Sunday, August 6, 2023

என்னடி எப்படி இருக்க? மீ டூ காலம் (60)

 வயதானவர்களுக்கு மரியாதை இயற்கையிலேயே குறைந்து கொண்டே போகிறது. அதனாலதான் பெரியவர்களை மதிக்கணும்னு சொல்லிச் சொல்லி வளர்க்கிறாங்க.  

15 வருடத்திற்கு முன்னால டிபார்ட்மென்ட்  சேர்மன் னு பகட்டுடனும், திமிருடனும் எவனை மேல கொண்டு வர்றது எவனை கவிழ்த்துவதுனு பல பாலிடிக்ஸ் செய்தவர்கள் இப்போ எமரிட்டஸ் ப்ரபஸர்னு  ஒரு மூலையில் உக்காந்து இருக்காங்க பரிதாபமாக. இதுதான் நிதர்சனம்

ஆடிய ஆட்டமென்ன?

 எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.  வயதாகிவிட்டது. பதவி மரியாதை எல்லாம் போய் விட்டது. இதுதான் நிதர்சனம். உலகம் முழுவதும் இதே கதைதான். 

 -------------------------------------------

ட்ரம்ப் 2016  பேசும்போது இருந்த ஆரவாரம் இப்போ இல்லை. ஆக்ச்சுவல்லி ஹி இஸ் ஃபக்கிங் போரிங் தீஸ் டேஸ்

நியூ யார்க் இன்டைக்ட்மென்ட் ஆன் மல்ட்டிப்பிள் கவுண்ட் ஆஃப் கிரிமினல் சார்ஜெஸ்

 அதேபோல் இப்போ க்ளஐஃபைட் டாக்குமெண்ட்ஸ் ரிலேட்டெட் ஃபெடெரல் இன்டைக்ட்மெண்ட் (37 கவுண்ட்ஸ்). இப்போ ஜனவரி 6 கேப்பிட்டல் அட்டாக் கை தூண்டிவிட்டதாக மறுபடியும் இன்டைட்மெண்ட்.

------------------------- 

கோவிட் கேள்விப் பட்டு இருப்பீங்க. லாங் கோவிட் கேள்விப்பட்டு இருப்பீங்களா என்னனு தெரியலை. ஒரு சிலருக்கு கோவிட் வந்து போன பிறகு 4-6 மாதங்கள் சரியாக ஃபோக்கஸ்  பண்ண முடியாமல், கான்சென்ட்ரேட் பண்ண முடியாமல் இருக்கும். அப்புறம் சரியாகிவிடும். இந்த வைரஸ் பலவிதமான பிரச்சினைகளை உண்டாக்கிவிட்டுவிட்டது. இதெல்லாம்  நமக்குத் தெரிந்தவர்கள் யாருக்காவது வந்தால்த்தான் புரியும்

---------------------------------

மனித அகந்தை அர்த்தமற்றது

மனிதன் தனியாக எல்லா ஜீவன்களின் உதவி இல்லாமல் வாழ முடியாது. தாவரங்கள் மட்டுமன்றி பல புழு பூச்சிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்களின் உதவியால்தான் மனிதனால் வாழ முடிகிறது. அவைகள் வாழ்வதால் மனிதன் வாழ முடிகிறது. ஒரு சில அமைனோ ஆசிட்கள் மனிதனால் உருவாக்க முடியாது. அதேபோல் ஒரு சில வைட்டமின்கள். கோ ஃபாக்டர்கள் எல்லாம் மனிதனால் உருவாக்க முடியாது. 

இப்போ போற போக்கைப் பார்த்தால் மனிதன் குடித்துவிட்டு தன்னை மறந்த நிலையை அட்யாமல் வாழ முடியாது போல. உழைக்கிறாங்க அப்புறம் சந்தோசமனு போயி குடிக்கிறாங்க. இப்போ இந்தியாவிலும் மது அருந்துவது சாதரணமான விசயம் ஆகிவிட்டது. பத்தாக்குறைக்கு கஞ்சாவை லீகலைஸ் பண்ணிட்டாங்க.

