Showing posts with label கலவரம். Show all posts
Showing posts with label கலவரம். Show all posts

Friday, September 16, 2016

காவிரியும் தமிழர்களின் உலகமகா ஒற்றுமையும்!

தமிழனுகளுக்குள்ள நூத்தி எட்டு சாதி! பார்ப்பனர்கள், உயர் சாதி தமிழர்கள், ஆண்ட பரம்பரைனு சொல்லிக்கொண்டு அலைபவர்கள், தலித்கள், தலித்களிலே மைனாரிட்டியாக இருக்கும் பரிதாபத்துக்குரியவர்கள்! இவர்களுக்குள் எந்த ஒற்றுமையும் கெடையாது. ஒரு சாதில உள்ள பெண் இன்னொரு சாதியிலே உள்ளவனை காதலிச்சா, அப்பா தற்கொலை பண்ணி சாவான், இல்லைனா மகளை எரிச்சுடுவானுக. அப்போ எல்லாம் தமிழச்சிதான் அந்தப் பெண் நாம் தமிழர் என்கிற உணர்வுமிருக்காது, ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது.

இப்போ காவிரி பிரச்சினை என்றவுடன் தமிழனை அடிக்கிறாங்க! கன்னடிகாக் களை திருப்பி அடிக்கணும்னு இவர்களிடம் என்ன ஒரு ஒற்றுமை!! இதே ஒற்றுமை எந்த ஒரு பிரச்சினையும் இல்லாதபோது தமிழர்களிடம் இருந்தால் இவனுகளை மதிக்கலாம்.

இது  போதாதுனு "நாம் தமிழர்" போராட்டத்தில் ஒரு இளைஞன் தீக்குளிச்சு செத்து இருக்கான். பாவம் அவனை பெற்றவர்கள், உறவினர். ஆமா, காவிரித் தண்ணி வந்துவிட்டால் இவன் வீட்டில் தினந்தோரும் தீபாவளியா என்ன?

கன்னடிகா கலவரம் பண்ணினால், அடாவடித்தனம் பண்றவர்களை சட்டம்தான் உள் நுழைந்து தமிழர்களை காப்பத்தணும். மாநில அரசாங்கம், அல்லது மத்திய அரசாங்கம். அதை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் கன்னடிகாவை அடிச்சா, கர்நாடகா பங்களூரில் வாழும் தமிழர்களுக்குத்தான் இன்னும் சிரமம். அதைத்தான் சாதிக்கப் போறீங்க.

தமிழர்கள் ஒற்றுமை என்றாலே செம கமெடிதான்!

நீ என்ன அமெரிக்காவில் இருக்கனு வந்து எதாவது சொல்லிக்கிட்டு இருக்கக் கூடாது! நானும் பங்களூரில் வாழ்ந்து இருக்கேன். இதேபோல் காவிரி பிரச்சினையின்போது தமிழர்களை அவர்களை அடிக்கும்போதும் தான். நம்ம சீமான் மாதிரி தமிழ்நாட்டில் ஒரு மூலையில் உக்காந்து கொண்டு வீரம் பேசுறவன் இல்லை நான். புரியுதா?

Friday, November 16, 2012

டோண்டு ராகவர் சொன்னது சரிதான்! சாதி ஒழியாது!

நம்ம ஐயங்கார்வால் டோண்டு ராகவர், "சாதியை மெனக்கெட்டு ஒழிக்க வேண்டியதில்லை! நீங்க என்னதான் ஒழிச்சாலும் அது ஒழியாது! நம்ம சாதிதான் உயர்சாதினு நெனச்சுண்டு வாழ்ந்தா தப்பே இல்லை!"  என்கிற கருத்தை மையமாக வைத்துப் பதிவெழுதும் போதெல்லாம் எரிச்சல்தான் வரும்! ஆனால் உண்மையில் "தமிழ்நாட்டில் சாதி ஒழியுமா?" என்ற கேள்வி மனதில் தோன்றும், எங்கேயோ இடிக்கும். "ஒழியவே ஒழியாது போல" னு மனசாட்சி  சித்ரவதை செய்யும்.

