Showing posts with label திரட்டிகள். Show all posts
Showing posts with label திரட்டிகள். Show all posts

Tuesday, August 30, 2011

இன்ட்லி ஓட்டளிப்பு பெட்டியைக் காணவில்லை!

இன்ட்லி திரட்டி ஓட்டளிப்பு பெட்டி ஒண்ணு என் தளத்தில் இருந்துச்சு. நெறையா ஓட்டுக் கெடைக்கலைனோ என்னவோ அந்த ஓட்டுப்பெட்டியை காணவில்லை! சரி, நம்ம தளத்தில் மட்டும்தான் இதைக் காணவில்லையா? னு போய் நம்ம அமெரிக்கப் பதிவர்கள் சிலர் தளத்தில்ப் போயி எட்டிப்பார்த்தால் அவர்கள தளத்திலும் காணவில்லை! ஒரு சிலர் தளங்களில் இந்தப்பெட்டி முன்புபோலவே இயங்கவும் செய்யுது!

சரி, இன்ட்லி ஓட்டளிப்புப் பெட்டியை மறுபடியும் கொண்டு வருவோம்னு போய் இண்ட்லில செக் பண்ணினால் அதற்கு எதுவும் வழியிருக்க மாதிரி தெரியலை. அதாவது, என் கணிணியில் அந்த குறிப்பிட்ட "இன்ட்லி பக்கத்தில்" அதற்கான விசயம் உள்ள லின்க்க்கு (தொடுப்புக்கு) போகவே மாட்டேங்கிது!

சரி, இன்ட்லி ரொம்ப பெரிய திரட்டியாகிவிட்டதாலே நம்ம பதிவெல்லாம் எதுக்கு வீணா "அக்ரெகேட்" பண்ணனும்னு கழட்டி விட்டுட்டாங்க போல! நம்மளும் இண்ட்லியை கழட்டிவிட்டுட்டுப் போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்! இப்போதைக்கு தமிழ்மணம்தான் ஒரே கதி! :)