உடனே, இஸ்லாமிய மதத்தவரை மிகவும் ம(மி)திக்கும் ஒரு பொதுநலவாதிப் பதிவர், பதிவர் ஒருவர் அடிக்கடி மகுடப்பதிவர் ஆவதால் ஏற்பட்ட பொறாமையில் அவரை கவிழ்த்தவே மனிதாபிமானி இந்தப் பதிவு எழுதியதாக சொல்லிப் பதிவு போடுகிறார் .
அடுத்து ஹலால் பீர் பற்றி ஒரு விவாதம். இப்படி தொடர்ந்து போயிக்கிட்டே இருக்கு!
சரி, # இந்த மனிதாபிமானி யாராக இருக்கட்டும், அவர் மதவாதியோ இல்லைனா நாத்திகரோ, அவருக்கு ஒரு முகமோ, இல்லை பல முகங்களோ, எப்படிவேணா இருக்கட்டும். அவர் பதிவில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது..
* பதிவர் சந்திப்பில கலந்து கொள்ளும் பதிவர்கள், சந்திப்புக்கு முன்னாலும், சந்திப்பின் போதும், அல்கஹாலை தவிர்க்கலாமே?
* அப்படி மது குடிக்கனும்னா, சந்திப்பு முடிந்த பிறகு மது அருந்த விரும்புபவர்கள் ஒன்றுகூடி வேறொரு இடத்தில் மது அருந்தலாமே?
* அதேபோல், பதிவர் சந்திப்பின்போது யாரும் தன் மதம் பற்றி, அதன் உயர்வு பற்றியும் பேசுவதில்லை, பேசமாட்டார்கள் என நம்புகிறேன்.
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்குமாமே? :)
---------------
# "மனிதாபிமானி" முகம் தெரியாதவர் என்று சொன்னது என் தவறு..
பின்னூட்டம் 2
- உங்கள் மீது அமைதி நிலவுவதாக,
வருண்,
மனிதாபிமானி தளம் பலரால் எழுதப்படும் தளம். நான் அந்த பதிவை எழுதியதால் நன்றி என்று என் பெயர் பதிவின் இறுதியில் போடப்பட்டுள்ளது. ஆக, பதிவை எழுதியது முகம் தெரியா ஆள் என்பது சரியல்ல.
மற்றப்படி உங்கள் பதிவோடு ஒத்துப்போகின்றேன்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