சமீபத்திய பரமக்குடி குருபூஜை சம்பவம் (இந்த முறை இழப்பு முக்குலத்தோருக்கு என்பதை மனதில் கொள்ளவும்!), இப்போ தர்மபுரி சம்பவம் (இழப்பு தலித்களுக்கு) எல்லாத்தையும் பார்க்கும்போதும், அதைப் பற்றி நம் மக்கள் எதுவும் கிளறாமல் "கள்ள மெளனம்" சாதிப்பதையும் பார்த்தாலே தெரியும், பார்ப்பனர்கள் மட்டுமல்லாமல் எல்லா "உயர்சாதி இந்துக்களும்" தன் சாதிதான் உயர்சாதி னு பெருமையில்தான் முட்டாள்களாக வாழ்ந்துகொண்டு இருக்காங்க என்று. அதிலும், இன்றும் தாழ்த்தப்பட்டவர்களை இந்த முட்டாள்கள் குறைவாக நினைக்கிறாங்க.  இவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற நிர்பந்தம்/சூழ்நிலை வரும்போது, பார்ப்பனர்களைவிட "திராவிட உயர்சாதி ஹிந்துக்கள்தான்" அதிக (முக்கியமாக முக்குலத்தோர், வன்னியர்கள்) சாதிவெறி பிடிச்சவங்க என்பது தெளிவாகத் தெரியுது.

பச்சையா உண்மையை உலக நடப்பை பேசுவோம்..

இன்றைய சூழல்களில், உண்மை நிலவரம் என்ன?  கிராமங்கள், சிறு நகரங்கள் எல்லாவற்றிலுமே பார்ப்பனர்கள் மட்டுமல்லாமல், வன்னியர், முக்குலத்தோர்கள், கவுண்டர், வெள்ளாளர், முதலியார், கோணார், நாடார், நாயக்கர், ரெட்டியார் அப்புறம் "விட்டுப்போனவர்கள்"  ஏன் தலித்கள்கூட சாதியை கட்டிப்பிடிச்சுக் கிட்டுத்தான் அழுதுக்கிட்டு இருக்காங்க. அதை எவனும் மறுக்க முடியாது!

தலித்கள் அல்லாத எல்லா சாதிக்காரர்களும் (இவர்கள் என்ன தொழில் செய்தாலும், சுத்தமாக இல்லாவிட்டாலும்) தன்னையும் தன் சாதியை பெருசாவும் உயர்வாகத்தான் நெனச்சுக்கிட்டு சாதித் திமிருடன் இருக்காங்க.

தங்களை, "பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர்கள்" என்றல்லாம் வகைப்படுத்தி  அரசாங்கக் காதிதங்களில் (தேவையான நேரங்களில்) எழுதிக்கிட்டாலும், உண்மையில் தன் சாதியை  உயர்சாதி என்பதுபோல்தான் உயர்வாக நெனச்சுக்கிட்டு, பேசிக்கிட்டு சாதிவெறியுடன்தான் உயர்சாதி திராவிட இந்துக்கள் வாழ்றாங்க. அதே நேரத்தில்  ரிசெர்வேஷனை மட்டும் வெகுகவனமாக  தங்கள் முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக்கொள்றாங்க. இதில் இன்னொரு பரிதாபம் என்னனா ரிசெர்வேஷன் அவர்கள் உயர்வுக்கு  நிச்சயம் தேவை என்பதால், தாழ்த்தப்பட்டவர்களும் அவங்களுடைய  சாதிச்சாயத்தை விட்டு முழுவதும் வெளிவரமுடியாத ஒரு சூழலில் மாட்டிக்கிட்டாங்க. அவர்கள் தேவைக்காக  அவர்களுடைய சாதிச்சாயத்தைவிட்டு அவர்களும் வெளியே வரமுடியாது என்பது கசப்பான உண்மை!