எதுக்கு குடிக்கிறாங்க? சுய நினைவை இழக்க? எதுக்கு சுய நினைவை இழக்கனும். அதுதான் சந்தோசம் கொடுக்கிது. எப்படி யோசித்துப் பார்த்தாலும் குடிப்பதற்கு காரணம், தன்னை மறக்கத்தான். முழு நினைவோட வாழ பயம்? இதையெல்லாம் யோசிக்க எவனுக்கும் நேரமும் இல்லை. 

ப்ரமோசன் னா குடிப்பானுக. கல்யாணம்னா குடிக்கிறானுக, ரெய்ஸ் கெடச்சா குடிக்கிறானுக. ஆக்சிஜன் இல்லாமல்க் கூட வாழ்ந்துடுவானுக போல அக்கஹால் இல்லாமல் வாழ முடியாது. அல்கஹால் உருவாக்கும் ப்ராசஸ் ஃபெர்மென்டேஷன். அப்படினா? சுகர் (க்ளுக்கோஸ், ஃப்ரூக்டோஸ், ஸ்டார்ச்) மாலிக்குலை உடைத்து அல்கஹால் மாலிக்கூல் ஆக்குவதது மைரோ ஆர்கானிசம்தான் . ஈஸ்ட் என்பது. ஈஸ்ட் இல்லைனா நம்மாளு பிழைப்பு ஓடாது.

மனிதன் பல உயிரிகளை நம்பித்தான் இந்த வாழ்க்கையை வாழ்கிறான். தேன், பாலை மட்டும் இல்ல மனிதன் வாழ்வுக்கு தேவையான பல உணவுகளை உருவாக்குவது மனிதன் அருவருக்கத் தக்க ப்பார்ர்க்கும் பல நுண்ணுயிரிகள்தான்.

இதில் மனிதன் தாந்தான் உலகில் உயர்ந்தவன் என்பதுபோல் ஒரு அகந்தையுடன் வாழ்வதெல்லாம் அர்த்தமற்றது..

 இதையெல்லாம் பல ஞானிகளும் ஏற்கனவே சொல்லீட்டுப் போயிட்டாங்க என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் யாரும் அல்கஹால் கெடைக்காது, ரைபோஃப்ளாவின் (வைடமின் பி 12) கெடைக்காதுனு சொல்லி சொல்லவில்லை.

---------------------------------------------






 




 

 

4 comments:

'பசி'பரமசிவம் said...

//எப்படி யோசித்துப் பார்த்தாலும் குடிப்பதற்கு காரணம், தன்னை மறக்கத்தான். முழு நினைவோட வாழ பயம்?//

உண்மை. இந்தப் பயத்தைப் போக்க, அல்லது, குறைக்க வேறு பல தவறுகளையும் செய்யவேண்டியுள்ளது.

திண்டுக்கல் தனபாலன் said...

உயர்ந்த இடத்தில் இருக்கும்போது -
உலகம் உன்னை மதிக்கும்...

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் -
நிழலும் கூட மிதிக்கும்...

வருண் said...

வாங்க பரமசிவம் சார்.

தவறுனு இப்போல்லாம் நினைக்கிறாங்களா என்னனு தெரியலை சார். இப்போல்லாம் குடிக்கிறது தப்புனு சொன்னால் சொல்றவந்தான் பைத்தியக்காரன்.

எனக்குத் தெரிய ஏதாவது தமிழ் சங்கம் பிக்னிக், அல்லது ஃபெட்னா போல் ஒன்றுகூடும் இடங்களில் மட்டும்தான் மது வழங்குவதோ அல்ல்து பருகுவதைப் பார்த்தது இல்லை. அப்படி ஒன்றுகூடுவதும் நல்லாத்தான் இருக்கும்.அல்லது கோவில்களில் இதுபோல் மது கிடைக்காது. மற்றபடி கல்யாணம் கருமாதி எல்லாத்துலையும் மதுதான் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.

வருண் said...

வாங்க தனபாலன்.

கிழே இறங்கி வராமல் இருக்க ஒரே வழிதான். உயர்ந்த இடத்தில் இருக்கும்போதே போய் சேர்ந்துடனும்னு நினைக்கிறேன்.