பழகிப் போயிட்டா வேற ஒன்னும் இன்டெரெஸ்ட்டா இருக்காது. புதுப் பொண்டாட்டி, புது காதலி, புது நண்பி எல்லாமே போர் அடிச்சிரும்.
ஒரு வயதான ஆள், சிந்திக்க முடியாத நிலைக்குப் போனவரை பார்க்கும்போது
ஒரு காலத்தில் இவருக்கு இருந்த மரியாதை என்ன? இப்போ "நோபடி கேர்ஸ்"? ஏன்???
"பயலாஜிக்" கா பார்த்தா உங்க செல்களில் உள்ள டி என் எ ல உள்ள ஜீன்கள் பல அதன் முழுத்தன்மையை இழக்குது. தேவையான அளவு ப்ரோட்டீனை தயாரிக்கும் திறனை இழக்கிறது. இதற்கு விதி விலக்கு யாருமில்லை. மாரடோனா, மைக்கேல் ஜார்டன், டாம் ப்ரேடி எல்லாருமே இதில் அடங்குவாங்க. லெஜென்ட் னு ஒரு பட்டத்தை கொடுத்துவிட்டு உலகம் முன்னோக்கி போயிடும்.
"நோபடி வாண்ட்ஸ் தட்" ஆனால் உங்க "டெலோமியர்" சிறிதாவதை தடுக்க முடியாது.
அதனால்?
உலகை ப் பார்த்து உன் எதிர்காலத்தை உணர்ந்து கொள்வது நலம். சும்மா "ஒய் மீ?" னு புலம்பாமல் இதுதான் உலக நியதினு ஏற்க மனதை தயாரித்துக் கொள்ளுங்கள். சரியா?
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
hi sir,
எப்படி இருக்குறீங்க?
உலகம் மனுஷங்க எப்படி போனா என்ன மாசத்துக்கு ஒருமுறை நீங்க வந்து போஸ்ட் எழுதுங்க சார்:)))
வெல்கம் பேக் தல... செளக்கியமா? சுருக்கமா சொன்னாலும் நறுக்கென்று சொல்லி இருக்கீங்க
நமக்கே நம் மீது ஒருவித வெறுப்பு வருவதும் உண்டு... அதை மாற்ற ஏதேனும் ஒன்றில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்...
வாங்க மஹேஷ். நலம்தானே? இன்றைய டெக்நாலஜி வளர்ச்சியால் சாதாரண வாழ்க்கை நிகழ்வு,வாழ்க்கை, மனிதர்கள் எல்லாம் அர்த்தம் இல்லாமல் போனமாதிரி இருக்கு. நான் ட்விட்டர் , ஃபேஸ்புக், ப்ளாகர் வாட்ஸப் எதுலயும் அதிக நேரம் செலவழிப்பது இல்லை. உலகமே இவைகளில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கு . எல்லாமே, எல்லோருமே போலி வாழ்க்கை வாழ்ற மாதிரி தோணுது. யாரு மேலேயும் எந்த மரியாதையும், நம்பிக்கையும் இல்லமல் போய்விட்டது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் னுதான் உலகம் போகுது. அதனேலேயே எதுவும் எழுதுவதில்லை.
என் வேலையில் கலீக்ஸை பார்க்கும்போது, ஹாய் சொல்வதுண்டு. ஹவ் ஆர் யு னு எவனாவது அல்லது எவளாவது கேட்டால் எரிச்சல்தான் வரும். நான் நல்லாயிருந்தால் அவங்க சந்தோஷப் படுவாங்களா இல்லைனூ நல்லாயில்லைனா அவங்க சந்தோசப்படுவாங்களா? னு சீரியஸாவே தோணும். :)
வாங்க மதுரைத்தமிழரே! நாம் சொல்வதை எல்லாம் பலர் பலமுறை சொல்லீட்டங்க நண்பரே. புதுசாலாம் நம்ம எதுவும் எதையும் சொல்ல இயலாது. :)
***நமக்கே நம் மீது ஒருவித வெறுப்பு வருவதும் உண்டு... அதை மாற்ற ஏதேனும் ஒன்றில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.***
பொதுவாக என்னைப் பற்றி நான் ஒருபோதும் உயர்வா எல்லாம் நினைத்துக் கொள்வதில்லை. அதுமாதிரி நினைத்துக் கொள்றவங்களப் பார்த்தால் அறியாமையின் உச்சத்தில் இருப்பதுபோல்தான் தோணும். என் மேல் எனக்கு வெறுப்பு வருவதில்லை. ஏன்னா மற்றவர்கள் யாரும் என்னைவிட உயர்வாத் தோணவில்லை. ஒவ்வொருத்தனையும் பார்க்கும்போது இவனுகளுக்கு நம்ம பரவாயில்லைனுதான் தோணுது.
Post a Comment