நீங்க நினைப்பதைவிட இது ஒரு சீரியஸான மேட்டராக மாறிக்கொண்டு வருகிறது. என்னை நம்புங்கள்!
நேற்று ஒரு யு ட்யூபில் தன்னை திருச்சி தஞ்சாவூர் லிங்கா விநியோகஸ்தர்கள் என்று சொல்லிக்கொண்டு இருவர், படத்துக்கு கூட்டமே இல்லை என்று பிரச்சாரம் செய்தார்கள். "இவர்கள் யார்? சில உண்மைகளோடு பல பொய்களையும் கலந்து ஒரு தகவலை வெளியிடுகிறார்களோ?" என்கிற சந்தேகம் அந்த யுட்யூப் பார்த்தவர்களுக்கு உருவாகும்! ஏன் என்றால் இவ்வளவு காசு கொடுத்து பட உரிமை வாங்கியவன் இப்படி ஒரு விளம்பரம் வெளியிட்டால் அவனுக்கு இன்னும் நஷ்டம்தான் வரும். ஒரு வியாபாரி அதை நிச்சயம் செய்ய மாட்டான்! எதிர்பார்த்ததுபோலவே பிறகு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இந்த யு-ட்யூப் வெளியிட்ட இவர்கள் விநியோக உரிமை பெற்றவர்கள் அல்ல, பொய்யர்கள், லிங்கா பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.. அவர்களை போலீஸ் தேடுகிறது என்கிற செய்தியும் அடுத்த நாளே வருகிறது.

ஆதாரம் இல்லாமல் திரு ஸ்ரிதர் பிள்ளை "லிங்கா லிம்ப்பிங்" என்று அவர் ட்விட்டரில் எழுதியதை பலரும் ட்விட்டரில் எதிர்க்கிறார்கள். "இது ஆதாரமில்லாத செய்தி" என்கிறார்கள். அவருக்கும் லீகல் பிரச்சினை வர வாய்ப்பிருக்கு போல தோனுது.
லிங்கா படத்தை விமர்சியுங்கள்! படம் நல்லாயில்ல, படம் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள். ஆனால் அதே சமயத்தில் அளவுக்கு அதிகமாக உங்க சொந்த வார்த்தையைப் போட்டு வாக்கியங்கள் அமைத்து உங்களையே அறியாமல் பொய்களை எழுதினால் உங்களுக்கும் உங்க தளத்திற்கும் சட்டப்படி பிரச்சினை வரலாம். கவனம்!!