என்னங்க இது!! என் பதிவில் எந்த கெட்டவார்த்தையும் இல்லை! ஏன் தமிழ்மண சூடான இடுகைகள் முகப்பில் தெரியாமல்ப் போயி ஒளிந்துகொண்டது? என்ற குழப்பம் ஒரு சில பதிவர்களுக்கு வருவதுண்டு. அதன்பிறகு அவர்கள் அந்தக் காரணத்தைப் புரிந்துகொளவதும் உண்டு. "முத்தம்மா"னு பேரு உள்ள பதிவுகள் சமீபத்தில் தமிழ்மண சூடான இடுகைகள் முகப்பிலிருந்து புறந்தள்ளப்பட்டதுக்கு காரணம், முத்தம்மாவில் இருக்கும் "முத்தம்"தான்னு நம்புகிறேன்! கணிணி உங்களைவிட அறிவாளி கெடையாது. ஏதாவது கெட்டவார்த்தைகளை வடிகட்டணும்னு ஒரு சில "வடிகட்டி"களை தமிழ்மணம் திரட்டி பயன்படுத்தும்போது இதுபோல் சில தவறுகள் வருவதைத் தவிர்க்க முடியாது!
18, முத்தம், கவர்ச்சி போன்ற வார்த்தைகள் உங்கள் தலைப்பில் இருந்தால் சூடான இடுகைகள் தமிழ்மண முகப்பில் வராமல் பின் தள்ளப்படும்! யாராவது பதிவர்கள் புரியாமல் இன்னும் குழம்பிக் கொண்டு இருந்தால் அவர்களுக்கு உதவுமேனு ஒரு நல்ல எண்ணத்தில்தான் இந்த சிறு பதிவு! நன்றி, வணக்கம்!