இவர் திடீர் மரணமடைந்தபோது பாலு மகேந்திரா மேலே பலசந்தேகங்கள் எழுந்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் பாலு மகேந்திராவுக்கும் இவருக்கும் என்ன உறவு (சினிமா தவிர) என்பதே பெரிய கேள்விக்குறியாக இருந்தது! ஆனா இன்னைக்கு விக்கில ஷோபா இவருடைய மனைவினு சொல்லிப் போட்டு இருக்காணுக! ஷோபா இறந்தபோது அவருக்கு வயது 17 னு வேற போட்டு இருக்காணுக! ஷோபா இறந்தபோது இவரிடம் கேள்விகள் பல எழுப்பி போலிஸ் விசாரனை அது இதுனு நடந்தது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் இப்படி பலியாவதெல்லாம் ரொம்ப சாதாரணம். சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலச்சுமி, லக்ஷ்மி ஸ்ரி, ஷோபா இப்படிப் போயிக்கொண்டே இருக்கும். இதுபோல் இளம் நடிகைகள் பரிதாபமாகச் சாவதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை. ஒப்பாரி வைக்க ஒரு பய இருக்க மாட்டான்! ஆனா 74 வயதுக்கப்புறம் ஒரு ஆம்பளை செத்தான்னா ஆளாளுக்குக் கூடி ஒப்பாரி வைப்பாணுக! வச்சுக்கிட்டே இருப்பாணுக!
இப்போ ஒப்பாரி வைக்கிற யோக்கியன்களிடம், ஷோபாவுக்கும் பாலு மகேந்திராவுக்கும் என்ன உறவு? னு கேட்டால், ஷோபா அவருடைய மனைவினு சொல்வார்களா என்பதே சந்தேகம்தான். என்ன பதில் சொல்லுவாணுகளோ! மனைவி என்று சொன்னால் என்னுடைய கேள்விகள்.. Did he marry a minor? Was he a sick person then? Or everything said in wiki are all BULLSHIT?
Born Mahalakshmi Menon
23 September 1962Died 1 May 1980 (aged 17)[1] Chennai, Tamil Nadu, India Other names Shoba Mahendra, Urvashi Shoba,[1] Baby Mahalakshmi, Baby Shoba Occupation Actress Years active 1966-1971, 1977–1980 Spouse(s) Balu Mahendra (1978–1980) her death Parents K. P. Menon (Father)
Prema (Mother)
மறைந்த பாலுமகேந்திரா ஒண்ணும் இயக்குனராக தமிழ் சினிமாவில் பெருசா கிழிக்கவில்லை என்பதே உண்மை. soft porn மாரி சொருகப்பட்ட ஒரு கேவலமான சீன்களுடன் சேர்த்து "பொன்மேணி உருகுதே"னு கோர்த்துவிட்ட ஒருபாட்டுதான் மூன்றாம் பிறை யில் மெயின் ப்ளாட்டை விட நம்ம நாட்டான்களைக் கவர்ந்து அந்தப் படத்தை கமர்ஷியல் சக்ஸஸ் ஆக வைத்தது என்பதே உண்மை.
உன் கண்ணில் நீர் வழிந்தால் னு ரஜினி வைத்து இவர் எடுத்த படம் ஒரு படு குப்பை! நிச்சயம் இவர் ஒரு நல்ல கேமராமேன்! அவ்ளோதான். என்ன நம்ம இயக்குனர் பாலா போல சில "சிக் பர்சனாலிட்டி" களை உருவாக்கிவிட்டுப் போயிருக்கிறார். அவனுக எல்லாம் கூடி ஒப்பாரி வைக்கிறாணுக!
அழியாத கோலங்கள்னு ஒரு படம் எடுத்துவிட்டாரு. இதுலயும் ஷோபா தான் ஹீரோயின். என்ன வெடலைப் பசங்க அந்த வயதில் அலைவதுபோல ஒரு மலையாளப் பட ப்ளாட். இதை ஆகா ஓகோனு நம்ம க்ரிட்டிக்களெல்லாம் புகழ்ந்து தள்ளிப்புட்டாணுகளாம். இதே எழவைத்தான் ஷங்கர் Boys ல எடுத்து க்ரிட்டிகளிடம் சப்பு சப்புனு அறை வாங்கினார்.
பாலு மகேந்திராவின் தனித்துவம் என்னனா பொதுவாக ஹாலிவுட் அல்லது பிற மொழிப்படங்களை தழுவி எடுப்பதில் இவர் நம்ம ஒலக நாயகனுக்கு ஒரு படி மேலேனு சொல்லலாம். இவருடைய முக்கிய காண்ட்ரிப்யூஷன்னு என்னைக்கேட்டால் மகேந்திரன் படங்கள் மற்றும் பல படங்களில் இவருடைய ஒளிப்பதிவுனு வேணா சொல்லலாம்.
ஆமா செத்தால்தான் எல்லாரும் நம்ம ஊர்ல கடவுளாகி விடுவார்களே ? இன்னொரு கடவுள் உருவாகி இருக்கிறார் இப்போது. ஏன் இப்படியும் ஒப்பாரி வைக்கலாமே சில உண்மைகளைச் சொல்லி?! என்ன? என்ன? தெய்வகுத்தம் பண்ணிப்புட்டேனா நான்? :(