Showing posts with label முஸ்லிம். Show all posts
Showing posts with label முஸ்லிம். Show all posts

Tuesday, August 28, 2012

இங்குமா இந்து முஸ்லிம் கலவரம்?!

பதிவுலகில் இன்றைய "ட்ரெண்ட்" என்னனா இஸ்லாமியப் பதிவர்கள் "பதிவுலக ஆக்கிரப்பை" கட்டுப் படுத்தனும்னு ரொம்பப்பேரு சீரிஸாக போராடுராங்க. வேடிக்கையான போராட்டம் இது! ஒரு பதிவர்  கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் அந்தப் பதிவருக்கு தொடர்ந்து எதிர் கருத்து தெரிவிச்சால், அந்தப் பதிவரை நேரில் சந்திக்கும்போது உங்களுக்கு கஷ்டமா/பயம்மா/சங்கோஜமா இருக்குமா?  அப்போ தொடர்ந்து எதிர் கருத்து சொல்லும் அவர் உங்க எதிரியா? அப்போ ரெண்டு நல்லவங்களுக்குள்ளே நூறு விழுக்காடுகள் கருத்துவேறுபாடுகள் வராதா?

"இவன் நான் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசுவான், மாற்றுக் கருத்து சொல்லுவான் இவனை நேரே சந்திக்கும்போது என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது!" என்கிற ஐயம் எல்லாம் வருமா உங்களுக்கு? அப்போ நீங்க இன்னும் "மனவளர்ச்சி" அடையவில்லை! அப்படித்தானே?

 நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன், "மகுடம்" "பரிந்துரை" "சூடான இடுகை" எல்லாத்தையும் கண்டுக்காமலும் ஒரு முதிர்ச்சியடைந்த பதிவர் பதிவெழுதலாம். நான் அதையெல்லாம் கண்டுக்கிறதில்லைனு சொல்லிக்கிட்டு அதைப் பத்தி எந்னேரமும் விமர்சிக்கிற பெரியமனிதர்களை என்ன சொல்லுவது? :) இந்தப் "போராட்டத்தால்" ஒரு சில தரமான பதிவர்களும் தரம் குறைய ஆரம்பிச்சுட்டாங்க என்பது உண்மை.

"அஞ்சா சிங்கம்" னு ஒருவர், ஒரு இஸ்லாமியர் பதிவை/அவர் சொன்ன கருத்தை  எதிர்த்துப் போராட/விவாதிக்க  ஒவ்வொரு தளமாக சென்று அந்தப் பதிவுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு அழைப்புப் பின்னூட்டமிட்டு அந்தந்த ஏரியா சண்டியர்களை அழச்சுட்டுப்போயி அந்த இஸ்லாமியப் பதிவர் தளத்தில் வாதாடுகிறார். இதெல்லாம் வேடிக்கையாக இல்லையா? ஒரு பதிவில் உள்ள கருத்து பிடிக்கலைனா நீங்க, உங்க  கருத்தை சொல்லலாம். அதை விட்டுப்புட்டு உலகறிய  ஆட்களை சேர்த்துட்டுப் போறதெல்லாம் சிறுபிள்ளைத்தனம் இல்லையா? என்னவோ போங்கப்பா!

ஒரு சில பதிவர்கள் செய்றதெல்லாம் சிறுபிள்ளைத்தனம், ஆனா பேசுறதெல்லாம் ஏதோ உயர் நோக்கு, பொது நோக்கு எல்லாத்துக்கும் தாந்தான் "அத்தாரிட்டி" என்பது போல! :)