இப்போ கருத்துச் சுதந்திரம்னா என்ன? என்ன எழுதினாலும் சைபர் போலிஸ் நம்மள அரெஸ்ட் செய்வாங்களா? என்கிற பீதி பதிவுலகில் உண்டாகியுள்ளது.
பதிவெழுதும் முன்னால் யோசிச்சு யோசிச்சு, எதுக்கு வம்புனு பலர் ட்ராஃப்ட்லயே விட்டு விட்டதுபோல இருக்கு.
இது பத்தாதுனு, சைபர் க்ரைம் னு யாரைவேணா ஜோடிச்சு உள்ளே பிடிச்சுப் போடலாம் என்பதுபோல் சட்டம் அறிந்த பிரபு ராஜதுரை ஒரு பதிவை எழுதி எல்லாருக்கும் இன்னும் கொஞ்சம் பீதியைக் கிளப்பியுள்ளார்.
சின்மயி கேஸுக்கு பலம் வகிப்பது..
* அவர் ஒரு கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்.
* அவர் தாயாரையும் இகழ்ந்து பேசியுள்ளனர்.
* தொடர் தொந்தரவு என்பது ரொம்ப முக்கியம். ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டு போவது வேறு. தொடர்ந்து "டார்கெட் "செய்வது வேறு
* அவர் ஒரு பிரபலம் என்பதால் " defamation" முயற்சியா? என்றும் ஒரு கேள்வியைத் தொடுக்கிறார்.
* அவர் யாரையும் வரம்புமீறி தனிமனிதரைத் தாக்கவில்லை. ஆனால் அவர் தாக்கப்பட்டு இருக்கிறார். இது ஒருபக்கத்தாக்கு!
* அவர் இட ஒதுக்கீடு மற்றும் மீனவர் பற்றி சொன்ன கருத்துக்கள், பொதுக் கருத்துக்கள். அதையும் வலையுலகில் திரிக்கப் பட்டதாக ஒரு விளக்கப் பதிவு வேறு போட்டு இருக்கிறார்.
Facing abuse and a backlash of rumours
மேலே உள்ள இந்தப் பதிவில் உள்ள ஒரு முக்கியமான ட்வீட் சம்மந்தமாக காட்டியிருக்கும் ஸ்க்ரீன் ஷாட் டை கடுமையாக, விமர்சிச்சு பதிவர் மாமல்லன், ஏதோ ஒரு "manipulation" நடந்து இருப்பதாகவும் சொல்கிறார். அதையும் கட்டாயம் வாசிச்சுடுங்க!
ஒரு ஸ்கிரீன் ஷாட்டும் அதன் நோய்க்கூறுகளும்
* "அசிங்கப் பட்டாள் சின்மயி" என்கிற ஐ டி யை எப்படி நியாயப் படுத்துவது ??? இந்த ஐ டி தயாரித்தவர் எப்படி சட்டத்தின் முன்னிருந்து தப்பிக்க முடியும்??
சரி, வரம்பு மீறீட்டாங்க! மறுப்பதற்கில்லை!
ஆனால் இதற்கு என்ன தண்டனை?
* இதுபோல் தமிழ் நாட்டு வரலாற்றில் எந்த கேஸும் நடந்ததில்லைனு சொல்லலாம்.
* இணையதள உலகில் கருத்துச் சுதந்திரம் என்பது அதைப்பற்றி பேசும் யாருக்குமே தெளிவாகத் தெரியாத ஒரு நிலையில் என்ன தண்டனை கொடுக்கலாம் இவர்கள் செய்த குற்றத்திற்கு?
* இதுபோல் தவறுகள் செய்து பலர் தண்டனை அனுபவித்து இருந்தால், இதுபோல் இவர்கள் தொடர் தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள் என்பதென்னவோ மறுக்க முடியாது.
* இவர்களை சட்டம் மன்னித்து, கடுமையா எச்சரிக்கை செய்து விட்டுவிட்டால் என்ன?
* ஏற்கனவே எல்லாப் பத்திரிக்கைகளிலும் அவர்கள் படம் வந்து அவர்கள் பட்ட அவமானம் போதாதா? இதைவிட என்ன தண்டனை இவர்களுக்கு வேண்டிக்கெடக்கு?
என்றெல்லாம் பலரும் எண்ணுவதென்னவோ மறுக்க முடியாது.
பதிவுலகிற்கு பெரிய இழப்பு?
* இனிமேல் பெண்கள் எழுதும் பதிவிற்கு மாற்றுக்கருத்து வைக்கவே யாரும் முன்வரமாட்டார்கள். எதுக்கு வம்பு?
* பின்னூட்டங்கள் எழுதவும் பலவிதமாக யோசிப்பார்கள்.
* 8 + 2 = 11 என்றாலும் "ஆமா ஆமா"னுதான் எல்லோரும் போவார்கள்!
* உப்புச் சப்பில்லாத பின்னூட்டங்கள் நிறையவே பார்க்கலாம்.
* இப்படி அநியாயத்துக்கு மரியாதை கொடுப்பதால் பெண்கள் "சம உரிமையை" ஒரு மாதிரியாக "அதிக மரியாதை கொடுக்கப்பட்டு" இழக்கிறார்கள்னு கூடச் சொல்லலாம்.
* இதுபோக இனிமேல் நியாயமான எதிர்வினைப் பதிவுகள், பிரபலங்களை விமர்சிக்கும் பதிவுகள், விவாதப் பதிவுகள் எல்லாம் குறைய வாய்ப்பதிகம்.
* இங்கே யாரும் சம்பாரிக்க வரவில்லை. சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கத்தான் பதிவுலகுக்கு வருகிறார்கள். அதற்குக் கிடைக்கும் சம்பளம் உங்கள் வேலை இழப்பு என்று வருமானால், யாரு பதிவெழுதுவா?
* பதிவுலகம் ஒரு உப்பு சப்பில்லாத இடமாவதால், கொஞ்சம் கொஞ்சமாக பதிவர்கள் வேறு வேலையைப் பார்க்க கிளம்பலாம். பதிவுலகத்தின் இருண்ட காலம் ஆரம்பிக்கலாம்!
எனிவே, இப்போது cyber crime சம்மந்தமாக நடப்பதெல்லாம் வருங்கால பதிவுலகுக்கு நல்லதுக்கா கெட்டதுக்கானு தெரியவில்லை!
பொறுத்திருந்துதான் பார்க்கனும்.