Showing posts with label தலித்கள். Show all posts
Showing posts with label தலித்கள். Show all posts

Tuesday, April 30, 2013

மரக்காணத்தில் தலித்களால் அப்பாவி வன்னியர்கள் தாக்கப்பட்டனர்?!

அருள் அவர்களே! மரக்காணத்தில் 3 வன்னியர்கள் தலித்களால் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்து இருக்காங்க! பலர் தாக்கப்பட்டு இருக்காங்க! இது மட்டும் சரியா? தலித்கள்தான் கொழுப்பெடுத்து ஆடுறாங்க! அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு அரசாங்கமே துணை போகிறது!

இதெல்லாம்தானே  உங்கள் குற்றச்சாட்டு?

A Dalit woman shows her damaged belongings at Kattayantheru area in Marakkanam, where six houses belonging to Dalits were set ablaze after a violent clash on April 25, 2013. Photo: T. Singaravelou
A Dalit woman shows her damaged belongings at Kattayantheru area in Marakkanam, where six houses belonging to Dalits were set ablaze after a violent clash on April 25, 2013. Photo: T. Singaravelou

 அரசியல்வாதிகளை விடுங்க! மேலே போடப்பட்ட மீடியாவின் புகைப்படத்தையும் தள்ளிவிட்டு, பாதிக்கப்பட்ட உயிர்சேதம் அடைந்த அப்பாவி வன்னியத் தமிழர்களுக்காக நிச்சயம் நாம் வருத்தங்களை தெரிவிப்போம்! அதேபோல் தலித்கள் செய்த அடாவடித்தனத்துக்கு சட்டம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்வரையில் போராடுவோம்!

ஆனால் உங்களுக்கு என்ன புரியமாட்டேன்கிதுனா, தப்பு யாரு செஞ்சாலும் தப்புத்தான். அது தலித்தாக இருந்தால் என்ன? வன்னியர்களாக இல்லைனா முக்குலத்தோர்களாக இருந்தால் என்ன?

வன்னியர்கள் தவறு செய்யும்போது மட்டும்  உங்க நிலைப்பாடு வேடிக்கையா இருக்கிறது. அது ஏன்? ரெண்டு சாதிக்காரன் சண்டை போடுறான்! அதில் ரெண்டு சாதியிலுமே நல்லவனும் இருப்பான், அயோக்கியனும் இருப்பான் என்பது உங்களுக்குத் தெரியாதா? வம்புச் சண்டை இழுக்கிறவனுக ரெண்டு சாதியிலுமே இருப்பான் என்ற கருத்தை நீங்க என்றுமே புரிந்துகொண்டு, அதை முன் வைத்து விவாதித்ததாக ஒரு போதும் தோணவில்லையே? அது ஏன்? எல்லா நேரமும் வன்னியர்கள் எல்லாம் அப்பாவிகள் தவறே செய்யமாட்டாங்க என்பதுபோல் வக்காலத்து வாங்குறீங்க!

தருமபுரி சண்டையிலேயும், வன்னியர்கள் அப்பாவிகள் என்பது போலவும், வயதில் முதிர்ச்சியடையாத வன்னியச் சிறுமியை, இன்னொரு தலித் சிறுவன் ஏமாற்றிக் கல்யாணம் செய்யப் போனதுதான் அங்கே பிரச்சினை என்று நியாயப் படுத்தினீர்கள்! தருமபுரி சண்டையில் சாதி ஒரு மேட்டரே இல்லை என்பதுபோல் பிதற்றினீர்கள்!  அது ஏன்? விபரம் சொல்லவும்!

புகைப்படம்: நன்றி ஹிந்து