நளபாகம்! தஞ்சாவூர் பிராமண வாழக்கை பற்றி எழுதியிருக்கிறார் என்பதெல்லாம் ரெண்டாவதுதான். ஜானகிராமன் எந்தளவுக்கு தான் ஒரு கீழ்த்தரமான ஒரு ஆம்பளை என்பதை இக்கதையில் காட்டிவிடுவார்.
இது ஒரு இளம் பெண், அதாவது ஒருவனின் மனைவி, இன்னொரு ஆண் நினைவில் "ஃபேண்ட்சசைஸ்" செய்கிற மாதிரி கதை எழுதி இருக்கிறார் என்பதே உண்மை.
அப்பட்டமான போர்னோக்ராஃபி கதையை ஆச்சாரமாக பூஜை, கடவுள் எல்லாவற்றயும் கலந்து எழுதி இருப்பார். ஆனால் ஜானகிராமன் பர்வேர்சனை தெளிவாகக் காணலாம்.
கதை?
நாயகி ரங்கமணிக்கு குழந்தைப் பைத்தியம்.
வீட்டில் ஒரு குழந்தை வேணும்! இப்போது விதவை. மாமியார் ஸ்தானத்தில் ரங்கமணி. இருந்தாலும் நடுவயதுப் பெண்தான். இவளுக்கு குழந்தை இல்லைனு தத்தடுத்து துரைனு ஒரு வளர்ப்பு மகன் இருப்பான். அவனுக்கு மனைவி, பங்கஜம், ரங்கமணியின் ஆசை மருமகள். மாட்டுப்பெண்., பங்கஜதத்துக்கும் குழந்தை இல்லை. இதனால் ஒரு மாதிரி மனநோயாளி ஆகி விடுவாள், ரங்கமணி. எப்படியோ அந்த வீட்டில் ஒரு குழந்தை வேணும்.
வர வர வளர்ப்புமகன் ஆண்மை வீரியத்தில் ரங்கமணிக்கு சந்தேகம் வந்துவிடும். அவன் பங்கஜத்துடன் நல்லா உறவு கொண்டு அவளை உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறானா? இல்லை அவனுக்கும் ஆண்மை குறைவு இருக்கிறதா? ஒரு வேளை அவன் நல்ல ஆண்மகனா இல்லைனா? வீட்டில் குழந்தை சத்தம் கேட்காதே? என்கிற பயம் வந்துவிடும் ரங்கமணிக்கு.
எப்படியோ தன் மாட்டுப்பெண் பங்கஜத்திற்கு ஒரு குழந்தை பிறக்கனும். அது மகன் துரையால் பிறக்குதோ அல்லது இன்னொரு ஆணூடன் பங்கஜம் உறவு கொண்டு பிறக்கிறதோ. அதைப் பத்தி எல்லாம் ரங்கமணிக்கு கவலை இல்லை. வீட்டில் ஒரு குழந்தை தவழனும். இந்த அளவுக்கு மனநோய் வந்துவிடும்.
வீட்டிற்கு சமையல், பூஜை எல்லாம் செய்ய "காமேஸ்வரன்"ணு ஒரு பிரம்மச்சாரியை அழைத்து வருவாள். சமையல் பூஜை எல்லாம் ஒரு காரணம். ஊருக்காக. அவளுக்கு இன்னொரு எண்ணம் உண்டு. அது என்னவென்றால் பங்கஜமும், காமேசுவரனும் உறவு கொண்டு பங்கஜம் ஒரு குழந்தையை பெற வாய்ப்பு உண்டு என்கிற எண்ணம். ரங்கமணி, காமேசுவரனை தேர்ந்தெடுக்கக் காரணம்? அவளுக்கே அவன் மேல் ஓர் ஈர்ப்பு உண்டாகும். பங்கஜத்திற்கு அதே ஈர்ப்பு வரத்தான் செய்யும் என்றெல்லாம் ஒரு கால்க்குலேசன்.
பங்கஜமும், காமேஸ்வரனும் ஒருவருக்கு ஒருவர் ஈர்ப்பு இருந்தாலும். அதுபோல் தவறான உறவு கொள்ள மாட்டார்கள். ரங்கமணி தன்னால் முடிந்த அளவு பங்கஜத்தை அவனிடம் தள்ளிப் பார்ப்பாள். ஒருமுறை பங்கஜத்திடம் ரங்கமணி சொல்லுவாள். நீ இப்படி ஏனோ தானோனு பட்டும் படாமலும் இருந்தால், எனக்கு இன்னும் வயசாகவில்லை, நானே காமேஸ்வரனிடம் உறவு கொண்டு குழந்தை பெறத் தயங்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லி மிரட்டிப் பார்ப்பாள். பங்கஜம் ஃபிசிக்கல்லாக காமேஸ்வரனுடன் உறவு கொள்ள மாட்டாள். ஆனால் ரங்கமணியின் ஐடியா ஒர்க் அவ்ட் ஆகிவிடும். அவள் காமேஸ்வரனைப் பார்த்து ஃபேண்டசைஸ் செய்வாள். அது ஒரு "கேட்டலிஸ்ட்" போல அவள் கர்ப்பம் தரிக்க உதவும்.
ஒரு நாள் அப்படி காமம் தலைக்கேறி இருக்கும்போது, காமேஸ்வரன் சட்டையில்லாமல் பூஜை செய்வதைப் பார்த்து, அவனை நினைத்து உணர்வுகள் காம மேலோங்கி நிற்கும் பங்கஜத்திற்கு. அன்றிரவு கணவன் துரையுடன் உறவு கொள்ளுவாள். ஒரு நாளுமில்லாத திருநாளாக எட்டு (not sure about the # but it is multiple.. unusual orgasms she will have) முறை ஆர்கசம் அடைவாள், பங்கஜம். அதனால்தானோ என்னவோ கர்ப்பம் தரித்து விடுவாள், பங்கஜம்.
