பரமசிவம் சார் பதிவில் பின்னூட்டமிட முடியவில்லை. கோபால கிருஷ்ண கோகலே நல்ல பிராமணர்னு காந்தி சொன்னதாக முடித்துள்ளார். பிராமணர்களில் யோக்கியர்களே இல்லையா?
சோ ராமசாமி, ஜெயலலிதா, ராஜாஜி, கமல்ஹாசன், டோண்டு ராகவன், சங்கராச்சார்யா, பாரதியார் இவர்கள் அனைவருமே பிராமணர்கள்தான்.
இதில் யாரையுமே சுத்தமான யோக்கியன்னு சொல்லமுடியாதுதான்
சரி, பிராமணர்களை விட்டுவிட்டு திராவிடர்களில் சுத்தமான யோக்கியர்கள் இருக்காங்களா? னு கேட்டால் யாரையாவது காட்ட முடியுமா? கவனிக்கவும், அதுவும் கஷ்டம்தான்.
பிராமணர்கள் யோக்கியர்களாக இருக்கணும் என்கிற எதிர்பார்ப்பு தேவையற்றது.
பிராமணர்களுடன் சேர்ந்து நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும். ஆனா என்ன இவர்களோடு வாழ்ந்து கொண்டே இவர்களை நம்பாமல், எந்நேரமும் சந்தர்ப்பவாதியாக எப்படியும் சுயநலமாக மாறலாம் என்பதை மனதில் வைத்து இவர்களை நம்பாமலே இவர்களோடு "நண்பர்களாக" நடித்துக் கொண்டே வாழலாம். Keep your friends close but your enemies closerனு சொல்வதுபோல். நம்மில் பலர் அப்படித்தான் நடித்துக்கொண்டே இவர்களை நம்பாமல் இவர்களுடன் வாழ்கிறார்கள்.
அல்லது
இவர்களிடம் நேரிடையாகவே சொல்லிவிடலாம். வீணாக நடிக்காமல், நட்பு பாராட்டாமல், ஒதுக்கி வைத்து, "நமக்கும் உங்களுக்கும் ஆகாதுங்க. நீங்க ஏதாவது நாளைக்கு செய்யும்போது நான் எதையாவது சொல்லிவிடுவேன். இதெதுக்கு நாம் பேசாமல் ஒதுங்கியே வாழுவோமே? நீங்க, நீங்களாவே இருங்க! நான் நானாவே இருக்கேன். நடிக்காமல், ஒருவரை ஒருவர் நம்பாமல், பிடிக்காமலே சேர்ந்து வாழுவோமே?" என்று தெளிவு படுத்திவிட்டு எதையும் மூடி மறைக்காமல், "அவர்களைப் பிடிக்காது" என்று அவர்களுக்குத் தெளிவாக சொல்லிவிட்டு எதிரிகளாகவே தொடர்ந்து வாழலாம். பெரியார் வாழ்ந்ததுபோல்.
அல்லது மூனாவது வகை,
இவர்களை எந்த வகையிலும் பிரிக்காமல், நம்மைப் போலவே இவர்களையும் எண்ணி பிராமண முத்திரையைத் தவிர்த்து வாழலாம். அப்படி யாரும் வாழ்றாங்களா? னு எனக்குத் தெரியவில்லை! அப்படி வாழ்வதாகச் சொன்னாலும் நான் அதை நம்புவேனா? னு எனக்கே தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் எப்டியாவது ஒரு வகையில் "தங்களை" நம்மிடம் இருந்து பிரித்துக் கொள்கிறார்கள், கொள்வார்கள் னு நான் நம்புகிறேன். இந்த "நம்பிக்கை" என்னுடைய குறைபாடாகவும் இருக்கலாம் அல்லது என் நம்பிக்கை உண்மையாகவும் இருக்கலாம்.
இன்னொரு உண்மை என்னவென்றால்
எந்த ஒரு நல்லவனும் அல்லது நண்பனும் ஒரு சில நேரம் நடந்து கொள்ளும் விதம் நமக்குத் தவறாகத்தான் தோனும். அந்த "நல்ல நண்பன்" பிராமணன் என்றாகிவிட்டால் நம்மிடம் ஊறிப்போயி உள்ள "ப்ரிஜடிஸ்" "இவன் பிராமணன் என்பதால்தான் இப்படி நடந்து கொண்டான்" என்கிற ஒரு முத்திரையை நாம் குத்துவோம். நான் பார்த்தவரைக்கும் இதுபோல் எல்லா சாதியிலும் உள்ள நண்பர்கள் ஒரு நேரம் இல்லைனா இன்னொரு நேரம் நாம் எதிர்பார்ப்பது போலல்லாமல் "சுயநலமாக" நடந்து கொள்வது இயல்பு. அவர்கள் பிராமணரல்லாததால் நாம் அவர்களை "பிராமண முத்திரை" பதிக்க முடியாமல்ப் போய்விடுகிறது.
எப்படியோ நம்மிடம் பிராமணர்கள் பற்றிய ஒரு ப்ரிஜடிஸ் வளர்ந்து, நம்முள் அது கலந்தவிட்டது. அதை நாமே முழுமையாக அகற்றுவது கஷ்டம்தான். ஆனால் அதை அகற்ற பிராமணர்களால்தான் முடியும். திராவிடர்களைவிட "உயர்ந்த மனிதனாக" நம்மிடம் அவர்கள் பல தருணங்களில் நடந்து கொண்டால்..
அப்படி எதுவும் அவர்கள் செய்வார்களா?
இல்லை "மனிதர்களைவிட பகவாந்தான் எனக்கு முக்கியம்" என்று இதுபோல் ஒரு "பிரமணத் துவேச ப்ரிஜடிஸை" அகற்ற முயலாமல், அதை சட்டை செய்யாமல் இதேபோலே தொடர்வார்களா? என்பதை காலம்தான் சொல்லும்.