மற்றபடி சாதி வேறுபாடு, உயர்வு தாழ்வு ஓரளவுக்கு ஒழிவது எங்கே என்று பார்த்தால்.. நாடுவிட்டு நாடு சென்று செட்டில் ஆனவங்ககிட்டதான்னு சொல்லலாம். அதுவும் வேறு நாட்டில் செட்டில் ஆகி  ஒரு ஜெனெரேசன் ஆன பிறகு அவர்கள் சந்ததியினர் யாரும் சாதி பார்ப்பதில்லை. அங்கே பிறந்து வளரும் குழந்தைகளுக்கு சாதியை ஊட்டுவது மிக மிகக் கடினம் என்பதும் ஒரு முக்கியக்காரணம். சவுத் ஆஃப்ரிக்கா, ஈழம், வட அமெரிக்கா, கனடா, யு கே, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் செட்டில் ஆனவர்களுக்கு ரிசர்வேஷனும் கெடையாது, சாதியும் பொதுவாக யாரும் பார்ப்பதில்லை- ஒரு சில லூசுகள் தவிர்த்து.

சரி இப்போ நடக்கிற இந்த சாதி வெறி, அடி தடி சண்டை, தீ வைத்து எரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு???

* பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதி இந்துக்கள் போலவே தாழ்த்தப் பட்டவர்களும் தங்களையும்  தன் சாதியையும் மற்ற சாதிகளை எல்லாம்விட உயர்வாக நினைத்துக்கொள்ளனும்.பிறப்பால் எல்லாரும் சமம்தானே? அவன் உயர்வுனா நீங்களும் அதே அளவு உயர்வுதான்!

* தன்னை சாதி அடிப்படையில் மட்டம் தட்டும் மற்ற சாதிக்காரர்களை இவர்கள் மட்டமாக  நினைத்துக் கொண்டு, தேவையென்றால் சுத்தமாக அந்த மூடர்களிடம் இருந்து நாகரிகமா, சட்ட உதவியுடன் ஒதுங்கிப் போயிடனும். இது கோழைத்தனம் இல்லை! முட்டாள்களைப் பார்த்து ஒதுங்கிப்போவது புத்திசாலித்தனம்.

*  மற்ற கீழ்ப்புத்தி உள்ள உயர்சாதிக்காரனோட அவர்களே விரும்பி வந்தாலும் திருமணம் சம்மந்தம் செய்வது நமக்கு இழுக்கு என்று திடமாக எண்ண வேண்டும். அந்த கருத்தை தன் சாதி சனம், குழந்தைகள் சொந்தக்காரங்க எல்லாரிடமும் எடுத்துச் சொல்லி  அந்த நம்பிக்கையை அவங்க சமூகத்தில்  வித்திட்டு, வளர்த்து, தன்னை உயர்வாக சமுதாயத்தில் ஆக்கிக்கனும். அப்படி இவர்கள் தன்னையும் தன் சாதியையும், தன் சாதி சனங்களையும் உயர்வாக எண்ணி தன் சாதிக்காரவுங்களோடமட்டும் உறவுகள் வைத்துக்கொண்டு, இந்த உயர்சாதி முட்டாள்களிடமிருந்து ஒதுங்கி  சந்தோஷமாக வாழ்வதே இப்போதைக்கு நல்ல முடிவாத் தெரியுது. 

* முக்கியமாக கலப்பு மணத்தை இவர்களே சீரியஸாக புறக்கணிக்கனும். கலப்பு மணம்னு வரும்போதுதானே யார் உயர்ந்த சாதி என்கிற கேள்வியே வருது? அதன் விளைவால்தான் பல பிரச்சினைகள் தலைதூக்குது. இன்று திருமணம் சுமூகமாக முடிந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் இந்த சாதிப் பிரச்சினை வெடிக்கலாம். அதனால் இவங்களே அதுக்கு வாய்ப்பே கொடுக்கலைனா என்ன பிரச்சினை வரப்போது  சொல்லுங்க? 

என்னுடைய ஆலோசனை கேவலமாக, மட்டமாக இருக்கலாம்.. ஆனால் இதைத்தவிர எனக்கு எதுவும் " practical solution"ஆகத் தெரியவில்லை! 

சும்மா நம்ம பதிவுலகில் சாதியை ஒழிக்கனும், எல்லாரும் சமம்தான் னு கத்துறதுனால ஒரு எழவும் ஆகப்போவதில்லை! இந்த உயர்சாதி முண்டங்கள் ஒரு போதும் தன்னைப்போல் மற்றவர்களை மதிக்கக் கத்துக்கப்போவதில்லை என்பதே நிதர்சனம்!