தமிழ்மணம் எல்லாம் செத்து ப்ளாகர் சாகக் கிடக்கும் காலம் இது. எவ்ளோதான் பாடம் கற்றுக்கொண்டாலும் திரும்பத் திரும்ப அதே தவறுகளை செய்வதுதான் மனித இயல்பு. அதே பெண்கள்தான் வேற வேற வடிவில், அதே ஆண்கள்தான் வேற வேற வடிவில். அதே பிரச்சினைகள்தான் வேறு வேறு வடிவில்.
புதுசா என்ன கத்துக்கப் போறீங்க? ஏன் இப்படி வாழத் துடிக்கிறோம்? எனக்குப் பறவைகள் ரொம்பப் பிடிக்கும். அப்போ சிக்கன் சாப்பிட மாட்டீங்களா?னு அறிவுப் பூர்வமா எல்லாம் கேள்வி கேக்காதீங்க! எனக்கு நியாயப் படுத்துதல் எல்லாம் பிடிக்காது. பறவைகளும் பிடிக்கும் சிக்கனும் சாப்பிடுவேன். ஒரு நிமிசம் இருங்க." கொன்றால் பாவம் திண்றால் போச்சு" னு சொல்வற்கெல்லாம் எனக்கு அர்த்தம் தெரியாது.
நீங்க விளக்கினாலும் எனக்கு புரியப் போறதில்லை. என்னத்தை புதுசா சொல்லப் போறீங்க? இதுவரை கேட்ட எழவைத்தான் நீங்களும் சொல்லி அழப்போறீங்க. இங்கேதான் பிரச்சினை. யாரு சொல்ற வெளக்கத்தையும் கேட்கிற மனநிலை எல்லாம் போயி பல வருடங்கள் ஆயிடுச்சு.
ஒரு சில நிகழ்வுகள் நம் வாழ்வில் வருவதே இல்லை. ஒரு சில அனுபவங்கள் நாம் அனுபவிப்பதே இல்லை. எந்த ஒரு இரு நபரும் வேற வேறதான். என்ன மாதிரி? இதுவரை ட்ரைவ் பண்ணும்போத் எதுவும் மேஜர் ஆக்சிடென்ட் ஆனதே இல்லை. உடனே நான் நல்ல ட்ரைவர் னு எனக்கு நானே சான்றிதழ் கொடுத்துக்கொள்ளும் அறிவீணர் இல்லை நான். என்ன சொல்லலாம்? நான் லக்கி- இது வரைக்கும். கொஞ்ச நேரத்தில் ட்ரைவ்ப் பண்ணுபோது என்ன ஆகும்னு தெரியலை. நான் ட்ரைவ் பண்ணும்போது கவனக்குறைவா தவறு செய்து இருக்கேன். இருந்தாலும் அந்த தவறுகள் சீரியஸ் ஆக்சிடென்ட்ல முடிந்தது இல்லை. நான் லக்கி. ஸ்மார்ட் ஆஸ் இல்லை.
என் நண்பர் ஒருத்தர் இருக்காரு. இப்போ எதுக்கு அவரு? அவரெல்லாம் ட்ரைவிங்கல தப்பே பண்ண மாட்டாரு. அப்படித்தான் அவரு சொல்லிக்கிறாரு. நினைத்துக் கொள்றாரு. அவர் திறமையாக ட்ரைவ் பண்ணுவதால் அவருக்கு ஆக்சிடெண்ட் ஆவதில்லை. இது அவரோட பர்ஸ்பக்டிவ். ரெண்டு ட்ரைவர்/ ரெண்டு பேருக்குமே ஆக்சிடெண்ட் ஆனதில்லை. ஒருத்தன் சொல்றான் அவன் லக்கி னு. இன்னொருத்தன் சொல்றான், அவன் திறமையான ட்ரைவர். எப்போதுமே கவனக்குறைவா ட்ரைவ் பண்ணுவதில்லைனு. பிரச்சினை என்னனா, நான் என் நண்பர் தியரியை நம்புவதில்லை. சும்மா உளறுறான் இந்தாளுனு நெனச்சுக்குவேன். அவர்ட்ட சொன்னதில்லை. வயதில் கொஞ்சம் மூத்தவர். நேரிடையா உளறாதீங்கனு எப்படி சொல்ல முடியும்?
அதுக்குத்தான் ப்ளாகர் எல்லாம் இருக்கு? வேலை நெறையா இருக்கு. அப்புறம் பார்க்கலாம்.
தொடரும்
4 comments:
நல்லது, ஆனாலும் இதற்கும் வலைப்பூ அவசியம் தானே...?!
//ப்லாகர் சாகக் கிடக்கும் காலம் இது//
உண்மைதான் வருண். ‘பார்வை’களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது.
தினம் ஒரு பதிவு எழுதினாலும்[சில நாட்களில் இரண்டு] குறைவது தொடர்கிறது.
பாலியல், தத்துவம், சாடல்கள், வாழ்வியல் கதைகள் என்று கலந்துகட்டி எழுதினாலும் அதே இறங்குமுகம்தான்.
பிலாக்கில் எழுதுவதை நிறுத்துவிட்டு, எதையாவது கிறுக்கி நூல்கள் வெளியிட்டுப் பொழுதுபோக்குவதென்ற முடிவுக்குவந்து கொஞ்சம் நாளாயிற்று.
ஆனால், மீண்டும் ‘பார்வை’ எண்ணிக்கை அதிகரிக்குமோ என்னும் எதிர்பார்ப்பு[நப்பாசை] அதைச் செயல்படுத்த விடவில்லை.
உண்மைதான் தனபாலன். தாங்கள் நலம்தானே? :)
வாங்க பரமசிவம் சார்.
உங்கள் ஆதங்கம் புரிகிறது. பார்வைகள் எண்னிக்கை எல்லாம் அர்த்தமற்றது என்றாலும் பார்வைகள் எழுதுபவரை ஊக்குவிக்கும். கடவுள் இல்லை என்றாலும் கடவுள் நம்பிக்கை ஒரு சிலருக்கு உதவுவதுபோல. காதல் அர்த்தமற்றதென்று உணர்ந்தாலும் தொடர்ந்து ஒரு கழுதையை மறந்து இன்னொரு குதிரையை காதலிப்பதுபோல். வாழ்வில் அர்த்தற்றவைகளை உணர்ந்தும் அவைகளத்தான் திரும்பத் திரும்பச் செய்து கொண்டு இருக்கிறோம்.
உங்களுக்கு வரும் "உண்மைக் போப"த்தை நான் எப்போதுமே ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன், இந்தப் பொய் உலகில்! வருகைக்கு நன்றி சார்.
Post a Comment