ஒரு பக்கம் சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?னு ஒரு சிலர் நம்மூர் பெருமை பேசும் பிதற்றல்! இன்னொரு பக்கம் நம்ம ஊர்ல லஞ்சம், ஊழல், விபச்சாரம், பிச்சைக்காரன்னு இருந்து கொண்டு இருக்குனு அதைப்பற்றிக் கவலைப்பட்டால்.. இப்போ தலைநகர் டெல்லியில் ஒரு 23 வயது யுவதியை ஓடும் பேருந்தில் நாங்கைந்து மனித மிருகங்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளன! அவளுடன் பயணித்து வந்த அவளுக்கு உதவ வந்த தோழனை பேருந்தில் இருந்து அடித்து தூக்கி எறிந்துவிட்டு! மேலும் பஸ் ட்ரைவர் இந்த மிருகங்களுக்கு உதவி பண்ணியிருக்கிறார்!
உலகமே நம்மைப் பார்த்து காறி உமிழும் ஒரு அவல நிலை இது. இந்த நிகழ்ச்சியால் நாம் அனைவருமே வெட்கப்பட வேண்டிய தருணம் இது! செய்தது ஆண்கள் னு வெட்கப்படனும்! அந்த மிருகங்கள் இந்தியர்கள் னு வெட்கப்படணும்.
தப்பு செஞ்சவங்க யாருனு பார்த்தால் படிக்காதவங்க, உழைக்கும் வர்க்கம்போல
தோணுது.
* பவன் குப்தா (குமார்)- வயது 19- பழம் விற்பவன்
* வினய் ஷர்மா- வயது 20- இவன் ஒரு ஜிம் இண்ஸ்ட்ரக்டராம்
* முகேஷ் -வயது 26- இவன் தான் ட்ரைவெர்னு சொல்றாங்க
பலியான பெண், ஒரு கல்லூரி மாணவி, மருத்துவக்கல்லூரில படிப்பவள்!
படிப்பில்லாதவனுக்கு அறிவு இருக்காதுனு சொல்வதற்கு இது ஒரு க்ளாசிக் உதாரணம்னு சொல்லலாம். ஆனால் படிப்புக்கும் பண்புக்கும் சம்மந்தம் இல்லை என்பதுதான் உண்மை!
இன்னொன்னு இதுபோல் இவர்கள் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்வது இதுதான் முதல் முறையா? என்பதும் பெரிய கேள்விக்குறி!
இதுபோல் நடக்கும் மிருகங்கள நெறையவே இந்தியா முழுவதுமே, எல்லா இடத்திலும் பரவலாக இருக்காங்க. ஏன் தமிழ்நாட்டிலும்கூட வாழ்ந்து கொண்டுதான் இருக்காங்க. இந்தியாவில் பொதுவாக பல ஆண்கள், பெண்களை தங்களுக்கு இணையாக, சமமாக நினைக்காமல், "தன்னிடம்
அடங்கிப் போகணும்" என்கிற சில்லறை மனோபாவத்துடன்தான் வாழ்றாங்க என்பதுதான் இந்தச்
செய்திகள்மூலம் நாம் இன்னுமொரு முறை அறிந்துகொள்வது.
நீயா நானா? நிகழ்ச்சியில் கூட பெண்கள் ஆடையணிவது, கவர்ச்சியாக ஆடையணிவது போன்ற தலைப்புகளில் விவாதிக்கும்போது ஒரு சில "படித்த மைனர்கள்" என்னவோ பெண்கள் இவன் சொல்றபடிதான் நடக்கணும், இவன் சரினு நெனைக்கிறபடிதான் பெண்கள் ஆடை அணியணும், வாழனும். இல்லைனா நான் அவர்களை, நான் கேலி செய்வேன், அசிங்கமா விமர்சிப்பேன் என்பதுபோல் பேசியதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது! மேலும் பஸ்ஸில் பெண்கள் மேலே கை வைப்பது, உரசுவது, செல் ஃபோனை வச்சி அசிங்கமா ஃபோட்டோ எடுப்பது, கேவலமான காமெண்ட் பாஸ் பண்ணுவது, இதெல்லாம் பெரிய தவறுனே தெரியாமல் பெண்களை பலவகையில் சித்ரவதை செய்வது ஆண்களின் உரிமை என்பதுபோல் மிருகங்களா அறியாமையில் வாழ்ந்துகொண்டுதான் இருக்காங்க.
ஹரியானாவில் ஒரு தலித் பெண்ணுக்கு அவலம் நடந்தபோது அதை யாரும் (அரசியல்வாதிகள்) பெரிதுபடுத்தவில்லை! இன்று டெல்லியில் ஓடும் பஸ்சில் அதேபோல் அவலம் ஒரு மேட்டுக்குடி பெண்ணுக்கு நடந்துள்ளது. உடனே எல்லாரும் கண்ணைத் திறந்து உலகைப் பார்க்கிறாங்க!
இன்று இந்தப்பெண் பலியாகக் காரணம் என்ன? நேற்று இவளைப்போலவே பலியான இன்னொரு பெண் தலித் என்பதால் நடந்த அநீதியை சட்டம் சரியாக தண்டிக்காமல் அசட்டையாக விட்டதால்தான். என்னைப்பொறுத்தவரையில், தலித் என்றோ மேட்டுக்குடி என்றோ இந்நேரம் நாம் பார்க்கக்கூடாது.
இது ஒரு ஆண் - பெண் பிரச்சினை! இந்த 21 நூற்றாண்டிலும் பெண்ணை, அறிவுகெட்ட ஆண் என்னவேணா செய்யலாம்னு மனப்பால் குடிக்கிறான்!
கடுமையான சட்டம் கொண்டுவந்து, எந்தப்பெண் இதுபோல் பாதிக்கப்பட்டாலும் கடுமையான தண்டனை வழங்கினாலேயொழிய இதுபோல் குற்றங்கள் நடப்பதை முழுவதும் அகற்றமுடியாது! என்னைப் பொறுத்தவரையில் இந்தக் குற்றவாளிகளை இரக்கமே இல்லாமல் உலகறிய தூக்கில் போடணும்! கடுமையான தண்டனை வழங்கவில்லை என்றால், 2-3 வருடத்தில் மறுபடியும் வெளியில் நடந்தால், இதுபோல் குற்றங்கள் தொடரத்தான் செய்யும்!