ரங்கமணிக்கு வெற்றி.
இதுதான் கதை. இந்தக் கதையை சும்மா பூசி மொழுகி விமர்சனம் எழுதுவதெல்லாம் வேடம்.
ஜானகிராமன் யார் என்று நான் உணர்ந்தது இந்த கதையின் வாயிலாகத்தான்.
மனநோயாளி ரங்கமணி இல்லை. சாட்சாத் ஜானகிராமன்தான் னு கூட சொல்லல்லாம். தப்பே இல்லை.
தொடரும்
Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts
Tuesday, June 4, 2019
Friday, November 21, 2014
பொம்மனாட்டிக்கு என்னையா வேணும்? தி ஜானகிராமன்
கீழே படியுங்கள்..
ஜானகிராமனின் எழுத்துதான்..
“ராமரத்னம் எனக்கு பரம சினேகிதன். ரொம்ப நெருங்கிப் பழகுறேன். அத்தனை சூட்சுமமான ஒரு ஆத்மாவை நான் பார்த்ததில்லை. பரம ரசிகன். நம்ம மனசிலே இருக்கிற கவலை, வியாதி எல்லாம் பறந்துபோயிடும்- என்னமோ பீச்சிலே போயி இல்லே விசாலமா ஒரு இயற்கை காட்சிக்கு முன்னாலே உட்கார்ந்திருக்கிறாப்பிலே அவன் தனக்கு இப்படி ஓர் அதிர்ச்சி ஏற்பட்டிருக்குனு வாயைத்திறந்து சொன்னதில்லை. அதைச்சொல்லி என்னை துன்புறுத்த வேணாம்னு நெனச்சானோ என்னவோ- நிச்சயமாக அப்படித்தான் நினைச்சிருப்பான். யார்கிட்டயும் சொன்னதில்லேனு நினைக்கிறேன்.”தி ஜானகிராமனின் “தேடல்” என்கிற சிறுகதை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்!
“ஒரு அத்தியாயத்தையே கிழிச்சு எறிஞ்சுட்டார்னு சொல்லுவேன். ரொம்ப பெரிய மனுஷனாகத்தான் இருக்கணும். பெண்டாட்டி விட்டுட்டுப்போறாளே -அந்த ஒரு சர்ட்டி·பிகேட்டே போரும்யா அவர் பெரிய மனுஷன்கிறதுக்கு!”
“என்னையா ஒரேயடியா அப்படிச் சொல்லிவிட்டீர்?”
மது காரை ஓரமாக நிறுத்திவிட்டு கண்ணை மூடிக்கொண்டே சொன்னான்: “பொம்மனாட்டிகளுக்கு என்னப்பா வேணும்? அடுத்தாத்துக்காரியைவிட தான் செளக்கியமா இருக்கணும். நல்ல புடவை. சொந்த வீடு. தான் ரொம்ப நல்லவ. பெரியமனசு உள்ளவ. ஊதாரி- அப்படி இப்படினு காமிச்சுக்கணும். ஆமடையான் தன்கிட்ட எல்லாத்தையும் கலந்து ஆலோசிக்கணும். பத்துபேருக்கு நடுவிலே தங்கிட்ட ரொம்பப் பிரியமா இருக்கிறதா அவன் காமிக்கணும். மற்றவர்களைவிட தன்கிட்ட விஷேசமா, பிரியமா இருக்கிறதா அவன் காமிக்கணும். உலகம் வேற, தன் குடும்பம் வேறனு ஆமடையான் உணர்ந்து பிரிச்சு வச்சுண்டு, முக்கால்வாசி நேரமும் சுவருக்கு இந்தப்பக்கமே பொழுதைப்போக்கணும். அந்தப்பக்கத்தைவிட இந்தப்பக்கம்தான் பெரிசென்று தான் நினைச்சுண்டு இருக்கதாக நிரூபிக்கணும். இப்படியெல்லாம் இருந்தா அவ இல்லத்தரசி, கற்புக்கரசின்னு ராஜ்யம் நடத்த முடியும். இந்தப்பேர் எல்லாம் அவளுக்கு வரதுக்கு ஆமடையான் ஓயாம ஒழியாம ஒத்தாசை பண்ணிண்டே இருக்கணும். நான் சரிதாண்டீம்மான்னு என் ஆமடையாள்ட்ட சப்ஜாடா ஒத்துக்கிண்டு நடத்திண்டு வரேன். உம்ம (சினேகிதன்) ராமரத்னம் அப்படியில்லே போலயிருக்கு. நான் நிம்மதியா இருக்கேன். அவரு இல்லே- அனாதைப் பள்ளிக்கூடம் விமர்சனம் எல்லாம் எனக்கும் ஜாம்ஜாம்னு நடத்தத்தெரியும். ஆனா நானும் ஷட்டகர் கிட்ட பறிகொடுத்துட்டு உக்கார்ந்து இருக்க முடியுமா நிம்மதியை? சரி... "கூலா" ஏதாவது சாப்பிடுவோம்” காரில் இருந்துகொண்டே கடைக்காரனைக் கூப்பிட்டார் “மது”.
ஆமாம், மீள்பதிவுதான்.. வேலை அதிகம்.. அதனாலதான்..
Labels:
அனுபவம்,
ஆணாதிக்கம்,
ஆண்கள்,
பெண்கள்,
மீள்பதிவு,
வாசிப்பு,
ஜானகிராமன்
Subscribe to:
Posts (Atom)