Showing posts with label அறியாமை. Show all posts
Showing posts with label அறியாமை. Show all posts

Monday, December 9, 2013

ஆத்திக அதிமேதாவிகளின் விதண்டாவாதம்!

கடவுளை உணர்ந்தது மனிதமனமா? இல்லை ஆட்டுகுட்டி மனமா? என்ற கேள்விக்கு "மனிதமனம்" என்பதுதான் பதில். இல்லையா? விலங்குகளுக்கு கடவுள் இருப்பது தெரியுமா? தெரிந்தும் இருக்கலாம்! தெரியாமலும் இருக்கலாம். நமக்கு விலங்குகள் பேசுவதும், வணங்குவதும் தெரியாது, புரியாது.

"ஆத்திக பண்டாரங்களை என்னைக்குமே திருத்த முடியாது!  விவாதம் என்கிற பேரில் எதையாவது ஒளறிக் கொட்டுங்கள்" என்கிற உண்மையைச் சரியாக உணராமல், "காமக்கிழத்தன்" என்கிற பதிவர், கடவுள்சம்மந்தமான சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

உடனே, நீ கேள்வி கேட்டுப்புட்டியா, இந்தா என் பதில்கள்னு நம்ம ஆத்திகச் சண்டியர் செஜதேவ், பதில்னு எதையோ உளறிக்கொட்டி, "நாத்திகனெல்லாம் கூமுட்டைனு இவரு நிரூபிச்சதா  நினைப்பதுடன், சில ஆத்திகப் பண்டாரங்களிடம் சான்றிதழ்களையும் பெற்று வெற்றியடைந்துள்ளார்". இந்தச் சான்றிதழ்களை இவர் பகவானிடம் கொண்டுபோய்க் காட்டி, பகவானை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, அவர் மனதில் இடம் பிடித்து உள்ளார் இந்த ஆத்திகச் சண்டியர். இருந்துட்டுப் போகட்டும்!

சரி, இவர் பதில்னு என்ன சொல்கிறார்னு பார்ப்போம்..

மகான் ஜெயதேவ் உளறியதில் ஒரு பகுதி இது.
****மனித மனம் பொதுவாக தன்னுடைய அனுபவத்தில் எதைப் பார்க்கிறதோ அதை வைத்தே மற்ற எல்லாவற்றையும் ஒப்பிட்டுத் தீர்மானிக்கும்.  அதைத் தாண்டி அதனால் யோசிக்க முடியாது.  இங்கே நாம் காணும் விஷயங்கள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்தவையாக இருக்கும்.  உதாரணத்திற்கு 'தந்தை'என்று சொன்னால் மகன்/மகள் என்று ஒன்றும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் தந்தை என்பதற்கே பொருள் இல்லாமல் போய் விடும்.  அதே போல மகன் என்று இருந்தால் தந்தை என்ற ஒன்றும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் மகன் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை.  இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை.   இதைப் போல நாம் இங்கே காணும் அனைத்தும் Relative Truth என்று ஆங்கிலத்தில் சொல்லப் படும் ஒன்றை ஒன்று சார்ந்த விடயங்கள். ஒரு உண்மை இன்னொரு உண்மையை சார்ந்து நிக்கிறது, ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றும் இல்லை. ஆனால் இறைவன் என்பவன் Absolute Truth, பரம்பொருள். ****


என்ன சொல்றார், இந்த மகான்?

இந்த மேதாவி மனிதமனம் பற்றி பேசுகிறார். மனிதமனம் ஒன்றை புரிந்துகொள்ளும்விதம் பற்றி விளக்கம் அளிக்கிறார் இந்த வெளக்கெண்ணை மகான்!

இதற்கு உதாரணம்னு மனிதமனத்தின் உணருதலில் "தந்தை" "மகள்" தாய்" "காதல்"  "கற்பு" "அன்பு" "பாசம்" போன்றவை எல்லாம் "ரிலேடிவ் ட்ருத்" தாம். ஆனால் "கடவுள்"என்கிற இன்னொரு மனிதமனத்தின் பிதற்றல் மட்டும் "அப்சொலூட் ட்ருத்"தாம்!

இந்த மகான் மனிதனா? இல்லை மண்ணாங்கட்டியா?   இல்லை பகவானா?

என்னுடைய புரிதல்: இந்தாளும் ஒரு மனுசந்தான்! இவர் உளறுவதும் மனிதமனத்தின் மனப்பிதற்றல் தான்! ஆக "கடவுள்" என்று இவர் உளறுவதும் இந்தத் தனி மனிதனின் பிதற்றல்தான்! மனிதமனம் பிதற்றும் ("கடவுளை") மட்டும் ஏன்  "Absolute Truth" என்று பிதற்றுகிறார் இந்த அரைவேக்காடு???

மனிதமனம் பத்தி ஒளறும் இந்தப் பண்டாரத்திற்கு தான் ஒரு மனிதன் என்கிற சுயநினைவே இல்லை! தான் உளறும், தான் பேசும் "கடவுளும்" மனிதமனத்தின் பிதற்றல்தான் என்கிற உணர்வும் இல்லை!

* ஏன்ப்பா இந்தாளுக்குக் கடவுளை அறிமுகப்படுத்தியது யார்?

என்னுடைய புரிதல்:  இவருக்குக் கடவுளை உணர வைத்ததும் இன்னொரு மனிதன் எழுதிய புத்தகமோ, சொற்பொழிவோ, இல்லை அர்ச்சனையோதான்!  இதைக்கூடச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் எல்லோரையும் கூமுட்டை என்று உளறுகிறது இந்தக் கூமுட்டை!

"கடவுள்" என்கிற புரிதலும் மனிதமனத்தில் உருவாகி, மனிதமனத்தால் புரிந்து கொள்ளப்பட்டு, ஒரு மனிதனிடமிருந்து இன்னொருமனிதனுக்குப் பரவிய "ஒரு தொற்று நோய்"தான் என்பதை இந்த கூமுட்டை ஏன் உணரமுடியவில்லை???

"கடவுள் பக்தி" என்னும் மனிதமன நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வியாதியஸ்தந்தான் இந்த ஜெயதேவ் என்னும் பண்டாரமும்!  

அந்த பக்தி என்னும் வியாதி முற்றிப்போய், இந்தப் பண்டாரம் உளறும் உளறல்களில், தானும் ஒரு மனிதந்தான், தான் உளறும்  "கடவுளும்" மனிதனின் பிதற்றல்களில் ஒன்றுதான் என்றுகூட புரியாமல், என்னவோ தானே "கடவுள்" என்பதுபோல் வியாக்யாணம் பேசும் ஒரு கூமுட்டைதான் இந்தாளு!

ஜெயதேவ் is talking about "relative truth"! When it comes to "God" which should be another RELATIVE TRUTH discovered by human mind , he calls that as "absolute truth" for his convenience. His same "senseless mind" is the one came up with the "God concept" as well. As it comes from same "dead mind" of his, we should call "God" as relative truth as well. 

That is as simple as that!